Pages

Thursday, May 28, 2009

நானும் வலைப்பதிவர் சந்திப்பு கூட்டமும்

நான் மே 24 ம் தேதி பதிவர் சந்திப்பு கூட்டம் சென்னையில் நடப்பதாக தமிழ் மனத்தில் பார்த்தேன் .
எத்தனையோ பதிவர் கூட்டம் நடந்திருக்கிறது , ஒன்னில் கூட கலந்துக்கவில்லை .
நான் புதிய பதிவர் ஆகி சில மாதங்களே ஆகிறது.
எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் . சரி இந்த கூட்டத்தில் கலந்துக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன் .
மே 23 ம் தேதி சென்னைக்கு கிளம்பினேன்.
எனக்கு தெரிந்த நண்பர் மூலம் கூட்டம் நடப்பதாக இருந்த கிழக்கு பதிப்பகத்துக்கு சென்றேன் .
அங்கே எல்லோரும் குழுமி இருந்தார்கள் .
முரளிக்கண்ணன் , லக்கிலுக் , கார்க்கி , கும்க்கி , பரிசல்க்காரன் , டோண்டு ராகவன் , கனவுகளே சுரேஷ் , தாமிரா ஆதிமூலகிருஷ்ணன், அதிஷா , நரசிம் , கேபிள் சங்கர் , அப்துல்லாஹ் , என்று நிறைய தலைகள் கூடி இருந்தார்கள் .
அப்போது நான் உள்ளே நுழைந்தேன் .
நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.
லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.
முரளிக்கண்ணன் : அங்க யாரு புதுசா வாரங்க !
starjan : முரளி , நாந்தான் starjan !
சுரேஷ் : வாங்க தல , எப்படி இருக்கீங்க !!!
அதிஷா : ஒ ! நீங்க தான் புதுசா எழுதிறிங்களா !
டோண்டு ராகவன் : வாங்க தம்பி ! உங்க பதிவை நான் பார்க்கிறேன் !
கேபிள் சங்கர் : நம்ம கூட்டணியிலே ஐக்கியமாயிடிங்க !!
starjan : உங்க விமர்சனத்தை பார்க்காம நான் படம் பார்க்கிறதே இல்ல . starjan : இன்னக்கி எதை பற்றி மீட்டிங் ?...
சுரேஷ் : யாருக்கு தெரியும் ? , எதோ கூப்பிட்டாங்க வந்தேன் !.
நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.
முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.
அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.
ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?.
நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது? புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.
starjan : ப்ருனோ , பெரிய ஆளுதான் !
அப்துல்லா : உங்க பதிவில் பாப்பா படம் போட்டிருந்ததால் ,நீங்க பப்பான்னு நினைத்தேன் .
starjan : என்னை ஐ வச்சி காமெடி கீமடி ஒன்னும் பண்ணலியே ?.
லக்கிலுக் : சே சே, சிரியசாக தான் சொல்லுறோம் .
முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்‌ஷன் இருக்கும்.
சுரேஷ் : அது என்ன ? .
starjan : அது ஏதாவது சாப்பாடு ஐட்டமா இருக்கும் .
அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?.
லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.
முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.
அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.
அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?.
கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?. நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.
starjan : லக்கி ,என்ன பண்ண போறீங்க !.
லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.
அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.
நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?. starjan : அப்ப நாம இரண்டு பேரையும் கூப்பிடுவோம் , என்ன சரியா ?.

பின்னர் நாங்க அனைவரும் தமிழ்மணத்தில் நல்ல பதிவை போடுவது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது திடீரென முரளிக்கண்ணன் ஒரு கட்டையை எடுத்து வந்து " நாங்க எவ்வளவு காலமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம் .,எங்களையே நீ கலாய்க்கிறாயா !" என்று அடிக்க வர ஆ அம்மா ஐயோ !! என்று அலறினேன் .
கண் விழித்து பார்த்தால் சவுதி யில் தூங்கி கொண்டு இருந்தவனை என் நண்பன் எழுப்பிக்கொண்டு இருந்தான் .
அட சே இது வெறும் கனவா
இந்த தடவை ஊருக்கு போனால் இவங்களை எல்லாம் சந்திக்கணும் ......

Post Comment

25 comments:

 1. நல்ல கற்பனை.

  சென்னைக்கு வரும் போது முன்னாலேயே தகவல்
  கொடுங்க. ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிடுவோம்.

  ReplyDelete
 2. கனவு மெய்ப்பட வேண்டும்

  ReplyDelete
 3. //சுரேஷ் : வாங்க தல , எப்படி இருக்கீங்க !!!//

  அவர் அப்படி கூப்பிட மாட்டாரே.. சகட்டு மேனிக்கு எல்லோரும் மச்சான்ஸ் தான் :)

  ReplyDelete
 4. முரளி பதிவை வச்சே இன்னொரு பதிவா ..
  நல்லாருக்கு...

  ஒக்காந்து யோசிப்பிங்களோ ?

  ReplyDelete
 5. வாங்க வாங்க‌

  முரளிக்கண்ணன் , அப்துல்லா, சென்ஷி, அக்பர்

  கனவை அனுபவிக்கனும் ,

  ஆராயக்கூடாது.

  ReplyDelete
 6. என்ன செய்து கடையில் கூட்டத்தை கூட்ட .....

  ReplyDelete
 7. சென்னைக்கு வாரும் போது பதிவர்களை கண்டிப்பா சந்தியுங்கள்.

  ReplyDelete
 8. எனக்கும் வெகுநாட்களாக ஆசைதான் பதிவர்சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் தல...,

  சவூதியிலிருந்து சென்னை வர ஆகும் நேரத்தைவிட எனக்கு சென்னைவர ஆகும் நேரம் அதிகம் தல...,

  ReplyDelete
 9. சென்ஷி அவர்களுக்கு


  ////சுரேஷ் : வாங்க தல , எப்படி இருக்கீங்க !!!////


  இது என்னோட வசனம் என்று நினைக்கிறேன்..,

  ReplyDelete
 10. வாங்க சுரேஷ்


  சந்திப்போம் டாக்டர் ...

  ReplyDelete
 11. சுரேஷ்ன்னு குறிப்பிட்டது உங்களை தான் !

  ReplyDelete
 12. //சவுதி யில் தூங்கி கொண்டு இருந்தவனை என் நண்பன் எழுப்பிக்கொண்டு இருந்தான் //

  நல்ல முடிவு உங்களுக்குள் ஏக்கம் இருக்கிறது நண்பரே.......எங்கே போக போகிறார்கள் நாம் கட்டாயம் கலந்து ஆலோசிப்போம்

  ReplyDelete
 13. நிஜமாவேஒரு நா பாக்காமயா போகப்போறோம்./

  ReplyDelete
 14. நல்ல கற்பனை! - வித்தியாசமானதும் கூட. ! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. வாங்க வசந்த் ,

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 16. வாங்க தமிழினி

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 17. வாங்க கேபிள் சங்கர்

  வருகைக்கு நன்றி

  கண்டிப்பா சந்திப்போம்

  ReplyDelete
 18. வாங்க வெண்ணிற இரவுகள்....!

  வருகைக்கு நன்றி

  கண்டிப்பா சந்திப்போம்

  ReplyDelete
 19. வாங்க kggouthaman

  வருகைக்கு நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்