மக்கள் சாப்பிடும் அன்றாட உணவுவகைகளில் புரோட்டாவுக்கு தனியிடம் உண்டு. நகரத்திலிருந்து கிராமம் பட்டிதொட்டிவரை எல்லா இடங்களிலும் முக்குக்குமுக்கு புரோட்டா கடைகள் உண்டு. இந்த கடைகளில் இரவுநேரங்களில் வியாபாரம் படுஜோராக இருக்கும். கூட்டம் அலைமோதும்.
புரோட்டா ஒவ்வொரு ஊருக்கும் தனிசுவை என்று வித்தியாசப்படும்.
தினமும் இரவு புரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும் என்ற அளவுக்கு புரோட்டா மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. புரோட்டா ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுகள். விருதுநகர் புரோட்டா, நெல்லை, தூத்துக்குடி புரோட்டா, மதுரை கொத்து புரோட்டா, சில்லி புரோட்டா, சிக்கன் புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, மற்றும் இன்னும் வகைவகையான புரோட்டாக்களை பற்றி சொல்லும்போதே நாவில் நீர் ஊறுகிறது.
வட மாநிலங்களில், "பரத்தா' என அழைக்கப்படும், "அயிட்டம்' தான், மருவி தமிழகத்தில் "புரோட்டா' என்றானது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. "பரத்தா' என்பது கொஞ்சம் சப்பட்டையாக இருக்கும். புரோட்டா, கொஞ்சம் உப்பலாக இருக்கும். மற்றபடி, இரண்டுமே "அக்கா, தங்கச்சி' தான்.
இந்தியில் கோதுமை மாவுக்கு பெயர் "ஆட்டா'. "பரா' என்றால் அடுக்கு. சுட்ட பிறகு, அடுக்கடுக்காக அமைந்துள்ள மைதா மாவு என்ற அர்த்தத்தில் "பரா+ஆட்டா', "பரத்தா'வாகி இருக்கிறது.
புரோட்டா என்பது மைதா மாவினால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் தமிழக்கத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த புரோட்டா.
புரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?.. மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணீர்விட்டு பிசைந்து, அப்புறம் எண்ணெய் விட்டு ஊறவைத்து, உருட்டி, ஒவ்வொரு உருண்டையாக தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல பறக்கவிட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்டவடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போட்டு சுடுவார்கள்.
இப்போது புரோட்டாவின் மூலப்பொருளான மைதாவிலிருந்துதான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டுமல்லாது இன்னும் பல உணவு வகைகள் இந்த மைதாவிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். நாம் பிறந்தநாள் கொண்டாட வாங்கப்படும் கேக் உட்பட.
மைதா எப்படி தயாரிக்கிறார்கள்?..
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.
( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, SUgar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.
இதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்ததல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.
இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.
Europe union, UK, China போன்ற நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதாவை நாம் உட்கொள்ளும்போது சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மைதாவின் தீங்கு குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கைகளும் சமர்ப்பித்துள்ளனர்.
நண்பர்களே! ஆரோக்கியமான நம் பாரம்பரியமிக்க கேழ்வரகு, கம்பு, சோளம், போன்றவற்றை உட்கொண்டு புரோட்டாவை புறம் தள்ளுவோம்.
இப்போதாவது நாமும் விழித்துக் கொள்வோம். நம் தலைமுறை காப்போம்.
**************
டிஸ்கி:
இந்த தகவலை கொடுத்து நம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட வழிவகுத்து தந்த என் நண்பர் பேராசிரியர் ஷேக் அவர்களுக்கு நன்றி. அவரது வேண்டுகோளுக்கு இணங்க இந்த இடுகையினை வெளியிட்டுள்ளேன்.
நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.
புரோட்டாவை பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்க...
