Pages

Thursday, July 29, 2010

அழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை

அன்புள்ள நண்பர்களே!! உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு இந்த 200வது இடுகையை எழுதுகிறேன்.

இந்த உலகம் ரொம்ப வேகமாக முன்னேறி வருகிறது. எல்லாம் அறிவியல் வளர்ச்சியினால் மாறிவரும் உலகத்துக்கு தகுந்தாற்போல நாமும் வேகமாக இயங்குகிறோம். இளைப்பாற சிறிதுநேரம் கிடைத்தால் நமக்கு எவ்வளவு சந்தோசம். அந்த சிறு இடைவெளியில் நம்முடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது. அதுவும் சிறுவயது ஞாபகங்கள் என்றென்றும் பசுமைமாறாத நினைவுகள். அதை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தால் நம்முடைய கவலைகள், இடறுகள், மனஅழுத்தம் இதிலிருந்து கொஞ்சம் விடுதலைதான்.

நமக்கு தகுந்தாற்போல நம்முடைய பிள்ளைகளும் இந்த உலகத்துக்கேற்ப மாறி வருகிறார்கள். இன்று அவர்களது உலகத்தில் நிறைய மாற்றங்கள், அவர்களது குழந்தைபருவ விளையாட்டுகளும் மாறிவிட்டன. முன்பெல்லாம் சிறுவர்கள் தெருவில் சென்று கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இன்னும் நிறைய விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. அதையெல்லாம் இப்போது எங்கே என்று தேட வேண்டியுள்ளது.


அதுபோல சிறுமிகளும் பல்லாங்குழி, பாண்டி, தாயம், சிட்டிக்கல் இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவதை இன்று காணமுடிவதில்லை. எங்கே இந்த விளையாட்டுகள் எல்லாம்?.. காலமாற்றத்தினால் குழந்தைகளும் மாறிவிட்டனர். இப்போதைய சிறுவர் சிறுமியர்கள் இந்த விளையாட்டுன்னா என்னஎன்று கேட்கும் சூழல்..


வருடத்தில் 12 மாதங்களில் இந்தவிளையாட்டுகள் சீசன் போல ஒவ்வொன்றும் மாறிமாறி வரும். இந்த சீசன் கோலிக்கா சீசன் என்றால் நாம் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தால் மற்ற சிறுவர்கள் ஹை..ஏய்.. இவனப்பாருலே.. இன்னும் பம்பரம் விளையாடிக்கிட்டிருக்கான் என்று ஏளனமாக பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இந்த விளையாட்டுகள் அப்போதைய சிறுவர்களின் வாழ்க்கையோட பின்னிபிணைந்தே இருந்தன.

கோலி

சிறுவர் விளையாட்டுகளில் கோலி விளையாட்டு முக்கிய பங்கு பெறுகிறது. கோலிக்கா என்றுகூட சொல்வார்கள். விதவிதமான கோலிக்காவை கடையில் வாங்குவதற்கு கடும்போட்டி.., கடையில் உள்ள ஒரு டப்பா கோலிக்கா சீக்கிரம் விற்றுவிடும். கோலிக்கா உருண்டையில் உள்ளே தெரியும் கண்ணை கவரும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் சிறுவர்களை அதிசயக்க வைக்கும். அந்த கோலிக்காவில் ஒரு உலகம் உண்டென்று நம்பி அவர்களை வழிநடத்தி செல்லும் கோலிக்காவை எவராலும் மறக்க இயலாது.

கோலிக்கா விளையாட்டில் மூணுகுழி, பேந்தான், ஒத்தகுழி, வட்டடிஸ், பொட்டல், இரட்டகோடு போன்றவை ரொம்ப இன்ரஸ்டிங்கான விளையாட்டுகள். பள்ளிக்கூடம் முடிந்தஉடனே பைக்கட்டை வீட்டில் போட்டு போறதுதான்., கருக்கலான (இருட்டியபின்) அப்புறம் அம்மா தேடிவரும்வரை கோலிக்கா விளையாட்டுதான். எங்கிருந்தாலும் குறிபார்த்து அடிப்பதில் கில்லாடியாக இருப்பவர்கள் இந்த விளையாட்டில் ஜொலிப்பார்கள்.

