Pages

Sunday, February 28, 2010

கிரிக்கெட் - தொடர்பதிவு ...

நண்பர் நர்சிம் அவர்களும் டி.வி.ராதாகிருஷ்ணன் சாரும் கிரிக்கெட் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

**************************************1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : சச்சின் டெண்டுல்கர், கங்குலி

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : சடகோபன் ரமேஷ்

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஜாகீர்கான் , வாசிம் அக்ரம்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : டெபாஷிஸ் மொகந்தி

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஷேன் வார்ன், ஹர்பஜன் சிங், முரளிதரன்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : யாருமில்லை

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : முகம்மது அசாருதீன், சச்சின்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : யூசுப் பதான்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : கங்குலி, லாரா

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : வினோத் காம்பிளி

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : இன்ஷமாம் உல் ஹக்

13. பிடித்த ஆல்ரவுண்டர் : கபில்தேவ், ஜெயசூர்யா, அப்ரிடி,...

14. பிடித்த நடுவர் : நேர்மையாக தீர்ப்பு சொல்பவர்

15. பிடிக்காத நடுவர் : ஒரே அணிக்கு சப்போர்ட்டாக இருப்பவர்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ரவி ராஸ்திரி, டோனி கிரேக்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : சித்து

18. பிடித்த அணி : இந்தியா

19. பிடிக்காத அணி : ஸ்காட்லாந்து

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி : எல்லா மேட்சும் பார்ப்பேன்.

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி : எதுவுமில்லை

22. பிடித்த அணி தலைவர் : அசாருதீன், ஸ்டீவ் வாக், கங்குலி

23. பிடிக்காத அணித்தலைவர் : ஸ்மித் தென் ஆப்ரிக்கா

24. பிடித்த போட்டி வகை : முன்னாள் ஒன்டே மேட்ச், இப்போது 20/20

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி_ சச்சின், ஜெயசூர்யா_கலுவிதரனா, கில்கிறிஸ்ட்_ஹைடன்.

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : சடகோபன் ரமேஷ்_ சேவாக்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : சச்சின் டெண்டுல்கர்****************************************

திரு நர்சிம் அவர்களுக்கும் டி.வி.ராதாக்கிருஷ்ணன் சார் அவர்களுக்கும் என் நன்றிகள்.


தொடரை தொடர இவர்களை அழைக்கிறேன்.

1. அக்பர்

2. மோகன்குமார்

3. ஜெரி ஈசானந்தா சார்

4. அபு அஃப்ஸர்

5. பிரியமுடன் வசந்த் .

Post Comment

Saturday, February 27, 2010

வட்டார வழக்கு...


அன்பு மிக்க நண்பர்களே ! எல்லோரும் நலமா ...

நமது நாடான இந்தியா, ஆசியக் கண்டத்தில் உள்ள ஜனநாயக நாடு. இங்கு பலகட்சி ஆட்சிமுறையை கொண்ட நாடு. இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். இந்திய மக்கள் பல்வேறுமொழிகளை தாய்மொழிகளாக பேசிவருகின்றனர். இவற்றுள் 16 மொழிகளை இந்திய அரசு ஆட்சிமொழிகளாக கொண்டுள்ளது. ஆங்கிலம் பொதுமொழியாகும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தமிழ்மொழிதான் எங்கும்தமிழ் எதிலும்தமிழ் என்று வேறெந்த மொழியும் உள்ளே நுழையாதவாறு ஆட்சி செய்து வருகிறது. ( அதிலும் குறிப்பாக ஹிந்தி , ஆங்.. ஆங்.. உள்ளே வராதே இது எங்க ஏரியா). சரி அது கிடக்கட்டும், விஷயத்துக்கு வருவோம் என்று நீங்கள் சொல்வது தெரிகிறது.

தமிழ்நாட்டு மக்கள் எத்தனை வட்டார பேச்சு வழ‌க்கு மொழிகள் (ஸ்லாங்க்) பேசுறாங்க என்பதை இப்போது பார்க்கலாம்.

மொதல்ல நம்மூர்ல இருந்து ஆரம்பிப்போமா (சும்மா தான் , தெற்கிலிருந்து ஆரம்பிப்போமா ...)


திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பக்கம் உள்ள மக்கள்

எல நல்லாருக்கியால, சாப்பிட்டியா, நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துல, கவலப்படாதடே எல்லான் சரியாயிரும்டே.

கிராமங்களில் உள்ள மக்கள்

ஏ மாமோய் , என்ன இம்பூட்டு தூரொம்?.

ஏ காத்தமுத்து ஒன் அப்பாரு நல்லாருக்கானா .. புள்ளையும் மருமொவனும் வாராவுக , இந்த சின்னாளபட்டி வண்டிய இன்னும் காணொம். அதேன் செத்த பாத்துகிட்டு இருக்கேன். வெயிலு வேற..

மதுரை உள்ள மக்கள்

அண்ணே அண்ணே ! ரெண்டு ரூபாக்கு டீத்தூள் கொடுங்கண்ணே

டேய் வெண்ணே ! செத்த நில்லூடா, நாங்க நிக்கிறோமுல்ல, நிக்கிறது கண்ணுக்கு தெர்லயா ..

காரைக்குடி பக்கம் உள்ள மக்கள்

ஏ ஆச்சி நல்லாருக்கியாளா அப்புச்சி நல்லாருக்காவளா, பெரியாச்சி வீட்டுக்கு வந்த மாப்புள செக்கசெவேல்னு இருக்காவுல ...


கோயமுத்தூர் பக்கம் உள்ள மக்கள்

அண்ணா வணக்கங்கண்ணாவ் ! வறேனுங்கண்ணாவ் !

சென்னை பக்கம் உள்ள மக்கள்

என்னண்ணாத்தே ! மெர்சலாருக்கே , குந்துப்பா, கமாண்ட் போட்டு அப்பால போலாம்பா...********************************


இந்த ஸ்லாங்க் பிரச்சனை நாம் ஊருவிட்டு ஊரு போகும் போது கண்டிப்பா சந்திக்க வேண்டிவரும். அப்படி நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


நான் சிறுவயதில் மதுரையில் உள்ள எங்க அத்தை ( அப்பாவின் தங்கை ) வீட்டுக்கு ஸ்கூல்லீவ் டைமில் செல்வதுண்டு. ஒரு முறை எங்க தாத்தாக்கூட சென்றேன். அப்போது மாமி புதுவீடு மாறி இருந்தாங்க. அது எங்க‌ளுக்கு தெரியாது. மாமியின் பழைய வீட்டிற்கு அருகில் உள்ள எங்க உறவினர் வீட்டுக்கு சென்று விசாரித்தோம். 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்துக்கு வீடு மாறி இருந்தார்கள். நானும் தாத்தாவும் உறவினர் ஒருவரும் ஆட்டோவுக்கு பணம் நிறைய கேட்டதால் குதிரை வண்டியில் பயணம் செய்தோம். எனக்கு குதிரைவண்டியில் சென்றது மிகுந்த சந்தோசமா இருந்தது.


