Pages

Saturday, October 22, 2011

சவுதியில் கருகிய இந்திய மலர்?..

மனிதன் எப்போது வாழ கற்றுக்கொண்டானோ அப்போதே பொறாமையும் பூசலும் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் சண்டையிட்டு மடிகின்றனர். இது தீருமா என்றால் தீராது. தன் தேவைகளையும் குடும்ப தேவைகளையும் நிவர்த்திசெய்ய மனிதன் உழைக்க கற்றுக்கொண்டான். உழைத்து பொருளீட்டி தன் சூழலை முன்னிலைப்படுத்துகிறான்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை சும்மாவா சொன்னார்கள். சிலருக்கு அவரவர் உள்நாட்டிலே பொருளீட்டக்கூடிய சூழல் இருக்கும். இந்த வாய்ப்பைத் தேடி எத்தனை எத்தனையோ பேர் அயல்நாடு செல்கிறார்கள். அப்படி செல்கின்றவர்கள் அந்நாட்டு குடிமக்களால் பலவித இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் படும் கஷ்டங்களை சொல்லி மாளா. இனவெறி தாக்குதல்கள் அளவுக்கு மீறிப்போய் சில சமயங்களில் உயிரையும் வாங்கிவிடும் சூழல் மிக கொடுமையிலும் கொடுமை. அந்த அளவுக்கு மனிதநேயம் அற்றிப்போய்விடுவது வருத்தமான ஒன்று.

இப்படியொரு சம்பவம்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்கே நடந்துள்ளது. ஆம் கொலை!. இங்கே, ஒரு இந்தியனையே, இந்தியன் கொலை செய்து விட்டான்.

நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் சுகைக் என்னுமிடத்தில் உள்ள பெட்ரோல் பல்கில் இந்தியர்களும், பங்காளி, மற்ற நாட்டுக்காரர்களும் அங்கே வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே மெஸ். அதாவது எல்லோரும் ஒன்றாக சமையல் செய்து சாப்பிட வேண்டும். தனித்தனியாக சமையல் செய்யமுடியாது. சென்ற ஆண்டு புதிதாக வந்த பாலக்காட்டை சேர்ந்த மலையாளியும் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு, இங்கு சாப்பாட்டில் அதிகளவு காரம் இருந்துள்ளது. இவரும் சரி என்ன செய்ய என்று சாப்பிட்டு வந்துள்ளார்.

தினமும் காரமான சாப்பாட்டை மலையாளியால் சாப்பிட முடியவில்லை. அதனால் சமையல் செய்யும் உ.பி(உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன்)யிடம் "சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்; சாப்பிடமுடியவில்லை" என்று முறையிட்டு இருக்கிறார். அதற்கு உ.பி காரன் அதெல்லாம் முடியாது. சாப்பிட்டுதான் ஆகணும் என்றிருக்கிறான். தினமும் மலையாளி சாப்பாட்டில் காரத்தை குறைக்க சொல்லியிருக்கிறான். இதனால் உ.பி காரனுக்கு காழ்ப்புணர்ச்சி அதிகமாயிட்டே இருந்திருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அறையில் தூங்கிக் கொண்டிருந்த மலையாளியை உ.பி காரன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். சத்தம் கேட்டு அறைக்கு வந்த பங்காளி, இதை பார்த்து அலறி எல்லோரையும் அழைத்துள்ளான். எங்கே தன்னையும் இப்படி செய்துவிடுவானோ என்றெண்ணி உடனே அறைக்கதவை தாளிட்டு கபிலுக்கு (முதலாளிக்கு) போன் செய்து விசயத்தை தெரிவித்துள்ளான்.

உ.பி காரனை போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். இன்னும் இரண்டு நாட்களில் உ.பி காரன் தலையை வெட்டப்போகின்றனர்.

இந்த செய்தியை சில நண்பர்கள்மூலம் அறிந்தபோது மனது மிகவும் வேதனையானது.

என்ன கொடுமை?.. சே..! யாரும் செய்யத் துணியாத காரியத்தை எப்படி துணிச்சலாக செய்தான் என்றே தெரியவில்லை. இந்த அளவுக்கா கொடும் மனசுக்காரானா இருப்பான். எந்த அளவுக்கு முரடனா இருந்தால் இப்படி செய்திருப்பான்?.. கேட்கும்போதே மனது வேதனையிலும் வேதனையானது.

பாவம் அந்த மலையாளி!. மலையாளிக்கு 24 வயசுதான் ஆகுதாம். அடுத்த வருடம் ஊருக்கு சென்று திருமணம் செய்ய முடிவு செய்திருந்தானாம். அவனை நம்பிதான் அவன் குடும்பமே இருக்குதாம். இப்போது அவனை இழந்து தவிக்கும் அவனது குடும்பத்தாருக்கு யார் பதில் சொல்வார்?.. அதுவும் இந்த இளம்வயதிலே இப்படியொரு இழப்பு யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்?.. தாங்கவே முடியாத சோதனை.