பம்பரம்

பம்பரம் விளையாட்டை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விளையாடுவார்கள். அனைவரும் விரும்பும் விளையாட்டு. இதுவும் கோலிக்கா போல கடைகளில் வாங்க போட்டிதான். விதவிதமான கலர்களில் விற்கப்படும் பம்பரங்களை வாங்கிவந்து முதல்வேலையாக அதிலிருக்கும் சின்ன ஆணிய எடுத்துட்டு ஒரு பெரிய ஆணியை சைக்கிள் கடையில் கொடுத்து அடித்து அதில் சுழற்றிவிடும் பம்பரம் ஆடும் அழகு அழகுதான். உள்குத்து, ஆக்கர் போட்டு குத்துவாங்காத பம்பரமே கிடையாது.

கில்லி (குச்சிக்கம்பு, கில்லிதண்டா)

இதுவும் எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப பிரபலமான விளையாட்டு. இது விளையாடும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிரிக்கெட்டின் முன்னோடியான இதில் எதிர்த்து விளையாடுபவனுக்கு கொடுக்கப்படும் மூணு சான்ஸில் அவன் அடிக்காதபோது வரும் குதூகலம் ரொம்ப அருமையாக இருக்கும். அவன் அடிக்க ஆரம்பிக்கபோகும்போது ஒண்ணு காக்கா, இரண்டு குருவி, மூணு கொக்கு என்று சொல்லி அவனது கவனத்தை திசைதிருப்பும்போது அவனால் அடிக்கமுடியாதபோது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

ஒருதடவை நான் எங்கத்தெரு பையன்கள்கூட குச்சிக்கம்பு விளையாடும்போது ஒருவன் விளையாடும்போது இதேபோல சொன்னதும் அவனால் அடிக்கமுடியாமல் போனதும் அவனுக்கு பயங்கர கோபம். அதன்பின் அவனிடம் டேய் இதெல்லாம் விளையாட்டுடா; அதுக்காக என்னிடம் பேசாம இருக்காதே என்று சொன்னேன்.

காத்தாடி

பருவகாற்று காலத்தில் காத்தாடி விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பனை ஓலையில் காஞ்சரம் முள்ளை சொருகி காத்தாடி காத்தாடி அழகாக சுத்து சுத்து என்று காற்றடிக்கும் திசையில் வைத்து காத்தாடியை சுற்றவைப்பது மகிழ்வான விளையாட்டு.

அதுபோல டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட் அட்டை சேகரித்து விளையாடும் விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இதெல்லாம் அப்போதைய சிறுவர்களின் பொழுதுபோக்கான விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டுகள் உடல் வளர்ச்சிக்கும், அறிவுக்கும் வேலை கொடுப்பதாக அமைந்தது. அவர்களால் பல கோணங்களில் சிந்திக்க உதவியாய் இருந்தன.


இதுமாதிரி சிறுமிகளுக்கு பல்லாங்குழி, தாயம், பாண்டி, சிட்டிக்கல் போன்ற விளையாட்டுகள் இல்லாமல் பொழுதே போகாது.

இந்த விளையாட்டுகள் எல்லாம் எங்கே சென்றுவிட்டன?..

இப்போதைய குழந்தைகளின் பொழுதுபோக்கெல்லாம் வீட்டினுள்ளே கம்பியூட்டர் முன்னே கழிந்துவிட்டது. வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்று சிறுவர்களின் உலகம் மாறிவிட்டது. அவர்களது சந்தோசங்கள் அந்த நாலு சுவற்றுக்குள்ளே அடங்குகிறது என்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

இதுபோதாதென்று டிவியில் ஜெட்டிக்ஸ், போகோ, சுட்டிடிவி, கார்ட்டூன்ஸ் என்று டிவியிலும் அவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். இதெற்கெல்லாம் அடிமையானதை நினைக்கும்போது வருத்தம்தான்.