நான் மாமி பசங்க, பக்கத்துதெரு பசங்க கூட விளையாடிக்கிட்டு இருக்கும்போது மாமி கூப்பிடதால் அவங்க பசங்க போயிட்டாங்க. நான் நெல்லைத்தமிழில் பேசுவது கண்டு அவர்கள் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு கோபம் அதிகமானதால் அவர்களுடன் சண்டைபோட்டேன். ஒவ்வொருத்தருக்கும் அடி விட்டேன். அவர்களும் தாக்கினார்கள். இதற்குள் அங்குள்ளவர்கள் வந்து சண்டையை விலக்கி விட்டார்கள். நான் வீட்டுக்கு சென்று மாமி பசங்களிடம் சொன்னேன். அவர்கள் மதுரை லோக்கல் பாஷையை சொல்லித் தந்தார்கள்.

மறுநாள் நான் அந்த வழியே போகும்போது நேற்று என்னிடம் சண்டை போட்டவர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். அவர்களிடம் அவர்கள் பாஷையில் பேசினேன். அவர்கள் அண்ணே தெரியாம சண்ட போட்டுட்டோம், மன்னிச்சிகண்ணே, என்று என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். சரிப்பா ! ஒக்கே என்றேன்.


அப்புறம் இன்னொரு சம்பவம்

நான் ஒருதடவை சென்னைக்கு ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அவர் எனக்கு நெருங்கிய உறவினரின் நண்பர்; அவர் அரசு வேளாண் மையத்தில் வேலை பார்க்கிறார். வீட்டில் போர் அடித்ததால் அவரை பார்க்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அங்கே அவர் இல்லை. அங்கு வேலைசெய்யும் ஒருவரிடம் உறவினர் நண்பரை பற்றி விசாரித்தேன். உறவினர் நண்பர் பீல்டுக்கு சென்றுள்ளதாக சொன்னார்.

அப்போது நான் , அவரிடம் சென்னைத்தமிழில் பேசுவதாக நினைத்துக் கொண்டு வித்தியாசமா பேசினேன். உடனே அவர், நான் பேசுவதை புரிந்துகொண்டு தம்பி உங்க ஊர் மதுரையா? என்றார். அதற்கு நான் திருநெல்வேலி என்றேன். பேசிவிட்டு விடைபெறும்போது நான் அண்ணா வறேனுங்கண்ணாவ் என்றேன். உடனே அவர் கலகலவென சிரித்துவிட்டு, தம்பி நீ பொழச்சிகிருவப்பா என்றார்.*******************************


நண்பர்களே ! உங்களுக்கு தெரிந்த தமிழ்நாட்டு லோக்கல் ஸ்லாங்க் இருந்தா தெரியப்படுத்துங்க.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Thursday, February 25, 2010

பதின்ம வயது நினைவுகள் - தொடர்பதிவு

பதின்ம (டீன்ஏஜ்)கால நினைவுகள் . அண்ணன் கோவி.கண்ணன் அவர்கள் என்னை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார். அது டீன்ஏஜ் பருவமான 13 முதல் 19 வயது வரையிலான பள்ளி கல்லூரி கால நினைவுகளை பற்றி எழுத வேண்டும்.

எனக்கு 13 வயது ஆகும்போது எட்டாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எட்டாம்வகுப்பு பி பிரிவில் புதிதாக சாந்தா டீச்சர் எங்களுக்கு வகுப்பாசிரியராக வந்தார். அக்பர் எட்டாம்வகுப்பு அ பிரிவு. அவங்களுக்கு தலைமையாசிரியர் பெலிக்ஸ் சார் தான் வகுப்பாசிரியர். எங்கள் பள்ளியின் மாணவர் தலைவனாக என் வகுப்பை சேர்ந்த லட்சுமிசங்கர் இருந்தான் . அவன் ஒரு மாதத்தில் வேறு பள்ளிக்கு சென்று விட்டான். அதனால் பள்ளியின் புதிய மாணவர் தலைவன் தேர்ந்தெடுப்பது பற்றி விவாதம் நடைபெற்றது. நான் பெலிக்ஸ் சாரிடம் சார் நான் மாணவர் தலைவனாகிறேன் என்றேன். சரி என்று என்னை நியமித்தனர். எனக்கு அந்த பதவி ஒத்துவரவில்லை, அதனால் நான் விலகிக் கொண்டேன் . அந்த பதவிக்கு அக்பர் வந்தார்.

எட்டாம்வகுப்பு வந்ததும் என்னுடன் படிக்கும் சில மாணவிகளில் மாற்றங்களை கண்டேன். தாவணியெல்லாம் போட்டு வந்தனர். அவர்களில் ஒரு மாணவி என் நெருங்கிய தோழி. அவளை பார்த்ததும் என்ன அக்கா சவுக்கியமா என்றேன். எல சேக், அடிவாங்காதே ! என்ன அக்கா , பேரச்சொல்லி கூப்பிடு என்றாள் . எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆண்டுவிழாவில் மாறுவேடப் போட்டியில் சின்ன வயதிலிருந்தே எனக்கு படிப்பில் ரொம்ப ஆர்வம் உண்டு. கருத்தாய் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.

நான் படித்த புனித அந்தோணியார் பள்ளி நினைவுகளில் இன்றும் மறக்க முடியாதது நான் ஆண்டுதோறும் ஆண்டுவிழாவில் பரிசு வாங்குவது.

நான்காம் வகுப்பில் படிப்புக்கான முதல் பரிசு .

ஐந்தாம் வகுப்பில் படிப்புக்கான முதல் பரிசு.

ஆறாம் வகுப்பில் மாறுவேடப்போட்டியில் முதல் பரிசு.

எட்டாம் வகுப்பில் மாறுவேடப்போட்டியில் முதல் பரிசும் படிப்புக்கான இரண்டாம் பரிசு.

நான் படித்த புனித அந்தோணியார் பள்ளி ஒரு நடுநிலை பள்ளி . அதனால் ஒன்பதாம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு செல்ல வேண்டும்.

அதனால் எங்கப்பா என்னை எங்கள் ஊரில் ஆண்கள் மேல்நிலைபள்ளியான காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அந்த பள்ளிக்கு சேர்வதற்க்கு முன்னால் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்று அந்த பள்ளியில் சேர்ந்தேன்.

அந்த பள்ளியில் ஒன்பதாம்வகுப்பில் பி பிரிவில் என்னுடன் ஐந்துவரை படித்த என் நண்பன் நாகூர் மீரான் படித்தான். அவனைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி . சார் 9 சி ப்ரிவில் என்னை சேர்க்க பதிவிட போனார் . உடனே நான் சார் என்னை 9 பி சேர்த்துடுங்க என்றேன் .

முதல் நாள் சேர்ந்ததும் மதியஉணவு இடைவேளை முடிந்து முதல் பாட வகுப்பு ஆரம்பித்தது . எனக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் கிளாஸ்லீடர் மகேஷ்ஷிடம் சொல்லிட்டு தண்ணீர் குடித்துவிட்டு திரும்புவதற்குள் சார் வந்திட்டார். பள்ளிரூல்ஸ் எனக்கு தெரியாதா , விறுவிறுவென உள்ளே போயிட்டேன். உடனே சார் எல உள்ளே வரும்போது சொல்லிட்டு வரணுன்னு தெரியல அறிவிருக்கா என்று என்னை அடிக்க கையை ஓங்கினார். உடனே மகேஷ் சார் சார் அவன் நியூஅட்மிஷன் என்று சொல்லி காப்பாத்தினான். ஓ அந்தமூதியா போய்த்தொல என்று திட்டி அனுப்பினார். அதுமுதல் நான் எங்கு சென்றாலும் உள்ளே வரலாமான்னு கேட்டுட்டுதான் உள்ளே போவேன்.


எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு ரோட்டுவழியாப் போனா நாலு கிலோமீட்டர். அதனால நானும் நாகூர் மீரானும் பள்ளிக்கு பொட்டக்குளம் வழியா நடந்தே பள்ளிக்கு செல்வோம்.

அந்த பள்ளியில் வளர்ந்தபையனெல்லாம் கலர் பேண்ட் போட்டு உள்ளே காக்கி டவுசர் போட்டுட்டு வருவாங்க. நான் டவுசர் மட்டும் தான் போட்டுட்டுபோவேன். ஏன்னா நான் கட்டையாத்தான் இருப்பேன். 11ம் வகுப்புக்குத் தான் பேண்ட் போட்டுவரணும்.

படிப்பில் கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்தேன். பொதுவா மாநகராட்சி பள்ளிகளில் படிப்பு நல்லாச் சொல்லித் தரமாட்டாங்க. ஒப்பேத்துவாங்க, பசங்க ரவுடி பையன்களா ஆவாங்க‌ன்னு நிறைய கேள்விகள் உண்டு. ஆனால் இந்த காமராஜர் பள்ளி ஒரு விதிவிலக்கு . நல்ல கற்பித்து கண்டிப்பான ஆசிரியர்கள். கஷ்டப்படும் மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் , உதவி செய்யும் ஆசிரியர்கள் என்று ஆசிரிய ‍_ மாணவ பந்தம் ரொம்ப அருமையாக இருந்தது.


************************************


நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன் என்றால் எங்கப்பாதான் என்று சொல்வதில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது.

அப்பா என்னை பள்ளியில் சேர்க்கப்போகிறாரா இல்லை குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு அனுப்பப்போகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எங்கப்பா என்னை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் . நாம் தான் படிக்க வில்லை , தன் மகன் படிக்க வேண்டும் என்று கஷ்டமான சூழ்நிலையிலும் என்னை படிக்க வைத்தார் .

அப்பாவுடைய உழைப்பு , தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னுடைய ஆர்வம் , படிப்பில் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து என்னை கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற வைத்தது. அதுமட்டுமல்ல என்னை படிக்க வைத்தது போல என் தங்கை தம்பிகளையும் எங்கப்பா அம்மா படிக்க வைத்தனர். ஊரில் எங்கள் தெருவில் உள்ள சில பணக்காரர்கள் உதவி செய்தனர். அவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

அப்பாவுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
அப்பா எப்போதும் என்னிடம் ஒரு நண்பனைப்போல நடந்து கொள்வார் . ஆனால் கண்டிக்கவேண்டிய நேரத்தில் மிகுந்த கண்டிப்பு உண்டு.

அப்பா இப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றார். ஜின்னா மகனா அவன் நல்ல பையன்ன்னு பேர் வாங்கனும் . நாலுபேர் மதிக்க நாமும் வாழ்ந்து காட்டணும் . கெட்டவன்ன்னு ஒரு நிமிஷத்துல பேர் வாங்கிடலாம் ; ஆனால் நல்லவன்ன்னு பேர்வாங்க ரொம்ப நாளாகும் என்று சொல்வார். எந்த காரியத்தை செய்யும்முன் அப்பாவிடம் சொல்லி ஆலோசனை கேட்டுத்தான் செய்வேன்.


*********************************இந்த தொடரை எழுத அழைத்த அண்ணன் கோவி.கண்ணனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த தொடரை தொடர்ந்து இவர்கள் எழுதுவார்கள்.


1. நண்டு@நொரண்டு (எ) ராஜசேகர் சார்.

2. சேட்டைக்காரன்

3. சைவக்கொத்துப்பரோட்டா

4. அத்திரி

5. அபுல் பசர் - சின்ன சின்ன ஆசைகள் .டிஸ்கி: மேலே உள்ள படத்தில் நான் இல்லை. ஏன்னா இது இணையத்தில் எடுத்தது.

Post Comment

Wednesday, February 24, 2010

சச்சின் - வாழ்த்துக்களை பகிர்வோம்

வாழ்த்துக்களை பகிர்வோம் - சச்சின்

இன்று குவாலியரில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் அவுட் ஆகாமல் ஆட்டத்தின் ஆரம்பம் முதல் நிறைவு வரை நின்று 147 பந்துகளில் 200* ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.

நாம் அனைவரும் அவருக்கு இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

நான் இன்று சச்சினின் ஆட்டத்தை கண்டு ஆனந்த களிப்புற்றேன். இதற்காக சமையல்கூட செய்யவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நானும் அக்பரும் இன்று மதியம் ஓட்டலில் சாப்பிட்டோம். சச்சினை சும்மா சொல்லக்கூடாது என்னே ஒரு அதிரடி ஆட்டம். ஒவ்வொரு ஷாட்டும் ரொம்ப கிளாசிக்.

ஒவ்வொருவரும் சச்சினை ஏன் ரோல்மாடலாக விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?. அவருடைய தன்னம்பிக்கை , உழைப்பு , தோல்வியைக் கண்டு மனம்துவளாமை இதெல்லாம் அவருடைய வெற்றிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. அது போல அவருக்கு எதிரான விமர்சனங்களை கண்டு மனம் துவளமாட்டார். பேட்டால் தான் பதில் சொல்வார்.

சச்சின் ஒரு சகாப்தம். பாகிஸ்தான் வீரர் சையத் அன்வர் 1997 ல் இந்தியாவுக்கு எதிராக எடுத்திருந்த 194 ரன்கள் தான் சாதனையாக முறியடிக்கப்படாமல் இருந்தது. இன்று இந்த சாதனையை சச்சின் முறியடித்து சாதனை புரிந்தார். சச்சின் 200 ரன்கள் எடுத்திருந்தபோது டிவியில் ஏ ஆர் ரகுமானின் ஜெயஹோ பாடல் பின்னணியில் ஒலித்தது ரொம்ப பெருமையாக இருந்தது.


வாங்க நண்பர்களே ! சச்சினுக்கு நம்முடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.

Post Comment

Monday, February 22, 2010

இருவார்த்தை கதைகள்

தலைப்பு : ஒருவீடு இருவாசல்

கதை : அவள் வந்ததும்

*****************************************

தலைப்பு : தலையணை மந்திரம்

கதை : சிணுங்கியது செல்போன்

*****************************************

தலைப்பு : விபத்து

கதை : அவளை பார்க்காதவரை

*****************************************

தலைப்பு : தூக்கம்

கதை : கனவே கலையாதே

*****************************************

தலைப்பு : கலைக்கூத்தாடி

கதை : வேடிக்கை ‍- வாடிக்கை

*****************************************

தலைப்பு : சோகம்

கதை : கவிழ்ந்தது கப்பலோ ?..

*****************************************

தலைப்பு : கவிதை

கதை : ரசித்தேன் அவளை ..

*****************************************

தலைப்பு : கணக்கு வாத்தியார்

கதை : மகனை மறந்ததேனோ ?.

