Pages

Wednesday, March 31, 2010

கேள்விக்கு உங்கள் பதில் 5

அன்புமிக்க நண்பர்களே!!

வாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்றவார இடுகைகளின் தொகுப்பை இங்கே தந்துள்ளேன். அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..

கேள்விக்கு உங்கள் பதில் கேள்விக்கு என் பதில்
கேள்விக்கு உங்கள் பதில் 2 கேள்விக்கு என் பதில் 2
கேள்விக்கு உங்கள் பதில் 3 கேள்விக்கு என் பதில் 3
கேள்விக்கு உங்கள் பதில் 4 கேள்விக்கு என் பதில் 4


சரி இந்த வார கேள்விக்கு உங்கள் பதில் 5 க்கு செல்வோமா..

கேள்வி 5 :

குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது யார்கையில் இருக்கிறது?.. அரசாங்கமா இல்லை சமூகமா...


சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, March 30, 2010

இதயம் பேசுதே...


இதயம் பேசுதே
உன் நினைவு பிறழாமல்
மௌனமொழியிலே
கனவுகள் வந்து
கவிபாடும் கணநேரமும்
உன் நினைவுகளே!

காதலின் மௌனராகம்
பூவின் வழியாய்
மாலையானது
உன் முதல்பார்வையும்
அதை உறுதிசெய்தது.


கடிகாரமுட்கள் சுற்றும்
நேரம் தவறாமல்
காணாமல் தேடும்
விழிகள் போல‌
மழைத்தூறும் சாரல்
என் மனமெங்கும்
உல்லாச பறவைகள்
சிறகடிக்கும்
உன்னை நினைக்கையில்


காற்றிலாடும் உன் கூந்தல்
மயக்கும் மல்லிகையாய்
மறுமொழி பேச நேரமின்றி...



,

Post Comment

Sunday, March 28, 2010

கர கர ... மொறு மொறு ...

அன்புமிக்க நண்பர்களே!!

இதோ வந்துட்டேன் உங்கள் ஸ்டார்ஜன் நிலா அதுவானத்து மேல யில். கடந்த ஒரு வாரகாலமாக நான் வலைச்சரத்தில் ஆசிரியராக பணிபுரிந்தேன். எனக்கு வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கிய திரு. சீனா அய்யாவுக்கு என் நன்றிகள்.
இந்த ஒருவாரமும் ஆசிரியர் பணியை திறம்பட செய்து முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். வலைச்சரத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு அமைய பெற்றால் இதேபோன்று செயல்படுவேன்.

**************************************

இந்த ஒருவாரமும் என்னுடைய பக்கத்துக்கு வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். மேலும் வலைச்சரத்துக்கு வருகைதந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிகள். கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பல நண்பர்கள் நலம் விசாரித்தனர். நலமாக உள்ளேன். உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

சென்றவாரம் கேள்விக்கு உங்கள் பதில் 4 பகுதியில் நிறையபேர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.

கேள்வி 4:

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பாடுபடுவது அரசாங்கமா... இல்லை மக்களா....


இதற்கு, கேள்விக்கு என் பதில் 4 வெளியிட தாமதமாகிவிட்டது. எனினும் என் கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன். தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அரசு முயற்சிக்க வேண்டும், மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க அரசு முன்வரவேண்டும்.

மக்களும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அரசின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தங்களை சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். கடந்த அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் உள்ள தொட்டிகள் இன்று என்ன ஆனது என்றே தெரியவில்லை. மக்களுக்கே வெளிச்சம்.

எனவே மக்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து நீர்மட்டம் உயர நம்மால் ஆன முயற்சிகளை தொடரவேண்டும்.


**************************************


என் அன்புள்ள சகோதரி மலிக்கா அவர்கள் எனக்கு சன்ஷைன் அவார்ட் கொடுத்துள்ளார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த விருதினை அன்போடு இவர்களுக்கு வழங்குகிறேன்.

ஸாதிகா மேடம்

மின்மினி

சேட்டைக்காரன்

டி.வி.ராதாகிருஷ்ணன் சார்

ஜெகநாதன்


******************************************

நேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பதிவர் சந்திப்பு கூட்டங்கள் அவசியமானதே.. அப்போதுதான் ஆரோக்கியமான நல்லுறவுகள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இன்று காலையில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட சில நண்பர்களின் வலைப்பூக்களை படிக்க நேர்ந்தது. அவர்கள் கூறி இருப்பது : இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இல்லை, ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

ஏன், என்ன நடந்தது என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளணுமே தவிர திணிக்க கூடாது. அதுதான் ஆரோக்கியமான நடைமுறை; நல்லுறவு பாலமாக அமையும் என்பதில் சந்தேகம் உண்டா சொல்லுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Monday, March 22, 2010

உலக தண்ணீர் தினம் - கேள்விக்கு உங்கள் பதில் 4

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று உலக தண்ணீர் தினம். தண்ணீரின் மகத்துவம், சிக்கனங்களை பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். தண்ணீரை அளவாய் பயன்படுத்துவோம். தண்ணீரை வீணாக்காதீர்கள்.

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.


சென்ற வாரம் நீங்கள் ஆவலுடன் பங்குபெற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கேள்விக்கு உங்கள் பதில் பகுதியில் இதோ இந்த வார கேள்வி...


கேள்வி :


தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பாடுபடுவது அரசாங்கமா... இல்லை மக்களா....


சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Sunday, March 21, 2010

வலைச்சரத்தில் உங்கள் ஸ்டார்ஜன்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

இன்றுமுதல் உங்கள் ஸ்டார்ஜன் வலைச்சரத்தில் ஒருவார காலம் அலங்கரிக்கப்போகிறேன். திரு. சீனா அய்யாவின் ஆசியினாலும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களினாலும் இன்று வலைச்சரத்தில் பணியாற்ற செல்கிறேன்.