எங்கே அந்த குறும்புகள்... மறக்க முடியாத இளவயது குறும்பு சேட்டைகள் உங்களிடமிருந்து காணாமல் போய்விட்டதே. உங்கள் திறமைகளை வெளியே கொண்டுவாருங்கள். இதோடு முடிந்துவிட்டதா.. உங்கள் உலகம்??.. சொல்லுங்க குழந்தைகளே!!.

வெளிய வாங்க குழந்தைகளா.. உங்களின் பரந்த உலகம் இருட்டினில் இல்லை. வெளிச்சத்துக்கு வாங்க.. பாருங்கள் உங்கள் உலகத்தினை.. நாலு
சுவற்றுக்குள் உங்கள் சந்தோசத்தை தொலைத்துவிடாதீகள்.

உங்கள் கனவுகள் வெற்றிப்பாதையில் அழைத்து செல்லட்டும.. வாருங்கள் குழந்தைகளே... வெற்றி உங்களுக்கே..

,

Post Comment

47 comments:

  1. பழைய நினைவுகளை கிளரி விட்டீர் பாஸ்...

    ReplyDelete
  2. wishes for 200th post.. yes we are losing those games

    ReplyDelete
  3. Double Century வாழ்த்துக்கள் ஷேக்

    //கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் //

    இதெல்லாம் இப்போ ஆன்லைன்லே விளையாடுவதாக கேள்வி சரியா

    ReplyDelete
  4. 200 க்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. //வெளிய வாங்க குழந்தைகளா.. உங்களின் பரந்த உலகம் இருட்டினில் இல்லை. வெளிச்சத்துக்கு வாங்க.. பாருங்கள் உங்கள் உலகத்தினை.. நாலு
    சுவற்றுக்குள் உங்கள் சந்தோசத்தை தொலைத்துவிடாதீகள்.

    உங்கள் கனவுகள் வெற்றிப்பாதையில் அழைத்து செல்லட்டும.. வாருங்கள் குழந்தைகளே... வெற்றி உங்களுக்கே..//

    உண்மைதான் நண்பா.

    சிறுவயது கிராமத்து வாழ்க்கையை மீண்டும் நெஞ்சுக்குள் மலரச் செய்துவிட்டது உங்கள் கட்டுரை.

    டிவியும் கணிப்பொறியும் குழந்தைகளின் விளையாட்டு மீதான ஈடுபாட்டை குறைத்ததுடன் நோயை பெருக்கியுள்ளன என்பதே நிதர்சனமான உண்மையும் கூட.

    ReplyDelete
  6. எங்கே அந்த குறும்புகள்... மறக்க முடியாத இளவயது குறும்பு சேட்டைகள் உங்களிடமிருந்து காணாமல் போய்விட்டதே. உங்கள் திறமைகளை வெளியே கொண்டுவாருங்கள். இதோடு முடிந்துவிட்டதா.. உங்கள் உலகம்??.. சொல்லுங்க குழந்தைகளே!!.
    .....உண்மை.... எதை மிஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. மலரும் நினைவுகள்.துள்ளித்திரிந்த இளமை காலங்களை கண்முன் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

    பசுமை நினைவுகள்.
    தங்களின் இந்த 200-வது இடுகைக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சேக்.

    ReplyDelete
  9. இந்த விளையாட்டுகளினால் விளையும் மிகப்பெரிய நன்மை நண்பர்கள் கிடைப்பதுதான்,60 வயதான எனக்கு நண்பர்களிடம் 50 வருடமாக இன்னமும் நட்பு தொடர்கிறது.சிறுவயது நட்புதான் நெடுநாள் தொடரும்.

    ReplyDelete
  10. //பருவகாற்று காலத்தில் காத்தாடி விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பனை ஓலையில் காஞ்சரம் முள்ளை சொருகி காத்தாடி காத்தாடி அழகாக சுத்து சுத்து என்று காற்றடிக்கும் திசையில் வைத்து காத்தாடியை சுற்றவைப்பது மகிழ்வான விளையாட்டு.//

    நானும்.. நானும். பம்பரம் இப்ப bayblade என்ற பெயரில் வருது தெரியுமா.. நகரத்துக்குழந்தைகளுக்கு அதில் ரொம்ப ஆர்வம்.