*****************************************

தலைப்பு : மனைவிசொல்லே மந்திரம்

கதை : சலுகை அறிவிப்பு

*****************************************

தலைப்பு : பாதிக்கும் மேல் அவள்

கதை : இட ஒதுக்கீடு

*****************************************

தலைப்பு : இருவார்த்தை கதைகள்

கதை : கணநேரத்தில் யோசித்தது.

*****************************************டிஸ்கி : இந்த கதைகள் எனது சிறு முயற்சி . உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Sunday, February 21, 2010

பெண்களே ! ஒரு நிமிடம் ...


பெண்கள் நாட்டின் கண்கள் . ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு ரொம்ப முக்கியமானது . இதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது . பெண்கள் ஒரு சக்தியாக விளங்குகின்றனர் . எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர் .

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வியெதற்கு என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது எனலாம் . ஆணுக்கு பெண் சமம் என்ற கோட்பாடுகள் பெருகிவரும் காலமிது . கல்வி , பொருளாதாரம் , அர‌சியல் , போக்குவரத்து , தொழில் , சினிமா , இல்லத்தரசி என்று பன்முக திறமை கொண்டவர்களாக மின்னுகின்றனர் .

பெண் ஆணில் ஒரு பகுதி எனலாம் . ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருந்தாக வேண்டும் . இதுதான் இறைவனின் நியதி . பெண் என்பவள் ஆணின் வாழ்க்கையில் எத்தனை பரிமாணம் எடுக்கிறாள் . முதலில் தாயாக , சகோதரியாக , காதலியாக , மனைவியாக , தன் குழந்தைகளுக்கு அம்மாவாக , நல்ல சக தொழிலாளியாக , நல்ல குடும்பத்தலைவியாக , பாட்டியாக என்று அவர்கள் பங்கு முக்கியமானதே !.


முதன்முதலில் ஒரு ஆண் பிறந்தவுடன் சந்திப்பது அம்மாவைத் தான் . அம்மாதான் தன் குழந்தைக்கு முதல் ஆசிரியர் . அவனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதிலிருந்து அவனை வளர்த்து ஆளாக்கி ஒரு அந்தஸ்துக்கு கொண்டு வருவதுவரை அம்மாவின் பங்கு முக்கியமானது .

அதுபோல சகோதரியும் சகோதரனின் வெற்றிக்கு உதவுகிறாள் . காதலிக்காக உருகாத காதலன் எவரும் இல்லை . கவிபாடாத கவிஞனும் இல்லை . தான் விரும்பிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் . சில நேரங்களில் சிலருக்கு அந்த காதல் கைக்கூடாமல் போவதுண்டு .

பெண்கள் யாரை மனசுல நினைச்சிட்டாங்களோ அவங்க மனசுல இருந்து சீக்கிரமா அவரை நீக்க முடியாது .

1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.


கணவனுக்காக மனைவியின் தியாகத்தை அளவிட முடியாதது . தன்னோட கணவனின் வாழ்வில் சரிபாதியாகி இன்பதுன்ப நேரங்களில் அவனோடு பங்கெடுத்து தன் கடைசிகாலம் வரை வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறாள் . அதுபோல அலுவலகங்களில் தன் திறமையைக் கொண்டு முன்னேறும் பெண்கள் சாதனைகளை புரிகின்றனர் . கல்வி , இலக்கியம் போன்ற துறைகளிலும் பெண்கள் தங்கள் படைப்புகளின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர் .


டி.கே.பட்டம்மாள்


சினிமாவிலும் பெண்களின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் . ஒரு சினிமா எடுக்கப்படுகிறதென்றால் பெண்களை மையமாக கொண்டு தான் . தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவினைக் கொண்டு தான் இன்றைய நாயகர்கள் ஜொலிக்கிறார்கள் . அம்மா , தங்கை சென்டிமென்ட் , பெண்கள் பிரச்சனைகளை மையமாக கொண்ட படங்களை மக்கள் வெற்றி பெறாமல் விடமாட்டாங்க . பெண்கள் மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள் படத்தில் ரொம்ப முக்கியம் .
தொழில் நுட்பம், மருத்துவம் , விளையாட்டு என்று அனைத்துதுறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இப்படி பெண்கள் இல்லாத துறைகளே இல்லையெனலாம்.

நாடு முன்னேற வீடு நல்லாருக்க வேண்டும் . வீட்டை வழிந‌டத்துவதும் பெண்கள்தான். வீட்டில் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம் . அப்போது நாம் கவலைப்படாமல் இருக்க வேண்டும் , தம்பதியினர் மனம் விட்டு பேச வேண்டும் . கருத்துகளை பரிமாறிக் கொண்டு ஒருத்தருகொருத்தர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும் .


அதுபோல சமூகத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது . ஈவ்டீசிங் , பாலியல் பலாத்காரம் அலுவலக சீண்டல்கள் ரொம்பவும் வருத்தப்பட வைக்கிறது . இந்த மாதிரி நேரங்களில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டும் . பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும் .

விளம்பரங்களில் பெண்களை மிகவும் அசிங்கப்படுத்துவது மிகவும் வேதனைக்குரியது . அதுபோல பெண்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . பெண்களின் கருத்துக்களில் தலையிடாதீங்க .

இப்போதைய சில பெண்கள் இன்னும் அந்தகால நினைப்பிலே இருக்கின்ற‌னர்.
சீரியல்களில் தங்களை தொலைத்துவிடுகின்றனர் .

மேடம்களே மேடம்களே !! வாங்க வாங்க ... வெளிச்சத்தை நோக்கி ..


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் .

Post Comment

Thursday, February 18, 2010

அவள்

அவள்

கொலுசின் சத்தம்

எங்கும் எப்பொழுதும்

தேடி அலைந்தேன்

எங்கோ மனம் செல்கிறதே !.


அவள்

கொட்டும் மேளம்

ஆயிரம் கனவுகள்

அவனை நோக்கி !!


அவள்

உன் பார்வையோ

ஆயிரம் அர்த்தங்கள்

அர்த்தமாய் நானே !!


அவள்

உன்னில் நானாய்

என்னில் நீயாய்

ஐ லவ் யூ ...

Post Comment

Wednesday, February 17, 2010

இறால் சாப்ஸ்

அன்புமிக்க நண்பர்களே ! எல்லோரும் நலமா ...

எனக்கு ரொம்ப நாளா சமையல் பற்றிய பதிவு இடுகை போட ஆசை . அது இப்போதான் நிறைவேறி இருக்கு .இன்று மதியம் நான் செய்த இறால் சாப்ஸ் பற்றி இப்போது காணலாம் .

தமிழ் _ இறால்
மலையாளம் _ செம்மீன் .
ஆங்கிலம் _ ப்ரௌன்
கன்னடம் _ சின்கடி , எட்டி
ஹிந்தி _ ஜிங்கா
தெலுங்கு _ ரொய்யலு .


கடையில் இறால் வாங்கும் போது சில பேர் கிளீன் பண்ணி தருவாங்க . மேல் உள்ள தோடு மட்டும்தான் கிளீன் பண்ணுவாங்க . இறாலின் நடுப் பகுதியில் உள்ள , ஒரு நூல் போல குடலை கத்தியால் கீறி நீக்கவிட வேண்டும் .

