எக்ஸ்கியூஸ்மீ மேம் ! நாங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிற கம்பெனியில இருந்து வாரோம். எங்க கம்பெனி நல்ல தரமான வீட்டுஉபயோக பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எங்க கம்பெனிக்கு இந்தியா முழுவதும் பிராஞ்சஸ், அப்புறம் உலகமுழுவதும் தன்னோட கிளைகளை பரப்பி தன்னகரில்லாத நிறுவனமாக விளங்குகிறது. நாங்க அதை எல்லா மக்களுக்கும் அறிமுகபடுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தாங்க இதை வாங்கிப் பாருங்க.இல்லப்பா எங்க வீட்டுல எல்லா சாமானும் இருக்கிறது. அதனால வேண்டாம்பா.இல்லமேடம் இது புதுசா வந்திருக்கு.. இது மார்க்கெட்டுல கிடைக்காது.இல்லீங்க இதெல்லாம் எங்களுக்கு வேணாம்.. கிளம்புங்க..அட என்ன மேடம்! சும்மா வாங்கிப் பாருங்க.. நீங்க பாக்கிறதுக்கு பணம் எதுவும் தரவேணாம். சும்மாதான் பாருங்களேன்.. பிடிச்சிருந்தா வாங்குங்க..அட என்னப்பா.. உங்களப்பார்த்தா பாவமா இருக்கு. சரி கொடுங்க.. பாத்துட்டு தந்திருவேன் என்ன? சரியா..இங்கப்பாருங்க மேடம்.. இதைப்பாருங்க மேடம்.. இதுல என்னன்ன பெசிலிட்டில்லாம் இருக்கு தெரியுமா. மார்க்கெட்டுல நல்லா மூவாகிக்கிட்டு இருக்கிற சாதனம். ரொம்ப அருமையா இருக்கும்..அட அப்படியா தம்பி பரவாயில்லையே ரொம்ப நல்லாருக்கே!!..ஆமாக்கா.. இதை பக்கத்துத் தெருவுல டாக்டர் மாலதி வீட்டுல வாங்கிருக்காங்க.. நாலுவீடு தள்ளி இருக்காங்களே... அவங்க பேரு என்ன... என்ன...நம்ம லட்சுமிஅம்மாவா?..அட ஆமா மேடம் அவங்களேதான்.. அவங்க 2 பீஸ் வாங்கினாங்க..அப்படியா அவங்க எப்பவுமே இப்படித்தான், பெருசா பீத்திக்கிறதுக்குன்னே வாங்கிக்கிறாங்க.. ஏய் செண்பகம், பாத்திமா, மாரி, கணேஷம்மா.. எல்லோரும் இங்க கொஞ்சம் வாங்க.. நம்ம தம்பி எதோ நல்ல பொருள் கொண்டு வந்திருக்கு பாருங்க.அட அப்படியா அக்கா..என்ன இது என்ன இது..தம்பி! உங்க பேச்சுக்காக வேண்டி வாங்குறோம்.. நல்ல தம்பி, உங்க பேச்சு ரொம்ப அருமை..எக்காவ் நீங்க எனக்கும் சேத்து பணம் கொடுத்திடுங்க.. எங்க வீட்டுக்காரர் வந்தப்பறம் தாரேன்..மேடம் இங்க பாருங்க.. இதுதான் எங்க கம்பெனியோட அட்ரஸ்.. இந்தாங்க பில், என்ன கம்ப்ளைண்டா ஆனாலும் எங்க கம்பெனிக்கு வாங்க. உடனே மாத்திக்கிறலாம் என்ன சரியா.. ரொம்ப தாங்க்ஸ், அப்போ நான் போயிட்டு வாரோம் மேடம்.இந்த மாதிரி சேல்ஸ்ரெப்கள் பேசியே வாங்க வைத்த பொருள் மறுநாளே பார்த்தா வேலை செய்யாமல் போய்விடும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.
