Pages

Friday, July 31, 2009

சிந்து சமவெளி






சிந்து சமவெளி நாகரீகத்தைப் பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...




(மொகஞ்சதாராவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைய கால கட்டடப்பகுதி)





மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.





இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள்.




(கராச்சி , தேசிய தொல்பொருட்காட்சி நிலையத்தில் கி.மு.2500 ஆண்டு பழமையான சிலை)


மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதிஇது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.



இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.


வரலாறு


மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.


ஹரப்பா


அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன.


கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.


மெஹெர்கர்


மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன.


இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.


பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.


மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.


லோத்தல்

(இந்திய தொல்லியல் ஆய்வத்தின் கருத்துப்படி லோத்தலின் பண்டைய காலத்தின் தோற்றம்)


லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 2400 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் நாள் தொடக்கம் 1960 ஆம் ஆண்டு மே 19 வரை அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.

Post Comment

Thursday, July 30, 2009

சிநேகிதனே சிநேகிதனே ....


எனக்கு நண்பர் சந்ரு நல்ல நண்பர் விருது கொடுத்துள்ளார் .

அது போல நம்ம டி வி ராதா கிருஷ்ணனும் நல்ல நண்பர் விருது கொடுத்துள்ளார் .

இவர்கள் கொடுத்த இந்த விருது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

நான் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனை நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது .

நானும் இந்த விருதை நண்பர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .


1. கோவி . கண்ணன்

2. சுரேஷ் ( பழனி வள்ளல் )

3. அக்பர்

4. முரளி கண்ணன்

5. சப்ராஸ் அபுபக்கர்

6. ஜெகநாதன்

7. வசந்த் குமார் ( ப்ரியமுடன் வசந்த் )

8. எம் எம் அப்துல்லா

9. அபு அப்ஃஸர்

10. சங்கா

வாங்க எல்லோரும் ...

சந்தோசமா ஆனந்தமா கொண்டாடுவோம் ...

உங்கள் ஸ்டார்ஜன்னுடன் ...

Post Comment

Tuesday, July 28, 2009

பற பற பட்டாம்பூச்சி ....

நண்பர் வசந்த் குமார் ( பிரியமுடன் வசந்த் ) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளார் .

நான் இப்போ பறக்கலாமே ... எப்படி ?...

எங்கிட்டதான் பட்டாம்பூச்சி இருக்கே ...

என்னை மாதிரி இவங்களும் பறக்கிறாங்க‌ ....

எந்த கவலையும் இல்லாம ...







நீங்களும் பறங்க சந்தோசமா......





Post Comment

Wednesday, July 22, 2009

நானும் சுவையார்வ வலைப்பதிவு விருதும் ...


வ்லைப்பதிவு நண்பர்களே , ஒரு நிமிசம் என்னன்னு கேட்டுட்டு போங்க .

நேற்று என்னடான்னா அக்பர் எனக்கு சுவையார்வ பதிவர் விருது கொடுத்திருக்கிறார் .

இன்று அய்யா ஜெகநாதன் அவர்கள் எனக்கு The Intersting Blog அவார்ட் கொடுத்து உள்ளார் .

இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது .

இந்த விருது என் வலைப்பதிவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .

இதற்கு முக்கிய காரணம் உங்களுடைய ஆதரவு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன் . என்னுடைய எழுத்துக்கு கிடைத்த பரிசு .


இதன் மூலம் நானும் எனக்கு பிடித்த வலைப்பதிவுக்கும் வலைப்பதிவர்களுக்கும் விருது கொடுக்க ஆசைப்படுகிறேன் . அந்த வகையில் பார்த்தால் எனக்கு எல்லோருடைய வலைப்பதிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .

அவங்க யார் யாருன்னா ....

முரளிகண்ணன் சினிமா பத்தி பதிவுகள் ரொம்ப நல்லா எழுதுவார் . நான் முதன்முதலாக வலைப்பக்கம் படித்தது இவருடைய பக்கத்தை தான் .

வ‌ச‌ந்த் குமார் (பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்) வலைப்பதிவு எனக்கு ரொம்பப் பிடிக்கும் .

சுரேஷ் (க‌ன‌வுக‌ளே) வலைப்பக்கம் வெரைட்டியா இருக்கும் .

கோவிக் க‌ண்ணனின் காலம் உங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி . ந‌டுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் க‌ருத்துக்கள் இவருடைய எழுத்தின் ஒரு பரிமாணம் . எனக்கு பிடித்த வலைப்பதிவரும் கூட .

அக்பர் இவர் எனக்கு பிடித்த பதிவர் .இவ‌ருடைய‌ எழுத்து எல்லோரையும் க‌வ‌ர‌க்கூடிய‌து . என‌க்கு பிடித்த‌ பக்க‌ங்க‌ளில் ஒன்று . என‌க்கு இந்த‌ விருதை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் .

நாம‌க்க‌ல் சிபி ரொம்ப நல்ல பதிவர் . எனக்கு பிடிக்கும் .

நையாண்டி நைனா இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு பிடிக்கும் .

ல‌க்கிலுக் யுவ‌கிருஷ்ணாவின் க‌தைக‌ள் என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் . என‌க்கு பிடித்த‌ வலைப்ப‌திவ‌ர் .

டி வி ராதாகிருஷ்ண‌ன் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வலைப்ப‌திவ‌ர் .

ஜாக்கிசேக‌ர் என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இவ‌ருடைய‌ ப‌க்க‌மும் ஒன்று .

கேபிள்ச‌ங்க‌ரின் விம‌ர்ச‌ன‌ம் பாக்காம‌ல் நான் சினிமா பார்ப்ப‌தில்லை .

உண்மைத் த‌மிழ‌ன் இவ‌ருடைய‌ ப‌க்க‌த்தை சீக்கிர‌ம் ப‌டித்து முடித்திட‌லாம் . அவ்வ‌ளோ சின்ன‌தா எழுதுவார் . ஆனாலும் எழுத்து ந‌டை ரொம்ப‌ சூப்ப‌ர் .

ஆசிப் மீரான் என‌க்கு பிடித்த‌ ப‌திவ‌ர் .

குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் இவ‌ருடைய‌ ப‌க்க‌ம் ரொம்ப‌ வெரைட்டியா இருக்கும் .

மாத‌வ‌ராஜ் சிறுக‌தை ம‌ன்ன‌ர் .

சென்ஷி இவ‌ர் ரொம்ப‌ வித்தியாச‌மா எழுதுவார் .

