Pages

Thursday, August 20, 2009

ஒரு நிமிஷம் கவனிங்க ....

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்வாங்க . நான் அன்பு அண்ணன் நோ வை பத்தி சொல்லல . நோய் வந்திருச்சின்னா அவ்வளவு தான் ! . நம்மளால ஒண்ணும் செய்ய முடியாது .


சும்மா ஒரு தலைவலி இருமலுக்கே ஆஸ்பத்திரிக்கு ஓடக் கூடிய ஆள்கள் நம்மட்ட இருக்காங்க .நம்ம அரசியல்வாதிங்க ஏதாவது தப்பு செஞ்சிட்டாங்கன்னா உடனே ஆஸ்பத்திரியில போய் படுத்துக்கிட்டு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கி குற்றத்துல இருந்து தப்பிச்சிகிருவாங்க.சரி இப்போ விசயத்துக்கு வாரேன் .....மருத்துவத்துல நிறைய வகைகள் உண்டு . அலோபதி ஹோமியோபதி தமிழ் நாட்டு மருத்துவம் என்று அஞ்சாறு வகைகள் இருக்கிறது .அதுல இப்போ நாம பாக்கப்போறது ...நாட்டு மருத்துவத்தில் சின்ன சின்ன மருத்துவக் குறிப்புகளை இங்கே காணலாம் .மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்!

பொதுவாக வயது ஆக ஆக மூட்டு வலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டது. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

சாதாரணமாக காய்கறிச் சந்தையில் இந்தக் கீரையும் கிடைக்கும். அதுசரி, இந்த கீரையை வாங்கி வந்து எப்படி சமையலில் பயன்படுத்துவது என்றுதானே கேட்க்குறீங்க?


ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கு முடக்கத்தான் சாறு எப்படி தயார் செய்யறது?
இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரை தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்க வேண்டும்.


பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால், முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஒடிடும்.


முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லா விதமான மூட்டுவாதம் மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.


இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அப்புறமென்ன ஓடி ஆடலாம். சின்னக் குழந்தை போல் துள்ளிக் குதிக்கலாம். உடனே முடக்கத்தான் கீரை வாங்க கிளம்பிட்டீங்க போல இருக்கு!


நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் பச்சடி!


சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.


மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார்.

இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.


ஆனால் நிறையப் பேர் பாகற்காயை ஒதுக்குவதுபோல் கோவைக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகத்தான் ஆகும்.

இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.


கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்குமே. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரவையில் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது. பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

விஷம் முறிக்கும் பிரமத்தண்டு!


பிரமத்தண்டு, அடிபாகத்தில் இருந்து நுனிப்பாகம் வரை சாம்பல் நிறத்தில் பூத்தாற்போல இருக்கும். இலைகள் சொரசொரப்போடு இலைகளின் ஓரங்களில் மிகவும் கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். காம்பில்லாமல் பல மடல்களாலான உடைந்த இலைகள் இருக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனமாகும்.

இலை, பால், வேர், விதை மருத்துவக் குணம் உடையது. நோயை முறித்து உடலைத் தேற்றவும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். தமிழகம் முழுதும் தரிசு நிலங்களிலும், ஆற்றங் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்: குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு, பிறத்தியுபுசுப்பி, பிரம்மதண்டி, வனமாலி, வாராகுகா, சுவாறகு, முகிக்கதசத்தை, ரசதூடு, பசயந்தனி, சாதலிங்கத்தை குருவாக்கி, கிறுமி அரி.


ஆங்கிலத்தில்: Argemone mexicana Linn, Papaveraceae

மருத்துவ குணங்கள்:


பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.


பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.
பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.


பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.
20 பூக்களை எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.


பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.
இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.


பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.


பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.


பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.
பிரமத்தண்டு விதைகள் முழுவதையும் நீக்கிவிட்டு செடிகள் முழுவதையும் சுத்தம் செய்து சாறு பிழிந்து 12 வயது வரை 1/2 தேக்கரண்டி அளவிலும் அதற்கு மேல் 1 தேக்கரண்டியளவிலும் குடிக்கக் கொடுக்க எல்லா விதமான விஷங்களும் பேதியாகி முறிந்துவிடும். அதிகம் பேதியானால் எலுமிச்சைச் சாறு கொடுக்கலாம். மிகவும் களைப்பாக இருந்தால் அரை அரிசி (குருணை) உணவு கொடுக்கலாம். இதைப் பாம்பு கடிக்கு மட்டும் கொடுத்தால் நல்லது. மற்ற விஷங்களுக்குக் கடிவாயில் சாற்றை விட்டு வந்தால் விஷம் தலைக் கேறாமல் முறியும்.