இந்த பதிவுலகில் எழுதவந்த பின்னர் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் அனைவரும் கிடைத்துள்ளீர்கள். எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் என்முயற்சிகளுக்கு ஆதரவும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னவென்று நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை.

நானும் வலையுலகில் ஜொலிக்கிறேனென்றால் என்னை ஸ்டாராக ஆக்கியது நீங்கள்தான்.

உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் என்பாதையில் நீங்கள் தூவும் பூக்கள்.


வலைச்சரம்

நிலா அது வானத்து மேல!!

என்றும் உங்கள் மனவானில்...


தொடர்ந்து உங்கள் பூக்களை தூவுங்கள்..


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.



Post Comment

Friday, March 19, 2010

கையில பொருள், வாயிலே பொய்...


எக்ஸ்கியூஸ்மீ மேம் ! நாங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிற கம்பெனியில இருந்து வாரோம். எங்க கம்பெனி நல்ல தரமான வீட்டுஉபயோக பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எங்க கம்பெனிக்கு இந்தியா முழுவதும் பிராஞ்சஸ், அப்புறம் உலகமுழுவதும் தன்னோட கிளைகளை பரப்பி தன்னகரில்லாத நிறுவனமாக விளங்குகிறது. நாங்க அதை எல்லா மக்களுக்கும் அறிமுகபடுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தாங்க இதை வாங்கிப் பாருங்க.

இல்லப்பா எங்க வீட்டுல எல்லா சாமானும் இருக்கிறது. அதனால வேண்டாம்பா.

இல்லமேடம் இது புதுசா வந்திருக்கு.. இது மார்க்கெட்டுல கிடைக்காது.

இல்லீங்க இதெல்லாம் எங்களுக்கு வேணாம்.. கிளம்புங்க..

அட என்ன மேடம்! சும்மா வாங்கிப் பாருங்க.. நீங்க பாக்கிறதுக்கு பணம் எதுவும் தரவேணாம். சும்மாதான் பாருங்களேன்.. பிடிச்சிருந்தா வாங்குங்க..

அட என்னப்பா.. உங்களப்பார்த்தா பாவமா இருக்கு. சரி கொடுங்க.. பாத்துட்டு தந்திருவேன் என்ன? சரியா..

இங்கப்பாருங்க மேடம்.. இதைப்பாருங்க மேடம்.. இதுல என்னன்ன பெசிலிட்டில்லாம் இருக்கு தெரியுமா. மார்க்கெட்டுல நல்லா மூவாகிக்கிட்டு இருக்கிற சாதனம். ரொம்ப அருமையா இருக்கும்..

அட அப்படியா தம்பி பரவாயில்லையே ரொம்ப நல்லாருக்கே!!..

ஆமாக்கா.. இதை பக்கத்துத் தெருவுல டாக்டர் மாலதி வீட்டுல வாங்கிருக்காங்க.. நாலுவீடு தள்ளி இருக்காங்களே... அவங்க பேரு என்ன... என்ன...

நம்ம லட்சுமிஅம்மாவா?..

அட ஆமா மேடம் அவங்களேதான்.. அவங்க 2 பீஸ் வாங்கினாங்க..

அப்படியா அவங்க எப்பவுமே இப்படித்தான், பெருசா பீத்திக்கிறதுக்குன்னே வாங்கிக்கிறாங்க.. ஏய் செண்பகம், பாத்திமா, மாரி, கணேஷம்மா.. எல்லோரும் இங்க கொஞ்சம் வாங்க.. நம்ம தம்பி எதோ நல்ல பொருள் கொண்டு வந்திருக்கு பாருங்க.

அட அப்படியா அக்கா..என்ன இது என்ன இது..

தம்பி! உங்க பேச்சுக்காக வேண்டி வாங்குறோம்.. நல்ல தம்பி, உங்க பேச்சு ரொம்ப அருமை..

எக்காவ் நீங்க எனக்கும் சேத்து பணம் கொடுத்திடுங்க.. எங்க வீட்டுக்காரர் வந்தப்பறம் தாரேன்..

மேடம் இங்க பாருங்க.. இதுதான் எங்க கம்பெனியோட அட்ரஸ்.. இந்தாங்க பில், என்ன கம்ப்ளைண்டா ஆனாலும் எங்க கம்பெனிக்கு வாங்க. உடனே மாத்திக்கிறலாம் என்ன சரியா.. ரொம்ப தாங்க்ஸ், அப்போ நான் போயிட்டு வாரோம் மேடம்.

இந்த மாதிரி சேல்ஸ்ரெப்கள் பேசியே வாங்க வைத்த பொருள் மறுநாளே பார்த்தா வேலை செய்யாமல் போய்விடும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.


கையில பொருள், வாயிலே பொய். இதுதான் சேல்ஸ்ரெப்களின் முகவரி. இந்தமாதிரி ஆள்களிடம் நாம ரொம்பவே உசாரா இருக்கணும். இல்லையென்றால் நம்முடைய நேரம், பொருள், பணம் இழக்க வேண்டிவரும்.

என்ன ஒரு சாமர்த்தியம்.இதுதான் இவங்களோட மூலதனமே. பொய்மேல பொய் பேசுவாங்க, நேர்மை இருக்காது, 2 நாள்ல ஒர்க்ஆகாத பொருளை தலையில கட்டிட்டு போயிருவாங்க. இல்லாத முகவரியைத்தான் கொடுப்பார்கள்.

நாம் அவர்கள் பேச்சில் மயங்கி ஏமாந்துவிடுகிறோம். டிப்டாப்பா வருவாங்க. ரொம்பவே நம்மளை கவர்ந்துவிடுவாங்க. இன்னும் சிலபேர் வீட்டை நோட்டமிட்டுவிட்டு செல்வார்கள். நம்மைபற்றி முழுவதும் வீக்னஸ் எதெல்லாம் என்று தெரிந்து கொண்டு திருட்டுக்கும்பலுக்கு தகவல் கொடுப்பாங்க.

