Pages

Saturday, November 28, 2009

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



இன்று பக்ரீத் ஈகைத் திருநாள் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . இங்கு சவுதி அரேபியாவில் இன்று இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித மெக்காவுக்கு ஹஜ் செய்த ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவு செய்கின்றனர் .

அவர்களின் ஹஜ்ஜை இறைவன் நிறைவேத்தித் தருவானாக .. ஆமீன் .

ஹாஜிகளுக்கும் , என் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் , வலைப்பதிவு நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த பக்ரீத் ஈகைத்திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .


அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .



Post Comment

Friday, November 27, 2009

சிந்தனை செய் - ஆசை தீர ...


நான் சமீபத்தில் சிந்தனை செய் என்ற திரைப்படம் பார்த்தேன் . படம் ரொம்ப பயங்கரமா இருந்தது . என்ன இது ! ரொம்ப பயங்கரமா இருக்கு என்று சொல்கிறானே என்று என்னை அடிக்க வருவது தெரிகிறது . அந்த அளவுக்கு திரில்லிங்கா இருந்தது .

என்ன கதை என்று பார்த்தால் பள்ளியில் வகுப்பறையில் மிடில் பெஞ்சில் படித்த நண்பர்கள் வாழ்க்கையில் என்னவாகிறார்கள் என்று படம் சொல்லுது . கதைப்படி ஹீரோ ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர் . காதலித்து கல்யாணம் செய்த மனைவி வெறுத்து ஒதுக்குகிறார் .

இதனால் மனமுடைந்த ஹீரோ , தன்னுடன் படித்த மற்ற 4 நண்பர்களூடன் சேர்ந்து பேங்கில் கொள்ளை அடித்து தானும் ஒரு உருப்படியானவன் என்று நிருபிக்கிறார் . பின்னர் அதன் பின் நடக்கும் சம்பவங்களும் காட்சிகளும் நமக்கு திரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கிறது .

கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு 5 நண்பர்களும் வாழ்க்கையில் செட்டிலாகிறார்களா இல்லையா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .



இந்த கதை இது வரைக்கும் வராத புதிய கதை . நல்லாருக்கு . படத்தோட ஹீரோ யுவன் . படத்தோட இயக்குனரும் இவர்தான் .

நல்லா நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . அவரும் அவருடைய நண்பரும் ஐட்டம் வீட்டுக்கு போயிட்டு செக் கொடுப்பது , பாரில் கலாட்டா செய்வது ரசிக்கும்படியா உள்ளது .

ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்று மொக்கையா இருந்தாலும் படம் பேங்கில் கொள்ளை அடிப்பதிலிருந்து நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கிறது

அதன் பின் நடக்கும் காட்சிகளும் , யுவன் தன் நண்பர்களுக்கு துரோகம் செய்யும் காட்சிகளாகட்டும் நல்ல ஒளிப்பதிவு .

பாடல்கள் தமனின் இசையில் நல்லாருக்கு .

மயில்சாமி இந்த படத்தில் கலக்கியிருக்கிறார் .

மொத்ததில் இந்த படம் ஒரு திரிலிங்கான படம் பாக்கலாம் .



************************************************************


நான் இந்த படத்தை பாத்தபோது சிறுவயதில் பள்ளியில் பாடபுத்தகத்தில் படித்த கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது .

அந்த கதை என்னவென்றால் ,

ஒரு ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள் . அவர்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று , வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள் .

நாளுக்கு நாள் சேர்த்த பணத்தை பாதுகாக்க வேண்டுமே ! என்ன செய்வது என்று யோசித்தார்கள் . அதில் ஒருவன் நம்முடைய பணத்தை யாராவது ஒரு நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து செல்ல‌லாம் என்று சொன்னான் .

அந்த யோசனையின் படி அந்த 4 நண்பர்களும் பக்கத்தில் உள்ள பாட்டியிடம் கொடுத்து செல்ல தீர்மானித்தனர் .

பாட்டி நாங்கள் வியாபாரத்துக்காக தொலைதூரம் சொல்கிறோம் . வர நாட்கள் ஆகும் . நாங்கள் கஷ்டபட்டு சேர்த்த பணம் இது . நாங்கள் வியாபாரத்துக்கு போயிட்டு வந்ததும் வாங்கிக்கிறோம் . நாங்க நாலு பேரும் சேர்ந்து வந்தா மட்டும் இந்த பணப்பானையை கொடுக்க வேண்டும் .வேறு யார்க்கிட்ட்யும் கொடுத்திடாதீங்க பாட்டி என்று நான்கு பேரும் சொன்னார்கள் . பாட்டியும் இதற்கு இசைந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார் .