பிரமத் தண்டின் விதையை எடுத்து வந்து நீர்விட்டு அரைத்து கட்டியின் மேல் ஒரு புளிய இலை களத்துக்குப் பூசிவிடவும். 2 மணிக்கு ஒரு முறை புதிதாக செய்து வர கட்டி தானாக உருண்டு பழுத்து உடைந்து விடும்.


பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி குடுப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும்.

நுரையீரல் சுத்தமாக...


கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?


ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்­ர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்­ரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.


அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். நுரையீரல் சுத்தமாகும்.

சளியை ஒழிச்சி கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம். இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

சிறுநீரகக் கோளாறின் எதிரி!


முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும். கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும். விதை காமத்தைப் பெருக்கும். பொதுவாக கிழங்குகளை இரவில் உண்பது உடலுக்கு நல்லது கிடையாது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணக் கூடாது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றது.


வேறு பெயர்கள்: முளா, தசணாக்கியா, முலகஞ்சாமியம், விசுறுகுபந்தம்


வகைகள்:


வெள்ளை முள்ளங்கி:


இதன் கிழங்கு நீண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும். இதையே நாட்டு முள்ளங்கி என்று கூறுவார்கள். இதில் பிஞ்சு முள்ளங்கியே மருத்துவத்திற்கு மிகவும் சிறந்தது.


சிவப்பு முள்ளங்கி:


இதன் கிழங்கு நீண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.


நீலம் கலந்த மஞ்சள் முள்ளங்கி:


இதன் கிழங்கு நீண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் காய்கள் இருக்கும். இதைப் பெரும்பாலும் சமையலுக்கே பயன்படுத்துவார்கள்.


ஆங்கிலத்தில்: Raphanus sativus; Linn; Brassicaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:


முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும்.


முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.


முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.


முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, வாலுளுவை, கார்போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு அரை கைப்பிடியளவு எடுத்து சேர்த்து இடித்துப் பொடியாக்கி, 25 கிராம் பொடியை 200 மி.லி. நீரில் போட்டு 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 25 மில்லியளவாக குடித்து வர மூத்திரம் மிகவும் குறைந்ததாகவும், மாவு கலந்தாற் போலவும், பால் போன்றும் போகும். இதனால் உடம்பிலும், முகத்திலும், வயிற்றிலும் உள்ள வீக்கங்கள் குறையும். மூத்திரம் வெள்ளையாகப் போவதோடு வீக்கம் வற்றிவிடும்.


முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.
பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.


முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.


முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்.

அனைத்திற்கும் அதிமதுரம்


ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.


செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...


அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.


கல்லடைப்பு நீங்க...


ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.


இருமல் நீங்க...


அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...


அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.


மஞ்சள் காமாலை நீங்க...


அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.


சுகப் பிரசவத்திற்கு...


அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.


தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...


அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.


பெண் மலடு நீங்க...


பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.


மலச்சிக்கல் நீங்க...


அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.


சூடு தணிந்து சுறுசுறுப்பாக...


சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.


ரத்த வாந்தி நிற்க...


அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.


தாய்ப்பால் பெருக....


போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.


வரட்டு இருமல் நீங்க...


அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.


இளநரை நீக்க...


அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.


நெஞ்சுச் சளி நீங்க....


அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.


இருமல் நீங்க...


அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..


மஞ்சள்காமாலை தீர...


அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.


தாது விருத்திக்கு...


அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.


கருத்தரிக்க உதவும்...


அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.


வழுக்கை நீங்கி முடி வளர ....


அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.


தலைவலிகள் நீக்க...


அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.


தொண்டை கரகரப்பு நீங்க...


அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.


ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...


பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!


மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும். செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும்.

தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது. வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.
ஆங்கிலத்தில்: Acalypha indica; linn; Euphor biaceae.

மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி நசியமிட தலைவலி நீங்கும்.


குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும். மற்ற மருத்துவ முறையினால் கைவிடப்பட்ட பவுத்திரத்துக்கு மட்டும் ஒரு வாரம் 2 வேளை 50 மில்லியளவு அவுரியிலை குடிநீரைக் (ஒரு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.) குடித்துவந்து அதன் பிறகு மேற்கண்ட மருந்தைத் தொடர்ந்து 90 நாள்கள் சாப்பிட்டுவர பவுத்திர நோய் குணமாகும்.


குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். (இது பேதியை ஏற்படுத்தி பூச்சி, புழுக்கள் வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதி அளவு கொடுக்கலாம்)


குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.


குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.


குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.


குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்.


குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.


குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)


குப்பைமேனித் தைலத்தை 50 மில்லியளவு எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க, உடலிலுள்ள கிருமிகள் வெளியேறும். இத்தைலத்தை வாத நோய்களுக்கு வெளிப்புறமாகத் தடவி வர குணமாகும்.

என்ன நண்பர்களே , அறிந்து கொண்டீர்களா ...