இதுக்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்.. நம்மிடையே விழிப்புணர்ச்சி இல்லாதது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

அம்பு எய்தவன் இருக்க, அம்பை குறை சொல்லி என்ன பிரயோஜனம்.

சேல்ஸ்ரெப்கள் கொடுத்தவேலையை கச்சிதமாக செய்துமுடிக்க பணிக்கப்பட்டவர்கள்.

சேல்ஸ்ரெப்களுக்கு டிரைனிங் கொடுப்பவர்கள் இப்படித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். எப்படியெல்லாம் மக்களிடம் பேசவேண்டும், எந்தமாதிரி மக்களை கவர்ந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பவேண்டும். நம்முடைய பொருளை எப்படியாவது வாங்கவைத்துவிடவேண்டும்.

பெண்களை கவர, பெண்களைப் பார்க்கும்போது கண்களைமட்டுமே பார்க்க வேண்டும். தலையைகுனியக்கூடாது, வேறுபக்கம் கவனம் சிதறக்கூடாது. பொறுமை ரொம்ப முக்கியம். நம்முடைய பணத்தின்மேல் கவனமாக இருக்கவேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதுபோல் காட்டிக் கொள்ள வேண்டும்.

இதுதான் சேல்ஸ்ரெப்களின் எழுதப்படாத விதி எனலாம். இந்த கம்பெனிகளின் முதலாளிகள் வெயிலில் கஷ்டப்பட்டு வேலைபார்க்கும் ஒழுங்காக சம்பளம் கொடுக்கமாட்டார்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி பணம் பார்க்கும் முதலாளிகளை உதைக்க வேண்டும். இதுதான் இன்றைய சேல்ஸ்ரெப்களின் நிலை.

இதிலும் சில சேல்ஸ்ரெப்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மயக்கி தனது வக்கிரபுத்தியால் பெண்களை வசப்படுத்தி விடுவார்கள். பின்னர் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பாவம் பெண்கள், கணவனிடமும் சொல்லமுடியாமல் மனதுக்குள்ளே தினமும் புழுங்கி ஒருநாள் தற்கொலை செய்துவிடுவதை நினைக்கும்போது மனம் ரொம்பவே கலங்குகிறது.

என்னஒரு கொடுமை! கணவனும் பிள்ளைகளும் அனாதைகளாக ஆகிவிடுகிறார்கள். இப்படி காரணம்தெரியாத தற்கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

நமக்கு விழிப்புணர்ச்சி அவசியமாக வேண்டி இருக்கிறது.

எனவே, அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, எல்லோரும் கவனமாக விழிப்புணர்வுடன் இருங்கள்.

யாரையும் வீட்டினுள் அனுமதிக்காதீர்கள். உங்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள்... இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.



உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Thursday, March 18, 2010

இருவார்த்தை கதைகள் 2

தலைப்பு : நேர்முகத் தேர்வு

கதை : சென்றதும் வெளியே

********************************************

தலைப்பு : கானல் நீர்

கதை : வந்தாய் வராமலே

********************************************

தலைப்பு : ஆசை

கதை : விரும்பியது என்னை

********************************************

தலைப்பு : கண்ணாடி

கதை : பொய்சொல்ல தெரியாது..

********************************************

தலைப்பு : வெளிச்சம்

கதை : ஒளியில் பிம்பம்

********************************************

தலைப்பு : விலைவாசியும் நானும்

கதை : விக்கிரமாதித்தனும் வேதாளமும்

********************************************

தலைப்பு : கைவிளக்கு ஏந்திய காரிகை

கதை : மின்மினி பூச்சி

********************************************

தலைப்பு : அரசுபள்ளி மாணவர்

கதை : விளக்குகம்பத்தின் அடியில்..

********************************************

தலைப்பு : கொடி

கதை : காற்றின் திசையில்..

********************************************

தலைப்பு : பொம்மை

கதை : குழந்தையின் ராஜா

********************************************

தலைப்பு : விடிவெள்ளி

கதை : ஆரம்பமாகட்டும் இனிதே...

********************************************


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Wednesday, March 17, 2010

கேள்விக்கு என் பதில் 3

அன்புமிக்க நண்பர்களே!

நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை 21 பேர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்காங்க. இன்னும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவாங்க. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


கேள்வி 3:

தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...


ஒரு குழந்தை கல்வியையும் அறிவையும் கற்றுக் கொள்ளும் ஒரு இடம் பள்ளிக்கூடம். ஒரு பெற்றோர், நாம்தான் படிக்கவில்லை; தன் குழந்தையாவது எல்லாவிதமான கலைகளையும் கற்று சமுதாயத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். அப்படி இருக்கும்போது அவர்கள் நல்ல கல்வி நிலையங்களை எங்கே என்று நாடிச் செல்கின்றனர்.

பெற்றோர்களின் இந்த மனநிலையை அறிந்த பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கல்விக்கட்டணத்தை பெற்றோர்களிடமிருந்து எவ்வளவு கறக்கமுடியுமோ அவ்வளத்தையும் கறக்கின்றனர். டொனேஷன், வளர்ச்சிநிதி, கல்விகட்டணம், அந்தபீஸூ, இந்தபீஸூ என்று நம்மிடம் கேட்பதை பார்க்கும்போது தலைசுற்றுகிறது. நடுத்தரவர்க்கத்தினர் பணத்துக்கு என்ன பண்ணுவார்கள். இப்பவே இப்படி இருந்தால் இனி வருங்காலத்தில் எப்படியோ?. இறைவன் அறிந்தவனாக இருக்கின்றான்.

அப்போ நீங்க கேட்கலாம்; பணத்துக்கு முடியாதவங்க ஏன் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கணும் என்று?.. அரசு பள்ளியில் கல்வி சரியில்லை. ஒருசில அரசு பள்ளிகளில் மட்டுமே அனைத்து ஆசிரியர்களும் வருகைதந்து பிள்ளைகளுக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கின்றனர்.