செந்த‌ழ‌ல் ர‌வி மாதிரி தொழில் நுட்ப‌ ப‌திவு போட‌வே முடியாது . த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் . ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள் இவ‌ர் ப‌திவில் பொதிந்திருக்கும் .

எம் எம் அப்துல்லா ரொம்ப எனக்கு பிடித்தவர் . ந‌ல்ல‌ ப‌திவ‌ர் .

ஜெக‌நாத‌ன் வித்தியாச‌மா போட்டுத் தாக்குவார் இவ‌ர் ப‌க்க‌ங்க‌ளில் . என‌க்கு இந்த‌ விருதை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் . வெரைட்டி ம‌ன்ன‌ர் .

சங்கா இவ‌ரும் வித்தியாச‌மான‌ ப‌க்க‌ங்க‌ளை கொண்ட‌வ‌ர் .

ச‌ந்ரு என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌திவ‌ர் . இவ‌ர் எழுத்து என‌க்கு பிடித்த‌து .


இன்னும் நிறைய‌ என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் ப‌திவுல‌கில் உலா வ‌ருகின்ற‌ன‌ர் .

இவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் விருது கொடுக்க‌ என‌க்கு ரொம்ப‌ ஆசை . ஆனா பாருங்க‌ எல்லோரும் கொடுக்கிற‌ மாதிரி ஆறு பேருக்கு கொடுக்க‌ என் ம‌ன‌ம் விரும்ப‌வில்லை .

என் வ‌லைப்ப‌திவில் என்னை ஊக்க‌ப்ப‌டுத்திய‌து நீங்க‌ள் அனைவ‌ரும் தான் . என்னை ஊக்க‌ப்ப‌டுத்தும் நீங்க‌ளே இந்த‌ விருதுக்கு உரிய‌வ‌ர்க‌ள் .


ஆக‌வே நான் கொடுக்க‌வேண்டிய‌ இந்த‌ விருதை உங்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ழங்குறேன் .

உங்க‌ள் மேலான க‌ருத்துக்க‌ளை எதிர்பார்த்த‌வ‌னாக‌ .....

உங்க‌ள் ஸ்டார்ஜ‌ன்

Post Comment

Monday, July 20, 2009

வலைப் பதிவு எப்படி எழுதலாம் ??....


வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே ,

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் எனக்காக ஒரு 5 நிமிடம் ஒதுக்க முடியுமா ?.. சகோதரர்களே !!!!.

எல்லோரும் நல்ல நல்ல பதிவுகளை போட்டுத் தாக்குறாங்க . ஹிட்ஸ்களையும் ஏத்துறாங்க . நானும் அப்படி எழுதலாம் என்று நினைக்கிறேன் . என்ன எழுதலாம் என்று நினைச்சி நினைச்சி மண்டை காஞ்சிப் போச்சு . ஒண்ணுமே தோணமாட்டேங்குது . இந்த மரமண்டைக்கு ஏறல .

எப்ப‌டி எழுத‌லாம் ..... எப்ப‌டி எழுத‌லாம் !!!....

முர‌ளிக‌ண்ண‌ன் மாதிரி சினிமா ப‌ற்றி ப‌திவு எழுத‌லாமா ...

வ‌ச‌ந்த் குமார் (பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்) மாதிரி ப‌ட‌ம் போட்டு க‌லாய்க்க‌லாமா...

சுரேஷ் (க‌ன‌வுக‌ளே) மாதிரி வெரைட்டியா போட்டுத் தாக்க‌லாமா ...

கோவிக் க‌ண்ண‌ன் மாதிரி ந‌டுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் க‌ருத்துக்க‌ளை ப‌ற்றி எழுத‌லாமா ...

நாம‌க்க‌ல் சிபி மாதிரி ந‌ய‌ன்தாராவின் பயோடேட்டா மாதிரி நடிகைகளின் பயோடேட்டா ப‌த்தி எழுத‌லாமா ....

நையாண்டி நைனா மாதிரி ந‌க்க‌ல் ப‌ண்ண‌லாமா ...

அக்ப‌ர் மாதிரி த‌மிழ்ம‌ண‌த்துல‌ ஹிட்ஸ் வாங்குவ‌து பத்தி எழுத‌லாமா ...

ச‌க்திவேல் மாதிரி த‌மிழ்ம‌ண‌த்துல உள்ள ஓட்டையை ப‌த்தியும் அன்னிய‌ன் அம்பி ஸ்டைலில் அநியாய‌த்தை த‌ட்டிக் கேட்கும் முறைக‌ளை ப‌ற்றி எழுத‌லாமா ....

ல‌க்கிலுக் மாதிரி சிறுகதைகளா எழுத‌லாமா ...

உண்மைத் த‌மிழ‌ன் மாதிரி 10 பக்கம் எழுதலாமா ...

ஆசிப் மீரான் மாதிரி ஒன்னும் புரியாத‌தை ப‌த்தி எழுத‌லாமா ...

குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் மாதிரி பதிவுலகத்தை வெறுத்து அறிக்கை விட‌லாமா...

மாத‌வ‌ராஜ் மாதிரி சிறுக‌தைகளா எழுத‌லாமா ...

சென்ஷி மாதிரி வித்தியாச‌மா எழுத‌லாமா ...

செந்த‌ழ‌ல் ர‌வி மாதிரி தொழில் நுட்ப‌ ப‌திவு போட்டுத் தாக்கலாமா ...

சுமஜ்லா மாதிரி டிசைன் டிசைன் டெம்ப்ளேட்டை ப‌த்தி க‌ல‌ர் க‌ல‌ரா எழுத‌லாமா...

க‌விதைக‌ளா போட்டுத் தாக்க‌லாமா ....

இல்லை என் ஸ்டைலில் நான் எழுத‌லாமா ...

உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா

எனக்கு சொல்லிட்டுப் போங்க ....

Post Comment

Tuesday, July 14, 2009

நீ வருவாய் என‌

நீ வருவாய் என‌
** நீ வருவாய் என காத்திருந்தேன்

வந்தாய் என் வாழ்வில் வசந்தமாய்

உன் வருகையினால் நான்

என்னை மறந்தேன் .


** நிலாவாக நீ வந்தால்

நான் இருப்பேன் வெளிச்சமாய் !!

மழையாக நீ வந்தால்

நான் இருப்பேன் மேகமாய் !!!


வண்டாக நீ வந்தால்

நான் இருப்பேன் நீ தேடும் மலராய் !!!


** காத்திருந்தேன் இங்கே

பீர் பாட்டிலுக்காக‌தாடியுட‌ன் !