வருமுன் காப்போம் என்பதை கடைபிடித்து நாம் வாழ்க்கையில் ச‌ந்தோசமாக இருப்போம் ......

Post Comment

Saturday, August 15, 2009

இந்தியா நமது இந்தியா

இந்தியா நமது இந்தியா

நாளை சுதந்திர தினம் . இந்திய மக்கள் அனைவரும் போற்றி கொண்டாடப்படுகிற ஒரு நன்னாள் .

சுதந்திர இந்தியா 15/08/09 அன்று தனது 62 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது .

இந்த நன்னாளில் சுதந்திரதுக்காக பாடுபட்ட சில தலைவர்களை நினைவு கூறுதல் மிக முக்கியமானது .

அப்படி சுதந்திரத்துக்காக பாடுபட்ட சில தலைவர்களை இங்கே காணலாம் .

இவர் மாவீரன் மருதநாயகம் . சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் .இவர் சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி சுந்தரலிங்க தேவர்


இவர் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிஇவர் பாலகங்காதார திலகர் .
இவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி .
இவர் நமது தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி .
இவர் அபுல் கலாம் ஆசாத் .


இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .இவர் வைக்கம் பஷீர் . இவர் கேரளாவில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் .
இவர் வீர் சவர்க்கார் .சுதந்திர போராட்ட வீரர் .

இவர் தான் வாஞ்சி நாதன் . சிறு வயது தோற்றம் .
இவர் கொடிக் காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் .

இவர் பகத் சிங் . இவருக்கு சென்ற வருடம் பாராளுமன்றத்தில் சிலை வைக்கப்பட்டது . ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார் .இவர் அன்னிபெசன்ட் அம்மையார் . இந்திய சுத்ந்திரத்துக்காக பாடுபட்ட அயல் நாட்டு பெண்மணி .

இவர் நேரு மாமா என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு .

கீழே இருப்பவர் டாக்டர் அம்பேத்கர் .இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .

காந்தியுடன் ராஜாஜி .
காந்தியுடன் நேதாஜி .


இன்னும் எத்தனை எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தனர் .

அப்படி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பாற்றுவோம் .

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் .

அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் .Post Comment

Thursday, August 6, 2009

கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்


நான் உன்னை கண்ட நாள் முதல்


கட்டினேன் காதல் கோட்டையை !!! .


அதில் ரோஜாவன வண்ண வண்ண பூக்களைத்


தூவி வரவேற்றேன் , என் மனசெல்லாம்


புன்னகை தேசமாகி !!


உன் இதயத் திருடன் ஆனேன் !


திருடிய இதயத்தை திருப்பிக் கொடு


என் காதலா காதலா என்றாய் !!! .


நானோ , அது என் மன வானில் என்று


உன் மனதை திருடி விட்டேன் .


ஏய் , திருடா திருடா என்று சொல்லி


கன்னத்தில் முத்தமிட்டாய் !!! .


போக்கிரியாய் இருந்த என்னை உன்


மன்மதனாக்கி இதய சிறைச் சாலையில் இட்டாய் !!! .


பின்னர் , அங்கிருந்து தப்பிக்க முடியாமல்


அரண்மனைக் காவலானாக ,


காதலன் ஆனேன் !!! .


காதல் கடிதம் வரைந்தேன்


செல்போனில் காதல் கவிதையாக ,


நான் பேச நினைப்பதெல்லாம் ,


நீ பேசினாய் !!!.


என்னை வசீகரித்த என் செல்லமே !


உன்னருகில் நான் இருந்தால் !


ரோஜாக் கூட்டமும் வெக்கப்படும் !!! .


நானோ உன்னை நினைத்து


நீயோ என்னை நினைத்து


நாம் நினைப்பதோ நாளைய ராஜாவை !!!.


பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் !


நீ வருவாய் என ,


தென்றலாக நீ வந்தாய் !!! .ஒரு தேவதை வந்து விட்டாள் ,


உன்னைத் தேடியே ,


கால‌மெல்லாம் காத‌ல் வாழ்க‌ என்று


ந‌ண்ப‌ர்க‌ள் பாட்டு பாட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர் !!! .பூக்க‌ளைத் தான் ப‌றிக்காதீங்க‌ !


காத‌லைத் தான் முறிக்காதீங்க‌ ! என்று


ந‌ம் பெற்றோரும் பார்த்த‌ன‌ர்


ந‌ல்ல‌ நாளான‌ க‌ல்யாண‌ நாளை !!! .


அந்த‌ ஒரு இனிய‌ ராக‌ம் இசைக்கும்


நாளும் வ‌ந்த‌து ,


நானும் வ‌ந்தேன் உன் மாப்பிள்ளையாக‌ !!!