தனியார் கல்விநிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் வாதம் என்னவாக இருக்கும்?. நாங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குகிறோம். அதுமாதிரி இதர பழக்கவழக்கங்கள், பயிற்சிகள் கற்றுக் கொடுக்கிறோம். அதற்கு நாங்கள் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவேண்டும். பிள்ளைகளுக்கு அவர்களிடம் என்ன திறமைகள் உள்ளனஎன்பதை அறிந்து பாடம்சொல்லிக் கொடுத்து அவர்களை சமுதாயத்தில் சிறந்தவர்களாக ஆக்க நாங்கள் எவ்வளவு முயற்சி மேற்கொள்கிறோம் என்பதை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

நான் கேட்பது என்னவென்றால், நீங்கள் கல்விநிறுவனங்கள் ஆரம்பிக்கவேண்டும் என்றால் உங்கள் சொந்தப் பொறுப்பில் எல்லாவிதமான செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்களிடமிருந்து வசூல்செய்வது எந்த விதத்தில் நியாயமானது என்று நீங்களே சொல்லுங்கள். இதுதான் எல்லா தனியார் பள்ளிகளின் நிலையும்.

இதில் ஒருசில கல்விநிறுவன‌ங்களை பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்று பிள்ளைகளை சமுதாயத்தில் சிறந்தவர்களாக ஆக்குகின்றனர். பெற்றோர்களிடமிருந்து அதிகமாக வசூலிப்பதில்லை.

ஒருசில அரசு பள்ளிகளை தவிர்த்து எல்லாப் பள்ளிகளைபற்றி கேட்கவே வேண்டாம். அரசு இந்த பள்ளிகளை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்து திறமையான ஆசிரியர்களை நியமித்து பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க முன்வரவேண்டும்.

அரசு இந்த கல்வியாண்டுமுதல் முதல்வகுப்பு முதல் ஆறாம்வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறையை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல தனியார் பள்ளிகளுக்கு பாதகமில்லாமல் கல்விகட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய வாழ்க்கை நடைமுறை.


மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கின்றேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Sunday, March 14, 2010

கேள்விக்கு உங்கள் பதில் 3

எனது அன்புமிக்க நண்பர்களே

முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2 வாரங்களுக்கு முன்னால் நான் ஆரம்பித்த கேள்விக்கு உங்கள் பதில் இடுகை உங்களின் அமோக ஆதரவினை பெற்று ஒரு நல்ல இடுகையாக வருவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

இது உங்களுக்கான இடுகை. இது நீங்கள் ஆர்வத்துடன் பங்குபெற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடுகை.

சென்ற வாரம் இடுகை கேள்விக்கு உங்கள் பதில் 2

இனி இந்த வார கேள்விக்கு செல்லலாமா..

கேள்வி 3 :


தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...



சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Friday, March 12, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்

எனது அன்பு நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்கள் எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார். அவர் அழைப்புக்கு இணங்க இந்த இடுகை.

நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?


1. அன்னை தெரசா

இந்த பெயரை உச்சரிக்காத இந்தியர்கள் யாரும் இருக்க முடியாது. அல்பேனியா நாட்டில் பிறந்து இந்தியர்களின் நலனுக்காக தன் சொத்துசுகம், சொந்தபந்தம் அனைத்தையும் தியாகம் செய்து இந்திய நாட்டுக்காக தன்னையே அர்பணித்தவர்.

2. இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இவர் நேருவின் மகள். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.

3. சோனியா காந்தி

இவர் இந்திரா காந்தியின் மருமகள். இப்போதைய காங்கிரஸ் தலைவர். ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி சிதறுண்டு போகும் நிலையில் இருந்தது. அப்போது இவர் தலைமையேற்று கட்சியை வலுப்படுத்தினார். இவரால் தான் இப்போதைய காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒரு பெரிய கட்சியாக விளங்குகிறது. இவரின் தன்னம்பிக்கை, நிர்வாகத் திறமை உழைப்பு இவர் வெற்றிக்கு அடையாளம்.

4. ஜெயலலிதா

இவர் இப்போதைய அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளர். திரு.எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த அதிமுக கட்சி தமிழ்நாட்டின் பெரிய கட்சியாக‌ சிறந்து விளங்க‌ இவரே காரணம். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சி சிதைந்து விடாமல் காப்பாற்றியவர். இவரின் தன்னம்பிக்கை, நிர்வாகத் திறமை உழைப்பு இவர் வெற்றிக்கு அடையாளம்.

5. ராமலட்சுமி

இவர் திருநெல்வேலியின் புகழ்பெற்ற கைராசி மிக்க டாக்டர். நெல்லையில் உள்ள இவரின் மருத்துவமனைக்கு செல்லாத பெண்களே இல்லை எனலாம். மகபேறு, குழந்தையின்மை, பெண்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு இவர் மருத்துவமனைக்கு சென்றால் தீர்வு காணலாம். இப்போது இவரைப் போல இவர் மருமகள் மதுபாலாவும் சிறந்த டாக்டர். இருவரும் நெல்லை பெண்களுக்கு கைராசிமிக்க மருத்துவர்கள்.

6. சுதா நாராயணன்

இவர் இன்போஷிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியின் மனைவி. அந்த நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் பெண்மணி.

7. உமா மகேஸ்வரி

இவர் நெல்லையின் முன்னாள் மேயர். நெல்லையில் முதன்முதல் மாநகராட்சி முறை கொண்டு வந்தபோது நெல்லையின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நிர்வாகத்தில் நெல்லையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம்.

8. S.ஜானகி

இவர் பிரபல பிண்ணனி பாடகி. எல்லா விதமான பாடல்களையும் பாடி தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

9. ரேவதி

இவர் முன்னாள் நடிகை. தனது அற்புத நடிப்பால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்.