நீயோ இருந்தாய் அங்கே

க‌ண‌வ‌னுக்காக‌தாலியுட‌ன் !



* * என் சிந்த‌னை எனும் துடுப்பினை கொண்டு

த‌மிழ்ம‌ண‌ம் எனும் தோணியிலேறி

ப‌திவ‌ர்க‌ளாகிய‌உங்க‌ளைத்

தேடி வ‌ரும் போது

பின்னூட்ட‌மெனும் நீரினிலே வெற்றி எனும்

அக்க‌ரையை அடைய

இறைவா நீயே அருள்புரிவாய் ....
என்றும் அன்புடன் ,
ஸ்டார்ஜன் .

Post Comment

Saturday, July 11, 2009

முத‌லும் ச‌த‌மும்

ஸ்டார்'ஸ் திரைப்பார்வை 1


உங்கள் ஸ்டார்ஜன் வழங்கும் ஸ்டார்'ஸ் திரைப்பார்வையில் இப்போது நீங்கள் காணப் போவது :


நம்ம தமிழ் சினிமாவின் நாயகர்களும் கனவு நாயகிகளும் நடித்த முதல் படமும் நூறாவது படமும்




நடிகர்கள்




  1. பரத் : பாய்ஸ்

  2. விஷால் : செல்லமே

  3. சிபிராஜ் : ஸ்டுடண்ட் நம்பர் 1

  4. ஸ்ரீகாந்த் : ரோஜாகூட்டம்

  5. எஸ்.ஜே.சூர்யா : நியூ

  6. ஜீவன் : யூனிவர்சிட்டி

  7. பிரித்விராஜ் : கனா கண்டேன்

  8. ஜெய் : பகவதி

  9. சசிகுமார் : சுப்ரமணியபுரம்

  10. பிரகாஷ் ராஜ் : டூயட்

  11. ராஜ்கிரண் : என் ராசாவின் மனசிலே

  12. கார்த்தி : பருத்திவீரன்

  13. அப்பாஸ் - காதல் தேசம்

  14. குணால் - காதலர் தினம்

  15. சூர்யா - நேருக்கு நேர்

  16. ஷாம் - 12பி

  17. மாதவன் - அலைபாயுதே

  18. ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம்

  19. தனுஷ் - துள்ளவதோ இளமை

  20. சிலம்பரசன் - காதல் அழிவதில்லை

  21. பாலா- அன்பு

  22. ரவி - ஜெயம்

  23. நரேஷ் - குறும்பு

  24. ஆரியன் ராஜேஸ் - ஆல்பம்

  25. எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி

  26. சிவாஜி - பராசக்தி

  27. ஜெமினிகணேசன் - ஒளவையார்

  28. எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி

  29. முத்துராமன் - அரசிளங்குமரி

  30. ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண்

  31. சிவகுமார் - காக்கும் கரங்கள்

  32. ஜெய்சங்கர் - இரவும் பகலும்

  33. ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை

  34. விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி

  35. ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்

  36. கமலஹாசன் - களத்து£ர் கண்ணம்மா

  37. விஜயகாந்த் - இனிக்கும் இளமை

  38. சத்யராஜ் - சட்டம் என் கையில்

  39. பாக்யராஜ் - 16 வயதினிலே

  40. கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை

  41. பிரபு - சங்கிலி

  42. முரளி - பூவிலங்கு ( தமிழில் )

  43. ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு

  44. பார்த்திபன் - தாவணிக்கனவுகள்

  45. அர்ஜூன் - நன்றி

  46. சரத்குமார் - கண் சிமிட்டும் நேரம்

  47. விக்ரம் - தந்துவிட்டேன் என்னை

  48. பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி

  49. அஜீத் - அமராவதி

  50. விஜய் - நாளைய தீர்ப்பு

  51. பிரபுதேவா - இதயம்

  52. அரவிந்தசாமி - தளபதி

  53. அருண்குமார் - பிரியம்

  54. வினித் - ஆவாரம்பூ

  55. விக்னேஷ் - சின்னத்தாயி

  56. வடிவேலு - என் ராசாவின் மனசிலே

  57. விவேக் : மனதில் உறுதி வேண்டும்

  58. தங்கவேலு - சதி லீலாவதி

  59. சுரேஷ் - பன்னீர் புஷ்பங்கள்

  60. மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே

  61. ராமராஜன் - நம்ம ஊரு நல்லஊரு

  62. ராதாரவி - தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

  63. காத்தாடி ராமுர்த்தி - பெண்ணே நீ வாழ்க

  64. கரண் - அண்ணாமலை

  65. வையாபுரி - மாணிக்கம்

  66. ஆனந்த பாபு - உயிருள்ளவரை உஷா

  67. ரஞ்சித் - சிந்துநதிப் பூ

  68. நெப்போலியன் - புது நெல்லு புது நாத்து



நடிகைகள்




  1. அசின் : உள்ளம் கேட்குமே

  2. நயன்தாரா : ஐயா

  3. சந்தியா : காதல்

  4. தமன்னா : கேடி

  5. ப்ரியாமணி : கண்களால் கைது செய்

  6. பூஜா : உள்ளம் கேட்குமே

  7. நமிதா : எங்கள் அண்ணா

  8. ஸ்ரேயா : எனக்கு 20 உனக்கு ௧௮

  9. சதா : ஜெயம்

  10. பாவனா : சித்திரம் பேசுதடி

  11. சிம்ரன் : விஐபி

  12. த்ரிஷா : ஜோடி

  13. பூமிகா : பத்ரி

  14. சங்கவி : அமராவதி

  15. விஜயலக்ஷ்மி : சென்னை-௨௮

  16. மீனா - நெஞ்சங்கள்

  17. குஷ்பு - தர்மத்தின் தலைவன்

  18. ரோஜா - செம்பருத்தி

  19. மதுபாலா - அழகன்

  20. ரேஷ்மா - மாங்கல்யம் தந்துனானே

  21. சங்கீதா - பவுர்னமி நிலவில்

  22. வினிதா - ஊழியன்

  23. ரம்பா - உழவன்

  24. நக்மா - காதலன்(தமிழ் )