    200க்கும் வரப்போற 2000த்துக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. 200-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
    உலகம் பலவற்றை தொலைத்து கொண்டிருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  12. 2oo க்கு வாழ்த்துக்கள்.
    நல்ல பகிர்வு.
    கள்ளமில்லாத பிள்ளை பருவத்து விளையாட்டுக்கள்ழிந்து வருவது வருத்தத்துக்குரியது.

    ReplyDelete
  13. முதலில் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..

    மிக நல்ல கட்டுரை... இப்போதுள்ள குழந்தைகள் எலக்ட்ரானிக் உலகத்திலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்று நான்கு குழந்தைகளுடன் கூடி விளையாடும் போக்கை தற்போதைய பெற்றோர்களும் விரும்பவில்லை போலும்... என்ன செய்வது...

    ReplyDelete
  14. ஊருக்கே கொண்டு போய் விட்டுட்டு வந்துடீங்க...
    இருநூறுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. உங்கள் 200 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . பழைய நினைவுகள் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  16. சிறுவயதின் வாழ்க்கைக்கே அழைத்துப்போய்விட்டீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.

    ReplyDelete
  18. 200வது இடுகைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. 200வது பதிவிற்கும் சிறப்பான பதிவு தேர்விற்கும் வாழ்த்துக்கள் தல..

    நானும் இதே போல் நிறைய தடவை நினைத்ததுண்டு... ஆனால் நம் அம்மா அப்பாவுடைய காலங்கள் நமக்கு கிடைக்காதது போல நம் காலங்களும் நமது அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது என்றுதான் தோன்றுகிறது

    ReplyDelete
  20. அது போன்ற விளையாட்டுலதான் சேர்ந்து வாழுதல்.... தோல்வியை எதிகொள்ளுதல் போன்ற நல்ல விடயங்களும் இருந்தன.

    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  21. 200 க்கு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து விளையாடுங்க.

    ReplyDelete
  22. நல்ல பதிவு ஸ்டார்ஜன்.

    புற வெளி விளையாட்டுகள் சிறந்த பொழுதுபோக்காகவும், நல்ல உடற்சியாகவும் அமைந்தது அந்த காலம்.

    இன்று கம்ப்யூட்டர் கார்ட்டூன்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

    200 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அருமையான பதிவு ஸ்டார்ஜன். 200க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. //கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ்//

    அத்தனை விளையாட்டுக்களையும் விளையாடி உள்ளேன்... இப்ப எந்த குழந்தையும் விளையாடுவதில்லை காரணம் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை....

    ReplyDelete
  25. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.முற்றத்துத்துப் புழுதி முழுதும் நம் தலையில் தாங்கி, காக்கைக்கும் குருவிக்கும் சாப்பாடு குடுத்து எவ்வளவு அழகான இளமைப் பருவம்.இப்போ சொன்னால் சிரிக்கிறார்கள்.
    அருவருப்படைகிறார்கள் !

    200 படி தாண்டியதுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் ...தொடருங்கள்.

    ReplyDelete
  26. ///வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்று சிறுவர்களின் உலகம் மாறிவிட்டது. அவர்களது சந்தோசங்கள் அந்த நாலு சுவற்றுக்குள்ளே அடங்குகிறது என்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது///

    ரொம்ப கரெக்ட்-ஆ சொன்னிங்க.. இப்பெல்லாம் இண்டோர் கேம்ஸ் தான் அதிகம்..
    வெளியில் விளையாடினா தான் கண்ணுக்கு நல்லது. எங்க புரியுது..???

    200 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  27. ஸ்டார்ஜன்னுக்கு முதலில் வாழ்த்துக்கள் இரட்டை சதம் அடித்துள்ளீர்கள்.. மேலும் மேலும் சதங்களா தொடருங்கள். உங்களுடைய எல்லாப்பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது விரும்பி படிப்பேன். எல்லாமே அருமையாக எழுதிவருகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

    நல்ல சிந்தனைகள்.. ஒவ்வொன்றும் வித்யாசமான சமூக கருத்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.

    இந்த பதிவை படிக்கும்போது சிறுவயது விளையாட்டுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. நன்றி ஸ்டார்ஜன்.

