Pages

Sunday, January 16, 2011

ஊருக்கு செல்கிறேன்..


அன்புள்ள நண்பர்களே! எல்லோரும் நல்லாருக்கீங்களா..

ஒரு சந்தோசமான செய்தி.. நான் ஊருக்கு கிளம்பி வருகிறேன். இரண்டு வருடம் மனைவியையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து வனவாசம் போல இருந்த சவூதி வாழ்க்கை முடியப்போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஊரில் இருந்துவரும்போது பலவித சோகங்களுடன் வந்த எனக்கு இந்த பதிவுலகம் ஒரு புத்துணர்ச்சியை தந்தது. ஆம்! இன்று எனக்கு அண்ணன்மார்கள், அக்காமார்கள், மதனி, தங்கைகள், மாமா, டீச்சர், பங்காளிகள், நண்பர்கள் என ஒரு குடும்பம் போல உறவுகளை பெற்றுத்தந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஐந்து மாதம் விடுமுறையில் செல்கிறேன். நான், நாளை இரவு 11 மணிக்கு தம்மாம் டூ திருவன‌ந்தபுரம் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் செவ்வாய் காலை திருவனந்தபுரம் வந்து எங்க ஊருக்கு செல்கிறேன். ஊரில் இருக்கும்போது அடிக்கடி பதிவுபக்கம் வரமுடியாத சூழ்நிலை இருக்கும்.

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

,

Post Comment

31 comments:

 1. ஸலாம் சகோ ஸ்டார்ஜன்,,

  நல்லது..நல்லபடி ஊர் சென்றுவர அல்லாஹ் போதுமானவன்..
  இன்ஷா அல்லாஹ் சேர்த்துக் கொள்ளுங்கள்..அல்லாஹ் உங்களின் பயணத்தை எளிதாக்க போதுமானவன்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 2. ரைட்டு!! நல்லவிதமா போயிட்டு சலாமத்தா திரும்பி வாங்க தல!! போயிட்டு வரும்போது ரொட்டி முட்டாயி, உங்க ஊர் அல்வா, எல்லாம் வாங்கியாங்க இந்த சின்னப் பிள்ளைக்கி. சரியா!!! அவ்வ்வ்வவ்... சலாமத்தக்...

  ReplyDelete
 3. ஊர் பயணம் இனிதாய் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.நல்ல படியா போய் நாடிய காரியங்கள் எல்லாம் நிறைவேறி சிறப்புற அக்காவின் துஆக்கள்.ஃபீ அமானில்லாஹ்...

  ReplyDelete
 4. நல்ல விதமாக போய்விட்டு சந்தோஷமாக விடுமுறையை கழிச்சிட்டு வாங்க சகோ.நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. விடுமுறை வாழ்த்துக்கள்.
  நெல்லை உங்களை அன்புடன் வரவேற்கிறது

  ReplyDelete
 6. சந்தோஷமாக விடுமுறையை கழிச்சிட்டு வாங்க... நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஐந்து மாத லீவா...? மாஷா அல்லாஹ், நல்ல விதமாக போய் சந்தோஷமாக இருந்து பத்திரமாய் திரும்பி வாங்க நானா. ஃபீ அமானில்லாஹ்! வீட்டில் அனைவருக்கும் ஸலாமும், விசாரிப்பையும் சொல்லுங்க. முடிந்தால் அவ்வப்போது வந்து எட்டி பாருங்க.

  ReplyDelete
 9. அடடே... குரு சூப்பர்...மே மாசம் அங்கதானே இருப்பிங்க? சந்திக்க முயற்சிக்கிறேன்....

  அல்வாவை மறந்துடாதீங்க...தல
  டாட்டா பை பை....:)))

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்லபடியா போய்ட்டு வாங்க அண்ணா...

  மறக்காம என் சலாமை எல்லோரிடமும் சமர்ப்பிச்சுடுங்க...

  பயணம் இனிதாக எளிதாக அமைய அல்லாஹ் துணை புரிவான்

  ReplyDelete
 11. உங்கள் பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சலாம் கூறவும்.

  ReplyDelete
 12. /@அஸ்மா: நல்ல விதமாக போய் சந்தோஷமாக இருந்து பத்திரமாய் திரும்பி வாங்க நானா./

  எது நானா'வா?? சகோ என்ன உங்களுக்கு அவ்ளோ வயசா??

  நானா'ன்னா தாத்தா தானே..

  அய்யயோ..

  ReplyDelete
 13. திருவனந்தபுரம் ஏர்போர்ட் பற்றி என் அனுபவத்தை பதிவில் எழுதிருக்கேன் படிச்சு பாத்துட்டு போங்க.....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. ஊர் பயணம் இனிதாய் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. குடும்பத்தோடு குதூகலமாய் விடுமுறையைக் கழியுங்கள் நண்பரே! வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. இன்ஷா அல்லாஹ் நல்லவிதமாய் ஊர் சென்று,
  லீவு முடிந்து திரும்புங்கள், அல்லாஹ் அருளால்!
  வீட்டில் அனைவருக்கும் என் அன்பு சலாம்.
  குடும்ப சொந்த, பந்தங்களோடு விடுமுறையை
  சுகமாய் அனுபவியுங்கள்.
  நேரம் கிடைத்தால் (?) பதிவுலகம் வாருங்கள்.
  அல்லது நிஜாம் பக்கம் மட்டும் வாருங்கள். ஹி.. ஹி..

  ReplyDelete
 17. என்னன்ன கணவுகளோடு செல்கிறிர்களோ அவை அனத்தும் நிறைவேர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. தங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அழைக்கும்{வரஹ்}

  இப்பதான் ப்ளாக் பக்கம் வந்தேன்.உங்கள் பதிவை படித்தேன்.ரெம்ப சந்தோஷம் கொழுந்தனார்.

  உங்கள் பயணம் சந்தோஷமாக அமைய மதனி துஆ செய்கிறேன்.என் தங்கைக்கு என் சலாத்தை சொல்லவும்.

  ReplyDelete
 20. இந்தியா தங்களை வரவேற்கிறது..
  பயணம் இனிதாக அமையட்டும்.

  ReplyDelete
 21. மகிழ்ச்சி பெருக நல்வாழ்த்துகள் தம்பி

  ReplyDelete
 22. பொறாமையாக்கூட இருக்கு.போய்ட்டு வாங்க ஸ்டார்ஜன்.ஒற்றை நொடிகூட உங்க சந்தோஷப் பொழுதா இருக்கட்டும் !

  ReplyDelete
 23. ல்வாழ்த்துகள்

  ReplyDelete
 24. இனிய பயண வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 25. சந்தோசமான பயணமாக இருக்கட்டும் ஷேக். சீக்கிரம் திரும்புங்க.

  ReplyDelete
 26. ஸலாம் அண்ணா,

  பயணம் நல்லபடியாக அமையவும், நாட்கள் சந்தோஷத்துடன் கழியவும் வாழ்த்துக்கள். மீண்டும் நலத்துடனும், சந்தோஷமாகவும் திரும்பி வர து’ஆக்க்ள்.

  வ ஸலாம்.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் மக்கா..:)) சந்தோஷம் பொங்கட்டும்..:))

  ReplyDelete
 28. Have a safe and fun trip... Convey our regards to your family.

  :-)

  ReplyDelete
 29. நல்ல படியா போயிட்டு வாங்க.. :)

  ReplyDelete
 30. சீக்கிரம் வாருங்கள் ஸ்டார்ஜன்..காத்திருக்கிறோம்..

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்