  25. கனகா - கரகாட்டக்காரன்

  26. தேவயானி - தொட்டாச்சிணுங்கி

  27. சுவலட்சுமி - ஆசை

  28. மந்த்ரா - பிரியம்

  29. சுவாதி - தேவா

  30. மனோரமா - மாலையிட்ட மங்கை

    31 .கோவை சரளா - முந்தானை முடிச்சி
    32 . சாவித்ரி - பாதாள பைரவி
    33 . பத்மினி - கல்பனா
    34 . சரோஜாதேவி - தங்கமலை ரகசியம்
    35 . சௌகார் ஜானகி - வளையாபதி
    36 . கே,ஆர்விஜயா - தங்க ரத்தினம்
    37 . ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
    38 . வைஜெயந்தி மாலா - வாழ்க்கை
    39 . வாணிஸ்ரீ - காதல் படுத்தும் பாடு


    40 . ஜெயந்தி - அன்னை இல்லம்


    41 . நிர்மலா - வெண்ணிற ஆடை
    42 . லட்சுமி - ஜீவனாம்சம்
    43 . பி.பானுமதி - நல்லதம்பி(தமிழில்)
    44 . ஜெயசித்ரா - குறத்தி மகன்(தமிழில்)
    45 . சுஜாதா - அவள் ஒரு தொடர்கதை
    46 . ஸ்ரீப்ரியா - முருகன் காட்டிய வழி
    47 . ஜெயசுதா - பெத்த மனம் பித்து
    48 . ஸ்ரீதேவி - துணைவன்
    49 . மஞ்சுளா - சாந்தி நிலையம்
    50 . லதா - உலகம் சுற்றும் வாலிபன்
    51 . கவிதா - ஓ மஞ்சு
    52 . சரிதா - தப்பு தாளங்கள்
    53 . மாதவி - புதிய தோரணங்கள்
    54 . அம்பிகா - தரையில் வாழம் மீன்கள்
    55 . ரசிகா - பகவத்சிங்
    56 . ராதா - அலைகள் ஒய்வதில்லை
    57 . ராதிகா - கிழக்கே போகும் ரயில்
    58 . விஜயசாந்தி - கல்லுக்குள் ஈரம்
    59 . ரேவதி - மண்வாசனை
    60 . ஊர்வசி - முந்தானை முடிச்சி
    61 . ஷோபனா - எனக்குள் ஒருவன்
    62 . பானுப்பிரியா - மெல்லப்பேசுங்கள்
    63 . ப்ரீத்தா விஜயகுமார் - தர்மா
    64 . ஸ்ரீவித்யா - திருவருட்செல்வர்
    65 . கீதா - பைரவி
    66 . அமலா - மைதிலி என்னை காதலி
    67 . நளினி - ராணுவவீரன்
    68 . சீதா - ஆண்பாவம்
    69 . கவுதமி - குரு சிஷ்யன்
    70 . கஸ்தூரி - ஆத்தா உன் கோயிலிலே
    71 . சுகன்யா-புது நெல்லு புது நாத்து
    72 . ஹீரா - இதயம்
    73 . விந்தியா-சங்கமம்


    74 .ஜெயமாலினி - சக்களத்தி
    75 . அஞ்சலிதேவி - ரம்பா மேனகா
    76 .ரதி - புதிய வார்ப்புகள்
    77. ரஞ்சனி - முதல் மரியாதை
    78 . சிவரஞ்சனி - மனசார வாழ்த்துங்களேன்
    79 . சாந்திகிருஷ்ணா - பன்னீர் புஷ்பங்கள்
    80 . சுஹாசினி - நெஞ்சத்தை கிள்ளாதே


    81 . இந்து - இளவரசி
    82 . சோனியா - மை டியர் குட்டிச்சாத்தான்
    83 . ஜூஹிசாவ்லா - பருவராகம்
    84 . சுஷ்மிதா சென் - ரட்சகன்
    85 . ஐஸ்வர்யா ராய் - இருவர்
    86 . விஜி - கோழிகூவுது
    87 . பிந்துகோஷ் - கோழிகூவுது
    88 . சுபாஸ்ரீ - எங்க தம்பி
    89 . நீனா - நாயகன்
    90 . சௌந்தர்யா - பொன்னுமணி
    91 . ஜோதிகா - வாலி
    92 . மாளவிகா - உன்னைத்தேடி
    93 . கவுசல்யா - காலமெல்லாம் காதல் வாழ்க
    94 . இஷாகோபிகர் - காதல் கவிதை
    95 . மும்தாஜ் - மோனிஷா என் மோனாலிசா
    96 . ஸ்ருதி - கல்கி
    97 . ஸ்ருதிகா-ஆல்பம்


    98 .லைலா – கள்ளழகர்


    99 .சிலுக் ஸ்மிதா - வண்டிச்சக்கரம்
    100 . ரஞ்சிதா - நாடோடி தென்றல்
    101 . ஈஸ்வரி ராவ் - கவிதை பாடும் அலைகள்
    102 . சினேகா - விரும்புகிறேன்


    103 . மோகினி - ஈரமான ரோஜாவே



    பாத்தீங்களா ஆண்களை விட பெண்களே அதிகம்



    இனி நூறு படங்களில் நடித்தவர்களைப் பற்றி.....



    ர‌ஜினிகாந்த் : ஸ்ரீ ராகவேந்திரா


    எம் ஜி ஆர் : ஒளி விளக்கு
    சிவாஜி : நவராத்திரி
    க‌ம‌ல‌ஹாச‌ன் : ராஜப் பார்வை
    விஜ‌ய‌காந்த் : கேப்ட‌ன் பிரபாக‌ர‌ன்
    கே பால‌ச‌ந்த‌ர் : பார்த்தாலே ப‌ர‌வ‌ச‌ம்
    இளைய‌ராஜா : மூடுப‌னி
    சிவ‌க்குமார் : ரோசாப்பூ ர‌விக்கைக்காரி
    கே ஆர் விஜ‌யா : ந‌த்தையில் முத்து
    சாவித்திரி : கொஞ்சும் ச‌ல‌ங்கை
    ஜெய‌சித்ரா : நாய‌க‌ரின் ம‌க‌ள்
    ச‌த்ய‌ராஜ் : வாத்தியார் வீட்டுப் பிள்ளை
    பிர‌பு : ராஜ‌ குமார‌ன்
    ச‌ர‌த்குமார் : த‌லைம‌க‌ன்
    ராமநாராய‌ண‌ன் : திருப்ப‌தி ஏழும‌லை வெங்க‌டேசா
    ச‌ரோஜாதேவி : பெண் என்ற‌ பெண்
    ரோஜா : பொட்டு அம்ம‌ன்
    அர்ஜுன் : ம‌ன்ன‌வ‌ரு சின்ன‌வ‌ரு













Post Comment

Thursday, July 9, 2009

வெள்ளி விழா நாயகன்

வெள்ளி விழா நாயகர்கள்





1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மாது டப்படமகெ என்ற படம் 25 வது படமாக அமைந்தது . தமிழில் 25 வது படம் பிரியா .





