Pages

Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..?!

நடிகர் கமலஹாசன் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்து பெரும்பாலான இடங்களில் வெளிவந்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அது வெளியானால் பல சமூக சீரழிவை ஏற்படுத்தும் எனக்கருதி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையின் காரணமாக தமிழக அரசு இந்த படத்தை 15 நாட்களுக்கு தடை செய்துள்ளது.

நமது கருத்துக்கள் மற்றவர்களை சென்றடைய ஊடகம் கண்டிப்பாக தேவை. அது எந்தத்துறையாகவும் இருக்கலாம். இதில் திரைத்துறை என்பது எல்லாவற்றையும்விட அதிவிரைவாக மக்கள் மனதில் சென்றடையும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இந்த சினிமாவின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள்.

அப்படி மக்கள் மனதோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களில், இஸ்லாமிய சமூகங்களை பற்றி திரைப்படங்களில் காட்டும்போது கொச்சையாக தமிழ்பேசுபவராகவும், சாம்ப்ராணி போடுபவராகவும், கைலி, பச்சை தலைப்பாகை அணிந்தவராகவும், அரேபிய ஷேக்குகள் போன்றும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர் இந்தமாதிரி படங்களை எடுப்பவர்கள். இவர்களது குறிக்கோள் முஸ்லிம்களை கேவலப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கோடு படங்களில் காட்டுவது வேதனைக்குரிய விசயம்.

உதாரணமாக, இப்போது வந்த அனைத்து திரைப்படங்களும் இஸ்லாமியர்களை திவிரவாதிகளை போன்றும், இன்றைய மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து படமெடுத்து வருகின்றனர். இந்த விஷமங்களை விதைக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கண்டித்தக்கவர்கள்.

முஸ்லிம்களும் மாற்றுமதச் சகோதரர்களும் அண்ணன்- தம்பி என்று ஒரே குடும்பம் போல பழகிவருகிறார்கள். இது நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தமாதிரி கருத்துக்களை விஷம்தான் என்றறிந்த இன்றைய மாற்றுமதச் சகோதரர்கள் இதனை பெரிய விசயமாக கருதாமல் முஸ்லிம்களோடு நல்லிணக்கத்தோடு பழகி வருகிறார்கள். இப்படியான சினிமாக்கள் தொடர்ந்து வந்து கீழ்தரமான எண்ணங்களை விதைத்துச் சென்றால் மாற்றுமதச் சகோதரர்கள் இது உண்மைதான் என்று முஸ்லிம்களை கேவலமாக பார்ப்பார்கள்.

ஆனால் நாளைய சமுதாயம் எப்படி தாங்கிக்கொள்ளும்; எப்படி எடுத்துக் கொள்வார்கள்?.. இந்த படங்களை பார்க்கும் வளர்ந்து வரும் சிறுபிள்ளைகள் நெஞ்சில் என்னமாதிரியான எண்ணங்களை உருவாக்கும் என்பதனை நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்க  கடமைப்பட்டுள்ளோம்.


சமுதாய பொறுப்புணர்வோட செயல்படவேண்டிய தணிக்கைத் துறை இந்தமாதிரி திரைப்படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி மேலும் இவர்களை ஊக்கப்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் மத நல்லிணக்கத்தோடு சமுதாய பொறுப்புணர்வோடு செயல்பட்டு இந்த படத்தை தடைசெய்ய உத்தரவிட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்தவிஷயத்தில் நீதிமன்றமும் தங்களுடைய பங்களிப்பை ஆற்றும் என்பது விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தீர்ப்பினை தள்ளிவைத்ததிலிருந்து தெரிகிறது. இப்படம் நிரந்தரமாக தடைசெய்ய ஏதேனும் வழிவகைகள் உண்டா என்று அறிந்து நல்லதொரு தீர்ப்பினை வழங்க அனைத்து தரப்பு மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கின்றோம்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் மனதை புண்படுத்தும்படி மதநல்லிணக்கத்தை குழிதோண்டி புதைக்கும்  திரைப்படங்களுக்கு எதிராகவும் நாம் அனைவரும் போராடவேண்டும். 
அனைத்து தரப்பு மக்களும் இந்தமாதிரி விஷங்களை விதைக்கும் திரைப்படங்களை வேறோடு கிள்ளியெறிய முன்வர வேண்டும்.

பார்க்கலாம்... எல்லாம் இறைவனின் சித்தம்..!

