Pages

Tuesday, June 30, 2009

நாட்டாமை ..... தீர்ப்பு சொல்லாம போகாதீங்க ...


ஒரு கிராமத்தை எடுத்துக்கிட்டா பச்சைப்பசேல் என வயக்காடு .சுற்றிலும் அழகு அழகான தோட்டங்கள் நம் கண்ணுக்கு விருந்தளிக்கும் . அங்கே நாம பாக்கிற ஒவ்வொருத்தரும் ரொம்ப வித்தியாசமா இருப்பாங்க .
ஒரு ஆள் புதுசா அவங்க ஊருக்கு போகும்போது எல்லோரும் கூடிருவாங்க . என்ன ஏதுன்னு ரொம்ப அன்பா விசாரிச்சு உபசரிப்பாங்க . அந்த அன்புக்கு ஈடுஇணையே கிடையாது .

ஆத்தங்கரை ஓரமா ஒய்யாரமா தன் கிளைகளை வீற்றிருக்கும் ஆலமரத்தை சுற்றிலும் எல்லோரும் கூடியிருப்பாங்க . முக்கியமான ஒருத்தருக்காக காத்திருப்பாங்க . அவர் தான் அந்த ஊர் நாட்டாமை . அவருக்கு அந்த ஊரில் நிறய்ய செல்வாக்கு இருக்கும் . அவர் சொல்றது தான் சட்டம் . அவர் பேச்சுக்கு மறுப்பேதும் கிடையாது . அவர் வர்ற வரைக்கும் இருந்த ( ஒரே கலபுலாவாக ) பேச்சு , அவர் வந்த பிறகு கப்சிப் என்று ஆகிவிடும் .


காலங்காலமாக , அவர் குடும்பம் தான் நாட்டாமையா இருப்பாங்க . அந்த அளவுக்கு அந்த ஊர்க்காரங்க ரொம்ப மரியாதை கொடுத்து வச்சிருப்பாங்க . அந்த ஊர் மக்கள் அறியாமையில இருக்குற வரைக்கும் தான் அவர் அந்த ஊர் நாட்டாமை . .

இதுவரைக்கும் , நீங்க பாத்தது நம்ம ஊர் கிராமங்களில் உள்ள நாட்டாமைகளைப் பற்றி . ..

இப்போ .. இதே நாட்டாமைகள் சினிமாவுல எப்படி இருக்காங்க என்பதைப் பற்றி......

அவங்களோட குணாதிசயங்கள் என்னன்ன என்பதைப் பற்றி .....


கிழக்கு வாசல்

ஆர் . வி. உதயக்குமார் இயக்கத்தில் 1990 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இதில் கார்த்திக் , ரேவதி , குஷ்பு , விஜயகுமார் , ஜனகராஜ் , சின்னிஜெயந்த் , மனோரமா சண்முகசுந்தரம் மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இந்த படத்தில் கார்த்திக் மிக அருமையாக நடித்திருப்பார் . இளையராஜாவின் தாலாட்டும் இசையில் அனைத்து பாடல்களும் நல்லா இருக்கும் . இந்த படத்தில் சண்முகசுந்தரம் பக்கத்து ஊர் பண்ணையாராக இருப்பார் . இவருடைய மகளாக துறுதுறுவென்று வரும் குஷ்பு கார்த்திகை விளையாட்டுக்காக விரும்புவார் .

இதை உண்மையென நம்பி பொண்ணுக் கேட்டு போகும் மனோரமாவை சண்முகசுந்தரம் அவமானபடுத்தி அனுப்புவார் . அந்த அவமானத்தால் மனோரமா இறந்துவிடுவார் . இன்னொரு பக்கம் விஜயகுமார் தன்னுடைய வப்பாட்டியின் வளர்ப்பு மகளான ரேவதியை அடைய நினைப்பார் . ரேவதிக்கு பாதுகாப்பாக வரும் ஜனகராஜ் அற்புதமாக நடித்திருப்பார் . இதற்கு இடையில் ரேவதியும் கார்த்திக்கை விரும்புவார் . கார்த்திக் இதையெல்லாம் சமாளித்து , சண்முகசுந்தரம் & விஜயகுமாரின் முகத்திரையை கிழித்து ரேவதியை கரம்பிடிப்பார் .