10. வசந்த குமாரி

இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். ( பெயர் சரியா.. ). இவர் தான் தமிழ்நாட்டு முதல் பெண் பேரூந்து ஓட்டுனர். எல்லோரும் கேலி செய்த நேரத்தில் தன் திறமையைக் கொண்டு முன்னேறிய‌வர்.


இந்த பெண்மணிகளை போன்று நம்நாட்டில் பலதுறைகளில் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்த தொடரை தொடர இவர்களை அன்போடு அழைக்கிறேன்.

1. கோவி.கண்ணன்
2. ஜெகநாதன்
3. ஷங்கி


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Thursday, March 11, 2010

உன்னை தினம் தேடும் தலைவன் ...

அன்பே என் அன்பே

ஒவ்வொரு நாளும்

வித்யாசமாய் உணர்கிறேன்.

உந்தன் மொழியிலே..

இரவெல்லாம் இனிதே

உன் நினைவுகளோடு

அசைபோடும் மாடாய்!!

அருமை கனவுகள்

வந்துவந்து போகும்

உன்வரவை உறுதி செய்கிறதே!!

பூபூவாய் உன் வாசம்

என்னை தினமும்

இம்சிக்கிறதே !!

தேடுகிறேன் எங்கும்

காணாது வெறுமையாய்

பூக்களும் கவிபாடுதே

உன் அருகாமையை

எண்ணி எண்ணி..

புதுமலர் வீசும்

நாளும் என்னாளோ...

அது நான் வரும்

பொன் நாளோ ?..

ராஜகுமாரி வருவாள்

ராஜயோகம் தருவாள்

குறி சொன்னதும்

தப்பாமல் வந்தாய் நீயே!!

இல்லறம் இனிதே

தொடங்கும் முன்னே

மனையில் நீயும்

போர்க்களத்தில் நானும்

ஒவ்வொரு நாளும்

உப்பரிகையில் உன்

விழிகள் தேடுதே

என் வரவை...

மனதை தொலைத்துவிட்டு

நீயும் நானும்

ஆளுக்கொரு மூலையில்...

பிரிவின் வலியில்

துவளும் எங்களை

மீட்க மாட்டாயா

எங்கள் இறைவா..

ஆறும் மனமும்

தேடாத விழியும் எங்கேனும்

உண்டா?.. சொல்வீர்

நல்வாக்கு சொல்வீர்...

உங்கள் ஸ்டார்ஜன்.


,



Post Comment

Wednesday, March 10, 2010

கேள்விக்கு என் பதில் 2

அன்புமிக்க நண்பர்களே !

நேற்றைய பதிவான கேள்விக்கு உங்கள் பதில் 2 உங்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவாங்க. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


கேள்வி 2 :


போலிச்சாமியார், போலி விளம்பரங்கள் இப்படி போலியான விஷயங்களை மக்கள் அதிகமாக விரும்புவதேன்? குறிப்பாக பெண்கள் விரைவில் ஏமாறுவதேன்?...


இந்த கேள்விக்கு பதில் சொல்வது என்பது ஒரு சிக்கலான காரியம் . இது போன்ற போலியான விஷயங்களை மக்கள் நாடுவதுக்கு முழுக்க முழுக்க காரணம் மக்களோட அறியாமைதான். மக்கள் ஒவ்வொருத்தருக்கும் பலவிதமான சூழ்நிலைகள், கஷ்டங்கள் இப்படி ஒவ்வொருத்தருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

மக்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி தான் ஒவ்வொரு சாமியாரும் ஆசிரமம் என்ற பெயரில் ஆரம்பித்து மக்களிடம் பணம் பறிக்கிறார்கள். இதுமாதிரிதான் போலி டாக்டர்களும் பணம் பறிக்கின்றனர். இவர்களை நாடி செல்லும் மக்கள் , தங்கள் பிரச்சனைகள், நோய்களை தீர்த்து வைப்பார்கள் என்ற நப்பாசையில் செல்கிறார்கள். ஆனால் நடப்பதோ வேறுமாதிரி. சாமியார் விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் ஏமாறுகிறார்கள்.

ஆண்களை பொறுத்தவரை பணம்சம்பந்தமான விஷயங்களில் அதிகம் ஏமாறுகிறார்கள். உதாரணத்துக்கு போலி சிட்பண்ட், மற்றும் மோசடிக் கும்பல்களிடம் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். போலி நிறுவனங்களை நடத்துவருபவர் மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து மக்களை தங்கள் வலைகளில் விழவைக்கின்றனர்.

எனக்கு தெரிந்த எத்தனையோபேர் இப்படித்தான் ஏமாந்து போயுள்ளனர்.

பெண்களும் இந்தமாதிரி அதிகமாக ஏமாறுகின்றனர். நாம் அடுத்தவன் என்ன செய்கிறான் என்றுபார்த்து அதுபோல நாமும் செய்யும் போது விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. பொறாமை, பொருளாசை, அவசரபுத்தி, பேராசை இது ஆண்/பெண் இருவருக்குமே பொருந்தும்.

இதெல்லாம் மக்களின் மனநிலையை பொறுத்து மாறுபடும். எனவே இந்த விஷயம் ஒரு முடிவு பெறாமல் நீண்டு கொண்டே போகுமே தவிர அவ்வளவு ஈசியா முடியாது.

இந்த விஷயங்களில் நாம் விழிப்புணர்ச்சியுடன் நடந்து நம்மை நாமே பாதுகாக்க வேண்டும். இதற்கு அரசாங்கமும் மக்களுக்கு உதவி செய்யவேண்டும். தமிழக அரசு இப்போது கண்காணிப்பு குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.


போலியான விளம்பரங்கள், போலி நிறுவனங்களை மக்கள் சரியாக அடையாளம் கண்டுகொள்ள விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.


உங்கள் மேலான கருத்துகளை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Monday, March 8, 2010

கேள்விக்கு உங்கள் பதில் 2 , மகளிர் தினம்

அன்புமிக்க நண்பர்களே எல்லோரும் நலமா...