Post Comment

18 comments:

 1. ///இதில் திரைத்துறை என்பது எல்லாவற்றையும்விட அதிவிரைவாக மக்கள் மனதில் சென்றடையும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இந்த சினிமாவின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள். ////

  மிகச்சரியாகச் சொன்னீர்கள் தோழரே சினிமா ஊடக பரினாமத்தின் உச்சகட்டம் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன், விஷகருத்துகள் முறைதனா?

  மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.


  இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?

  .

  ReplyDelete
 3. nice article.

  and a different view on the issue.

  ReplyDelete
 4. // இப்போது வந்த அனைத்து திரைப்படங்களும் இஸ்லாமியர்களை திவிரவாதிகளை போன்றும், இன்றைய மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து வருகின்றனர்//


  உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இப்படி யாருமே செய்யலையா? மும்பை ஹோட்டலில் நடந்தது மறந்து போச்சா!! உங்க முகமூடிய கழற்றிட்டு பாருங்க அப்போ தெரியும் உங்க வல்லல் என்னான்னு சொந்த நாட்டுகே துரோகம் செய்ற நீங்க எல்லாம் அல்லா பேர சொல்றதுக்கே வெட்கபடனும் அல்லா கூட உங்களையெல்லாம் மன்னிக்க மாட்டார் இப்படியே போய் கொண்டு இருந்தால் எல்லாதுளையும் ஒதுக்கபட தான் போறீங்க‌

  ReplyDelete
  Replies
  1. சார்! எங்கோ ஒருவன் மதவெறி பிடித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்றீங்களே இது சரியா??.. தீவிரவாத செயல்கள்ல ஈடுபடுகிறவங்களுக்கு ஏன் மத அடையாளப்படுத்துறீங்க??.. அவன் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்டியனோ.. தண்டிக்கப்பட வேண்டியவன். மற்ற மதத்தினர் செய்யும் இதுபோன்ற தீவிரவாத செயலுக்கு மத அடையாளம் பொருத்தாத மீடியாக்கள் அவன் முஸ்லிமாக இருந்தால் உடனே எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க சார்??..

   Delete
  2. இப்போ இதுபோன்று நீங்க பேசவதற்கு இந்த மாதிரி திரைப்படங்கள்தான் காரணம்..

   Delete
 5. ஸ்டார்ஜன் அவர்களே.. பிறந்ததிலிருந்தே மற்ற மதத்தைச் சார்ந்த நண்பர்களுடன் சாதிகள் இல்லையடி பாப்பா என்று படித்து உள்ளேன். மற்ற மத நண்பர்களுடன் கலந்து எல்லா விதப் பண்டிகைகளையும் கொண்டாடி உள்ளேன். எந்த மதத்தில் பிறந்தவராயினும் இந்த மண்ணின் உப்பைத் தின்றவர்கள் இந்த மண்ணிற்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் நடைபெற்ற சமயத்தில், பாகிஸ்தான் ஜெயித்த பொது, பக்கத்து தெருவில் வாழும் ஒரு குறிப்பிட்ட மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதைக் கண்டேன். இதே போன்ற ஒரு சம்பவம் எனது நண்பரின் ஊரிலும் நடந்ததாகக் கூறினார். இதற்கு என்ன அர்த்தம் என்ன என்றே புரியவில்லை. இவர்களுக்கு அடுத்த மதங்களின் மீது பிரச்சினையா அல்லது இந்தியாவின் மீதே பற்று இல்லாத நிலைமையா.. இந்த ஊரில் இருந்து கொண்டே அடுத்த நாடு ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதும், ஜெயிக்கும்போது பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பள்ளிகளில் படித்தது போக வேறு ஏதோ ஒன்றும் இவர்களுக்குக் கற்பிக்கப் படுகிறது என்று தோன்றுகிறதா இல்லையா..?? நீங்களே சொல்லுங்கள்.. எந்த மதத்தினராக இருப்பினும் நாட்டுப் பற்றோடு வாழ வேண்டும். அதுவே என் கருத்து. மற்றபடி ஒரு திரைப்படத்திற்காக அவரவர்கள் ஜாதிப் பிரச்சினையைக் கையில் தூக்கிக் கிளம்புவது பிரச்சினைக்குத் தீர்வாகாது. கமல் ஒரு கலைஞன். அவரது கலைப்படைப்பு பிரச்சினையாகிற பட்சத்தில் மேல் முறையீடு செய்தது, தடை உத்தரவுபெற்றது, இதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் நான் இங்கே கருத்து இட வந்திருக்க மாட்டேன். ஆனால் ஒரு முக்கிய மதத்தை சேர்ந்த தலைவர், கமலின் அந்தரங்க விஷயங்களை இழுத்தும், அவர் மகளுடன் அவரைச் சேர்த்தும் கொச்சையாகப் பேசுவது எவ்வளவு இழிவான செயல்..?? கமல் பதிலுக்கு அவ்வாறாகப் பேசினாரா..?? ஒரு இனத்தின், மதத்தின் பிரதிநிதியாக இருப்பவர்கள், தன் மக்களுக்கு நல்வழியைப் போதிக்க வேண்டியவர்கள், ஒரு தந்தையை மகளுடன் ஆதாரம் இல்லாமல் இணைத்துப் பேசினால், அது அந்த மதத்திற்கே ஏற்ற இழுக்கு என்று நான் நினைக்கின்றேன். நித்தியானந்தன் தவறு செய்த பொது அவனை வெறுத்துப் புறந்தள்ளியதில் அவன் சார்ந்திருந்த மதத்தினருக்கே பெரும்பங்கு உண்டு. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் "விஸ்வரூபம் படம் தமிழகம் எங்கும் ஓடாது" என்று மிரட்டல் போஸ்டர் ஓட்டுவது கலவரத்தைத் தூண்டுகிறார்கள் என்று சொல்வதை ஊர்ஜிதப் படுத்துவது போல் இருக்கிறது. பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் அனைத்து மதத்தினரும் அமைதி காக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு சமுதாயத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