ReplyDeleteஅழகான பரோட்டா படத்தினையும் போட்டு பரோட்டா பற்றிய விளக்கத்தையும் விரிவாக எழுதி விட்டு பரோட்டாவே சாப்பிடப் பயப்படும் அளவுக்கு செய்தியையும் இணைத்துள்ளீர்களே!:(
ReplyDeleteவாங்க பிரபாகரன் @ நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஸாதிகாக்கா @ நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமைதாவுல செஞ்சாத்தானே கெடுதி.. நாங்க கோதுமைப் புரோட்டாவுக்கு மாறிட்டோமே :-))
ReplyDeleteவடக்கே ரெஸ்டாரெண்டுகள்லயும் இப்பல்லாம் தந்தூரி ரொட்டியை கோதுமையில்தான் சுடறாங்க. மைதாவை கெட்டவுட் சொல்லிட்டு கோதுமைக்கு கட்டவுட் வெச்சாச்சு:-))
மிக அருமையான விளக்கம், எல்லா கடைகளிலும் அதிகம் மைதா பரோட்டாதான் ஆனால் உடலுக்கு கெடுதி , டேஸ்ட் சூப்பரா இருக்கும் .
ReplyDeleteஇப்ப நாங்களும் பூரி ரொட்டி, சப்பாத்தி பரோட்டா எல்லாமே கோதுமை, ஓட்ஸ்,ராகி இது போல் தான்
ஆசைக்கு எப்பவாவது செய்து சாப்பிடுவது
மிக அருமையானக பகிர்ந்துது இருக்கீங்க
தலைக்கு போடும் டை ரசாயனம், எலிக்கு நீரழிவுக்கு கொடுக்கும் ரசாயனம் என சொல்லும் போதே பகீர்ன்னுடுச்சு!!!
ReplyDeleteஅன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteபரோட்டாவினை பற்றிய இச்செய்திகள் சில நாட்களாக இணையத்தில் வலம் வருகின்றன. உண்மை நிலையினை யாராவது நிபுணர்கள் உறுதி செய்தார்களா - தெரியவில்லை. ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மலையாளிகள் முற்றிலுமாக பரோட்டாவை புறக்கணித்து விட்டார்கள், நாமும் விழிப்படைவோம்...!!!
ReplyDelete-----நல்ல பகிர்வு-----
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநமக்கும் புரோட்டாவுக்கும் ரெம்ப தூரம். வீட்டில் செய்ய மாட்டேன்.
எப்பவாவது ஹோட்டலில் வாங்குவேன்.
படமும்.விளக்கமும் அருமை. விழிப்புணர்வூட்டும் பதிவு
உண்மை.கோதுமை மாவை உபயோகிப்பதே சிறந்தது.
ReplyDelete\\\\Europe union, UK, China போன்ற நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதாவை நாம் உட்கொள்ளும்போது சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.////
ReplyDeleteEurope union, UK, China போன்ற நாடுகளில் தடை என்றால் இந்த நாடுகளில் முக்கிய உணவுவாக்கிய பிரட்டு மைதாவில் தானே செய்கிறார்கள். நம்பமுடியாத ஆதாரமற்ற செய்தி என்று நினைக்கிறேன்.
மகாராஜா
hi hi கோதுமை புரோட்டா ஓக்கேவா
ReplyDeleteபரோட்டா செய்தி பகிர்வு இப்ப எங்கே பார்த்தாலும் கொடி கட்டிப் பறக்கிறது.நேற்று கொஞ்சம் சோம்பல், சிக்கன் குருமா இருக்கு பரோட்டா வெளியே வாங்கலாமான்னு கேட்டேன்,என் கணவர் நோன்னு சொல்லிட்டார்.கடைசியில் வழக்கம் போல நான் செய்யும் கோதுமை பரோட்டா தான்.
ReplyDeleteபுரேர்ட்டா விஷ்ம் என அறிக.
ReplyDeleteபுரேர்ட்டா விஷ்ம் என அறிக.
ReplyDeletevery nice to see the pictures.. thanks for sharing your article.... www.rishvan.com
ReplyDeleteஅழகான, அருமையான பகிர்வு.
ReplyDeleteமைதாவுல செஞ்சாத்தானே கெடுதி.. நாங்க கோதுமைப் புரோட்டாவுக்கு மாறிட்டோமே :-))// அதேதான்.நாங்களும்
ReplyDeleteஇது எனக்கு மெயிலும் வந்திருந்தது ஷேக் முகநூலிலும் பார்த்தேன். பரோட்டா பிரியர்களுக்கு பே பே. என்மகனையும் சேர்த்துதான். ஹி ஹி
அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteuseful informations.
ReplyDelete