சென்ற வாரம் நீங்கள் ஆவலுடன் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கேள்விக்கு உங்கள் பதில் பதிவுஇடுகை உங்களின் அமோக ஆதரவினால் இந்த வாரமும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகையில் கேள்வியை வெளியிடுகிறேன்.


கேள்வி 2 :


போலிச்சாமியார், போலி விளம்பரங்கள் இப்படி போலியான விஷயங்களை மக்கள் அதிகமாக விரும்புவதேன்? குறிப்பாக பெண்கள் விரைவில் ஏமாறுவதேன்?...


சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


இன்று மகளிர் தினம்.

பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

,

Post Comment

Sunday, March 7, 2010

அன்புள்ள காதலியே ...

நேற்று நான் அவளைப் பார்த்திருக்ககூடாதோ ! சே என்ன ஒரு வாழ்க்கை.., இந்த பெண்களே இப்படித்தானோ.., அதுவும் பார்த்தால் மட்டும்போதாதென்று நல்லாருக்கியா என்று கேட்டும்விட்டாளே., கூட வந்திருந்த மனைவி பார்வையாலே என்னை மேய்ந்து விட்டாள்.

முதல் நாள் கல்லூரியில் நுழைந்தவுடனே என் மனம் அலையடிக்க தொடங்கி விட்டது. கல்லூரி வராந்தாவில் எதிர்ப்பட்ட அவள் என்மீது மோதப்போனாள். முதல் பார்வையே மனதில் அவளாகிவிட்டாள். பின்னர் எனக்கு ஏற்பட்ட சந்தோசம் அளவே இல்லாமல் போய்விட, அவள் என் வகுப்பில் நுழைந்ததுதான் காரணமாயிருக்கும்.

அப்புறம் ஒவ்வொருநாளும் என்பார்வை எப்போதும் அவள் வருகையைத்தான் நோக்கியது. அவள் இருக்கும் இடத்தைத்தான் கண்கள் தேடியது. அவள் அணிந்துவந்ததால் சுடிதாரையும் என் மனம் விரும்பியது. அவள் காதில் உள்ள வளையமும் கவிபாடியது. டேய் அவளா !! இஞ்சி தின்ன குரங்குமாதிரி இருக்கா அவளையா காதலிக்கிறாய் என்று நண்பர்கள் கேலி செயதபோதும் அவர்களிடம் 2 நாட்கள் என்னை பேசாமல் இருக்கவைத்தது. நான் காதல்வலையில் விழுந்ததை அறிந்து நண்பர்கள் எச்சரித்த போதும் அவளைத்தான் என் மனம் விரும்பியது. இரவெல்லாம் உறக்கமில்லாமலும் ஏதோஒரு சிந்தனையில் இருப்பதைக்கண்ட பெற்றோருக்கு எங்கே என்காதல் அறிய வாய்ப்பிருக்கிறது.

திடிரென அப்பாவுக்கு வேலையில்லாமல் போனதுவேற என்மனதை வேதனையாக்கியது. ஏதோ ஸ்காலர்ஷிப்பில் வரும் பணத்தைக் கொண்டும் பஸ்பாஸ் பயணத்தாலும் என்னால் படிக்கமுடிந்தது. ஆனால் அவள்மீதான காதல் நாளுக்குநாள் அதிகரிக்க அதிகரிக்க அது ஒரு சுகம்தான்.


காதலிக்காக என் படிப்பை மறந்தேன். டேய் +2வில் ஸ்கூல்பர்ஸ்ட் வந்தவனா நீ? என்று அப்பா திட்டியதும் வேதனையாகவில்லை. என்காதலை சொல்ல நல்லதருணமும் எதிர்பார்த்தேன். பின்னர் தைரியத்துடன் காதலை சொல்ல செல்கையில் அதோ அவள் !.

யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அருகே சென்று பார்த்தால் என் நண்பன் !!! கையில் ரோஜாவுடன். என் கையில் வைத்திருந்த ரோஜா காணாமல் போயிருந்தது. மனதில் என்காதல் சுக்குநூறானது அவளுக்கு தெரியவாய்ப்பில்லை. அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லத்தான் வார்த்தைகள் வாயிலிருந்து வந்ததேதவிர ஐ லவ் யூ என்றல்ல....



இந்த நினைவுகளை இப்போதும் நினைக்க நினைக்க வேதனைத்தான். காதல் வாழ்வில் வரும் ஒரு வசந்தம். எனக்கோ அது ஒரு கனாக்காலம். என்றைக்கு அவள் என் நண்பனுக்கு சொந்தமானளோ ! இன்றுவரை அவளை நினைப்பதற்கு என்மனதில் இடமில்லாமல் நீயே ஆட்சி செய்கிறாய் என்னவளே!!

இப்படி மனைவியிடம் நினைவுகளை பகிர்ந்துகொண்டதுகூட மனதுக்கு இதமாக இருந்தது.

காலையில் நேரத்தோடு வேலைக்கு செல்லவேண்டி இருந்ததால் நான் ஆயத்தமானேன். நேற்று அவளை பார்த்ததில் இருந்து வேலையில் மனம் ஒட்டவில்லை. எங்கே என்மனம் சஞ்சலப்படுமோ என் மனைவி விட்டு மீண்டும் அவளை நாடுமோ?.. என்மனம் ஒரு நிலையில் இல்லை. இதே நினைப்பால் இருந்ததால் தலைவலியும் அதிகமானது. மேனேஜரிடம் சொல்லிட்டு வீட்டை நோக்கி என்கால்கள் வீறுநடை போட்டன.

வீட்டில் என்மனைவி இல்லாததுகண்டு கோபமாய் வந்தது. எங்கே போயிருப்பாள்?!! எங்காவது கடைவீதிக்கு சென்றிருப்பாள் !!!. சிறிதுநேரத்தில் அவள் வரவும் உறுதி செய்தது காய்கறி பையுடன் என் மனைவி.