   Delete
 6. நன்றி நண்பரே.. நாம் இன்று செய்யும் நல்ல செயல்களைத் தான் நமது குழந்தைகள் நாளை பின்பற்றுவர். நம்முள் ஒற்றுமை வேண்டும். நாம் அனைவரும் ஒரே தேசத்தவர்..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் புரிந்துணர்தலுக்கு மிக்க நன்றி நண்பரே..

   Delete
 7. எல்லாரும் சமம் என்பதே எனது கருத்தும்...
  ஒரு படம் அது இந்துவை... கிறிஸ்டியனை... முஸ்லீமை பாதிப்பதாக இருந்தால் அதற்கான போராட்டத்தில் இறங்கலாம் தவறில்லை. ஆனால் அரசியல் ஆதாயம் தேடும் ஒரு சிலரின் ஆபாசப் பேச்சுக்களால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படும்தானே நண்பரே..!

  அப்பாவையும் மகளையும் இணைத்துப் பேச... அதுவும் பொதுவெளியில் பேச எந்த மதம் அனுமதித்து இருக்கிறது சொல்லுங்கள்.

  விஸ்வரூபம் எனது நண்பர்களின் மனதைப் பாதித்திருக்கிறது என்றால் போராட்டங்கள்... வழக்குகளால் தடை செய்ய எல்லாருமே சேர்ந்து போராடலாம்... வார்த்தைகளை வைத்து அரசியலாக்க எதற்கு அனுமதிக்க வேண்டும்.

  ஸ்டார்ஜன் இது நீங்கள் எனது நல்ல நண்பர் என்ற முறையில் சொல்லிய கருத்துதான்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து நியாயமானதே.. பொதுவில் வைத்து எந்தவொரு மனிதரையும் அவரது சொந்த விஷயங்களை பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.. எந்த மதத்திலும் அப்படி சொல்லவில்லை.. அவர் அவ்வாறு பேசியது எல்லோருடைய பார்வையிலும் கடும் கண்டனத்துக்குரியது.

   இந்த விஸ்வரூபம் விஷயத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றினைந்து போராடுவோம்.

   நன்றி குமார்.

   Delete
 8. ஏங்க ஆப்கான் தாலிபான் தீவிரவாதிய பத்தி படம் எடுத்தா உங்களுக்கு ஏங்க கடுப்பு ஆவுது இதான் உங்க நாட்டு பற்றா??

  முஹம்மதுன்னு பேர் உள்ள தீவிரவாதியா எப்படிங்க கூப்பிடுறது

  //ஒரு சமுதாயத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.//

  இல்லாட்டினாலும் உலகதுல யாருக்குமே தெரியாதாக்கும் அமெரிக்காவுல இருந்து சவுதி அரேபியா வரைக்கும் தீவிரவாதின்ன அது தாலிபான் தான் தெரியும் போங்க போய் முகமூடிய கலட்டுங்க‌

  ReplyDelete
 9. http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
  அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்