அங்கே ஒலித்த‌து


க‌ண்ணுப‌ட போகுத‌ய்யா ,


சின்ன‌ க‌வுண்ட‌ரே என்று !!! ..என் க‌ண்க‌ளோ தேடிய‌து உன்னை


ஓர‌க் க‌ண்ணால் நீ க‌ண்டாய் என்னை


மணக் கோலத்தில் மனசுக்குள் மத்தாப்பு !!! .அருகில் வந்தாய் பூவெல்லாம் உன் வாசம் !


ஜோடி இது நல்ல ஜோடி ,


பல்லாண்டு வாழ்க என்று


ஊரார் வாழ்த்தினர் .


அப்போது நாம் ஆனோம்


இணைந்த கைகளாய்


நம் மனசு ரெண்டும் புதுசு !


அந்த வானத்தை போல !!!


நாம் என்றும் வாழ்வோம்


வ‌ச‌ந்த‌ மாளிகையில் !


நீ பாதி நான் பாதியாகி


சிவ‌ச‌க்தி ஆனோம் !!! .


ந‌ம் ப‌ய‌ண‌ங்க‌ள் முடிவ‌தில்லை என்றும் ,


என் நினைவிருக்கும் வ‌ரை


நீயே என் காத‌லி !!!! ..ஆன‌ந்த‌ பூங்காற்று வீச‌ வேண்டும் ,


வ‌ருச‌மெல்லாம் வ‌ச‌ந்த‌மாக‌


அந்த‌ க‌ட‌வுளுக்கு ந‌ன்றி !!! .பூவையின் முக‌ம் பார்க்க‌


நானே வ‌ருவேன்


ந‌ம் காத‌லர் தின‌மான‌


க‌ல்யாண‌ நாளில் !!!.....இப்ப‌டிக்கு


என்றும் அன்புட‌ன்


உன் ம‌ன்ன‌ன் ,


' ஸ்டார் 'ஜ‌ன் .Post Comment

எதிரும் புதிரும்


தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ....அய்யயோ அடிக்க வராதீங்க , நானெல்லாம் பிரபல பதிவர் கிடையாதுங்க ...
நான் ரொம்ப நல்ல பையனுங்கோ ...


அப்பாடி .... எவ்வளோ கஷ்டமாயிருந்தது முட்டைக்குள்ள ...பதிவுலகில் போட்டியும் பொறாமையும் இல்லாத , நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும் ....
நான் இன்றைய மங்கை .....
ஒரு அழகிய பறவை சிறகை விரித்து பறக்கிறதே ....யாருப்பா இது !! ரொம்ப இருட்டா இருக்குதே ....

உலகை ஆளக்கூடிய நாளைய ராஜாக்கள் நாங்க ...
நாங்களும் தொடர்பதிவு எழுதப் போறோமே ....

யோவ் குசும்பா உங்களுக்கு , நாங்களெல்லாம் நேரா நிக்கிறோமுல்ல ...


எங்களையும் தமிழ்மணத்துல சேத்துக்குவாங்களா ....


தூங்காதே தம்பி தூங்காதே ...

கடமையிலிருந்து என்னைக்கும் தவறக்கூடாது என்ன சரியா ...ரெடி ஒண் டூ திரி ....

ஸ்டார்ஜன் பதிவு போட்டுருக்காரு , எல்லோரும் போய் பின்னூட்டம் போட்டுட்டு வரணும் சரியா ......
Post Comment

Tuesday, August 4, 2009

என்னை தெரியுமா - நண்பர்கள் தினம்


நண்பர்கள் தினம் .
நண்பர்களுக்காக நண்பர்களால் கொண்டாடப்படும் தினம் .

நண்பர்கள் தினத்தை கடந்த ( 2/8/09 ) ஞாயிறன்று உலகமெங்கும் உள்ள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினாங்க .

இன்னக்கி இவ்வளோ பேர் கொண்டாடுற நண்பர்கள் தினத்துக்கு கறுப்பு தினமும் உண்டு . அதாவது கொஞ்சம் பின்னோக்கி போனோமென்றால் , இந்த நண்பர்கள் தினம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம் .

1935 ல் ( அதாவது நாம பிறக்குறதுக்கு முன்னாடி ) ஆகஸ்டு முதல் சனிக்கிழமை அமெரிக்காவில ஒரு ஆளை ஏதோ தப்பு செஞ்சிட்டான்னு கொன்னுட்டாங்க , அமெரிக்கா அரசாங்கம் . அப்போ அவரோட நெருங்கிய நண்பர் ஒருவர் , நண்பர் இறந்த துக்கத்துல தானும் தற்கொலை செஞ்சிகிட்டாரு . மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை பண்ணிட்டாரு .

உடனே அமெரிக்கா அரசாங்கம் அவங்க நட்பை போற்றும் வகையில் , ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் என்று அறிவித்தது . அன்று முதல் இன்று வரை ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தின்ம் கொண்டாடப்பட்டு வருகிறது .

இது 2009 நண்பர்கள் தினம் 72 வது நண்பர்கள் தினமாகும் .