என் மனைவி அன்றுமுழுவதும் என்னருகே இருந்து அக்கறையுடன் கவனித்து கொண்டாள். ஆனால் இரவில்மட்டும் காதலியின் நினைப்பு வரத் தவறுவதில்லை. என்ன செய்ய! மறக்க நினைக்கிறேன்; முடியவில்லை. இப்படி எத்தனை இரவுகள் நான் இருந்திருப்பேன் எனக்கே தெரியாது.....


வழக்கம்போல் அலுவலகத்தில் அவள் நினைப்பு வாட்ட, கால்கள் வீட்டை நோக்கி முன்னேறியது. இன்றும் வீடு பூட்டி இருந்தது. இன்று என் மனைவியின் நடவடிக்கையில் வித்யாசத்தை உணர்ந்தேன். என் மனைவி முன்புமாதிரி இல்லை. ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்; காலையில் காலையில் எங்கோ செல்கிறாள். மாற்றங்கள் நிறைய இருக்கின்றன. நான் என்காதலியை பார்த்ததிலிருந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டதிலிருந்து என் மனைவியிடம் மாற்றங்களை காண்கின்றேன்.

என்ன சோதனை இது !! மனைவியின் நடவடிக்கையை உற்றுநோக்குவது பெரிய கொடுமையல்லவா.. இருந்தாலும் என்மனம் கேட்கவில்லை. என் மனைவியை எவ்வளவு நேசிக்கிறேன்; ஏன் இப்படி நடக்கிறாள்...


மறுநாள் வேலை அதிகமாக இருந்ததால் அலுவலகத்துக்கு சீக்கிரமே கிளம்பினேன். வேலை விஷயமாக வெளியே செல்லவேண்டி இருந்ததால் கிளம்பினேன். ரோட்டில் ஏதேச்சையாக பார்த்தேன் என் மனைவியை. ஆனால் அவள் என்னை கவனிக்கவில்லை. என்கால்கள் மனைவி செல்லும் திசையை நோக்கி விரைந்தன.

ஆ !! அவள் செல்வது எனக்கு பரிச்சையமான இடம் போலல்லவா இருக்கிறது. ஆம் இதற்குமுன் இங்கே வந்திருக்கிறேனே... எங்கே ?.. ஆங்! இது என் மனைவியின் தோழி வீடல்லவா... சென்றதும் வீட்டின் கதவை சாத்திக்கொண்டாள். அவர்கள் என்னவோ பேசுகிறார்களே !!. ஒட்டு கேட்பது குற்றம்தான்... இந்த சூழ்நிலைக்கு ஒட்டு கேட்டே ஆகவேண்டும்.


என்னடி உன் கணவர் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா.. இல்லையா..

ஆமாண்டி ரொம்ப மாற்றம்தான். உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... முதலில் பழைய காதலியை அவர் பார்த்ததிலிருந்து அவருக்குள் மனப்போராட்டம். அந்த காதலை மறைக்காமல் என்னிடம் எல்லாத்தையும் சொன்னதும் எவ்வளவு காதல் வலி இருந்திருக்கும் என்று அவர் சொல்லும்போதே தெரிந்தது, எந்த அளவுக்கு காதலித்திருப்பார் என்று. தினமும் அவர்படும் வேதனை தாளாமல் தான் உன்னிடம் ஐடியா கேட்டேன். ஒருவர் ஒன்றை மறக்க வேண்டுமெனில் அவரது கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் பழைய நினைப்புகள் அடியோடு காணாமல் போகும் என்று நீ சொன்ன இந்த‌ ஐடியா ரொம்ப நல்லா ஒர்கவுட் ஆனது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது .

நீ சொன்ன ஐடியாமூலம் என் நடவடிக்கையில் மாற்றம் கொண்டு வந்தேன். இப்போது என்கணவர் அவள் நினைப்பை சுத்தமாக மறந்து விட்டார். இப்போது என் நினைப்பாவே இருக்கிறார். இப்போதும்கூட அவர் என்னை பாலோபண்ணி வந்திருக்கிறார். என் கணவர் ரொம்ப நல்லவர். என்னை ரொம்ப நேசிக்கிறார். உன்னால்தான் அவரை திருத்த முடிந்தது. உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்.

இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்; நீ சந்தோசமா இருந்தால் அதுவே எனக்கு போதும்.

சரிடி நான் போயிட்டு வருகிறேன் என்று என்மனைவி கதவை திறந்து வெளியே வந்ததும் கண்களில் கண்ணீருடன் அவளை கட்டி அணைத்தேன்.

ரோடு என்றுகூட பார்க்காமல் அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தேன்.


,

Post Comment

Friday, March 5, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா...


அன்புமிக்க நண்பர்களே !

தமிழக மக்கள் , கடந்த 4 நாட்களாக தமிழகத்தையே உலுக்கிய நித்யானந்தா - ரஞ்சிதா விவகாரத்தை மறந்து இப்போதுதான் இயல்புநிலைக்கு வந்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

நான் நேற்று விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தென்றலாய் வரும் காதலால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை, படத்தில் அழகாக‌ சொல்லிருக்காங்க.

கார்த்திக் ஒரு இஞ்சினியரிங் படித்து சினிமாவில் வாய்ப்புத் தேடும் ஒரு இளைஞன். அவன் ஒருநாள், மாடியில் குடியிருக்கும் ஜெஸ்ஸியைப் பார்க்கிறான். அவள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். கார்த்திக் அவளை பார்த்தவுடன் காதலிக்கிறான். அவளோ, தான் கிரிஸ்டியன் என்றும் ஒரு இந்து பையனை தன்குடும்பமும் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது அதனால் மறுக்கிறாள். கார்த்திக்கோ அவனுடைய காதலை அவளுக்குப் புரியவைத்து காதலிக்க வைக்கிறான். இதற்கிடையில் ஜெஸ்ஸிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்தின்போது, ஜெஸ்ஸி மனக்குழப்பத்தில் இருப்பதால் கல்யாணத்தை மறுத்து விடுகிறாள். இதனால் கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் விவகாரம் எல்லோருக்கும் தெரிந்து பிரச்சனை பெரிதாகிறது.