இவர்கள் வெளியூர் சென்று வியாபாரம் செய்து நல்ல லாபம் கிடைத்தது . மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர் .

அவர்கள் ஊர் எல்லைக்கு வரும்போது அவர்களுக்கு ரொம்ப தாகம் எடுத்தது .
அப்போது கொஞ்ச தூரத்தை கடந்து வரும்போது ஒருவர் மோர் வித்துக்கொண்டிருந்தார் . தாகத்துக்கு மோர் சாப்பிடலாம் என்றெண்ணி மோர் கேட்டனர் .

ஆனால் நான்குபேருக்கும் மோர் வாங்க பெரிய பானை எதுவுமில்லை . என்ன செய்வது என்று யோசிக்கும் போது கொஞ்ச தூரத்தில் பணப்பானை கொடுத்த பாட்டி வீடு இருந்தது . உடனே பாட்டியிடம் மோர்வாங்க காலிப்பானை ஒன்று வாங்கி வா என்று அவர்களில் ஒருவனை மற்ற 3 பேரும் அனுப்பி வைத்தனர் .

அவன் நேராக பாட்டியிடம் சென்று பணப்பானையை தரும்படி கேட்டான் . பாட்டி நீ மட்டும் வந்து பானை கேட்கிறாய் . நாலு பேரும் வந்தாத்தான் நான் பணப்பானையை தருவேன் என்று சொன்னார் .

அவன் உடனே என் நண்பர்கள் அதோ அங்கே இருக்காங்க . அவங்க தான் வாங்கிட்டு வரச்சொன்னாங்க , அதனால பானையை தாங்க என்று கேட்டான் .

இல்லை நாலு பேரும் வந்து கேட்டாத்தான் பணப்பானையை தருவேன் என்று சொன்னார் .

உடனே அவன் தூரத்தில் உள்ள தன் நண்பர்களிடம் பாட்டி பானையைத் தரமாட்டுக்காங்க பானையைத் தரச்சொல்லுங்க . என்று கத்தினான் .

உடனே அந்த மூன்று பேரும் , மோர்வாங்குவதற்கு காலிப்பானை கேட்கிறான் போல என்று நினைத்து பானையை கொடுங்க பாட்டி என்று கை அசைத்து சொன்னார்கள் .

பாட்டியும் உள்ளே சென்று பணப்பானையை எடுத்து அவனிடம் கொடுத்தார் .

பானையை அவன் வாங்கியதும் வேறு காட்டு வழியில் ஓடி விட்டான் .

காட்டு வழியே சென்ற அவனை புலி அடித்து கொன்றது .

Post Comment

Tuesday, November 24, 2009

நானும் என் வரலாறும் - தொடர்பதிவு



நான் இந்த வலையுலகில் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் கிடைத்து உள்ளீர்கள் . அதில் , இப்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் நண்பர் ஷங்கி ( சங்கா ) வும் ஒருவர் . அவர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .

அது என்னவென்றால் நாம் பதிவு எழுத வந்தததை பற்றிய அனுபவத்தை எழுத வேண்டும் .

எனக்கு சிறு வயதில் படிப்பதில் ரொம்ப ஆர்வம் உண்டு . பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாரமலர் ,சிறுவர்மலர் , ராணி காமிக்ஸ் படிக்கணுன்னா கொள்ளை பிரியம் . என்ன செய்வது நம்மளால தான் காசு கொடுத்து வாங்க முடியாதே !. எங்காவது கிடைக்குமா என்று தேடி அலைவேன் .

கடைகளில் மளிகை சாமான் வாங்கும் போது கடைக்காரரிடம் அந்த புத்தகங்கள் இருந்தால் தாங்கண்ணே படிச்சிட்டு தாரேன் என்று சொல்லி வாங்கிட்டு வந்து படிப்பேன் . அப்புறம் நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக் ஆரம்பித்தேன் .