நண்பனுக்காக உயிர் நீத்த அந்த நட்பை போற்றுவோம் .


இந்த தகவலை என் நண்பர் அஜ்மல் அவர்கள் தான் தெரிவித்தார் .

அவருக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன் . அவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக் கொள்வோம் .

நண்பர்கள் தினம் என்றதும் நான் சமீபத்தில் பாத்த திரைப்படம் ஞாபக‌த்தில் வருகிறது . அந்த படம் நாடோடிகள் .

நாடோடி திரைப்படத்தில் தன் நண்பனின் காதலை சேத்து வைக்க மூன்று நண்பர்களின் போராட்டமே அந்த படத்தின் கதை . நண்பனின் காதலை சேத்து வைக்க ஒருவர் தன் வாழ்க்கையையும் காதலையும் பணயம் வைக்கிறார் . இன்னொருவர் தன் காலை இழக்கிறார் . மற்றொருவருக்கு காது கேட்காமல் போகிறது . இப்படி அவர்கள் கஷ்டப்பட்டு சேத்து வைத்த காதல் நிலைக்கவில்லை .

இதுக்கு காரணமான காதலை உதாசீனப்படுத்தும் காதலர்களை பழிவாங்க புறப்படுகிறார்கள் அந்த நண்பர்கள் . முடிவு என்ன என்பதை படம் பாக்காதவங்க படம் பாத்து தெரிஞ்சிக்கோங்க.

தனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நண்பனின் காதலை ஜெயிக்க வைக்க எத்தண பேர் போராடுறாங்க தெரியுமா . ஆனா அதுக்கு அப்புறம் நண்பர்கள் பட்ட கஷ்டத்தை நினைச்சு பாக்கிறதே கிடையாது இந்த காதலர்கள் , என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பாங்க .


அனைவ‌ருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள் .

Post Comment

Sunday, August 2, 2009

நண்பா நண்பா - நண்பர்கள் தினம்நண்பர்கள் தினம்

* இன்று நண்பர்கள் தினம்

** பிறந்தேன் பெற்றோர் உதவியினால் !!!

தத்தி தத்தி நடந்தேன்

அன்னையின் உதவியினால் !!

*** தக புகா என்று மழலை மொழி பேசினேன்

பட்டாம்பூச்சியென துள்ளித் திரிந்தேன்

துருதுருவென்று சுட்டித் தனம் செய்தேன் !!!

**** ஆயிரம் கனவுகளை விதைக்க

பள்ளி சென்றேன்

பெற்றோர் உதவியினால் !!!

***** ஆனா ஆவன்னா ...

A B C D .....

அம்மா இங்கே வா வா ....

என்றெல்லாம் பாடம் படித்தேன்

வாத்தியார் உதவியினால் !!!!..

****** படித்ததையெல்லாம் சொல்லிக் காண்பித்து

எம்புள்ள எப்படி படிக்கிறான் பாரு

என்று என் பெற்றோரை

பேர் உவகை அடைய செய்தேன் !!

******* ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற்றேன்

பெற்றோர் உத‌வியினால் !!!

உல‌க‌ விச‌ய‌த்தை அறிந்தேன்

ந‌ண்பா உன் மூல‌மாக‌ !!..

அம்மாவிட‌ம் க‌ண்டேன்
தாய் பாச‌த்தை

அப்பாவிட‌ம் க‌ண்டேன்
க‌ண்டிப்பான‌ பாச‌த்தை

த‌ம்பி த‌ங்கையிட‌ம் க‌ண்டேன்
ச‌கோத‌ர‌ பாச‌த்தை

ம‌னைவியிட‌ம் க‌ண்டேன்
மாச‌ற்ற‌ அன்பை

ந‌ண்பா உன்னிட‌ம் க‌ண்டேன்
தூய ந‌ட்பை

ந‌ண்பா உன் மூல‌ம் அறிந்தேன்
உல‌க‌ ஞான‌த்தை !!!..

உன் பிம்ப‌மாய் நானும்

என் பிம்ப‌மாய் நீயும்

இருந்தோமே அந்த‌ நாட்க‌ள்

ந‌ம் வாழ்வில் வ‌ச‌ந்த‌மாய் வீசியதே

ம‌ற‌க்க‌ முடியுமா அத‌னை !!!..

ஒரே வ‌குப்பில் ஒரே பெஞ்சில்

ஒண்ணாய் உக்காந்து ப‌டித்தோமே

உன் பெய‌ரும் என் பெய‌ரும்

ஒன்றாய் இருக்க‌

சார் , ந‌ம்மிட‌ம் எப்ப‌டி
நீங்க அடையாள‌ ப‌டுத்திக்
கொள்வீங்க‌ என்ற‌த‌ற்கு

உன‌க்கு தில் சேக் என்றும்

என‌க்கு ஸ்டார் சேக் என்றும்

பெய‌ர் வைத்தோமே

அத‌னை ம‌ற‌க்க‌ முடியுமா !!!..

