Pages

Saturday, November 13, 2010

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

அன்புள்ள நண்பர்களே!!.. எல்லோரும் சுகமா.. நலம் நலமறிய ஆவல்.

அறிவியல் முன்னேற்றங்களினால் நம்நாடு பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது. உதாரணத்துக்கு போக்குவரத்து துறை, இதில் எண்ணற்ற வளர்ச்சி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக இன்றியமையாததாகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். பணி நிமித்தமாகவும் சொந்தக் காரியங்களுக்காவும் பயணம் அத்தியாவசியமாகிறது. போக்குவரத்து ஊடகங்களான‌ வான்வழி,
நீர்வழி
போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து என்று மக்களின் பயன்பாட்டில் பெரிதும் உதவுகின்றன.

அந்த காலத்தில் மக்கள் பயணப்படுவது என்பது மிகுந்த சிரமமான விசயமாகும். இன்று நமக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளினால் பயணம் இனிமையானதாகிறது. இப்போது பயணப்ப‌டவேண்டிய இடத்தை குறைவான நேரத்தில் சுகமான பயணத்தில் அடைந்து விடுகிறோம். தரைவழி போக்குவரத்தில் பேருந்து மற்றும் ரயில்வே துறைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. நம்நாட்டில் போக்குவரத்துக்கு பல நல்ல திட்டங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த இருபதாண்டில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க நமது அரசு பல தரமான சாலைகளும் பாலங்களும் கட்டிவருகிறது. ரயில்வே துறையிலும் பல முன்னேற்றங்கள். நாட்டின் எந்த இடத்துக்கும் செல்ல ரயில் மற்றும் பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இங்கே சவுதி அரேபியாவில் ரயில் போக்குவரத்து என்றால் ஒரே ஒரு வழித்தடம்தான் உண்டு. அது தமாம் - ரியாத் இடையேயான ரயில் பாதை மட்டுமே உள்ளது. மற்ற தொலைதூர இடங்களுக்கு செல்ல உயர்தர சொகுசு வால்வோ பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. சாலைகளும் பாலங்களும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் தினந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் வாகனங்கள் புதிதாக சாலைகளில் ஓடத் துவங்குகின்றன. சென்னையில் சுமார் 31 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் மொபெட், பைக், கார், லாரி, பஸ் போன்ற அனைத்து வகை வாகனங்களும் அடங்கும்.

காலை மற்றும் மாலைகளின் உச்சி நேரங்களில் பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் சாலைகளில் வாகன நெரிசல் கடுமையாக இருந்துவிடுகிறது. பல மணி நேரங்களுக்கு சாலைகள் உறைந்துவிடுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்போது நம்நாட்டில் எல்லா சாலைகளும் செப்பனிட்டு அழகான பாலங்கள் கட்டப்படு வருகின்றன.

நம்நாட்டில் உள்ள பாலங்களை பார்த்திருப்பீர்கள். சர்வதேச நாடுகளில் உள்ள சில அதிசயமான பாலங்களை பற்றிய படங்களை சில‌ நண்பர்கள் தங்களது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்கள். அதுபோன்ற அழகான பாலங்களின் படங்களை அதன் குறிப்புகளுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த படங்க‌ளை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிகள்.

1. பெடஸ்டிரியன் பாலம் டெக்ஸாஸ். Pedestrian Bridge, Texas .


இந்த அழகான ஆர்ச் வடிவிலான பாலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் ஏரியில் அமைந்துள்ளது. இதை மிரோ ரிவெர்ரா தலைமையிலான திறமைவாய்ந்த கட்டடக்கலை நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த பாலம் முக்கிய விருந்தினர் மாளிகையிலிருந்து ஏரியின் மறுகரையில் உள்ள அரசாங்க அதிகாரியின் மாளிகையை இணைக்கிறது. இதனை சுற்றிலும் அழகழகான இயற்கை காட்சிகளினால் இந்த பாலம் பார்ப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கிறது.

2. கின்டெய்க்யோ ல்வ்குனி - ஜப்பான். Kintaikyo, Iwakuni, Japan


இந்த பாலம் மிகவும் பழ‌மை வாய்ந்தது. இந்த கின்டெய்க் பாலம் 1673ல் கட்டப்பட்டது. ஆனால் உலகப்போரின் பாதிப்புக்குள்ளனான இந்த பாலத்தை 1950ல் மீண்டும் செப்பனிட்டு கட்டியுள்ளனர். நிஷிகி நதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் மிகப்பெரிய ஐந்து வளைவுகள் உண்டு. இவை அனைத்தும் மரங்களினால் கட்டப்பட்டவைகளாகும். இது உயர்தர வயர்களும் கிளாம்புகளினாலும் பிணைக்கப்பட்டுள்ளது.

3. ஜஸ்சிலினோ குபிட்செக் பாலம் - பிரேசிலியா ப்ரேசில். Juscelino Kubitschek Bridge, Brasilia, பிரேசில்


கட்டுமானத் துறையின் புதிய தொழிற்நுட்ப முறையினால் கட்டப்பட்ட இந்த பாலம் ப்ரேசில் நாட்டில் ப்ரேசிலியா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ஜேகே ப்ரிட்ஜ் (JK Bridgஎ ) என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய மூன்று வளைவுகளை இந்த பாலத்தை பார்க்கும்போது வியப்பில் ஆழ்த்துகிறது.