எனக்கு நாவல் படிப்பதிலும் ரொம்ப ஆர்வம் . பட்டுக்கோட்டை பிரபாகர் , சுபா , ராஜேஷ்குமார் இவங்கள்லாம் என்னுடைய ஹீரோ கனவுக்கு வித்திட்டவர்கள் .இந்த கதைகளில் வரும் ஹீரோக்களாக என்னை நினைத்துக் கொள்வேன் .

அப்படி வளர்த்த கனவை இப்ப வரை தக்க வச்சிருக்கேனா ; நீங்களே சொல்லுங்க .

பின்னர் கல்லூரி படிப்பு முடித்தேன் . வேலை நம்மளைத் தேடி வராது ; நாமதான் வேலையை தேடணுமென்று வேலை தேட ஆரம்பித்தேன் . ஆரம்பத்தில் வேலை சரியாக அமைய வில்லை . முதலில் சேல்ஸ்ரெப் ,மெடிக்கல்ரெப் என்று போய்க் கொண்டிருந்தது .

அப்புறம் எங்க மாமா மூலம் டி வி எஸ் மோட்டார் வாகன கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை கிடைத்தது . அதில் படிபடியாக முன்னேறி அசிஸ்டெண்ட் மானேஜர் ஆனேன் . பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன் .



அதன் பின்னர் இங்கே சவுதியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வேலைக்கு சேர்ந்த புதிதில் இங்கே இணைய வசதி இல்லை . பின்னர் 2007 ல் தான் ப்ராட்பேண்ட் DSL கனெக்சன் கிடைத்தது . அப்போது ஆரம்பத்தில் தினமலர் இணையத்துக்கு தான் முதலில் செல்வேன் . ஏன்னா சிறுவயது ஞாபகமல்லவா ... சும்மா விடமுடியுமா என்ன ? ...

அப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமலர் , தினத்தந்தி , தட்ஸ்தமிழ் என்று தமிழ் வெப்சைட் எல்லாம் போய் படித்தேன் . தமிழ் வெப்சைட் தேடும்போது தமிழ் நெட் மூலமா தமிழ்மணத்தின் லிங் கிடைத்தது .
அப்படி என்ன தான் தமிழ்மணத்தில் உள்ளது என்று போய் பார்த்தால் , உள்ளே நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடந்தன .

சென்ற வருடம் முதல் முதலா நான் படித்தது நண்பர் முரளிக்கண்ணன் பதிவை தான் . அவருடைய சினிமா உலகில் என்னையும் கலக்க வைத்தேன் . அப்புறம் பரிசல்காரன் , கோவி கண்ணன் , கேபிள் சங்கர் , வடகரை வேலன் , ஆசிப்மீரான் , உண்மைத்தமிழன் , சுரேஷ் சக்கரை , டாக்டர் சுரேஷ் ( பழனி ) , நர்சிம் , தாமிரா , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , இப்படி எண்ணற்ற தலைகள் என்னுடைய வாசிப்புக்கு தீனி போட்டனர் .

அப்புறம் , சென்ற வருடம் அக்டோபர் இறுதியில் , நாமும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு தோன்றியது .

உடனே நான் , நாளைய ராஜா என்றொரு வலைப்பதிவை ஆரம்பித்தேன் . அதை தமிழ்மணத்தில் இணைத்து எழுத ஆரம்பித்தேன் .

பின்னர் நான் ஊருக்கு போக வேண்டிய நேரமும் வந்தது . எனக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள் . நவம்பர் இறுதியில் ஊருக்கு சென்றேன் .

பின்னர் டிசம்பரில் கல்யாணம் முடித்து , நாலு மாசம் லீவும் நாலே நாளில் போனது போலிருந்தது . மீண்டும் சவுதிக்கே பயணப்பட்டேன் கடந்த ஏப்ரல் 9 ம் தேதியில் .

பின்னர் என் சோகத்தை மாற்ற மீண்டும் வலைப்பக்கம் வர ஆரம்பித்தேன் .

அப்புறம் நான் , நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்து இதோ உங்கள் முன் நிற்கிறேன் .

எனக்கு எண்ணற்ற நண்பர்கள் கிடைத்து இருப்பது இந்த வலையுலகின் மூலமா தான் .

என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .

இது போல என்னை ஊக்கப்படுத்தியது கோவி கண்ணன் , முரளிகண்ணன் , கேபிள் சங்கர் , உண்மைத் தமிழன் சரவணன் , வசந்த் ( பிரியமுடன் வசந்த் ) , டாக்டர் சுரேஷ் , டாக்டர் தேவா சார் , சென்ஷி , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , எம் எம் அப்துல்லா , நையாண்டி நைனா , சங்கா , ஜெகநாதன் , சந்ரு , குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார் , சக்கரை சுரேஷ் , துபாய் ராஜா , நாஞ்சில் பிரதாப் , அபு அஃப்ஸர் , நவாஸ்தீன் , இன்னும் முகமறியா எத்தனை எத்தனையோ நண்பர்கள் .

அப்புறம் , மிஸ்டர் NO . இவரும் மிக மிக குறிப்பிடத்தக்கவர் .


இவர்களுக்கெல்லாம் என் நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் .

இங்கே பெயர் விடுபட்டவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .

இந்த பதிவைத் தொடர , இந்த பதிவு யாரெல்லாம் எழுதலியோ அவங்க இந்த பதிவையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் .

ஸ்டார்ஜன்

Post Comment

Sunday, November 22, 2009

2012 - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு


உலகம் 2012 ல் அழியுதுன்னு ஒரு வதந்திய கிளப்பி விட்டாலும் விட்டாங்க , 2012 ஆங்கில படம் சக்கை போடுதாமே . இப்போ ருத்ரம் என்ற பெயரில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறதாம் .


இது கூட ஒரு வியாபார உத்தியா இருக்குமோ ....


நமது தமிழ் வலையுலகிலும் நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன .


அதை பத்திய வலையுலகின் விம‌ர்சனங்களின் தொகுப்பு


இதோ உங்கள் பார்வைக்கு ...


2012-(2009) பதிவர் கேபிள் சங்கர்

20...12 சொல்லும் செய்தி ! பதிவர் கோவி கண்ணன்

2012 (2009) பதிவர் ஹாலிவுட் பாலா

2012 -ல் அழியப்போகும் உலகமும், சில பிரபலங்களும்... ‍
பதிவர் நாஞ்சில் பிரதாப்

மாயமான 2012 பதிவர் ஸ்டார்ஜன்


2012- படமா இது? பதிவர் தமிழ்மாங்கனி

நோவா கப்பல் ! பதிவர் கோவி கண்ணன் 2


2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார் பதிவர் சுரேஷ் ( பழனியிலிருந்து )

2012-ம் என் ரசனையும்... பதிவர் பேநாமூடி

தட்ஸ் தமிழ் விமர்சனம்


ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது - பதிவர் ஜெட்லி சரண்



சனி - 2012 - பான்டலூன் - மீந்த குவாட்டர்! பதிவர் ஜெகநாதன்


தினமலர் விமர்சனம்


2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில் பதிவர் விக்னேஸ்வரன்


2012 ல் வடிவேலு பதிவர் அக்பர்


2012 [2009] - கருப்பு அதிபரென்றால் கைவிட்டுவிடும் வெள்ளையினவெறி.. பதிவர் சரவணகுமார் MSK


2012-இந்த கொசுங்க தொல்லை தாங்கமுடியல நாராயணனா! பதிவர் நான் ஆதவன்



2012 நம்ம ஸ்டைலு! பதிவர் பாமரன் பக்கங்கள்



2012 ம் 200 ஆவது பதிவும்! பதிவர் தமிழன் எட்வின்


2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம் பதிவர் சுப.நற்குணன்



2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1) பதிவர் சுப.நற்குணன்


2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்2) பதிவர் சுப.நற்குணன்



2012:- மறுமொழிகள் மாயமாக மறைந்த கதை பதிவர் சுப.நற்குணன்






இன்னும் உங்களுக்கு தெரிந்த வலைப்பக்கங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே !!!

Post Comment

Tuesday, November 17, 2009

மாயமான 2012 ....


எல்லோரும் கேட்டுக்கோங்க !! உலகம் அழியப் போகிறதாம் ; அப்படின்னு நான் சொல்லலை . இப்போ புதுசா ஒரு ஆங்கில படம் வந்திருக்கிறது , அதுல சொல்றாங்க . என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா ....

கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

ஆனா ஒரே ஒரு குடும்பம் மட்டும் அதுல இருந்து தப்பிக்கிறாங்க .

அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் ( அதான் நம்ம ஹீரோ ) தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்... என்று போகிறது கதை.

நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

இந்த படத்தைப் பொறுத்தவரை காட்சி அமைப்புகள் ரொம்ப நல்லாருக்கு .

இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட்.

இந்த படம் இப்போது தமிழில் ருத்ரம் என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது .

நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அச‌ல் சினிமாத்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலக்ம் அழியப்போகும் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக எடுத்திருக்காங்க . நல்ல கிராபிக்ஸ் .

இந்த படம் வெற்றியா ஓடுதோ இல்லையோ ; இதை பத்திய வதந்தி மட்டும் ரொம்ப சூப்பரா பரவிக்கிட்டு இருக்கு .

உலகம் பூரா இதை பத்திதான் பேச்சா இருக்கு . உலகம் அழிய நேர்ந்தால் என்னவாகும் !! இதை கற்பனை செஞ்சு பாருங்க பார்ப்போம் . முடியல இல்லை .

இது ஒரு கற்பனையான படம் . அவ்வளவு தான் .

ஆனா ரியலா எப்படி உலகம் அழியும்ன்னு நம்ம யாருக்குமே தெரியாது . அது நம்மை படைத்த இறைவனுக்கு தெரிந்த ஒன்று .

இது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது .

படம் பார்த்தோமா , வீட்டுக்கு சென்று சாப்பிட்டுட்டு தூங்குனோமா நல்ல கனவு வந்ததா என்று தான் இருக்கணும் .

இதுல உங்களுக்கெல்லாம் ஒரு ஜாலி ; இல்ல ...

என்ன உலகம்டா சாமி ....

எனக்கு தெரிஞ்சி , இப்படித்தான் 2000 ல் உலகம் அழியப்போகுதுன்னு வதந்திய கிளப்பி விட்டாங்க . 31 / 12 / 1999 நைட் படுக்கும் போது ரொம்ப ஃப்லீங் ஆக இருந்தது .

ரொம்ப பயம் வேறு . கண்ணை இறுக்க மூடிக்கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் ; காலையில் எழுந்திருக்க வேண்டும் என்று .

அப்படியே இன்னும் 3 வருஷத்துல உலகம் அழியுதுன்னு வைச்சிக்கோங்க , அப்போ பிறக்கிற உயிர்கள் கதி ?... அவங்க என்ன பாவம் செஞ்சாங்க .

நாம இந்த பூமியில இருக்கிறது கொஞ்ச நாள்தான் . அதுலயும் வீணான வதந்திகளை நம்பாம சந்தோசமா இருங்கங்க . உலகம் அழியும் போது அழியட்டும் .

எப்போ இந்த உலகத்துல ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இறைவனை பற்றி நினைப்போ அல்லது வணங்காமல் இருக்காங்களோ அப்போது தான் உலகம் அழியும் . அது வரைக்கும் கவலைப்படாம இருங்க .

Post Comment

Saturday, November 14, 2009

கேபிள் சங்கர் அப்பா மரணம் -இரங்கல்

இன்று காலை தமிழ்மணம் பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது . அண்ணன் கேபிள் சங்கர் அப்பா காலமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது .

அண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும் .

அண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என‌து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

Post Comment

Monday, November 9, 2009

எல்லோரும் கொண்டாடுவோம் ... தொடர்பதிவு

எனது நெருங்கிய நண்பரும் பள்ளிக்கால தோழரும் வலைப்பதிவு வித்தகர் மச்சான் அக்பர் என்னை ஒரு அருமையான தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .

அது என்ன வென்றால் , நாம் கொண்டாடிய பண்டிகை பத்தி 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் .

இதோ நான் கொண்டாடிய‌ ர‌ம்ஜான்

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ? .

சொந்த ஊர் திருநெல்வேலி . இப்போது சவுதி அரேபியாவில் கணணி பழுது சரிபார்க்கும் வேலை ( (Hardware service) ) செய்து வருகிறேன் . சென்ற வருடம் தான் திருமணமாகியது .

2) ரம்ஜான் என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வ‌ய‌து இருக்கும் போது , ர‌ம்ஜான் பெருநாள் என்று நினைக்கிறேன் . நானும் என் த‌ங்கையும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம் . நானும் அவ‌ளும் ப‌லூன் வைத்திருந்தோம் . என்னுடைய‌து உடைந்து விட்ட‌து .