தேவையான பொருட்கள்


இறால் _ 1/2 கிலோ
வெங்காயம் பல்லாரி _ 2
தக்காளி _ 2
இஞ்சி , பூடு சிறிதளவு
மிளகாய் 4
சிறிதளவு வெந்தயம் தாளிக்க
கொத்தமல்லி இலை
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் , வத்தல் பொடி 1 1/2 ஸ்பூன் .முதலில் இறாலை அரைத்த இஞ்சி பூடு விழுதுடன் உப்பு , மஞ்சள் வத்தல் பொடியுடன் விரவி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

சிறிது வெந்தயம் , வெங்காயம் கொண்டு தாளிக்க வேண்டும் . பின்னர் மிளகாய் தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . பேஸ்ட் போல ஆனதும் ஊற வைத்த இறாலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . கொத்தமல்லி இலை சேர்த்து 20 நிமிடம் தம்மில் வைக்க வேண்டும் .இறால் சாப்ஸ் ரெடி . நீங்களும் இதுபோல செய்து சாப்பிட்டு மகிழுங்கள் .நான் செய்த இறாலை சாப்பிட்டு பார்த்து நல்லாருக்கு என்று பாராட்டிய அக்பருக்கும் கன்னட நண்பருக்கும் என் நன்றிகள் .


சாப்பிட்ட அனைவரும் மொய் வைத்துவிட்டு போக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

*****

இதை ஜலீலாவின் பேச்சிலர் சமையல் போட்டிக்காக அனுப்பியுள்ளேன்.

,

Post Comment

Sunday, February 14, 2010

பார்வை ஒன்றே போதுமே ...


பெண்ணே என்னை நீ
பார்க்கும் பார்வைகள்
அர்த்தமுள்ளதா
நீயே சொல்லு ..முதல் பார்வையில்
நான் உன்னில்
அறிமுகமானேனே


நம் திறமைகள் வெளிப்பட
நானோ முந்திக் கொள்ள
உன் பார்வையோ
நான் ( நீ ) முந்த
மாட்டோமா என்று ...
நம் பார்வைகள் தொடர
நண்பர்களும் விரும்பினரேஇரண்டாம் பார்வையில்
நான் உன் அருகே வர
உனக்கு நெருக்கமான என்
நண்பனைக் கொண்டு
உன் இல்லம் தேடி
வந்தேன் உன் பார்வையின்
அர்த்தம் தெரிந்து கொள்ள ..
அப்போது உன் பார்வையோ
மிகுந்த சந்தோசமாய்
கண்டேனே ...மூன்றாம் பார்வையில்
நான் வேறாக நீ வேறாக
பிரிந்தோமே ...
அப்போது உனக்கு என்
தரிசனத்தை தர
உன் இல்லத்தை
சுற்றி சுற்றி
வந்தேனே அடுத்த‌
பார்வையின் அர்த்தம்
தெரிந்து கொள்ள ..நான்காம் பார்வையில்
நானும் நீயும் சந்தித்தோமே
பஸ் ஸ்டாப்பில் வெகு
காலத்துக்கு பின்...
அப்போது என்னிடம்
பேச விழைந்தாயே
ஏன்டி என்னப்பேச்சு
என்ற வார்த்தைகள்
உன் அம்மாவிடம் ..உன் பார்வையின்
அர்த்தத்தை தெரிந்துகொள்ள‌
நீ செல்லும்
பஸ்ஸில் நானும் வர‌
எத்தனிக்கயில்
தாமதமாக்கினானே
என் தம்பி அவன் வரவை...ஐந்தாம் பார்வையில்
உன்னைக் கண்டேனே
கையிலும் இடுப்பிலும்
குழந்தைகளாய் உன்னிடம் ..
நானோ அதிர்ச்சியாய் !!அப்போது உன்
பார்வையின்
அர்த்தத்தை தெரிந்து
கொள்ள நான் வந்தேனே
ஆட்டோகிராப் சேரன்
போல சைக்கிளில் ...இப்போது உன் பார்வையின்
அர்த்தத்தை தெரிந்து
கொண்டேனே உன்னில்
ஒரு வித ஏக்கமாய் ....

Post Comment

Saturday, February 13, 2010

காதல் சொல்ல வந்தேன் ...


பொழுதும் விடிந்தது
பூவும் மலர்ந்தது
கோபமும் அதிகமானது
எனக்கு அவள் மேல !


திட்டித் தீர்க்க என்ன வழி
கொஞ்சம் யாராவது
சொல்லுங்களேன் !!
கோலி விளையாடுகையில்
தண்ணீரால் நிரம்பியது குழி !!
விளையாடமுடியாமல் ...


நண்பர்களுடன் சிகரெட் அட்டை
சேர்க்கும் போது அம்மாவிடம்
திட்டும் அடியும் கிடைத்தது ...
குச்சிக் கம்பு விளையாடும்போதும்
அப்பாவிடம் மாட்டினேனே
அவளாலே எல்லாம் அவளாலே ...


அவள் வந்தாள் பள்ளிக்கு ..
முகசுழிப்புடன் திரும்பினேன்
அவள் இருக்கும் திசையை விட்டு ..
ஏன்டி என்னை மாட்டி விட்டே
கண்களாலே திட்டித் தீர்த்தேன் ..ஓ வீட்டுப்பாடம் எழுதலியே
எப்படி மறந்தேன் ...
டீச்சர் கேட்டதுக்கு உடம்பு
சரியில்லை என வார்த்தைகள்
பொய்யாய் என்னுள்ளே...
இவன் எங்க வீட்டிலே
படம் பார்த்தான் என
வார்த்தைகள்
மெய்யாய் அவ‌ளுள்ளே ...


மாடு எருமை மாடு !!!...
பக்கத்து வீட்டு மாலதி
என்னமா படிக்கிறா !
உனக்கென்ன குறைச்சல்
உருப்படாதவனே !!!..
திட்டும் விழுந்தது
அவளாலே எல்லாம் அவளாலே ....பொழுதும் விடிந்தது
பூவும் மலர்ந்தது
கோபமும் அதிகமானது
எனக்கு அவள் மேல !


இன்னைக்கி எப்படியும்
ஒருவழி பண்ணிறனும் ..
நினைப்பிலே துயில்
எழுந்தேன் ...


டேய் என்னடா இன்னும்
தூக்கம் எழுந்திரு !!
அம்மா வேறு சே ...டேய் ! மாலதி ஊருக்கு
போறாடா ...
அவங்க அப்பாவுக்கு
வேலை மாறிருச்சி ...
அம்மாவின் இந்த
வார்த்தைகள் என்னவோ
செய்கிறதே என்னுள்ளே ...முதல்முறையா வருத்தமானதே
என்னுள்ளம் _ ஏனென்று
தெரியலியே எனக்கு ..டேய் எங்கடா போற ..
கூராப்பா இருக்கு
மழை வர்றமாதிரி இருக்கே
என்ற அம்மாவின் வார்த்தைகளை
தாண்டி என் கால்கள்
வேகமாக இயங்குகிறதே !!ஓடுகிறேன் மழைத்துளி
என்னில் சங்கமிக்கும் போது ..
கால்கள் வேகமாக
இயங்கியதால் என்னவோ
தடுமாறி குப்புற விழுகிறதே
என் உடல் ..
என் உடையும் அழுகிறது
உள்ளமும் சேர்ந்து தான் ..