4. ரோலிங் பாலம் _ லண்டன் யூகே. Rolling Bridge, London, UK


பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கக்கூடிய லண்டனில் உள்ள இந்த பாலம் சுருள்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோலிங் பாலம் தாமஸ் ஹீதர்விக்ஸ் விருதினை கட்டுமானத்துறையின் புதிய தொழில்நுட்பமான கேனலுக்காக‌ பெற்றுள்ளது.

இதனை ஹைட்ராலிக் ஜாக் மூலம் கப்பலில் எடுத்துச் செல்லலாம்.

5. பெய்பாஞியங் ரயில்வே பாலம் _ ஹூச்கோ - சீனா. Beipanjiang River Railroad Bridge, Guizhou, சீனா


சீனாவில் பெய்பாஞியங் ரிவர் ரயில்வே பாலம் ஹூச்கோ என்ற இடத்தில் இரண்டு மலைகளை இணைக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் சீனாவில் உள்ள வறுமையில் வாடுபவர்கள் வசிக்கும் இடங்களை இணைக்கிறது.

இதன் உயரம் தரையிலிருந்து 918 அடியாகும். இது உயரமான பகுதியாகும்.

6. ஹென்டர்சன் வேவ்ஸ், சதன் ரிட்ஜெஸ் - சிங்கப்பூர். Henderson Waves, Southern Ridges, Singapore .


சிங்கப்பூரில் உள்ள இந்த பாலம் மிக உயரமான பெடரஸ்டியன் பாலம் சதன் ரிட்ஜெஸ் பகுதியில் அமைந்துள்ளது. 9 கி.மீ நீளமான இந்த பாலத்தை சுற்றிலும் அழகழகான மரங்களும் பார்க்குகளும் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பாலோவ் வகையான ஆயிரக்கணக்கான மரப்பலகைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி மேலும் தகவல்களை சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்கள் சொல்வார்கள்.

7. பான்ட் கஸ்டேவ் ஃப்லோபர்ட், ருவ்ன், ஃப்ரான்ஸ். Pont Gustave Flaubert, Rouen, பிரான்ஸ்


ப்ரான்ஸில் ரூவ்ன் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1200 டன் எடையை கொண்டுள்ளது. செங்குத்தான இரு உருளைகளான தூண்களை தாங்கிய இந்த பாலம் பார்க்க மிக அழகாக உள்ளது. இதன் ஒவ்வொரு பகுதியும் 180 அடி உயரமும் 405 டன் எடையையும் கொண்டுள்ளது.

8. மில்லொவ் வியடக்ட் - ப்ரான்ஸ். The Millau Viaduct –.


ஃப்ரான்ஸில் உள்ள இந்த பாலம் உலகின் அதிக உயரமான பாலம். The Millau Viaduct –ங்குற பாலம்தான். இதனோட நீளம் மட்டும் 2,460 m (8,071 ft), அகலம் 32 m (105 ft) னா பாத்துக்குங்க…

9. ஜெஜ்ஜியோ ஜார்ஜ் பாலம் ‍_ Hegigio Gorge Pipeline Bridge, Southern Highlands Province, Papua New Guinea .அதிசயமான இந்த பாலத்தை இரண்டு பைப்லைன் குழாய்கள் தாங்குகின்றன என்றால் வியப்பாக இருக்கிற‌தல்லவா... ஒரு பைப்லைனில் கேஸ்ஸும் இன்னொன்றில் ஆயிலும் கொண்டது. இது பப்புஅ என்ற பகுதியில் உள்ளது.

தரைமட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் பைப்லைன்களை மட்டுமே கொண்டுள்ள இந்த பாலத்தின் உயரம் 1290 அடியாகும்.

மேலும் இந்த பாலங்களை பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள நண்பர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

படங்களை பெரிதாக்கி (டபுள் கிளிக் செய்து) காணுங்கள்.

இந்த தகவல்களுடன் படங்களை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிகள்.

நன்றியுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

12 comments:

 1. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள். நன்றி

  ReplyDelete
 2. ஏழாம் கிளாஸ் சோஷீயல் சயின்ஸ் புக்கை படிச்சா மாதிரி இருந்துச்சு குரு...:)

  ReplyDelete
 3. வாங்க கார்த்திக் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 4. வாங்க சிஷ்யா பிரதாப் @ நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.. இதெல்லாம் உலக விசயம்.. தெரிஞ்சிக்க வேணாமோ..

  ஆமா.. ஒரு டவுட். //// நாஞ்சில் பிரதாப்™ ///... படிக்காமலே, பெயருக்கு டிரேட் மார்க்கெல்லாம் வாங்கிருக்கீங்க எப்படி?.. ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 5. பிரமாண்டம் மற்றும் பிரமிப்பான விஷயம் சார் , டிஸ்கவரி சேனல்ல கூட பாலங்களப் பத்தி ஒன் அவர் காட்டினாங்க சார் அருமையா இருந்தது

  ReplyDelete
 6. அருமையான தகவல்களும் படங்களும்..

  ReplyDelete
 7. சில ஈமெயில்களில் இந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன்...
  பதிவாகப் பதிந்தமைக்கு நன்றி... நல்ல தொகுப்பு...

  ReplyDelete
 8. வாங்க அமைச்சரே நலமா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 9. வாங்க ரியாஸ் @ ரொம்ப மகிழ்ச்சி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 10. வாங்க பிரபு சார் @ நலமா.. நண்பர் ஒருவர் இதை மெயிலில் அனுப்பியிருந்தார். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 11. நல்ல தகவல்கள்,படங்களுடன் கூடிய அருமையான இடுகை

  ReplyDelete
 12. வித்தியாசமான பாலங்கள்.. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்