ஜெஸ்ஸி காதலனின் அன்பை பெறமுடியாமலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பாலும் காதலை மறக்க நினைக்கிறாள். ஆனால், கார்த்திக் விடாமல் ஜெஸ்ஸியிடம் தன் காதலை அழுத்தமாக வெளிப்படுத்துகிறான். கடைசியில் கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் வெற்றி பெற்றதா.. ஜெஸ்ஸி காதலை ஏற்றுக்கொண்டாளா.. கார்த்திக் சினிமாவில் சாதித்தானா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



சிம்பு, திரிஷா நடிப்பில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.

கையை கொடுங்க கவுதம் சார்... வாழ்த்துகள் வாழ்த்துகள்.

ஒரு யதார்த்தமான காதல் கதையை இருவருக்கும் இடையேயான மெல்லிய உணர்வுகளுடன் கதை சொல்லியிருக்கீங்க. கதை ஒருவரிதான் என்றாலும் அதை படமாக்கியிருக்கும் விதம் மிக அருமை. படத்தில் ஒவ்வொரு கணமும் கதை மாறாமல் எங்களையும் படத்தோடு பயணிக்க செய்திருக்கிறீர்கள். சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான ஒரு காதலை அனுபவிக்க செய்திருக்கிறீர்கள். இந்த படத்துக்கு சிம்புவையும் திரிஷாவையும் பொருத்தமான ஜோடியாக தேர்வு செய்திருப்பது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

சார், இதுபோன்று மேலும்மேலும் காதல் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தை தன்நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பவர்கள் சிம்புவும் திரிஷாவும். சிம்பு ரொம்ப நாளைக்கு அப்புறம் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோன்று அவர் நடித்ததில்லை, இது அவருக்கு முதல்படம் என்றும்கூட சொல்லலாம். முதன்முதலாய் திரிஷாவை பார்க்கும்போதும் அவரோடு காதலை வெளிப்படுத்தும் இடங்களாக‌ட்டும் ஆலப்புழைக்கு சென்று காதலை சொல்லும்போதும் நடிப்பில் பின்னியிருக்கிறார்.

இந்த படத்தில் சிம்பு சிம்புவாக இல்லை; ஒவ்வொரு காட்சியிலும் எங்களுக்கு கார்த்திக்காகத்தான் தெரிகிறார். இயல்பான ஒரு இளைஞன் தன் காதலை காதலியிடம் சொல்வானோ அதுமாதிரியே இருந்தது. ஜெஸ்ஸியை நான் ஏன் காத்லிக்கிறேன்?. என்ற வசனம் ஒவ்வொரு காதலர்களின் மொழியாய் தெரிகிறது. சிம்பு காதல், கோபம், வேதனைகளை தன் முகத்தின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.



திரிஷா பக்கத்துவீட்டு பெண்ணைபோல வருகிறார். காதலை வெளிப்படுத்தும் இடங்களும் கோபம், காதல் மொழிகள் மிக ரசிக்கும்படியாக இருக்கிறது. ஒரு இயல்பான குடும்பத்துப் பெண் எப்படி இருப்பாளோ அப்படியே திரிஷாவும் நடித்திருக்கிறார். தன் குடும்பத்தையும் காதலனையும் மறக்க முடியாமல் தவிக்கும் இடங்கள் மிக அருமை.

ஆண்கள் எப்போதுமே தன் மனதில் உள்ளவற்றை உடனே வெளிப்படுத்திவிடுவார்கள்; ஆனால் பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை வெளிப்படுத்த தயங்குவார்கள்.

சிம்புவின் நண்பராகவரும் கேமராமேன் கணேஷ்ம் டைரக்டராக வரும் கே எஸ் ரவிக்குமாரும் பொருத்தமான தேர்வு. சிம்புவின் பெற்றோரும் திரிஷாவின் பெற்றோரும் அளவாய் நடிப்பு.

இசை ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் தன்னுடைய இசையால் நம்மை படத்தோடு ஒன்றவைத்துவிடுகிறார். இசை சகாப்தம்
பாடல்கள் . மிக அருமையான இசை.

படத்தின் காட்சிகளும் ஒளிப்பதிவும் மிக அருமை.

மொத்தத்தில் இந்தபடம் ஒரு காதலர்களின் மொழியை உணரவைத்திருக்கிறது.

இந்த படம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.


விண்ணைத்தாண்டி வருவாயா - என் மனதில் நீயே...


,

Post Comment

Wednesday, March 3, 2010

நித்யா என் நித்யா ...


பாவி நீ பாவியடா
எத்தனை தடவை
ஆசிகள் வழங்கினாய்
ஒரு தடவையாவது
சொன்னாயா
கேமரா வைத்திருக்கிறேனென்று

கேமராவுக்கு ஏத்த முகமென்று
அன்று சொன்னார் ஒருவர்
கேமராவில் முகம் சரியாத்
தெரியவில்லை என்று
எல்லோரையும் சொல்ல
வைத்தாயடா.. ஏன் ஏன்?


கதவைத் திற காற்று
வரட்டும் என்று சொன்னாய்
நான் ஒரு ஏமாளி
இந்த சமாச்சாரத்துக்கு
எதுக்கு திறக்கணும்
என்ற நினைப்பிலே
திறந்தேன் வந்ததே
போலீஸ்


எத்தனை பேர்
எத்தனை தடவை
வந்திருப்பார்கள்
அத்தனை பேருக்கும்
ஆசிகள் வழங்கினாயே
ஆசிகள் மட்டுமா
இல்லை என்னை மாதிரி
வேறெதுவுமா..


ஒரேயொரு சந்தோசம்
உன்னால் நானும்
ஆனேன் பிரபலமாய்...

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்