அதோ அவள் பூவாய்
பேருந்துள்ளே ..
பேருந்தும் அழுகிறதோ
தண்ணீரை வாரியிறைத்து ..


Post Comment

Thursday, February 11, 2010

அசல் - அசத்தல் ...


தமிழ் படத்தை பத்தி எல்லோரும் பாராட்டி எழுதி அதுவே படத்தின் வெற்றியானது . தமிழ்படம் சக்கபோடு போடுது . எனவே அந்த படத்தை பத்தி விமர்சனம் எழுதல . அசல் படம் நேத்துதான் பார்த்தேன் . அசல் அஜித்துக்கு உண்டான படம் .

அப்பா அஜித் ஒரு பெரிய மல்டிமில்லினியர் . இன்டர்நேஷனல் பிஸினஸ் பண்ணுகிறார் . அவருக்கு சம்பத் , சின்ன அஜித் , ராஜீவ்கிருஷ்ணா . இதில் இரண்டாம் தாரத்து மனைவி மகன் சின்ன அஜித் . சின்ன அஜித் அப்பாவைப்போல இருப்பதாலோ என்னவோ ரொம்ப பிடித்து போயிருச்சு ( வயசான கெட்டப்பிலா தல என்று கேட்பது புரிகிறது ) . சகுனி மாமாவால் மற்ற மகன்கள் அஜித்தை வெறுக்கிறார்கள் . ஆனால் , அப்பா அஜித் தன் சொத்துக்களை மகன் அஜித்துக்கு எழுதி வைத்து விடுகிறார் .

அப்பா இறந்த பிறகு தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்கள் அஜித்தை பழிவாங்க நினைக்கிறார்கள் . இதற்கிடையில் ராஜீவ்கிருஷ்ணாவை கெல்லி டோர்ஜி கடத்தி விடுகிறார் . தனி ஆளாக சென்று வில்லனிடம் இருந்து காப்பாற்றுகிறார் . நன்றி மறந்த சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா அஜித்தை சுட்டு விடுகிறார்கள் .

அதிலிருந்து தப்பி பிரபுவிடம் வந்து சேருகிறார் . இதற்கிடையில் பிரபுவின் நண்பர் மகளான பாவனா அஜித்தை விரும்பிகிறார் . சமீரா ரெட்டி அஜித்தின் வக்கீலாக வருகிறார் . இவர்கள் மூலம் தன் அண்ணன்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்கிறார் . அஜித் , தன் அண்ணன்களை பழிவாங்கினாரா , சகுனி மாமா பிரதீப் ராவத்தை பழிவாங்கினாரா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .

இந்த படத்தை சரண் ரொம்ப நாளைக்கு பிறகு இயக்கி இருக்கிறார் .
அஜித் அல்டிமேட் ஸ்டாராக இல்லையாம் . டைட்டிலில் பேர் போடவில்லை .
ஆனால் இணை இயக்கம் அஜித்குமார் என்று வருகிறது . இணை இயக்குனர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் தல . கலக்குங்க தல , தொடரட்டும் தங்கள் கலைப்பணி ...

ஆனால் படம் தேர்வு செய்வது மிக கவனம் . இல்லைன்னா தமிழக மக்கள் மறந்துருவாங்க . இன்னும் பழைய கதைகளில் நடிக்காதீங்க . படத்தில் கொஞ்சமாவது சிரிங்க . முகத்தை உம்முன்னு வைச்சிக்கிட்டு வாராதீங்க . தாடியோடு நடிக்க வேண்டிய அவசியமென்ன .. பிரான்ஸ் நாட்டுல நடக்கிற கதை , அப்பா அஜித்துக்கும் உங்களுக்கும் ஒரே வயசா ? வித்யாசமே இல்லைன்னு தெரியுது .

சம்பத்தை பாருங்க . வில்லனா நடிக்கிறவரே , ஆள் தாடி , மீசையெல்லாம் எடுத்து ஜம்முன்னு இருக்கிறாரு . ராஜீவ் கிருஷ்ணாவை பத்தி கேட்கவே வேணாம் . உங்களுக்கு என்ன . ஆனா ஒரே ஆறுதல் பாடல்காட்சிகளில் சும்மா அசத்துறீங்க . முதல்ல இதெல்லாம் கவனிங்க. படம் தானா ஹிட்டாயிரும் . மக்கள் மனசுல நீங்க நீங்காத இடத்தை பிடிச்சி வச்சிருக்கிங்க . பார்த்து ...நீங்க சிகா புடிக்கும் ஸ்டைலே தனி தான் . அதே மாதிரி தலப்போல வருமா . எந்த ஒரு பிரச்சனையையும் தனி ஆளாக சமாளிக்கக் கூடியவர் . இந்த படத்தில் அடிக்கடி தலை தல என்று சொல்றாங்களே ஏன் ..? . தலை தலை தான் . இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா தலை தன் வேலையை செய்ய வேண்டாமா ... என்ன ...அதேமாதிரி உங்களுக்கு கால் வலிக்கலியா . பில்லா படத்தில் வந்தமாதிரி கேட்வாக் தேவையா . வயசான ஹீரோக்களே இன்னும் எப்படி வயசைக் குறைக்கலாம்முன்னு தீவிரமா யோசிக்கிட்டு இருக்காங்க . மீண்டும் நாங்க இளமையான அஜித்தை எப்போ காணலாம் ? ...

கதை யூகிசேது .. கொஞ்சம் புதிய கதையை யூகிங்க சார் . வில்லன் படத்துல டாப்கியர்ல போன நீங்க , இந்த படத்துல லாஸ்ட் கியர்ல இருக்கீங்களே . நீங்க படத்துல வர்ற காட்சிகள் கொஞ்சம் நல்லாருக்கு .

சகுனி மாமாவா வரும் பிரதீப் ராவத் சும்மா வந்து போகிறார் . ஆனா கதைல இவராலதான் சம்பத்தும் ராஜீவ்கிருணாவும் சொத்தை அடைய நினைக்கிறார்கள் என்பதை மறைமுகமா சொல்லியிருக்காங்க .

சுரேஷ் ( பழனி டாக்டர் சுரேஷ் இல்லியே ) நதியாவோடு அந்த காலத்துல ஹீரோவா வந்த நம்ம சுரேஷ் இதில் வில்லன் குரூப்போட வந்து காமெடி கலந்த வில்லனா வருவது நமக்கு கொஞ்சம் ஆறுதல் . ஆனா கடைசில இவர் திருந்துவது எத்தன படத்துல பாத்துருக்கோம் என்ன .


ஹீரோயின்கள் சமீரா ரெட்டி , பாவனா . 2 பேர்ல பாவனா தான் டாப்பு . சமீரா வயசான அரபிய‌க்குதிரை . பாடல்காட்சிகளில் இளமையான அஜித்தோட போட்டி போடமுடியல அவரால .

பாவனா கொஞ்சம் காட்சிகள் வந்தாலும் நம்ம மனதில் ஒட்டிக்கொள்கிறார் . கொள்ளை அழகு பாவனா . பாவனாவை கடைசியில் அஜித்தோட சேர்த்து வைப்பது படத்துக்கு ஒரு பிளஸ் .பாவனாவை பத்தி என்ன சொல்ல .. என்ன அழகு .. குறைவான காட்சிகளில் வந்தாலும் படம் முழுக்க வரும் சமீராவையே ஓரங்கட்டி அஜித் மனதில் இடம் பிடிக்கிற காட்சிகள் ரொம்பவே நல்லாருக்கு .. மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் பாவனா ..