இறந்து போன மலையாளியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கலையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


குடும்ப சூழ்நிலையின் காரணமாக, வெளிநாட்டுக்கு வந்து கஷ்டப்பட்டு உழைக்கும் எத்தனை எத்தனையோபேர் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் இந்த சம்பவம் மிகக் கொடுமையானது. மலையாளி, அப்படியென்ன தவறு, பாவம் செய்துவிட்டான்?. சாப்பாட்டில் காரத்தை குறைக்க சொன்னதற்கு இப்படியொரு தண்டனை. ஒரு இந்தியனே மற்றொரு இந்தியனை கொலை செய்துள்ளது மனிதத்தன்மை அற்ற செயல்.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது உலகம்????.. வெளிநாட்டில் வாழும் இந்திய நண்பர்களே! இந்தமாதிரி ஆசாமிகள் உங்களருகில் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்க.

Post Comment

22 comments:

  1. படித்தவுடன் மனசு ரொம்ப கஷ்டமாகி விட்டது. சாதாரண விசயத்துக்கு கூட சகித்துகொள்ளும் மன பக்குவம் இல்லாமல் போய் கொண்டு உள்ளது. நாம் ஏன் இங்கு வந்துள்ளோம் என்று ,தன்னிலை மறந்து விடுகிறார்கள்

    ReplyDelete
  2. படிக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா, அநியாயமா கொலையும் செஞ்சிட்டு இவனும் சாகப்போறானே ச்சே என்ன மனிதர்கள்...!!!!

    ReplyDelete
  3. என்ன கொடுமை... ஒரு நிமிடம் யோசித்திருந்தாலே சம்பவத்தை தவிர்த்து இருக்கலாமே...

    ReplyDelete
  4. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதுக்காக கழுத்தை அறுப்பதா? நினைத்தே பார்க்கமுடியாத கொடூரம் இது. மிக வருத்தமாக இருக்கிறது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  5. மனத்தை துயர்கொள்ள வைக்கிறது.

    ReplyDelete
  6. என்ன கொடுமை இது,, கழுத்தை அறுக்கும் அளவுக்கு அவன் என்ன குற்றம் செய்தான்..

    மிருகங்கள் கூட தன் இனத்தை தானே கொல்வதில்லை,, ச்சே!

    ReplyDelete
  7. சகிப்புத் தன்மையின்மை
    + முன்கோபம்
    + தன்னிலை மறத்தல்
    = நட்டம் அனைத்தும்

    ReplyDelete
  8. அவசரப்பட்டதுக்கு அவன் தலையும் தானே போகப்போகிரது :-(

    ReplyDelete
  9. வாசிக்கவே கஷ்டமாப் போச்சு.

    உலகத்துல சகிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டு வருதோ!!

    ReplyDelete
  10. varuththamaaka irukkirathu..kopam mulaiyai malungka seiyum enbathu ithu thaan.. u.p. kkaaran thalai.. eluththu appadi irukku...

    ReplyDelete
  11. //உ.பி காரனை போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். இன்னும் இரண்டு நாட்களில் உ.பி காரன் தலையை வெட்டப்போகின்றனர்.// நானும் ஹஸா - ஹஃபூஃப்-ல் 28 வருடங்களாக வசித்துவருகிறேன். இப்படி ஒருபோதும் இரண்டு நாட்களில் தீர்ப்பளிக்க முடியாது; சட்டநடைமுறைகள் அறியாமல் எழுதியள்ளதைப் பார்த்தால், தங்களது இடுகையும் சந்தேகமே! பிறர் சொல்வதை, ஆராயாமல் எழுதாதீர்கள்.

    ReplyDelete
  12. ஆத்திரகாரனுக்கு புத்திமட்டம் என்பது அந்த உபிகாரனின் செயல் விளக்குகிறது. இருவரின் குடும்பத்தாரை நினைத்தால் மனது வலிக்கிறது

    ReplyDelete
  13. உணர்ச்சிப்பெருக்கில் கொலை செய்வது ஒரு ரகம். இந்த இடுகையை வாசித்தால், திட்டமிட்டு உறங்கும்போது கொலை செய்திருப்பது போலிருக்கிறது. குரூரத்தை வெளிப்படுத்துகிறது. பாவம் பலியான இந்தியர்! இரங்கல்கள்!!

    ReplyDelete
  14. கேட்கவே சங்கடமாக இருக்கிறது. உறவுகளை விட்டு உறவுகளுக்காகப் பொருளீட்டப்போன இடத்தில் இப்படி ஒரு முடிவா?
    பயங்கரம்.

    ReplyDelete
  15. மனதை கனக்கசெய்து விட்டது இடுகை.

    ReplyDelete
  16. என்னவொரு கொடூர செயல்? வாசிக்கும் பொழுதே நடுங்கிப்போய்விட்டேன்..கொலை செய்தவர் ஒரு சைக்கோவாக இருக்குமோ! இல்லாவிட்டால் இப்படியொரு செயலை செய்ய வாய்ப்பில்லை..பாவம்..

    ReplyDelete
  17. கோபம் ஒரு மனிதனை எவ்வளவு கொடூரமாக்குகிறது.அனுதாபங்கள் !

    ReplyDelete
  18. ஒரு இந்தியனே மற்றொரு இந்தியனை கொலை செய்துள்ளது மனிதத்தன்மை அற்ற செயல்.

    கொடுமை!!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்