கையில பொருள், வாயிலே பொய். இதுதான் சேல்ஸ்ரெப்களின் முகவரி. இந்தமாதிரி ஆள்களிடம் நாம ரொம்பவே உசாரா இருக்கணும். இல்லையென்றால் நம்முடைய நேரம், பொருள், பணம் இழக்க வேண்டிவரும்.
என்ன ஒரு சாமர்த்தியம்.இதுதான் இவங்களோட மூலதனமே. பொய்மேல பொய் பேசுவாங்க, நேர்மை இருக்காது, 2 நாள்ல ஒர்க்ஆகாத பொருளை தலையில கட்டிட்டு போயிருவாங்க. இல்லாத முகவரியைத்தான் கொடுப்பார்கள்.
நாம் அவர்கள் பேச்சில் மயங்கி ஏமாந்துவிடுகிறோம். டிப்டாப்பா வருவாங்க. ரொம்பவே நம்மளை கவர்ந்துவிடுவாங்க. இன்னும் சிலபேர் வீட்டை நோட்டமிட்டுவிட்டு செல்வார்கள். நம்மைபற்றி முழுவதும் வீக்னஸ் எதெல்லாம் என்று தெரிந்து கொண்டு திருட்டுக்கும்பலுக்கு தகவல் கொடுப்பாங்க.
இதுக்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்.. நம்மிடையே விழிப்புணர்ச்சி இல்லாதது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
அம்பு எய்தவன் இருக்க, அம்பை குறை சொல்லி என்ன பிரயோஜனம்.
சேல்ஸ்ரெப்கள் கொடுத்தவேலையை கச்சிதமாக செய்துமுடிக்க பணிக்கப்பட்டவர்கள்.
சேல்ஸ்ரெப்களுக்கு டிரைனிங் கொடுப்பவர்கள் இப்படித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். எப்படியெல்லாம் மக்களிடம் பேசவேண்டும், எந்தமாதிரி மக்களை கவர்ந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பவேண்டும். நம்முடைய பொருளை எப்படியாவது வாங்கவைத்துவிடவேண்டும்.
பெண்களை கவர, பெண்களைப் பார்க்கும்போது கண்களைமட்டுமே பார்க்க வேண்டும். தலையைகுனியக்கூடாது, வேறுபக்கம் கவனம் சிதறக்கூடாது. பொறுமை ரொம்ப முக்கியம். நம்முடைய பணத்தின்மேல் கவனமாக இருக்கவேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதுபோல் காட்டிக் கொள்ள வேண்டும்.
இதுதான் சேல்ஸ்ரெப்களின் எழுதப்படாத விதி எனலாம். இந்த கம்பெனிகளின் முதலாளிகள் வெயிலில் கஷ்டப்பட்டு வேலைபார்க்கும் ஒழுங்காக சம்பளம் கொடுக்கமாட்டார்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி பணம் பார்க்கும் முதலாளிகளை உதைக்க வேண்டும். இதுதான் இன்றைய சேல்ஸ்ரெப்களின் நிலை.
இதிலும் சில சேல்ஸ்ரெப்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மயக்கி தனது வக்கிரபுத்தியால் பெண்களை வசப்படுத்தி விடுவார்கள். பின்னர் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பாவம் பெண்கள், கணவனிடமும் சொல்லமுடியாமல் மனதுக்குள்ளே தினமும் புழுங்கி ஒருநாள் தற்கொலை செய்துவிடுவதை நினைக்கும்போது மனம் ரொம்பவே கலங்குகிறது.
என்னஒரு கொடுமை! கணவனும் பிள்ளைகளும் அனாதைகளாக ஆகிவிடுகிறார்கள். இப்படி காரணம்தெரியாத தற்கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
நமக்கு விழிப்புணர்ச்சி அவசியமாக வேண்டி இருக்கிறது.
எனவே, அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, எல்லோரும் கவனமாக விழிப்புணர்வுடன் இருங்கள்.
யாரையும் வீட்டினுள் அனுமதிக்காதீர்கள். உங்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள்... இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.,
Post Comment