சின்னத்தம்பி

பி . வாசு இயக்கத்தில் பிரபு நடித்த படம் . 1989 ல் வெளிவந்தது என்று நினைக்கிறேன் . இந்த சூப்பர் டுப்பர் ஹிட் திரைப்படத்தில் பிரபு ,குஷ்பு , கவுண்டமணி , ராதாரவி , மனோரமா மற்றும் பலர் நடித்துள்ளனர் . இதில் பிரபு வெகுளித்தனமாக நல்லா நடித்திருப்பார் . இளையராஜாவின் தாலாட்டும் இன்னிசையில் பாடல்கள் மிக மிக அற்புதம் . இந்த ஊரில் ராதாரவி அவருடைய தம்பிகளும் சேர்ந்து ரொம்ப அட்டகாசம் செய்வாங்க . தன் தங்கை வெளியப் போகும்போது ஆம்பிளைங்க பாத்துட்டா பாதி முடியை ( தலையில் பாதி , மீசையில பாதி ) எடுத்து அராஜகம் பண்ணுவாங்க .

இந்த படத்தில் மாலைக்கண்ணு நோய் உள்ள கவுண்டமணியின் காமெடி ரொம்ப நல்லா இருக்கும் . அப்பாவியா வரும் பிரபுவை குஷ்பு காதலிப்பார் . பிரபு தன்னுடைய அப்பாவித்தனத்தால் ராதாரவியின் குடும்பத்தில் புகுந்து தன்னை காதலிக்கும் குஷ்புவை திருமணம் செய்து கொள்வார் . வறட்டு கவுரவம் பார்க்கும் ராதாரவியை திருத்தி குஷ்புவை கரம்பிடிப்பார் .


சின்ன ஜமீன்

கார்த்திக் நடித்து ராஜ்கபூர் இயக்கத்தில் வெளிவந்தது இந்த திரைப்படம் . சூப்பர் ஹிட் திரைப்படம் . வருசம் தெரியல .{ முரளி , கொஞ்சம் சொல்லுங்க }. இந்த படத்தில் கார்த்திக் மிக அருமையாக அப்பாவியாக ஒன்னும் தெரியாதவரா நடித்திருப்பார் . ஆர் .பி .விஸ்வம் அந்த ஊர் நாட்டாமையாக வரும் இந்த படத்தில் சுகன்யா வினிதா சபிதாஆனந்த் காந்திமதி மற்றும் பலர் நடித்திருப்பாங்க . பெரிய ஜமீன் சொத்துக்கு அதிபதியான கார்த்திக்கை பைத்தியக்காரனாக்கி ரோட்டில் அலையவிட்டிருப்பார் ஆர்.பி . விஸ்வம் . இதை தட்டிக்கேட்கும் வினிதாவை கெடுத்து கொன்னுவிடுவார் . அந்த ஊரில் அவர் வைத்ததுதான் சட்டம் என்று அந்த மக்களை ஆட்டிப்படைப்பார் . ஆனா பார்ப்பதற்கு சாதுவாக இருப்பார் . .
வினிதாவின் தங்கையாக வரும் சுகன்யா அந்த ஊரில் டீச்சர் . அவர் கார்த்திக்கை திருத்தி ஆர்.பி. விஸ்வத்தை பழிவாங்குவார் . இளையராஜாவின் மயக்கும் இசை இந்த படத்துக்கு பக்க பலம் .