நான் அவ‌ளுட‌ய‌தை கேட்டேன் , அவ‌ள் த‌ர‌வில்லை . உட‌னே , அவ‌ள் கையில் இருந்த‌ ப‌லூனை பிடித்து இழுத்தேன் . நான் இழுத்ததில் அவள் பக்கத்தில் இருந்த மடையில் ( கால்வாய் ) விழுந்திட்டாள் . உடனே நான் , அய்யயோ .. என் தங்கச்சி மடையில் விழுந்திட்டாள் ; காப்பாத்துங்க என்று கத்தினேன் . உடனே அந்த வழியா வந்த ஒருவர் என் தங்கையை மடையிலிருந்து தூக்கினார் . நான் அவருக்கு நன்றி சொன்னேன் .

3) 2009 ரம்ஜானுக்கு எந்த‌ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சவுதியில் இருந்தேன்.


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் ரம்ஜான் ப‌ற்றி ஒருசில‌வ‌ரிக‌ள் ?

இங்கு (சவுதியில்) நோன்பு நோற்கும் 30 நாளும் கடைகளை மதியத்திற்கு மேல் திறந்து இரவு 1 மணிக்கு அடைப்பார்கள். அதன் பின் சமைத்து நோன்பு வைத்து தொழுதுவிட்டு தூங்கினால் மதியம் தான் எழும்புவோம். மக்கள் 30 நாளும் செழிப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். ரம்ஜானுக்கு மூன்று நாள் விடுமுறை.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

நான் ஊரில் இருக்கும் போது , நெல்லை ஆரெம்கேவி , போத்தீஸ் ல் தான் ரெடிமேட் வாங்குவேன் . ரெடிமேட் தான் என் தேர்வு .

6) உங்கள் வீட்டில் என்ன‌ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எப்போதுமே வீட்டில் ரம்ஜான் அன்று காலையில் தோசை, இட்லி செய்து சாப்பிடுவோம். மதியம் பிரியாணியை ஒரு பிடிபிடித்து தூங்க வேண்டியது தான். சமையல் அம்மா.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

எல்லோருக்கும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தேன் . உங்க‌ளுக்கு வலைப்பதிவின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தேன் .

8) ரம்ஜான் அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

ஊரில் தொழுதுவிட்டு வந்தவுடன் சாப்பாடு பின்பு தூக்கம் சாயங்காலம் சினிமாவுக்கு போவது இப்படி நேரம் கழிந்து விடும். சவுதியில் இருக்கும் போது மூன்று நாளும் வெளியில் தான் சுற்றுவோம். ச‌வுதியில் வேறெந்த‌ பொழுது போக்குமில்லை .


9) இந்த‌இனிய‌நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?.

நான் ஒவ்வொரு ர‌ம்ஜானுக்கும் , கஷ்டப்படுகிற‌வர்களுக்கு என்னால் முடிந்த‌ உத‌விக‌ளை செய்வேன் . இதற்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வேன் .

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?.

அபு அஃப்ஸ‌ர் ( என் உயிரே ) , முர‌ளிகண்ண‌ன் ( நீரோடை )

Post Comment

Sunday, November 8, 2009

கண்டேன் காதலை ... ரசித்து அனுபவிக்க ..


கண்டேன் காதலை

எப்பொதும் லோட லோட வெகுளியாக பேசும் பெண்ணும் , மூடி டைப் ஆக ஒருவனும் வாழ்க்கையில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தோட கதை .


பரத் , அப்பா உருவாக்கித் தந்த கம்பெனியின் முதலாளி . அப்பா இறந்து போக , அம்மா ஆடிட்டருடன் ஓடிப் போக , கம்பெனி நஷ்டத்தில் போகிறது . இதனால் மனமுடைந்த பரத் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்ய போகிறார் . ரயிலில் , சும்மா தொணதொணவென பேசும் தமன்னாவை சந்திக்கிறார் . இதனால் எரிச்சல் அடைந்த பரத் , பாதி வழியில் ரயிலை விட்டு இறங்கும் பரத்தை பிந்தொடரும் தமன்னா ரயிலை தவறவிடுகிறார் .

