எத்தனையோ பதிவர் கூட்டம் நடந்திருக்கிறது , ஒன்னில் கூட கலந்துக்கவில்லை .
நான் புதிய பதிவர் ஆகி சில மாதங்களே ஆகிறது.
எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் . சரி இந்த கூட்டத்தில் கலந்துக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன் .
மே 23 ம் தேதி சென்னைக்கு கிளம்பினேன்.
எனக்கு தெரிந்த நண்பர் மூலம் கூட்டம் நடப்பதாக இருந்த கிழக்கு பதிப்பகத்துக்கு சென்றேன் .
அங்கே எல்லோரும் குழுமி இருந்தார்கள் .
முரளிக்கண்ணன் , லக்கிலுக் , கார்க்கி , கும்க்கி , பரிசல்க்காரன் , டோண்டு ராகவன் , கனவுகளே சுரேஷ் , தாமிரா ஆதிமூலகிருஷ்ணன், அதிஷா , நரசிம் , கேபிள் சங்கர் , அப்துல்லாஹ் , என்று நிறைய தலைகள் கூடி இருந்தார்கள் .
அப்போது நான் உள்ளே நுழைந்தேன் .
நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.
லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.
முரளிக்கண்ணன் : அங்க யாரு புதுசா வாரங்க !
starjan : முரளி , நாந்தான் starjan !
சுரேஷ் : வாங்க தல , எப்படி இருக்கீங்க !!!
அதிஷா : ஒ ! நீங்க தான் புதுசா எழுதிறிங்களா !
டோண்டு ராகவன் : வாங்க தம்பி ! உங்க பதிவை நான் பார்க்கிறேன் !
கேபிள் சங்கர் : நம்ம கூட்டணியிலே ஐக்கியமாயிடிங்க !!
starjan : உங்க விமர்சனத்தை பார்க்காம நான் படம் பார்க்கிறதே இல்ல . starjan : இன்னக்கி எதை பற்றி மீட்டிங் ?...
சுரேஷ் : யாருக்கு தெரியும் ? , எதோ கூப்பிட்டாங்க வந்தேன் !.
நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.
முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.
அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.
ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?.
நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது? புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.
starjan : ப்ருனோ , பெரிய ஆளுதான் !
அப்துல்லா : உங்க பதிவில் பாப்பா படம் போட்டிருந்ததால் ,நீங்க பப்பான்னு நினைத்தேன் .
starjan : என்னை ஐ வச்சி காமெடி கீமடி ஒன்னும் பண்ணலியே ?.
லக்கிலுக் : சே சே, சிரியசாக தான் சொல்லுறோம் .
முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்ஷன் இருக்கும்.
சுரேஷ் : அது என்ன ? .
starjan : அது ஏதாவது சாப்பாடு ஐட்டமா இருக்கும் .
அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?.
லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.
முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.
அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.
அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?.
கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?. நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.
starjan : லக்கி ,என்ன பண்ண போறீங்க !.
லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.
அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.
நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?. starjan : அப்ப நாம இரண்டு பேரையும் கூப்பிடுவோம் , என்ன சரியா ?.
பின்னர் நாங்க அனைவரும் தமிழ்மணத்தில் நல்ல பதிவை போடுவது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது திடீரென முரளிக்கண்ணன் ஒரு கட்டையை எடுத்து வந்து " நாங்க எவ்வளவு காலமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம் .,எங்களையே நீ கலாய்க்கிறாயா !" என்று அடிக்க வர ஆ அம்மா ஐயோ !! என்று அலறினேன் .
கண் விழித்து பார்த்தால் சவுதி யில் தூங்கி கொண்டு இருந்தவனை என் நண்பன் எழுப்பிக்கொண்டு இருந்தான் .
அட சே இது வெறும் கனவா
இந்த தடவை ஊருக்கு போனால் இவங்களை எல்லாம் சந்திக்கணும் ......