இது நம்ம பூமி

கார்த்திக் , குஷ்பு , விஜயகுமார் , ராதாரவி மனோரமா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் 1992 ல் வெளிவந்தது . இயக்கம் யாருன்னு தெரியல . { முரளி , கொஞ்சம் சொல்லுங்க } . இந்த படத்தில் கார்த்திக்கும் குஷ்புவும் காதலிப்பாங்க . அந்த ஊர் பெரிய மனுசங்களாக வரும் விஜயகுமாரும் ராதாரவியும் தங்களுடைய சுயலாபத்துக்காக ஊரை ரெண்டாக்கி வச்சிருப்பாங்க . ஊருக்கு நடுவில் பெரிய சுவற்றை கட்டி ஜாதியை பெரிய பிரச்சனையாக்கி வச்சிருப்பாங்க . கார்த்திக்கின் அப்பாவான விஜயகுமார் ஒரு பிரச்சனையில் இறந்து விடுகிறார் . நெப்போலியன் வில்லனாக வருவார் . பின்னர் கார்த்திக் போராடி அந்த ஊர் மக்களை காப்பாற்றுவார் . இசை இளையராஜா .

சின்ன கவுண்டர்

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1992 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இதில் விஜயகாந்த் , சுகன்யா , மனோரமா , கவுண்டமணி , செந்தில் , வடிவேலு மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இசை ராகதேவன் இளையராஜா . பாடல்களும் சூப்பர் ஹிட் . இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு நல்ல நாட்டாமையா வாழ்ந்திருப்பார் . அந்த ஊர் மக்கள் அவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருப்பாங்க . இதைப் பொறுக்காத வில்லனா வரும் சலீம் கவுசர் சூழ்ச்சி செய்து விஜயகாந்துக்கு அவப்பெயரை உண்டாக்குவார் .

விஜயகாந்துக்கு மனைவியா வரும் சுகன்யா ஒரு பிரச்சனையில் தன் கணவனுக்காக ஜெயிலுக்கு போகிறார் . இந்த படத்தில் விஜயகாந்த் நல்லா நடித்திருப்பார் .விஜயகாந்த் சலீமின் சூழ்ச்சியை வென்று மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார் . இந்த திரைப்படத்தில் மறக்க முடியாத ஒன்று கவுண்டமணி செந்தில் நகைச்சுவை சூப்பர் ஹிட் . தொனதொனவென்று கேள்வி கேட்கும் செந்திலும் அதை சமாளிக்கும் கவுண்டமணியும் காமெடி சகாப்தம் .

தேவர்மகன்

பரதன் இயக்கத்தில் 1992 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த படத்தில் சிவாஜி கணேசன் , கமலஹாசன் , ரேவதி , கவுதமி , நாசர் ,மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இளையராஜாவின் இன்னிசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இந்த படத்தில் சிவாஜி கணேசன் அந்த ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார் . அவருடைய மகன் கமலஹாசன் வெளிநாட்டில் படித்து ஊருக்கு திரும்புவார் . கவுதமியும் கமலும் காதலிப்பாங்க . அப்போ , நாசர் ஜாதி பிரச்சனையை கிளப்பி விட்டு தீயை பத்த வைப்பார் . சிவாஜி மனம் நொந்து இறந்து விடுவார் . பின்னர் கமலஹாசன் அந்த ஊர்த் தலைவராகுவார் . ஒரு பிரச்சனையில் கீழ்ஜாதி பெண்ணான ரேவதியை மணந்து அந்த ஊர் மக்களை நல்ல வழிக்கு கொண்டு வருவார் . கமலஹாசன் இந்த படத்தில் மிக அருமையாக நடித்து அந்த ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார் .