    இந்தகால குழந்தைகள் கம்பியூட்டரும் டிவியும் கதின்னு அவர்கள் ஆகிவிட்டார்கள். எல்லா பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களுக்குள் எதையும் சமாளிக்கும்திறன், விட்டுக்கொடுத்தல், சகோதரத்துவம் வெற்றி இலக்கை அடைய பலவித முயற்சிகள் எல்லாம் இந்த விளையாட்டுகளின் மூலம் கிடைக்கிறது.

    வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  28. 200க்கு வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்.... ஊர் நினைவை மீட்டி விட்டீர்க‌ள்..

    ReplyDelete
  29. உண்மை தான் நண்பா இப்பொழுது சிறுவர்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இது போல விளையாட்டுக்களை கண்டுகொள்வதே இல்லை

    ReplyDelete
  30. வாங்க பட்டாபட்டி @ நன்றி வாழ்த்துக்கு

    வாங்க எல்கே @ ரொம்ப நன்றி வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும்

    வாங்க அப்துல்மாலிக் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. ஆமா இப்போ எல்லாம் ஆன்லைன்லதான்.

    வாங்க ராஜசேகர் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

    ReplyDelete
  31. வாங்க குமார் @ நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க சித்ரா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

    வாங்க அபுல்பசர் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  32. வாங்க விஜயன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டி எனக்கு ஊக்கப்படுத்தியதுக்கு.. நீங்க சொல்வது உண்மைதான் அய்யா.. சிறுவயது நட்பு என்றென்றும் மறக்க முடியாத நட்பாய் அமையும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  33. வாங்க அமைதி அக்கா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. நன்றிகள் பல..

    ஆமா.. மறக்கமுடியாத நாட்கள் அவை.. அதெல்லாம் கிடைக்கபெறாதவை இல்லையா அமைதி அக்கா..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  34. வாங்க தமிழ் உதயம் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

    ஆமா.. இழந்து வருகின்றனர் இன்றைய சிறுவர்கள். நன்றி கருத்துக்கு

    வாங்க அம்பிகா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. வாங்க பாலாசி @ நன்றி நன்றி வாழ்த்துக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க செந்தில் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  36. வாங்க இளம்தூயவன் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்

    வாங்க ராஜவம்சம் அண்ணே @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு

    வாங்க ஆசியாக்கா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

    ReplyDelete
  37. வாங்க விசா @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

    வாங்க கண்ணா.. @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்..

    நீங்க சொல்வது உண்மைதான்.. நம் சந்ததியினருக்கு நம்முடைய காலசூழ்நிலை கிடைக்காதுதான். நம்மைப்போல நம்குழந்தைகளும் ஆகணும் என்று நம்மால ஆன முயற்சி இது..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    வாங்க முத்துலக்ஷ்மி மேடம் @ ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

    வாங்க கருணாகரசு சார் @ சரியாச்சொன்னீங்க சார். ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  39. வாங்க அக்பர் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    வாங்க கட்டபொம்மன் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..

    ReplyDelete
  40. வாங்க சங்கவி @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

    வாங்க ஹேமா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  41. நல்லா தொகுத்து எழுதி இருக்கீங்க... இந்த விளையாட்டுகள் எல்லாம் கிட்ட தட்ட அழிஞ்சே போன வேளையில் நல்ல informative போஸ்ட்... 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. இளமைப் பருவம் நினைத்துப் பார்க்கையில் பரவசமானது. அதற்கு திரும்பவும் எங்களை அழைத்துப் போய்,

    விளையாட்டில் "கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல்,சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது,கோகோ,கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ்" இவ்வளவு (வெரைடீசா அம்மாடி) உண்டு என்று அழகாய் சொல்லி விளங்க வைத்த உங்களுக்கு 200 என்ன, 2 லட்சம் பதிவு எழுதக் கூட வல்லமை யுண்டு என்று சொல்லி வாழ்த்துகிறேன், வல்ல இறைவனிடம் வேண்டி...!

    ReplyDelete
  43. 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. மிக அருமையான தேவையான பதிவு.. நிஜமாவே பிள்ளைகள் நிறைய விளையாடணும்.. பாரதியின் பாடல் போல்.. மாலை முழுதும் விளையாட்டு..

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்