அதன் பின் நடக்கும் சம்பவங்கள் ரொம்ப சுவாரசியம் . தமன்னா மேல் பரத்துக்கு காதல் வருமோ என்று நாம் நினைக்கும் முன்னரே , தமன்னா தான் காதலிப்பதாகவும் , காதலனுடன் ஓடி போகபோவதாக சொல்லி , நம்மை ஏமாத்திட்டாங்க .

தமன்னா , மனச்சோர்வில் இருந்த பரத்தை திருத்தி தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். தமன்னா வீட்டை விட்டு ஓடிப்போகும் போது பரத்தும் வீட்டை விட்டு வெளியேறுகிறார் . இதனை தப்பா நினைக்கும் தமன்னா குடும்பத்தினர் இருவரையும் தேடுகின்றனர் .

பரத் தன் கம்பெனிக்கு திரும்பி , கம்பெனியை பழைய நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப்பாதையில் செல்கிறார் . தமன்னாவை பத்தி எந்த தகவலும் இல்லாததால் தமன்னாவை தேடி செல்கிறார் . தமன்னாவை அவர் காதலருடன் சேர்த்து வைத்து தமன்னா வீட்டுக்கு அழைத்து வருகிறார் .

தமன்னா குடும்பத்தினர் தமன்னாவின் காதலை ஏத்துக்கிட்டாங்களா ... இல்லையா ... என்பதை படம் பாக்காதவங்க படம் பாத்து தெரிஞ்சிக்கோங்க .



ஒரு அருமையான கதை . நல்ல திரைக்கதை ரொம்ப சூப்பர் .

ஹிந்தியில் வெளியான ஜப் வீ மெட் ( Jab We Met ) படத்தோட ரீமேக் என்றாலும் நல்ல திரைக்கதை , வசனம் காட்சி அமைப்புகள் இந்த படத்தோட வெற்றிக்கு காரணம் . மனச்சோர்வில் இருப்பவர்கள் இந்த படத்தை பாக்கும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் .

பரத் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருக்கிறார் . முன்னாடி சும்மா லொப்பை படத்துல நடிச்சிக்கிட்டு இருந்த பரத்துக்கு இந்த படம் ஒரு மைல்க்கல் . ரொம்ப அனுபவப்பட்டு நடிச்சிருக்காரு .

தமன்னா இந்த படத்தில் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காரு . வெகுளித்தனத்துக்கு ஏத்தமாதிரி அவருடைய கண்களும் நடிச்சிருக்கே . அப்பப்பா .. நல்லாருக்கு .
அதுவும் ரயிலை தவறவிட்ட பின் நடக்கும் சம்பவங்களில் தமன்னா நல்ல ஸ்கோர் . தண்ணீர் பாட்டிலுக்காக கடைக்காரருடன் சண்டையிடும் போது ரயில் செல்ல , மறுபடியும் தமன்னா ரயிலை தவறவிடும் போது , தன் கண்களாலே பதில் சொல்கிறார் .

முற்பாதியில் தமன்னா பகுதி என்றால் பிற்பாதி சந்தானத்தின் பகுதி . படத்தோட இடையில் வந்தாலும் காமெடி அட்ட்காசம் . படம் பார்க்கும் நாம் சோர்வில்லாமல் இருக்க இவரின் காமெடி ஒரு டானிக் .

ரவிச்சந்திரன் , நிழல்கள் ரவி , அழகம்பெருமாள் , மனோபாலா ,சிங்கமுத்து அளவான நடிப்பு .

இந்த படத்தோட காட்சி அமைப்புகள் ரொம்ப சூப்பர் . ஒளிப்பதிவாளரின் உழைப்பு வீணாகவில்லை .

இசை வித்தியாசாகர் . பிண்ணனி இசை ரொம்ப சூப்பர் என்று சொல்ல வைத்தவர் , பாடல்கள் சுமார் என்று சொல்ல வைத்திருக்கிறார் .

படத்தில் சிறுசிறு குறைகள் இருந்தாலும் நாம் தம்மடிக்க போகாமல் வைத்திருக்கிறார்கள் .

கண்டேன் காதலை ‍... ரசித்து அனுபவிக்க ..

இந்த படத்துக்கு எத்தனை மார்க் போடலாமுன்னு நீங்களே சொல்லுங்க...