இந்த படத்தில் உள்ளவர் யாரென்று தெரிகிறதா .. இவர் தான நம்ம செவாலியே சிவாஜி . சக்தி நாடக சபாவில் நடித்த போது எடுத்த படம் . இவரது 25 வது படம் உத்தமபுத்திரன் 1958.




இவர் நம்ம உலக நாயகன் கமல் . களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகிய கமலஹாசனுக்கு தேன் சிந்துதே வானம் 1975 படம் 25 வது படமாக அமைந்தது .




இனிக்கும் இளமையில் அறிமுகமாகினார் நம்ம புரட்சிக் கலைஞர் . ஏமாற்றாதே ஏமாறாதே 1985 25 வது படமாக அமைந்தது .





நாளையத் தீர்ப்பு என்ற படத்தின் மூலம் இளைய தளபதி அறிமுகமாகினார் . கண்ணுக்குள் நிலவு 2000 படம் 25 வது படமாக அமைந்த்து .





அமாராவதி படத்தின் மூலம் அறிமுகமாகிய அல்டிமேட் அஜித் நீ வருவாய் என 1999 25 வது படத்தில் நடித்தார் .






நம்ம இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். இப்போது இவர் தனது 875 வது படத்துக்கு இசையமைக்கிறார் .


இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ வரதராஜன் எழுதி இயக்கும் புதிய படம் “விளையாடு ராஜா விளையாடு’. இதில் “பிறப்பு’ படத்தில் நடித்த பிரபா கதாநாயகனாக நடிக்கிறார்.







நம்ம A .R . ரகுமான் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜீன்ஸ் 1998 ல் 25 வது படத்துக்கு இசையமைத்தார் .










இது நம்ம ஆச்சி மனோரமா . இவங்க 1000 ம் படத்துக்கு மேல நடிச்சிருக்காங்க .








பாரதிராஜா 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி கடலோரக் கவிதைகள் 1986 ல் 25 வது படத்தை இயக்கினார் .











இவர் மகேந்திரன் 1958 ம் ஆண்டு முதல் திரைத்துறையில் நுழைந்து பலப்படங்க‌ளுக்கு கதை எழுதியும் உதவி இயக்குனராக பணி புரிந்தார் .இவர் நம்ம எம் ஜி ஆர் ல் அறிமுகப்படுத்தப்பட்டார் . நல்ல படங்களை இயக்கி உள்ளார் .












இவர் பாலுமகேந்திரா . இவர் பல வெள்ளி விழா படங்களை இயக்கி உள்ளார் . இவர் கடைசியாக இயக்கிய படம் தனுஷ் நடித்த அது ஒரு கனாக்காலம் .










பரத்வாஜ் முதல் படம் அஜித் நடித்த காதல் மன்னன் . 25 வது படம் ஜே ஜே














ஹாரிஸ் ஜெயராஜ் முதல் படம் மின்னலே . 25 வது படம் விஷால் நடித்த சத்யம் .
















இவர் மோகன் . இவருக்கு இன்னொரு பெயருண்டு மைக் மோகன் . இவர் நடித்த எல்லாப் படங்களும் வெள்ளி விழா படங்கள் . இவர் மகேந்திரனால் நெஞசத்தைக் கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.














இவர் யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் மூலம் அறிமுகமாகி 25 வது படமான போஸ் படத்துக்கு இசையமைத்தார் .
















நம்ம கனவு நாயகி ஜோதிகா , அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா அறிமுகப்படுத்தினார் . ஜோதிகா தனது நடிப்பின் மூலம் உயர்ந்தார் . மாயாவி 2005 படம் அவருக்கு 25 வது படமாக அமைந்தது .


















சூர்யா , விஜய்யின் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமாகி பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார் . இவருக்கு இப்போது ஹரி இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கம் படம் மூலம் 25 வது படத்தை தொடுகிறார் . அனுஷ்கா ஹீரோயின் .





















இது நம்ம மேடி மாதவன் . இவர் அலைப்பாயுதே படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார் . இப்போது தனது 25 வது படத்தை நெங்கிக் கொண்டிருக்கிறார் .
















இவர் விக்ரம் . இவருடைய உண்மையான பெயர் ஜான் கென்னடி . இவர் தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலம் அறிமுகமானார் . இவரும் தனது 25 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் .
























இவர் நம்ம சிம்பு . இவர் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானாலும் சிறு வயதிலே சினித்துறைக்கு நடிக்க வந்து விட்டார் . இவர் தனது 25 வது படத்தை நெருங்கிக் கொன்டிருக்கிறார் .









இவர் யாரென்று உங்களுக்கு தெரியுதா . அட இது நம்ம ஸ்டார்ஜன் ... இவருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .

இவர் பதிவுலகத்துக்கு கடந்த ஏப்ரலில் வந்தார் . இப்போது தனது 25 வது பதிவை தொடுகிறார் .

நான் என‌து 25 வது பதிவை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் . ஏன்னா , இதுக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் . எனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் .

எனக்கு உங்களுடைய மேலான ஆதரவு தேவை .

இனி , சினிமா பற்றிய பதிவுகளை ஸ்டார்'ஸ் திரைப்பார்வை தலைப்பின் மூலம் நீங்கள் காணலாம் .

அப்புறம் மறக்காமல் பின்னூட்டமிட்டு செல்லுங்கள் .

இப்படிக்கு
என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன் .


















































Post Comment

Tuesday, July 7, 2009

நாளை வருவாளா ....

இது உயிரோடை சிறுகதை போட்டிக்காக‌

நான் எழுதிய சிறுகதை இதோ :



என்ன அம்மாவக் காணோம் , வயிறு பசிக்குதே அம்மாவ போயி பாத்துட்டு வருவமா . என்று கிளம்பினேன் . என்னுடய பிஞ்சு கால்களுக்கு வேகமா நடக்கத் தெரியலியே .


டேய் மணி எங்கடா போற என்று பக்கத்து வீட்டு மாலதி பெரியம்மா கூப்பிட்டாங்கன்னு திரும்பினேன். நா எங்கம்மாவ பாக்க போறேன் பெரிம்மா என்றேன் நான் . உங்கம்மா அடுத்த தெருவுல சண்முகம் தாத்தா வீட்டுல இருப்பா , போய்ப்பாரு , கீழ விழுந்திராமப் போ மெல்ல போகனும் என்ன என்றாள் மாலதி .சரி பெரிம்மா என்று தலையை ஆட்டியப்படியே சென்றேன் .