எஜமான்

ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1993 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , மீனா , கவுண்டமணி , செந்தில் , விஜயகுமார் நெப்போலியன் மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இளையராஜாவின் இன்னிசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இந்த படத்தில் ரஜினிகாந்த் அந்த ஊர் நாட்டாமையாக பெரிய மனிதராக நடித்திருப்பார் . அந்த ஊர் மக்கள் சூப்பர்ஸ்டாரின் மேல் ரொம்ப மரியாதை வச்சிருப்பாங்க . அவருக்கு போட்டியாக வறட்டு கவுரவம் பார்க்கும் நெப்போலியன் தனக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று மக்களை துன்புறுத்துவார் . ரஜினிகாந்த் நெப்போலியனை சமாளித்து மக்களுக்கு நல்லது செய்வார் . இந்த திரைப்படத்தில் முக்கிய ஒன்று காமெடி . கவுண்டமணி செந்திலுடன் ரஜினிகாந்த் மூவரும் செய்யும் காமெடி நல்லா இருக்கும் .

நாட்டாமை

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த திரைப்படத்தில் சரத்குமார் குஷ்பு மீனா விஜயகுமார் கவுண்டமணி செந்தில் மனோரமா பொன்னம்பலம் , சங்கவி மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இந்த படத்தில் விஜயகுமார் அந்த ஊரில் நீதி நேர்மைத் தவறாத நாட்டாமையாக வாழ்ந்திருப்பார் . அவருடைய கம்பீரமான தோற்றம் வியக்க வைக்கும் . அவருடைய மகன்களாக இரண்டு வேடத்தில் சரத்குமார் மிக அருமையாக நடித்திருப்பார் . அண்ணன் சரத்குமாரும் அப்பாவைப் போல நீதி நேர்மையாக இருப்பார் .

பொன்னம்பலத்தின் சூழ்ச்சியால் தன் தம்பியை குற்றவாளி என்று எண்ணி ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவார் . பிறகு உண்மைத் தெரிந்து தப்பான தீர்ப்பைக் கொடுத்துவிட்டோமே என்றெண்ணி தன் உயிரை விட்டு மக்கள் மத்தியில் ரொம்ப உயர்ந்து விடுவார் . 2 சரத்குமாரும் மிக அற்புதமாக நடித்திருப்பார்கள் . அண்ணன் சரத்குமாருக்கு குஷ்புவும் தம்பிக்கு மீனாவும் நன்றாக ஜோடியாக நடித்திருப்பார் . இந்த படத்துக்கு சிற்பி இசை அமைத்திருப்பார் . பாடல்களும் சூப்பர் ஹிட் . அப்புறம் கவுண்டமணியும் செந்திலும் காமெடியில கலக்கிருப்பாங்க . ரொம்ப சூப்பர் காமெடிகள் . நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு ...... வசனம் ரொம்ப பிரபலம் .

முத்து

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ல் வெளி வந்தது என்று நினைக்கிறேன் . இது சூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த படத்தில் ரஜினிகாந்த் , மீனா , சரத்பாபு , ரகுவரன் , ராதாரவி செந்தில் மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையில் பின்னி எடுத்திருப்பார் . பாடல்கள் மிக அற்புதம் . இந்த படத்தில் அப்பா ரஜினிகாந்த் அந்த ஊரில் பெரிய ஜமீந்தாராக நடித்திருப்பார் . திவானாக வரும் ரகுவரன் சொத்தை அபகரிக்க நினைக்கும் போது ரஜினியே அதை கொடுத்திட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார் . அவமானம் தாங்காமல் ரகுவரன் தற்கொலை செய்திடுவார் . ரகுவரனின் மனைவி அந்த சொத்தை பாதுகாத்து மகன் ரஜினியிடம் ஒப்படைப்பார் . அம்பலத்தாராக வரும் ராதாரவி இந்த சொத்தை அபகரிக்க நினைத்து சூழ்ச்சி செய்வார் . ரஜினிகாந்த் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடித்திருப்பார் . ரஜினியும் மீனாவும் சந்திக்கும் இடங்கள் ரொம்ப சுவாரசியமாக இருக்கும் . காமெடியில் ரஜினிகாந்த் கலக்கியிருப்பார் . இதுபோக செந்தில் , வடிவேலு , காமெடிகளும் நல்லா இருக்கும் .