உன் வாழ்வில் என்றும் ஒளி வீசிட‌

இந்த‌ ஸ்டார்ஜ‌ன்னின்

ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள் ! ...

ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ ஸ்டார்ஜ‌ன்னின் ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள் . ....இந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ இடுகையை என் க‌ல்லூரி ந‌ண்ப‌ன் தில் சேக் அவ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்கின்றேன் .

இப்ப‌டிக்கு

என்றும் அன்புட‌ன்

உங்க‌ள் ஸ்டார்ஜ‌ன் .
Post Comment

Saturday, August 1, 2009

சாதனை

நாம பிறந்து வளர்ந்து பள்ளி கல்லூரி பருவம் தாண்டி சம்பாதிக்க ஆரம்பித்து மனைவி மக்கள் என்று குடும்பமாகி கடைசியில் இவ்வுலகை விட்டு மறைகிறோம் .

இந்த இடைப்பட்ட காலத்தில் நமக்கென்று ஏதாவது லட்சியம் இருக்கும் . அதற்காக நாம் முயற்சி செய்கிறோம் .


நாம் ஏதாவது சாதனைகள் செய்து நம்மை உலகிற்கு அடையாள படுத்தவேண்டும் .


சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு நான் எப்பவும் பக்கபலமாக இருப்பேன் _ வல்லரசுவில் கேப்டன் விஜயகாந்த் ‍‍_ பஞ்ச் .


சா த னை = சாதித்து காட்ட வேண்டிய லட்சியத்தை தனதாக்கிக் கொள்ளும் சிந்தனையின் செயல் வடிவம் சாதனை . இது என்னோட பஞ்ச் ....


அப்படி சாதனைகள் செய்த சிலரை பற்றி இந்த பதிவில் ....

எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (1871-1937)

---------------------------------------------

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரிசோதனை இயற்பியல் விஞ்ஞானி எனப் பொதுவாகக் கருதப்படுபவர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு ஆவார். கதிரியக்கம் பற்றி இன்று நாம் பெற்றிருக்கும் அணுவியல் இயற்பியல் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்தவரும் அவரே.


ரூதர்ஃபோர்டு, நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்தார். அங்குள்ள கான்டர்பரிக் கல்லூரியில் பயின்று, தம் 23 ஆம் வயதுக்குள்ளேயே மூன்று பட்டங்களை (பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்சி.,) பெற்றார்.

யுரேனியத்திலிருந்து வெளியேறும் கதிரியக்க உமிழ் பொருள்களில் முற்றிலும் வேறுபட்ட இரு அமைப்பான்கள் அடங்கியுள்ளன என்பது ரூதர்ஃபோர்டின் முதல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இவற்றுக்கு "ஆல்ஃபா கதிர்கள்", "பீட்டா கதிர்கள்" என்று அவர் பெயரிட்டார். கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளிவரும் அணு நுண்ம வரிசையே ஆல்ஃபாக் கதிர்கள் ஆகும். கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுடைய எதிர்மின்மங்களின் வரிசை தான் பீட்டாக் கதிர்கள். இந்த அமைப்பான்கள் ஒவ்வொன்றின் இயல்பையும் அவர் பின்னர் செயல் விளக்கமாகக் காட்டினார். இவற்றில் விரைந்து இயங்கும் துகள்கள் அடங்கியுள்ளன என்று மெய்ப்பித்தார். அத்துடன், மூன்றாவது அமைப்பான் ஒன்றும் இருப்பதாக மெய்ப்பித்தார். அதனை "காமாகக் கதிர்கள்" என்று அழைத்தார். இவை, மிகக் குறுகிய ஒளிக் கதிரலையுள்ள ஊடுருவு கதிர்கள் ஆகும்.

கதிரியக்கத்தின் மிக முக்கியமான அம்சம் அதில் அடங்கியுள்ள எரியாற்றலே ஆகும். இந்த எரியாற்றல், ஒரு புற ஆதாரத்தைக் கொண்டிருப்பதாக பெக்கரல், கியூரிகள், பெரும்பாலான மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் கருதினார்கள். ஆனால், இந்த எரியாற்றல், யுரேனியத்தின் தனித்தனி அணுக்களின் உள்ளிருந்து வருகிறது என்று ரூதர்ஃபோர்டு மெய்ப்பித்துக் காட்டினார். இந்த எரியாற்றலின் அளவு, வேதியியல் வினைகளிலிருந்து வெளிப்படும் அளவை விட மிகமிக அதிகம் என்பதையும் அவர் மெய்ப்பித்தார். அவ்வாறு செய்ததன் மூலம், அணு ஆற்றல் என்ற முக்கியமான கோட்பாட்டை உருவாக்கினார்.