நம்ம வசந்தியோட‌ 5 வயசு பையன் என்னமா பேசுறான் . இவன் அப்பனப் பாரு ! என்ன மனுசன் ! ஆக மோசம் , உருப்படாதவன் , இவங்களுக்கு நல்ல அழகான் பையன் . ஆண்டவன் தான் வசந்தி குடும்பத்த காப்பாத்தனும் என்று மாலதி அங்கலாய்த்தாள் .


நான் சண்முகம் தாத்தா வீட்டுக்கு போகும் போது , அங்கே ஒரே கூட்டமா இருந்தது . எனக்கு ஒன்னுமே புரியல . கூட்டத்த தள்ளி விட்டு உள்ளே நுழைந்தேன் .

அய்யோ ! இந்த பிஞ்சை வச்சிட்டு தனியா போக எப்படிம்மா மனசு வந்தது . இங்கப்பாருடா உங்கம்மாவ , உன்ன விட்டுட்டு போயிட்டாளே . எல்லோரும் அழுதுகிட்டு இருக்காங்க .

அம்மா எந்திரும்மா ஏன் தூங்குற எனக்கு வயிறு பசிக்குதும்மா எனக்கு சாப்பாடு தாம்மா என்று அழுதேன் பசியில் . ஏன் எல்லோரும் அழுவுறாங்க எல்லாத்துக்கும் பசிக்குதோ தெரியலியே . பின்னர் எங்கம்மாவை தூக்கிக்கொண்டு வந்து எங்க வீட்டுல படுக்க வைத்தாங்க . அப்பவும் எங்கம்மா தூங்கிக் கொண்டுதான் இருந்தாங்க. எழுந்திருக்கவே இல்லை .

அப்போது எங்கப்பா குடிச்சிட்டு வந்தாரு . அவர்க்கிட்ட நான் பேச மாட்டேன் . அவர்க்கூட நான் டூ . முட்டாய் வாங்கித் தர மாட்டாரு . கடக்கி கூட்டிட்டு போமாட்டாரு . அம்மா தான் எனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க . அப்பா ,அம்மாவ போட்டு நல்லா அடிப்பாரு . அம்மா அழும்போது நானும் அழுவேன் . அம்மா பாவம் .

அப்பா வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் டேய் நாசமாப் போறவனே , குடும்பத்தை காப்பாத்தாத நீயெல்லாம் ஒரு மனுசனா , தூ ஏன் இப்ப வந்தே ! இப்பவும் அந்த கூத்தியா வீட்டுல இருந்து தான வர்ற , அங்கே இருந்து தொலைய வேண்டியது தானே .

பாவி இங்கப்பாருடா இந்த பிஞ்சை ! . இது என்ன பாவம் பண்ணிச்சி . அருமையான பொண்டாட்டிய இப்படி சாகடிச்சிட்டீயே .

டேய் மாரிமுத்து நீயெல்லாம் ஒருமனுசனா! என் தங்கச்சிய சாகடிச்சிட்டீயே அநியாயமா ! என்று எங்க மாமா ராஜா கதறி அழுவுறாங்க .

நாங்க உனக்கு என்ன பாவம் பண்ணுனோம் . எங்க செல்ல மகளை கட்டிக் கொடுத்து , நீ கேட்டதெல்லாம் கொடுத்தோமே அது இதுக்கு தானா சொல்லுடா இப்படி பாடையில ஏத்திட்டீயே படுபாவி என்று தாத்தாவும் பாட்டியும் அழுவுறாங்க .

எனக்கும் அழுகையா வந்திச்சி . அம்மா எந்திரும்மா முடியல பசிக்குதுமா என்று அம்மாவ உலுக்கினேன் .

உடனே பாட்டி , ஏ ராசா அம்மாவ தொந்தர‌வு செய்யாதப்பா அம்மா சாமிக்கிட்ட போயிட்டாங்கப்பா என்ன சரியா .நான் உனக்கு சோறு தருவேன் சாப்பிடுவியாம் .

பாட்டி ஊட்டிவிட்டவுடன் நான் விளையாடச் சென்றேன் என் நண்பர்களிடம் . டேய் என்னடா பாக்கிற , எங்கம்மா அப்ப இருந்து தூங்கிகிட்டு இருக்காங்க யாருமே எழுப்பமாட்டேங்கிறாங்க . உனக்கு தெரியுமாடா என்று கேட்டேன் . சோப்பு டப்பா, கார் , கிலுகிலுப்பை ,பொம்மை பார்த்தவண்ணம் இருந்தன . டேய் உங்களுக்கு ஒருத்தனுக்கும் தெரியல . யாருமே சொல்லமாட்டேங்கிறாங்க , கேட்டா அம்மா சாமிக்கிட்ட போயிட்டதா சொல்றாங்க . சே ! டேய் உனக்கு தெரிந்தா சொல்லேன்டா , டேய் கிலுக்கு சொல்லுடா என்றேன் .

ஆமாண்டா உங்கம்மா சாமிக்கிட்டதான் போயிட்டாங்க என்று கிலுகிலுப்பை மெதுவா பேச ஆரம்பித்தது சோகத்தோடு ...




சின்னாளப்பட்டி ஊரே ஒரே அமர்க்களமா இருந்தது .

அந்த ஊர்ல மாணிக்க செட்டியார் நல்ல மரியாதை உண்டு .செல்வாக்கானவர் . நிலப்புலன் தோப்புத்துரவு என்று நிறைய சொத்துக்கு சொந்தக்காரர் . அவருடைய மகன் தான் உங்கப்பா மாரிமுத்து . பக்கத்து ஊரான சிலுக்குப்பட்டில உள்ள மாயாண்டித் தேவர் ரொம்ப வசதியானவர் . அவருடைய மகள் தான் உங்கம்மா வசந்தி . இரண்டு பேருக்கும் 5 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திச்சு . ரெண்டு பேரும் பணக்காரங்க , அவங்க பிள்ளைங்க கல்யாணத்தை சும்மா ஜாம்ஜாம்ன்னு தடபுடலா நடத்தினாங்க .