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் !!!

நாட்டாமை ..... தீர்ப்பு சொல்லாம போகாதீங்க ...

Post Comment

Saturday, June 27, 2009

அன்பே என் அன்பே .... உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்புக்கான சிறுகதை

இது 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக
நான் எழுதிய சிறுகதை இதோ :


அம்மாவ் பசிக்குதுமா என்ற எனது மகன் செல்வத்துக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே எனும் போது சே என்ன வாழ்க்கை இது என்று தோன்றியது . என் செல்லம் இருப்பா உன் அப்பாரு இப்ப வந்துருவாக . இல்லம்மா ரொம்ப பசிக்குது என்னால முடியல என்ற மகனை மடியில் போட்டு தாலாட்டிக் கொண்டிருந்தேன் . எங்கப்போனாரு இந்த மனுசன் , பய வேற பசியில துடிக்கிறானே என்ன செய்ய இப்போ .


எதாவது இருக்கா தேடிப்பார்த்தாள் ஒன்னுமே இல்லையே இருந்தாதானே இருக்க என்று நொந்துக்கொண்டாள் செண்பகம் . இந்தாப்பா இந்த தண்ணியக்குடி , அப்பாரு வந்த உடனே சேர்ந்து சாப்பிடலாம்பா என்ன சரியா . சரிம்மா என்ற செல்வத்துக்கு கிறக்கமா இருந்தது .செண்பகம் தன் மகனை மடியில் வைத்து தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் . அவனும் நன்றாக தூங்கினான் . உடனே வெளியில் சென்று எட்டிப்பார்த்தேன் .கண்ணுக்கெட்டிய தூரம் யாரையும் காணல . சே எங்க போனாரு , இன்னும் ஆளையே காணலையே . வேல முடிஞ்சி வர இம்புட்டு நேரமா , வெள்ளன்ன வர வேண்டியதுதானே .நாம பசியை பொறுத்துக்குவோம் . ஆனா சின்ன வுசுரு தாங்குமா .எனக்கு கவலையா இருந்தது.

எனக்கும் கண் அசருதே .சே தூக்கமா வருதே .நடைய சாத்திட்டு வந்து படுத்தேன் . கொஞ்சம் கண் அசரும்போது கதவு தட்டுற சத்தம் கேட்டு எழுந்து கதவை திறந்தேன் . என்னய்யா இம்புட்டு நேரமா பாரு புள்ள சுருண்டு கிடக்கிறான் . என்ன செய்றது புள்ள எசமான் வீட்டுல காடு கழனிய முடுச்சிட்டு வர்றதுக்குள்ள இம்புட்டு நேரமாச்சு . சரி சரி இந்தா இதை வச்சி கஞ்சிய காச்சு குடிச்சிட்டு செத்த படுக்கனும் . காலையில வெள்ளன்னக்கே வரச்சொல்லிட்டாக என்று மாணிக்கம் சொல்லிட்டு சட்டைய கழட்டினான் .

இந்தாயா கஞ்சிய குடி , எல என் ராசா எந்திரு செல்லம் கஞ்சிக்குடிப்பா .என்று செல்வத்தை எழுப்பினாள் செண்பகம் . வேண்டா போம்மா எனக்கு தூக்க தூக்கமா வருதுமா . அப்படியெலாம் சொல்லாதீகப்பு , இங்கப்பாரு அப்பாரு வந்திருக்கேன் குடிமா . போ உங்கூட பேசமாட்டேன் இம்புட்டு நேரமா . அம்மா கொடுத்த கஞ்சியை வாங்கி குடித்தான் . அவன் குடிப்பதை ஆசைதீர பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும் .