பிரபு இந்த படத்தோட தயாரிப்பாளர் என்ற முறையில் வந்து போகிறார் .

இசை பரத்வாஜ் . சுமார் . துஷ்யந்தா , டொட்டடோயிங் பாடல்கள் அருமை . அதிலேயும் துஷ்யந்தா பாடல் , ஜப் வீ மேட் என்ற இந்திபடத்தில் உள்ள ஹீரோயின் பாடும் ஒரு பாடலில் அதே மெட்டு , அதே ராகம் , வரிகள் தான் வேறு .

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் டி மிசேல் . பிரான்ஸ் காட்சிகள் மிக அருமை . நல்லா எடுத்து இருக்கிறார் .

மொத்ததில் விறுவிறுப்பான திரைக்கதையில் சிறுசிறு தொய்வு .

தல அஜித் படம் சிறுசிறு ஓட்டைகள் இருந்தாலும் படத்தோடு தன் நடிப்பில் ஒன்றவைத்துவிடுகிறார் அஜித் .

அசல் _ அஜித் .

Post Comment

Tuesday, February 9, 2010

கல்லூரியில் நான் ...


வருகிற 12ம் தேதி துபாயில் , திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற இருப்பதாக இணைய நாளிதழில் படித்தேன் . இந்த செய்தி என்னுள் ரொம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

=======================================

திருநெல்வேலி ச‌த‌க்க‌த்துல்லாஹ் அப்பா க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ரின் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி துபாயில், 12.02.2010 வெள்ளிக்கிழ‌மை காலை 11 ம‌ணி முத‌ல் மாலை 5 ம‌ணி வ‌ரை அல் ச‌பா பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் க‌ல்லூரியில் ப‌யின்ற‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் குடும்ப‌த்தின‌ருட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

துபாய் தேரா லூலூ சென்ட‌ர் அருகில் இருந்து பேருந்து வ‌ச‌தி காலை 9.30 ம‌ணிக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.


=======================================

நானும் அந்த கல்லூரியில் படித்தேன் என்பதை நினைக்கும்போது எவ்வளவு பெருமையாக உள்ளது . இப்போது கல்லூரியை பற்றி நினைக்கும்போது ஆயிரமாயிரம் நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றதே !!முதல்நாள் நுழைகையிலே
என்னென்ன கனவுகள் என்னுள்ளே
ஏய் வாடா என்று அழைத்து
உன்னுள் ஐக்கியமாக்கினாயே !!


அன்பை பொழியும் எதற்கும்
என்னை விட்டுக் கொடுக்காத‌
நண்பர்களை உன்னில்
கண்டேனே _ மலைத்தேன் !.


இரண்டு சேக் மைதீன்கள்
இருக்க வைத்து எங்களை
ஒரே பெஞ்சிலே அருக‌ருகே
அமர வைத்தாயே _ உயிர்த்
தோழனாக்கி வைத்தாயே
என்னவென்று சொல்வேன் !!! .


என்மேல் பாசமும் நேசமும்
கொண்ட ஆசான்களை தந்தாயே


போட்டிகளில் பங்கெடுக்க வைத்து
ஊக்கமும் ஆக்கமும் தந்து
நான் சிறந்து விளங்க
பல முன்மாதிரிகளை தந்தாயே
என்னவென்று சொல்வேன் !!!


என்னுள் நிறைய
மாற்றங்கள்
வந்ததே உன்னாலே
ஒவ்வொரு நாளும்
நினைவிலே நீயே !! .இப்படி ஓவ்வொரு அசைவிலும் என்னை சதக்கதுல்லாஹ் அப்பா கல்லுரி செதுக்கியது .

அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது . அந்த கல்லூரியில் படித்தது பெருமையாக உள்ளது .

துபாயில் , கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது . அமீரகத்தை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள் . அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .


நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !!! .

Post Comment

Sunday, February 7, 2010

வெற்றியா ... தோல்வியா ..


அன்பு மிக்க நண்பர்களே !! எல்லோரும் நலமா ...

நான் ஒரு புத்தகத்தில் அலெக்ஸாண்டர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை படித்தேன் . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையாக உள்ளது .

இதோ :

கிரேக்க நாட்டின் மன்னராக அலெக்ஸாண்டர் இருந்தார் . அவர் பல நாடுகளை வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினார் . அலெக்ஸாண்டர் வாழ்ந்து வந்த சமயத்தில் , கிரேக்க நாட்டில் டயஜீனஸ் என்றொரு தத்துவ ஞானி ( பெயர் சரியாத் தெரியவில்லை ) இருந்தார் . அவர் ஒருநாள் தன் நாயுடன் ஆற்றாங்கரை ஓரமாக அமைதியாக , நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் .

அப்போது அந்த வழியாக மாமன்னர் அலெக்ஸாண்டர் வந்தார் . ஞானி அருகில் வந்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தார் மன்னர் . அப்போது மன்னர் இந்தியாவுக்கு படையெடுத்து செல்ல ஆயத்தமானது பற்றி பேசிக் கொண்டிருந்தார் .

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் :

மன்னா இப்போது எங்கு செல்ல ஆயத்தமாகி இருக்கிறீர்கள் _ இது ஞானி .

நான் இப்போது ஆசியாமைனருக்கு படையெடுத்து வெற்றி பெறச் செல்கிறேன் _ இது மன்னர் .

அப்படியா ரொம்ப சந்தோசம் . அடுத்து என்ன செய்வதா உத்தேசம் _ இது ஞானி .

அப்புறம் இந்தியா மீது படையெடுக்கலாம் என்று நினைக்கிறேன் . _ இது மன்னர் .

அடுத்து என்ன செய்யப் போகிறாய் மன்னா _ இது ஞானி .

அடுத்து நான் அகில உலகத்தை வென்று என் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்போகிறேன் .

பிறகு என்ன செய்வாய் மன்னா ...

அப்புறம் நிம்மதியா ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன் . என்றார் மன்னர் அலெக்ஸாண்டர் .

இதைக் கேட்டதும் டயஜீனஸ் ஞானி கடகடவென சிரித்தார் . ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார் மன்னர் . உடனே ஞானி தன் பக்கத்தில் இருந்த நாயைப் பார்த்து " ஏய் பார்த்தாயா , இந்த பைத்தியக்காரனை !! உலகை வெல்லப்போகிறானாம் . இவன் உலகையே வென்ற பின்னர் தான் நிம்மதியாக ஓய்வு எடுக்கப் போறானாம் . நாம் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோமே ! , உலகை வெல்லாமலே . இது எப்படி இருக்கு . ஓய்வெடுப்பதற்கும் மன நிம்மதிக்கும் உலகை வெல்வதற்கும் சம்பந்தமே இல்லையே ,என்று ஞானி கூறினார் .


இதைக் கேட்டதும் மன்னர் அலெக்ஸாண்டருக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது .


உடனே அலெக்ஸாண்டர் , ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை , அர்த்தமுள்ளது . ஆனா பாருங்க , நான் போருக்கு கிளம்பி விட்டேன் . இப்போது இந்தியாவை வெல்லப் போகிறேன் . என்னால் பயணத்தை பாதியிலே விடமுடியாது . நான் பின்வாங்க மாட்டேன் . நான் வருகிறேன் என்று கிளம்பினார் மன்னர் . அதற்கு ஞானி நீ திரும்புவாய் என்று சொன்னார் .


ஞானி சொன்னது போலவே மன்னர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு சென்று திரும்பும் வழியிலே மரணமடைந்தார் . தன் கிரேக்க நாட்டிற்கு அவரால் திரும்ப முடிய வில்லை .

Post Comment

Saturday, February 6, 2010

கோவா - ஜாலிலோ ஜிம்கானா


கோவா படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாமே !!. எல்லோருமே இந்த படம் பார்த்து விட்டார்கள் . நான் நேற்றுத் தான் கோவா படத்தை பார்த்தேன் .பிற‌கு ஏண்டா இந்த படத்தை பார்த்தோம் என்றாகி விட்டது . நான் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்தேன் . நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வ‌சாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...


கோவா படத்தில் ஜெய் , வைபவ் , பிரேம்ஜி அமரன் ஆகியோர் பஞ்சாயத்தில் நிற்பது போல ஆரம்பம் ஆகிறது . ஆரம்பமே அசத்தலா இருக்கே என்று நினைத்தது தப்பானது . அதிலிருந்து தப்பிக்கும் மூவரும் வீட்டில் உள்ள பணம் நகை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடுகின்றனர் . பின்னர் மதுரைக்கு வரும் அவர்கள் அவர்கள் ஊர் நண்பர் கல்யாணத்தில் கலந்துகொள்கின்றனர் . மணப்பெண் வெளிநாட்டுக்காரி . திகைத்து போகின்றனர் . லொப்பையான நண்பனான அவனுக்கே வெளிநாட்டுக்காரி கிடைக்கும் போது நமக்கு கிடைக்காதா என்ன என்று மூவரும் கோவாவிற்கு பயணப்படுகிறார்கள் .


அங்கே அவர்களுக்கு அரவிந்து நட்பு கிடைக்கிறது . அவர் ஒரு ஹோமோசெக்ஸ் எண்ணம் கொண்ட சம்பத்துக்கு ஜோடி . இவர்களும் சம்பத்திடம் மாட்டிக் கொள்ள முடிவு என்ன ஆனது , நண்பர்கள் ஊர் திரும்பினார்களா இல்லையா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .


வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்திருக்கும் இந்த படத்தில் ஜெய் , வைபவ் , பிரேம்ஜி அமரன் , ஸ்னேகா , பியா மற்றும் பிரேம்ஜியின் வெளிநாட்டுக்காரி , சண்முக சுந்தரம் , விஜயகுமார் , சந்திரசேகர் என ஒரு பட்டாளமே நடித்து இருக்கிறார்கள் .


படம் ஆரம்பத்து காட்சிகள் ரொம்ப நல்லாருக்கு . பஞ்சாயத்து காட்சிகள் அரதப‌ழசு என்றாலும் ரசிக்க வைக்கிறது . அதிலும் பிரேம்ஜி எப்படி சாமிப்பிள்ளையானார் என்பதற்கு பிளாஸ்பேக் காட்சிகள் ரொம்ப நல்லாருக்கு .


இன்னும் சண்முக சுந்தரம் பழைய நடிப்பை மறக்க வில்லை என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் .ஜெய் இன்னும் அப்பாவி பையன் போல இருக்கிறார் . அவருக்கும் பியாவுக்கும் ஆன காதல் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை .


அதேபோல வைபவ் , ஸ்னேகா காட்சிகள் ரொம்பவே கண்றாவியா இருக்கு .


அப்ப யாரு ஹீரோ அட நம்ம பிரேம்ஜி தான் . என்னக் கொடுமை சார் இது ? ...


தன் தம்பிக்குன்னு படம் எடுத்த அண்ணன் வெங்கட் பிரபு வாழ்க . அவர் இயக்கிய மற்ற 2 படங்களின் பாதிப்பு ரொம்பவே இருக்கு . சரோஜாவில் இதே கதை தான் . நண்பர்கள் கிரிக்கெட் நேரடியாக பார்க்க பெங்களூர் போகும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் . அதே போல தான் இதிலும் ஜாலிக்காக கோவா செல்லும் இவர்கள் ஹோமோ செக்ஸ் எண்ணம் கொண்ட சம்பத்திடம் சிக்கிக் கொள்கிறார்கள் .


கோவா என்றாலே ஜாலி என்பது தான் நினைவுக்கு வரும் . திரைப்படம் கோவா என்றால் நமக்கு எரிச்சல் தான் நினைவுக்கு வருகிறது . எப்படி எடுத்திருக்க வேண்டிய கதைக்களம் . வெங்கட்பிரபுக்கு மிஸ்ஸாகி விட்டது .


இந்த பட‌த்தில் சொல்லி இருக்கும் ஹோமோசெக்ஸ் அந்தளவுக்கு வரவேற்பை பெற வில்லை .


இன்னொரு முக்கியமான விஷயம் யுவன்சங்கர்ராஜா . இசையிலும் பிண்ணனி இசையிலும் எப்போதுமே கலக்கிக் கொண்டிருக்கும் யுவனுக்கு இந்த படம் கொஞ்சம் பின்னடைவு .மொத்தத்தில் இந்த படத்தை ஒரு தடவை பார்க்கலாம் .


கோவாவுக்கு ஜாலியாக டூர் போகும் எண்ணம் கொண்டவர்கள் , போவதற்கு முன்னர் இந்த படத்தை பார்த்துறாதீங்க . அப்புறம் எண்ணமெல்லாம் மாறிடும் .


கோவா _ ரசிகனின் புலம்பல் = ஜாலியை தொலைத்தது திரும்ப கிடைக்குமா ?...


**********************************************


இன்று தல அஜித் நடித்து வெளியாகி இருக்கும் அசல் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவோம் .விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் தமிழ் படத்தை ...

Post Comment

Tuesday, February 2, 2010

காதலின் வலி ...


காதலின் வலி ...

அந்த படமே சொல்லுதே
ஆயிரம் முறை வலிதனை
நீ என்னை விட்டு நீங்கினால்
போதாதா .. காயங்கள்
ஆறும் வரை எங்கே
செல்லும் இந்த பாதை ??.


விஷ ஜந்துக்கள்
என்னை தாக்கியதை விட‌
நீ தந்த வலி
இனிமையானதே
நான் உன்னை
காதலிப்பதாலோ !


என்னை விட்டு
போகாதே என் அன்பே !!.

பார்க்காமல் இருந்திருக்கலாம்
கணவனோடு உன்னை !
மறுபடியும் வலிதனை
தருகிறாயே இது நியாயமா ...


கேட்டாள் என்னவள் !
என்னவென்று சொல்வது
நம் காதலை !

என்னவளோ !!
ஐ லவ் யூ என்றாளே
இதோ நான்
உங்களுக்காக என்றாளே !!


எந்த எதிர்பார்ப்பும்
இல்லாத என்னவளின்
தூய காதலில்
என்னைத் தந்தேனே
அவளுக்காக ...!!

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்