வசந்தியும் மாரிமுத்துவும் கல்யாணம் ஆனவுடன் நல்லா ஒற்றுமையா அன்னியொனியமா இருந்தனர் . ஒருத்தரொருத்தர் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தினர் . மாரிமுத்துவுக்கு எப்போதாவது தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தது . வசந்தி இதைக் கண்டு கொள்ளவில்லை . போகப்போக திருத்திடலாம் என்றிருந்தாள் . ஆனா அவன் தண்ணியடிப்பது நாளுக்கு நாள் அதிகரிச்சுக் கொண்டே போனது . கொஞ்ச நாள்ல அவன் , ரெக்கார்டு டான்ஸ் , தண்ணி , சீட்டு என்று பணத்தை தண்ணி மாதிரி செலவு செய்தான் . வசந்தியும் குழந்தை பெறுவதற்கு அவங்க ஊருக்கு சென்றாள் .

ஒரு நாள் மாரிமுத்துவோட நண்பன் மூக்காண்டி மாரிமுத்துவைத் தேடி வந்தான் . டேய் மாப்புள , உனக்கு விசயம் தெரியுமா , நம்ம மேலத் தெருவுல அம்சவல்லின்னு ஐட்டம் புதுசா வந்திருக்கா . எல்லாரும் போயிட்டு வந்திருக்காங்க . நல்ல அழகா இருக்காளாம் . நீயும் ஒரு தடவை போயி பாருடா என்ன என்று சொல்லி விட்டு சென்றான் .

மூக்காண்டி சொன்னா சரியாத்தாம் இருக்கும் , நாமும் போய் பாத்திடுவோம் என்று மாரிமுத்து அம்சவல்லி வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தான் . குழந்தை மணியை பெற்று வந்த வசந்திக்கு இது பேரிடியாக தலையில் விழுந்தது . அவளும் பொறுத்து பொறுத்து பார்த்து அவனை திருத்த முடியாமல் சண்டையிட்டாள் . மாரிமுத்து தன்னுடைய தோப்பு துரவு சொத்தை வித்து அம்சவல்லிக்கு கொடுத்தான் . இந்தக் கவலையில் அவனுடய அப்பாவும் இறந்து போனார் . தினமும் குடித்து விட்டு வந்து வசந்திய அடிப்பதும் சூடுவைப்பதுவுமாக சித்தரவதை செய்தான் . இருந்த எல்லா சொத்தும் கரைய ஆரம்பித்தது .

நாளடைவில் அம்சவல்லியே கதி என்று ஆனான் மாரிமுத்து . வசந்தியை ரொம்ப கொடுமைப்படுத்தினான் . வசந்தி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாள் . மணிக்கு ஒருவேளை சாப்பாடு கூட கொடுக்க முடியவில்லை அவளால் . அக்கம்பக்கத்து வீடுகளில் வேலை செய்து வயிற்றைக் கழுவினாள் . இதனால் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போனது .

ஒரு நாள் சண்முகம் தாத்தா வீட்டுல வேலை செய்யும் போது மயங்கி விழுந்தவள் தான் , உங்கம்மா அப்புறம் எழுந்திருக்கவே இல்லை . தூங்கிக்கிட்டே சாமிக்கிட்ட போயிட்டாங்க உங்கம்மா என்று அழுதபடியே கிலுகிலுப்பை சொன்னது .....


மணியும் விளையாடிக்கொண்டே இருந்தான் ......


பெத்தவளின் மனமோ பாடையிலே
இறைவனை நோக்கி ......
பிள்ளையின் மனமோ விளையாட்டினிலே
யாரை நோக்கி .............

Post Comment

Sunday, July 5, 2009

முரளிக்கண்ணனும் நானும்

ஸ்டார்ஜன் : ஹலோ முரளி !!!

முரளிகண்ணன் : யாரு ... ஸ்டார்ஜனா ? எப்படி இருக்கீங்க .. பதிவெல்லாம் எப்படி போயிக்கிட்டிருக்கு ? ...

ஸ்டார்ஜன் : நல்லாருக்கேன் .. பதிவெல்லாம் நல்லா போகுது.. அப்புறம் , நா இப்போ ஊருக்கு வந்திருக்கேன் .

முரளிகண்ணன் : அப்படியா ரொம்ப சந்தோசம் ... எப்போ சென்னைக்கு வாரீங்க ?...

ஸ்டார்ஜன் : நான் 2 நாள்ல வருவேன் ... அப்போ உங்களையும் , எல்லாத்தையும் பாக்கனும்......

முரளிகண்ணன் : சரிசரி வாங்க ... அப்புறம் , பழனி சுரேஷ் , கிராம மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வை பத்தி ஒரு கேம்ப் அவங்க கிராமத்துல வச்சிருக்காராம் . நாம அவரையும் பாத்துட்டு அந்த கேம்ப்ல கலந்துக்கிட்டு வருவோமா ....

ஸ்டார்ஜன் : அப்படியா சரி வாரேன் . ..


நான் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்றேன் . எக்மோரில் என்னை வரவேற்பத்தற்கு முரளி வந்திருந்தார் . அங்கே எல்லா இடத்தையும் சுத்திப்பாத்திட்டு , மாலையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் . அதில் கலந்து கொண்டு , பழனி சுரேஷை பார்ப்பதை பற்றி டிஸ்கஸ் செய்தோம் . அப்போ , முரளி , நானும் ஸ்டார்ஜனும் செல்கிறோம் என்றார் . பதிவர் சந்திப்பு முடிந்து அன்று இரவு பழனி செல்வதற்கு பஸ் ஏறினோம் .

பழனி சென்றதும் முரளி , சுரேஷ்க்கு போன் செய்தார் .

முரளிகண்ணன் : ஹலோ சுரேஷ் ! நானும் ஸ்டார்ஜனும் பழனிக்கு வந்துட்டோம் .

சுரேஷ் : அப்படியா .. வாங்க வாங்க ..... நீங்க 9 ம் நம்பர் பஸ்ஸுல ஏறி கவுண்டர்ப்பாளையம் வந்திடுங்க . அங்க டீக்கடை ஒன்று இருக்கும் . அங்க இறங்கிடுங்க .. அங்க நம்ம ஆளுங்க இருப்பாங்க . அவுங்க உங்களை ஊருக்குள்ள கூட்டிட்டு வருவாங்க .

முரளிகண்ணன் : சரி அப்படியே வந்திடுதோம் . ...

நாங்க கவுண்டர்பாளையம் வந்தவுடன் பஸ்ஸிலிருந்து நான் சுரேசுக்கு போன் செய்தேன் .

ஸ்டார்ஜன் : ஹலோ சுரேஷ் கவுண்டர்பாளையம் வந்திட்டோம் . இறங்கிடவா .....

சுரேஷ் : வாங்க தல .. நம்ம ஆளுங்க நிக்கிறாங்களா ...