ஸ்டார்ஜன்

Post Comment

Thursday, November 5, 2009

பிடிக்குமா .. பிடிக்காதா .. தொடர்பதிவு

தமிழ்நாட்டின் விடிவெள்ளியாய் உதித்து ,
பார் போற்றும் வலையுலகில் , தன்
எழுத்துக்களால் முத்திரை ப‌தித்து ,
இறைவ‌ன் அருளால் உயர்ந்து நிற்கும் ,

என் அருமை ந‌ண்ப‌ர் ப‌ழ‌னி வ‌ள்ள‌ல் டாக்ட‌ர் சுரேஷ் அவ‌ர்க‌ள் என்னை ஒரு அருமையான‌ தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறார் .

அது என்ன‌வென்றால் , பல துறைகளை சேர்ந்த , ந‌ம‌க்கு பிடித்தவர் , பிடிக்காத‌வ‌ர் ப‌த்தி எழுத‌ வேண்டும் . தொட‌ர்ப‌திவு எழுதுவ‌து என‌க்கு ஜாலியான‌ ஒன்று . என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் . டாக்ட‌ர் சுரேஷ் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றியினை சொல்லியவாறே ப‌திவுக்குள்ள‌ போக‌லாமா ...

1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்

பிடித்த‌வ‌ர் : வேற‌ யாரு ... ந‌ம்ம‌ டாக்ட‌ர் க‌லைஞ‌ர் தான் .
அண்ணாவின் அருமைத் த‌ம்பியாய் ,
ஆருயிர் த‌ம்பிக‌ளுக்கெல்லாம் அருமை அண்ணனாய் ,
இய‌ல் இசை நாட‌க‌மாய் இருக்கும் செந்தமிழின் காவ‌ல‌னாய் ,
ஈடு இணையில்லாத‌ அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ராய் ,
உளியின் ஓசை நாய‌க‌ராய் ,
ஊரும் பாரும் போற்றும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ராய் ,
உயர்ந்து நிற்கும் டாக்ட‌ர் க‌லைஞ‌ர் .

பிடிக்காத‌வ‌ர் : அர‌சிய‌ல்ல‌ நிரந்திர‌ ந‌ண்ப‌னும் கிடையாது ; நிர‌ந்திர‌ எதிரியும் கிடையாது , என்று சொல்வார்க‌ள் .

2 . எழுத்தாள‌ர்

பிடித்த‌வ‌ர் : தொலைந்து போன என் இனிய‌ இயந்திரா ,

பிடிக்காத‌வ‌ர் : நான் தான் . ( ஹிஹிஹி ... )

3. க‌விஞ‌ர்

பிடித்த‌வ‌ர் : வாலிப‌ க‌விஞ‌ர் வாலியும் , முத்திரை க‌விஞ‌ர் வைர‌முத்துவும் ,

பிடிக்காதவ‌ர் : விஜ‌ய‌ டி ஆர் .

4 . இய‌க்குன‌ர்

பிடித்த‌வ‌ர் : ம‌ணிர‌த்ன‌ம் . இவ‌ர் ப‌ட‌ங்க‌ள் ம‌ணி ம‌ணியா இருக்கும் . ஆனா ஒண்ணு இவ‌ர் ப‌ட‌த்தை பாக்கும் போது காதை ரொம்ப‌ தீட்டிக்கிற‌னும் .

பிடிக்காத‌வ‌ர் : க‌ம‌ல்ஹாச‌ன் .

5. ந‌டிக‌ர்

பிடித்த‌வ‌ர் : ந‌ம்ம‌ சூப்ப‌ர் ஸ்டார் தான் .

பிடிக்காத‌வ‌ர் : ஒ ஜி மகேந்திர‌ன் .

6 . விளையாட்டு

பிடித்த‌து : கிரிக்கெட் .

பிடிக்காத‌து : கால்ப‌ந்து .

7 . பேச்சாளர்

பிடித்தவர் : திண்டுக்கல் ஐ லியோனி

பிடிக்காதவர் : வெட்டியா பேசி பொழுதை போக்குபவர் .


அப்பாடி ... இந்த 7 லோட கேள்வி முடிஞ்சிருச்சா ... ஏழு கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள ....

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த பதிவினைத் தொடர நால்வரை நான் அழைக்கிறேன் .

1. கோவி கண்ணன் ( காலம் )

2 . அக்பர் ( சினேகிதனே )

3 . பிரபாகர் ( எண்ணத்தை எழுதுகிறேன் )

4 . நையாண்டி நைனா .

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்