இன்று மதியம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை படித்ததும் மனம் என்னவோ போலானது. மிகுந்த வேதனையடைந்தேன். யாருக்கும் எந்தவித துன்பமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று மனம் பதபதைப்பாக இருக்கிறது.
மலேசியாவில் உள்ள தம்பியுடன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது கொஞ்சம் ஆறுதல். நண்பர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்க சொல்லவேண்டும்.
சென்றமுறை 2004ல் சுனாமி வந்து இந்திய இந்தோனேஷியா மற்றும் கடற்கரை பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. மறுபடியும் சுனாமி என்றால் தாங்காது இந்தபூமி. இறைவன் தான் எல்லா மக்களையும் பாதுக்காக்க வேண்டும்.
சென்ற 2004ல் சுனாமி வந்தபோது நான் வேலை விசயமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அங்கே எல்லோரும் ரொம்ப கவலையுடன் இருந்தனர். ரேடியோக்களிலும் தொலைக்காட்சியிலும் ஒலி/ஒளிப்பரப்பட்ட காட்சிகளை கண்டபோது மனம் ரொம்ப வேதனையாக இருந்தது. அன்றைய தினம் மனசு முழுவதும் பிரார்த்தவண்ணமே இருந்தது. மதுரை வந்தபின் பள்ளியில் தொழுது பிரார்த்தனை செய்தது இன்னும் பசுமையாக உள்ளது.
எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.
சென்னையில் உள்ளவர்களும் கடற்கரை மாவட்டங்களில் உள்ளவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கவலைப்படவேண்டாம். இறைவன் பாதுகாப்பான்.
,
எல்லாம் வல்ல இறைவன் எல்லோரையும் காப்பாற்றுவானாக
ReplyDeleteஆமீன்! ஆமீன்!! யாரப்பில் ஆலமீன்!!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பில் ஆலமீன்!!
ReplyDeleteசுனாமி பற்றி முதல் பதிவு
ReplyDeleteஎல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.
ReplyDelete//ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
SALAM,
ReplyDeleteநிச்சயம் எல்லா விதமான ஆபத்துகளில் இருந்தும் அந்த ஒரே இறைவனால் மட்டுமே நம்மை காப்பாற்ற இயலும்.அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.உங்கள் தளத்திற்கு என் முதல் வருகை .FOLLOWER ஆகிவிட்டேன்
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
This comment has been removed by the author.
ReplyDelete