தனித்தனி அணுக்கள் அழிக்க முடியாதவை-மாற்ற முடியாதவை- என்று விஞ்ஞானிகள் எப்போதுமே கருதி வந்தார்கள். ஆனால், ரூதர்ஃபோர்டு, பிரெடெரிக் சோடி என்ற மிகத் திறமை வாய்ந்த இளம் உதவியாளரின் உறுதுணையுடன், ஓர் அணு ஆல்பாக் கதிர்களையோ, பீட்டாக் கதிர்களையோ உமிழும் போதெல்லாம், அந்த அணு முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ள ஓர் அணுவாக உருமாற்றமடைகிறது என்பதை மெய்ப்பித்தார்.

இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள், ரூதர்ஃபோர்டுக்கு 1908 இல் நோபல் பரிசு பெற்றுத் தந்தது.

என்ரிக்கோ ஃபெர்மி (1901 - 1954)

----------------------------------------

உலகின் முதலாவது அணு உலயை வடிவமைத்தவர் என்ரிக்கோ ஃபெர்மி ஆவார். இவர், இத்தாலியில் ரோம் நகரில் 1901 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அருந்திறன் வாய்ந்த மாணவராகத் திகழ்ந்தார். பிசா பல்கலைக் கழகத்தில் பயின்று தம் 21 ஆம் வயதிலேயே இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

1933 ஆம் ஆண்டில் "பீட்டாச் சிதைவு" என்னும் ஒருவகை கதிரியக்கம் பற்றிய ஒரு கோட்பாட்டை ஃபெர்மி வகுத்தமைத்தார். இதில், மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்களாகிய "நியூட்ரான்கள்" பற்றியும் வலுவற்ற எதிரெதிர் செயல் விளைவுகள் குறித்தும், முதலாவது அளவீட்டு ஆய்வுரை அடங்கியிருந்தது. இவை இரண்டுமே இன்றைய இயற்பியலில் மிக முக்கியமான விவாதப் பொருள்களாகும்.

1934 ஆம் ஆண்டு முதற்கொண்டு, ஃபெர்மி அறியப்பட்டிருந்த வேதியியல் தனிமங்களை நியூட்ரான்களைக் கொண்டு தகர்த்துப் பார்க்கலானார். பல்வேறு வகையான அணுக்களால் நியூட்ரான்களை ஈர்த்துக் கொள்ள முடிகின்றது என்பதும், பல நேர்வுகளில், அத்தகைய 'அணுவியல் உருநிலை மாற்றம்' காரணமாக அணுக்கள் கதிரியக்கம் பெறுகின்றன என்பதையும் இவரது பரிசோதனைகள் காட்டின.

நியூட்ரான்களின் ஈர்ப்பு பற்றிய ஃபெர்மியின் முக்கியமான ஆராய்ச்சிக்காக 1938 ஆம் ஆண்டில் இவருக்கு இயறபியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஃபெர்மியின் கண்காணிப்பின் கீழ் சிகாகோவில் வடிவமைக்கப்பட்டு, நிறுவப் பெற்ற முதலாவத அணு உலை, 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாளன்று வெற்றிகரமாகச் செயற்படத் தொடங்கியது.

சூயி-வென்-தை (541 - 604)

--------------------------------


பல நூற்றாண்டுகளாகப் பிளவுபட்டுச் சிதறுண்டு கிடந்த சீனாவை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்திய சீனப் பேரரசர் சூயி-வென்-தை ஆவார். இவருடைய இயற்பெயர் யாங்-ஷியன் என்பதாகும்.

வடக்குச் சீனாவில் பெருஞ்செல்வாக்கு வாய்ந்த ஓர் உயர்குடியில் 541 ஆம் ஆண்டில் யாங்-ஷியன் பிறந்தார். இவரது 14 ஆம் வயதிலேயே இவருக்கு முதலாவது இராணுவப் பதவி கிடைத்தது.
யாங்-ஷியன் மிகவும் திறமைசாலியாக விளங்கியதால், வடக்குச் சீனாவை ஆண்ட சூ அரச மரபைச் சார்ந்த பேரரசின் ஆட்சியில், மிக விரைவாக முன்னேறி வந்தார்.

581 ஆம் ஆண்டில், இவரது 50 ஆம் வயதில், இவர் புதிய பேரரசராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
இப்படையெடுப்பு வெகு துரிதமாக வெற்றி தேடித் தந்தது. 589 ஆம் ஆண்டில் இவர் சீனா முழுவதற்கும் பேரரசரானார்.


முதலாம் ஜஸ்டீனியன் (483 - 565)

------------------------------------------

பேரரசர் ஜஸ்டீனியன் ரோமானியச் சட்டத்தைத் தொகுத்ததற்காகப் புகழ் பெற்றவர்.

ஜஸ்டீனியன் 483 இல் இன்றைய யூகோஸ்லாவியாவிலுள்ள டாரசீயம் எனுமிடத்தில் பிறந்தார். அவர் ஜஸ்டின் திரேஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தறிவற்ற உழவர் ; படையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னரானார்.