ஸ்டார்ஜன் : ஆமா

சுரேஷ் : அப்ப இறங்கிடுங்க ...


நாங்க இறங்கினதும் தான் தாமதம் . ஒரே ஆட்கள் கூட்டம் , மாலையும் கையுமா ... இரண்டுபேருக்கும் மாலைப் போட்டாங்க .

ஏனுங்க மசமசன்னு நிக்கிறீங்கோ வந்து மாலப்போடுங்கோ ...

ஏய் அந்த பட்டாசக் கொளுத்துங்கோ ... வெடிக்கிறதுல எட்டுருக்கும் கேக்கனுங்கோ .....


அங்க இருந்த பெரியவர் வாங்க வாங்க சவுக்கியமுங்களா .....

ஏது இம்பூட்டு நேரமா...

என்ன முரளி இப்படி ஒரே அமர்க்களமா இருக்கு ...

நீங்க ஊருல இருந்து வந்திருக்கீங்களா அதான் சுரேஷ் ஏற்பாடு பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன் ...

நாங்க போற வழியெல்லாம் வாங்க வாங்க என்று வரவேற்பா இருந்தது .

அய்யா நாங்க சுரேஷ்சை பாக்க வந்தோம் ....

நீங்க எதுவும் பேசப்படாது .... எல்லாத்தையும் சுரேஷ் சொல்லிப்புட்டாக ....

மேக்கொண்டு எதுவும் பேசப்படாது .....

வழிநெடுக தெருவுல உள்ள பொம்பளைங்க எல்லாம் பாத்திட்டு

ஏப்புள்ள இவுக நம்ம செல்லத்துர அய்யா வீட்டுக்கு வந்திருக்காக ...

ஓ அப்படியாப்புள்ள , கொடுத்து வைத்தவுக தான்

ஆளு செவப்பா இருக்காருல்ல ....



ஒரே சிரிப்பா இருந்தது அவங்களுக்கு .

கொஞ்சதூரம் போனவுடன் ஒரு பெரிய காரவூடு ( பங்களா ) வந்தது .

உடனே அந்த பெரியவர்

ஏப்புள்ள அந்த ஆலாத்திய எடுத்திட்டு வா

ஒரு நடுத்தர வயது பெண் ஆரத்தி எடுத்தாள் .

எங்களுக்கு ஒரே ஆச்செர்யமா இருந்தது . என்னடா இது இப்படியெல்லாமா வரவேற்பு கொடுப்பாங்கன்னு .....

அந்த பெரியவர் வாங்க வாங்கன்னு வழி காட்டிக் கொண்டே வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார் .

வீட்டுக்குள் ஒரே கூட்டமா இருந்தது . இன்னும் பல பேர் வந்தவண்ணமாக இருந்தனர் .

நாங்கள் இருவரும் ஒருத்தரையொருத்தர் பாத்தவண்ணமாக இருந்தோம் .

வயசுப்பெண்கள் எல்லாம் எங்களைப்பார்த்து ஓடி ஒளிந்தனர் .

எல்லோரும் குசுகுசுவென அவங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர் .

அய்யா சுரேஷ் எங்க ? என்று அந்த பெரியவரிடம் கேட்டேன் .

சுரேஷ் இப்ப வந்துருவாக . எல்லாம் பேசிப்புட்டோம் மேக்கொண்டு நீங்க எதுவும் பேசப்படாது .

அப்போது அந்த கூட்டத்துல இருந்த இன்னொரு பெரியவர்

ஏ கோமதி , புள்ள கையில அந்த காப்பித் தண்ணியக் கொடுத்தனுப்பு ...

சட்டுபுட்டுன்னு காரியத்த முடிச்சிட்டு போகவேணாமா .....

அப்போது ஒரு பெண் கீழே குனிந்து கொண்டே வந்து

முரளிக்கு காப்பி கொடுத்திட்டு , எனக்கு காப்பி கொடுத்துட்டு போகும் போது வெக்கப்பட்டு சிரிச்சிட்டு போனாள் .

ஒரு 20 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன் .

அப்புறமென்ன ஆக வேண்டியத பாருங்கோ என்று கூட்டத்துல இருந்து ஒரு குரல் கேட்டது .

என்ன ஆக வேண்டியது எங்களுக்கு ஒன்னுமே புரியலியே என்றேன்

மாப்பிளைக்கு குசும்பப்பாரு .... சரிசரி தட்ட மாத்திக்கிருவோமா .... என்றார் பெரியவர் .

என்னது மாப்பிள்ளையா !!!....யாரு .... என்றார் முரளி .

ஆமா உங்க பக்கத்துல இருக்காறே அவருக்கு தான் எம்பொண்ணக் கொடுக்கிறோமுங்க ....

என்ன பொண்ண புடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்க ....

எனக்கு மயக்கம் வர்றமாதிரி இருந்தது .

ஏனுங்க கொஞ்சம் இருங்க , நீங்க தரகர் சுரேஷ் சொல்லி வந்தவங்க தானே - பெரியவர்

இல்லிங்க நாங்க டாக்டர் சுரேஷை பாக்க வந்தோமுங்க - முரளி

அச்சச்சோ அவரு , பக்கத்து ஊருல்ல

ஏதோ தெரியாம இதல்லாம் நடந்துபுடுச்சு ....

நீங்க ஒரு வார்த்த சொல்லிப்புடலாமுல்ல
- பெரியவர்

எங்க சொல்ல விட்டீங்க இப்பவாது புரிந்ததுங்களா !! ..சரி நாங்க கிளப்புறோமுங்க .. - முரளி

எப்பொய் இங்க வாங்க அந்த பொண்ணு அவங்க அப்பாவை கூப்பிட்டாள் .

எப்பொய் , அவுகளை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கட்டி வைங்கப்பா

சரி வந்தது வந்திட்டீங்க , எங்க பொண்ணுக்கும் ரொம்ப புடிச்சி போச்சு , தட்ட மாத்திக்கிருவோமா ...- பெரியவர்

என்னது அவர புடிச்சிருக்கா ..!!. ஏம்மா அவருக்கு இப்பதான் கல்யாணம் ஆகிருக்கு .. - முரளி

ஏன்வீட்டுக்காரிக்கு மட்டும் தெரிந்தது அவ்வளவுதான் , ஆள விடுங்கப்பா என்று ஒரே ஓட்டம் எடுத்தேன்

நல்லவேளை கல்யாணத்தை முடிச்சி அனுப்பாம இருந்தாங்களே !!!

முரளிக்கு என்னைப் பாத்து சிரிப்பா வந்தது .....









Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்