மாணிக்கம் அந்த ஊர் பண்ணையார் பழனியாண்டியிடம் வேலை பார்த்து வந்தான் . அவர் தரும் ஏதோ கொஞ்ச பணத்துல தன் குடும்பத்தை நடத்தினான் . அவனுக்கென்று அந்த ஓலைக்குடிசை மட்டும் தான் . அத்தை மகள் செண்பகத்தை கல்யாணம் செய்து கொண்டான் . செல்வத்துக்கும் 5 வயது ஆகிறது .


கோழி கொக்கரக்கோ என கூவி அன்றைய பொழுதை அறிமுகப்படுத்தியது . அய்யோ விடிஞ்சிருச்சா என வாரி எழுந்தேன் . என்ன இந்த மனுசன காணோம் அதுக்குள்ள போயிட்டாரா .சே பாவம் எம்புட்டு வேல செய்றாரு .செல்வம் வெளிய போய் விளாண்டுட்டு வரெம்மாவ் என்று சொல்லிட்டு குடுகுடு என்று ஓடினான் .

புள்ள செம்பவம் என பக்கத்து வீட்டு மாரியம்மா குரல் கேட்டு வெளிய வந்தேன் நான் . என்ன மாரியம்மாக்காவ் , நான் சந்தைக்கி போறேம்புள்ள வாறியா . இல்லக்கா நா வரல என்றுசொன்னேன தவிர எனக்கும் போக ஆசைதான் என்ன செய்வது துட்டு இல்லய்யே .

ஏ செம்பவம் எனக்குரல் கேட்டு திரும்பினேன் . என்ன வாத்தியாரம்மா நல்லா இருக்கீகளா என்று கேட்டேன் . ஆமா புள்ள நல்லா இருக்கியா மாணிக்கம் நல்லா இருக்கானா . செல்வத்துக்கு இப்போ என்ன வயசாகிறது என்று கேட்டார் . முத்துலட்சுமி டீச்சர் . இந்த ஜுன் வந்தா ஆறாகும் வாத்தியாரம்மா என்றேன் . அப்ப நாளைக்கே வந்து பள்ளிக்கூடத்தில வந்து சேத்துப்புடு , நா வர்றேன் என்று சொல்லி வாத்தியாரம்மா சென்றதை பார்த்துக் கொண்டிருந்தேன் .


செல்வத்தை இஸ்கூல்ல சேத்து பெரிய்ய படிப்பெல்லாம் படிக்கவைக்கோனும் . அப்போது செல்வம் வந்தான் . எலே செல்வம் நாளைக்கு உன்னை இஸ்கூல்ல சேக்க போறேன் என்றேன் மாட்டேன் போம்மாவ் என்றான் செல்வம் . என் ராசால்ல அங்க போனா உனக்கு முட்டாய் எல்லாம் கொடுப்பாக .நீ பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சி இந்த ஊருக்கே ராசாவாகனும் . என்ன சரியால . அய்யா முட்டாய்லாம் கொடுப்பாகலா அப்ப சரிம்மாவ் நா இஸ்கூலுக்கு போறென் . என் ராசா என்று செல்வத்தை முத்தமிட்டேன் .

ஏன்யா இன்னிக்கி நம்ம வாத்தியாரம்மா முத்துலட்சுமி வந்தாக , நம்ம செல்வத்தை நாளக்கு இஸ்கூல்ல சேத்துப்புட்டு வந்துடுக என்றேன் . மாணிக்கம் ஆமா புள்ள நானும் சொல்லத்தான் நினைச்சு வந்தேன் நீயே கொண்டு சேத்துப்புடு , எனக்கு நாளைக்கு நிறய்ய வேலக்கிடக்கு என்றான் . ஆமா உனக்கு எப்பவும் ஒரே வேல வேல ... சரி சரி இந்தா சாப்பிடு என்று ஆக்கி வச்ச சாம்பாரும் தொட்டுக்க ஊருகாயும் கொடுத்தேன் .