ஜஸ்டீனியன் பிறப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன் 476 ஆம் ஆண்டில் ஜெர்மானியமிலேச்சர் குலங்களின் தாக்குதலால் மேற்கு ரோமானியப் பேரரசு குலைந்து சரிந்தது. கான்ஸ்டான்டி நோப்பிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசே நிலைத்து நின்றது. இழந்த மேற்குப் பகுதிகளைத் திரும்பக் கைப்பற்றி ரோமானியப் பேரரசை மீட்க வேண்டுமென்று ஜஸ்டீனியன் உறுதி பூண்டார் .ஜஸ்டீனியனுக்கு அவருடைய திறமைமிக்க துணைவியார் தியடோரா பெரிதும் உதவியாக இருந்தார்.

548 ஆம் ஆண்டில் தியடோரா புற்று நோயினால் இறந்தது ஜஸ்டீனியனுக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது .


இறுதியில் ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு ஐரோப்பா கண்டத்தின் சட்ட முறைகளின் முக்கிய அடிப்படையானது.
ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு ஐரோப்பாவின் பெரும் பகுதியில் அதன் பகுதிகள் சட்டத்துடன் இணைக்கப் பெற்றன. மேலும் அது சட்டப் படிப்பு பயிற்சி, ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையுமானது. நாளடைவில் ஐரோப்பிய அரசுகளல்லாத பல அரசுகளும் உரிமையியல் சட்டங்களை ஏற்றதால், ஜஸ்டீனியனின் சட்டம் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியது.எட்வர்டு ஜன்னர் (1749-1823)

-----------------------------------பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர் ஆவார்.

அம்மை நோய் ஒரு பயங்கரத் தொற்று நோயாக இருந்தது. ஐரோப்பாவில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையினர், தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு முறை, இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டனர். இந்நோய் கண்டவர்களில் 10% - 20% பேர் மாண்டு போயினர். உயிர் பிழைத்தவர்களில், மேலும் 10% அல்லது 15% பேர் அம்மைத் தழும்புகளால் நிரந்தரமாக விகாரமடைந்தனர். அம்மை நோய்க் கொடுமை ஐரோப்பாவோடு நின்று விடவில்லை. வட அமெரிக்கா முழுவதிலும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும், உலகின் வேறு பல பகுதிகளிலும் அம்மை நோய் கோரத் தாண்டவமாடியது. எல்லா இடங்களிலும், குழந்தைகளே இந்நோய்க்குப் பெரும்பாலும் பலியானார்.

ஜென்னர் 1749 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிளவுசெஸ்டர்ஷயரிலுள்ள பெர்க்கிலி என்னும் சிறிய நகரில் பிறந்தார். பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போதே இவர் ஓர் அறுவை மருத்துவரிடம் தொழில் பயில்பவராகச் சேர்ந்தார். பின்னர், இவர் உடல் உட்கூறியல் பயின்றவாறே, ஓர் மருத்துவ மனையிலும் பணியாற்றி வந்தார். 1792 ஆம் ஆண்டில், புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் இவர் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் தமது 40 ஆம் வயதுகளில் இவர் கிளவுசெஸ்டர்ஷயர் நகரில் ஒரு சிறந்த மருத்துவராகவும், அறுவை மருத்துவராகவும் புகழ் பெற்றார்.

1796 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஜேம்ஸ்ஃபிலிப்ஸ் என்ற எட்டு வயதுச் சிறுவனுக்கு, ஒரு பால் பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கோ வைசூரியின் கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜென்னர் ஏற்றினார். எதிர்பார்த்தது போலவே, அச்சிறுவனுக்கு கோ வைசூரி கண்டது. ஆனால், அவன் விரைவிலேயே குணமடைந்தான். பல வாரங்களுக்குப் பிறகு, அம்மைப் பாலை பிலிப்சுக்கு ஜென்னர் ஊசி வழியாகச் செலுத்தினார். இவர் நம்பியதுபோலவே, அச் சிறுவனுக்கு அம்மை நோயின் அறிகுறிகள் உண்டாகவே இல்லை.

ஜென்னர் தாம் கண்டுபிடித்த இந்த முறையை இலவசமாக உலகுக்கு வழங்கினார். இதிலிருந்து ஆதாயம் பெற இவர் விரும்பவில்லை. எனினும், 1802 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இவரது அருந் தொண்டுக்கு நன்றி தெரிவித்து இவருக்கு 10,000 பவுன் பரிசு வழங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றம் இவருக்கு மேலும் 20,000 பவுன் அளித்தது. இவர் உலகப் புகழ் பெற்றார்.

இவர் 1823 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது 73 ஆம் வயதில், தம் சொந்த ஊராகிய பெர்க்கிலியில் காலமானார்.

தொடரும் .....

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்