Pages

Tuesday, December 14, 2010

கரகர மொறுமொறு - 13/12/2010

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா..

கடந்த டிசம்பர் 9ம்தேதி என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. வலையுலக நண்பர்கள், நண்பர்கள் , உறவினர்கள் அனைவரும் வாழ்த்தியது மிக மகிழ்ச்சியாக அமைந்தது. வலைப்பூ, பேஸ்புக், மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி என்னை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

*************

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தமிழ்2010 கருத்தரங்க செய்திகளை முத்துலட்சுமி மேடம் பதிவின் மூலம் படிக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதில்,

/// நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.///

வாழ்த்துகள் ஹேமா. இன்னும் பலரின் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு முத்துலட்சுமி மேடம் பதிவினை படித்துப் பாருங்கள்.

***********

ஊருக்கு கிளம்பும் சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். சில காரணங்களினால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தாயகம் திரும்புவேன் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கின்ற ஆனந்ததுக்கு அளவே இல்லை. குடும்பம், நண்பர்கள், உறவினர்களை சந்திக்கவேண்டும் என்ற‌ ஆவல் உள்மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு போகணும் என்ற நினைப்பாவே இருப்பதால் நாட்கள் மெல்ல மெல்ல நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்கிறது. எழுதவேண்டும். உங்களிடம் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எழுத உக்கார்ந்தால் 2 வரிக்கூட தாண்ட முடியவில்லை. ‌ நண்பர் அப்துல்காதர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த கட்டுரையை பாதி எழுதினாற்போல இருக்கிறது.

************

ஒரு சிறிய ஒருபாரா கதை ஒன்றை எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே..


சில்லறைக்காசுகள்

"அய்யா.. தர்மம் பண்ணுங்க சாமி" என்றவனை ஏறிட்டுப் பார்த்தேன். "ஏம்ப்பா நல்லாதானே இருக்கே., உழைச்சி சாப்பிடலாமே" என்ற எனக்கு அவன் சொன்னது அதிர்ச்சிதான். "எனக்கு மட்டும் பிச்சை எடுக்கணுன்னு ஆசையா என்ன!!. இந்த 2150 ல எல்லாமே நகரமயமாக்கல், பொருளாதார வீக்கம், விலைவாசி ஏற்றம். இப்படியே போனா, எனக்கு பிச்சை எடுக்கக்கூட தெம்பு இருக்காது. உங்களுக்கு இந்த நிலமை வர்றதுக்குள்ள யோசிங்க சார்."

***********

Post Comment

23 comments:

  1. இந்தக் குளிரலும் கரகரமொரமொறவென்று நொறுங்ககிறதே...

    ஒரு கொடுமை நாளைய ராஜாவை இன்று பிச்சை எடுக்க வச்சிட்டாங்களே...

    ReplyDelete
  2. ஐஐஐஐஐஐஐ
    எனக்குத் தன் சுடு சோறு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

    ReplyDelete
  3. தாமதப்படுத்தப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள்... தாங்கள் தாயகம் திரும்புவது குறித்து மகிழ்ச்சி...

    ReplyDelete
  4. நீங்கள் விரும்பும் வண்ணம், சீக்கிரம் தாயகம் செல்ல வாழ்த்துக்கள்!
    பதிவு, வழக்கம் போல உற்சாகத்துடன் இருக்கிறது.

    ReplyDelete
  5. உங்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    தாயகம் திரும்பும் உங்களை அழியனுப்புகிறேன்.....
    விடுமுறை சிறப்பாய் கழிய வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. நன்றி ஸ்டார்ஜன்.வரும் புத்தாண்டுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.
    சுகமாய் ஊர் போய் வாருங்கள் !

    ReplyDelete
  7. விரும்பியபடி ஊர் பயணம் அமைய வாழ்த்த்துக்கள்.பதிவு அருமை.

    ReplyDelete
  8. நல்லபடியாக தாயகம் திரும்ப வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
  9. \\தாமதப்படுத்தப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள்... தாங்கள் தாயகம் திரும்புவது குறித்து மகிழ்ச்சி...\\

    ReplyDelete
  10. பாராக் கதை நல்லாருக்கு.

    ReplyDelete
  11. உங்கள் தாயக பயன் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பாராக் கதை நல்லாருக்கு.

    நீங்கள் விரும்பும் வண்ணம், சீக்கிரம் தாயகம் செல்ல வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. பாராக் கதை நல்லாருக்கு.

    நீங்கள் விரும்பும் வண்ணம், சீக்கிரம் தாயகம் செல்ல வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. என்னது கரகரமொறுமொறுவா ரைட்டு

    என்ன குரு நல்லாருக்கியளா....:) முதல்ல ஊருக்கு கிளம்புங்க...போட்டோவுல பார்ககறதுக்கே பாவமா இரருக்கு.

    ReplyDelete
  15. ஊருக்கு போய் புத்தாண்டு கொண்டாட.. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  16. தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilblogs.corank.com/

    ReplyDelete
  17. உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிராத்திக்கிறேன்...உங்களுக்கு என் belated wishes...:)))

    ReplyDelete
  18. ஊருக்குப்போகும் முன்னும் போய்விட்டுவந்த பின்னும் கொஞ்ச நாளுக்கு இப்படித்தான் :)

    ReplyDelete
  19. கரகர மொறுமொறு இந்த குளிருக்கு இதமா :)

    ReplyDelete
  20. கரகர மொறு மொறு சூப்பர்.//ஊருக்கு போகணும் என்ற நினைப்பாவே இருப்பதால் நாட்கள் மெல்ல மெல்ல நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்கிறது.//வார்த்தைகளில் உணர்வுகளின் பிம்பம் பிரதிபலிக்கின்றது.நல்ல படியாக ஊர் போய் வாருங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  21. தல ஊருக்கு போகணும்னு நெனச்சாலே தூக்கம் தூக்கமா வருமே!! ஹி ஹி :-))

    ReplyDelete
  22. நீங்களும் அக்பரும் ஒன்றாக ஊர் போய் நல்ல படியாக இருக்க வாழ்த்துகக்ள்

    http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_09.html
    இங்கும் ,மறந்துடாதீஙக்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்