செல்வம் விடிஞ்சிருச்சி எழுந்திருல . இஸ்கூலுக்கு போவோனும் பல்லு விலக்கிட்டு வந்து இந்த நீசுத் தண்ணியக்குடி என்று செல்வத்தை எழுப்பினேன் . அவனை குளிக்க வைத்து ஒரு சொக்காயும் ( கிழிந்து போனதை ) தைத்து வச்சிருந்த டவுசரை போட்டு இஸ்கூலுக்கு கூட்டி சென்றேன் .

வா புள்ள செம்பவம் , ஆங் செல்வம் நல்லா படிக்கனும் . இந்தா முட்டாய் சாப்பிடு , பெரிய்ய படிப்பெல்லாம் படிக்கனும் என்ன சரியா , செம்பவம் நீ போ நா இவனை பாத்துக்கிறேன் என்று முத்துலட்சுமி டீச்சர் சொன்னார் .


எலய் செல்வம் இங்க வால இஸ்கூல்ல என்ன சொல்லிக்குடுத்தாக என்றுக் கேட்டான் மாணிக்கம் . எப்பொய் எனக்கு முட்டாய் , சோறு கொடுத்தாக . ஆத்திச்சூடி நிறய்ய பாட்டெல்லாம் சொல்லிக்கொடுத்தாக அப்புறம் , சிலட்டு குச்சி பொஸ்தகமெல்லாம் வாங்கிட்டு வரச்சொன்னாங்கப்பா என்று செல்வம் சொல்லியதைக்கேட்டு மாணிக்கம் திகைத்துப்போனான் . என்ன செய்வது புள்ள துட்டுக்கு ஒரே கவலயா இருக்கு . மனசு கஷ்டமா இருக்கு என்ற என் கணவனுக்கு சரிய்யா கவலப்படாத நானும் பத்துபாத்திரம் தேய்க்கப்போட்டா என்று ஆறுதல் சொன்னேன் .

என்ன இந்த மனுசன காணோம் புள்ளக்கி சிலெட்டு சொக்கா பொஸ்தகமெலாம் வாங்கனுமே கவலைய்யா இருந்தது . ஒரு எட்டு பண்ணையார் வீடு வரைக்கும் போய் பாத்துடுவோமா என்று கிளம்பினேன் . பண்ணையார் ரொம்ப பெருசா இருந்தது . பணக்காரவுக அப்படிதான் இருப்பாக . யாரு அது என்று கேட்டுக்கொண்டே வந்தார் பண்ணையார் . ஏன்வூட்டுகாரவுக இங்க தான் இருக்காக என்றேன் பண்ணையாரிடம் . ஓ மாணிக்கம் பொஞ்சாதியாலா நீ என்று கேட்டு அவளை மேலிருந்து கீழாக பாத்துட்டு ரொம்ப அழகா இருக்காளே . என்ன புள்ள வேனும் .என்றவரிடம் அவுகளை பாத்துட்டு போலாம்னு வந்தேங்க என்றேன் . இவளை எப்படியாவது அனுபவிக்கனும் என்ற எண்ணம் பண்ணையார் மனதில் ஓடியது . சரிப்போ அவனை வரச்சொல்லுறேன் என்று சொன்னவுடன் நான் வீட்டுக்கு வந்தேன் .

ஏப்புள்ள இங்கப்பாரு எசமான் எம்பூட்டு ரூவாத் தந்துருக்காக ... ஆமாய்யா அவருக்கு ரொம்ப பெரிய மனசு என்றேன் என்வூட்டுக்காரரிடம் . பய சாப்பிட்டானா தூங்குறதப்பாரு ஏன்ராசா என்றுக்கொஞ்சினான் மாணிக்கம் .

செல்வத்தை இஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு நானும் கொஞ்ச பழயகஞ்சியை குடிச்சிட்டு வேலக்கி கிளம்பினேன். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . யாரு என்றுக்கேட்டு கொண்டே கதவை திறந்தேன் . பண்ணையார் நின்று கொண்டிருந்தார் .

அய்யா வாங்க வாங்க என்றுசொல்லி தடுக்கு எடுத்துப் போட்டேன் .என்ன செண்பகம் நல்லா இருக்கியா பையன் இஸ்கூலுக்கு போய்ட்டானா என்றுகேட்டார் பண்ணையார் . அய்யா நல்லாயிருக்கோமுங்க உங்க தயவுல . - இது நான் . அதான்வேனும் . அப்புறம் உம்மேல எனக்கு ஆச வந்திருச்சு ஒன்னழகு என்னை பாடாப்படுத்துது .அதனால ஒரே ஒருநாள் மட்டும் என்னோட மச்சி வீட்டுக்கு வந்திடு என்று பண்ணையார் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது .என்னைய்யா சொல்றீக .உங்க மேல எம்பூட்டு மரியாதை வச்சிருக்கோம் என்ன இப்படி பேச அசிங்கமா இல்ல .நாங்க ஏழைகதான் மானந்தான் எங்க உசிரு சீ வெளியப்போங்க . ஏய் இங்கப்பாரு இதுக்கு மட்டும் சம்மதிக்கலைன்னா அப்புறம் வேலக்கி போன ஒன்வூட்டுக்காரன் திரும்பி வரமாட்டான் பாத்துக்கோ என்று சொல்லிட்டு போனார் பண்ணையார் . என்னடா இது இப்படியாகிருச்சே எனக்கு அழுகையாக வந்தது . தேம்பித்தேம்பி அழுதேன் .

வெளியே ஒரே சத்தமாக்கேட்டது . பார்த்தால் ஒரே கூட்டமா இருந்தது .அங்கே நான் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியானது . பண்ணையார் மண்டையில் அடிப்பட்டு இறந்து கிடந்தார் . எங்கருந்து வந்தாருன்னு தெரியல கல்தடுக்கி தந்திக்கம்பத்துல விழுந்து மண்டை ஒடந்சிருச்சி அய்யோ எங்க ராசா என்று மாரியம்மா அழுதாள் . ஒரே அழுகை கூப்பாடாக இருந்தது .எனக்கு ஒரே சந்தோசமா இருந்தது .


கணவன் வருகைக்காக என் மனம் எதிர்ப்பாத்துக் கொண்டிருந்தது........

Post Comment

Thursday, June 25, 2009

கிராமத்து தென்றல் .....


கிராமத்து அழகே தனி தான் . ஒரு ஊருக்குள்ளே போனாப்போதும் , பச்சைப்பசேல் என வயல்வெளி நம்மை வரவேற்கும் . அதிகாலையில் அம்மாவ் என கத்திக்கொண்டு போகும் மாடுகளை கூட்டிக்கொண்டு , பண்ணைக்கு போகும் ஆட்கள் . ஒரு ஓலைக்குடிசையில் 2 பெஞ்ச்ஸ் போட்டு டீக்கடை நடத்தும் அந்த ஊர்க்காரர் யாரையோ எதிர்ப்பாத்திட்டு இருப்பார் . அந்த பெஞ்ச்சில் இருக்கும் எல்லொரும் கூட எதிர்ப்பாங்க. அட அது நம்ம பால்க்காரரைத்தான் . அங்க உக்காந்து டீக்குடிச்சிகிட்டு ஊர்க்கதை பேசி நேரத்தைப்போக்கும் பெருசுகள்.

அப்புறம் , கம்மாக்கரைக்கு போகும் பொம்பளைங்க . பசங்க எல்லோரும் வாய்க்காலுக்கு போய் , குட்டிக்கரணம் அடிப்பது , கும்மாளம் போடுவது போன்ற தன்னுடைய வீரதீர பிரதாபங்களைக் காட்டி தண்ணியை கலங்கடிப்பாங்க . பக்கத்துல நிக்கிற பொம்பளைங்க " எலய் , ஏம்ல இப்படி சல்லியம் பண்றீக , வூட்டுக்கு போங்கல..."என்று திட்டுவாங்க .

ஒரு தூக்குச்சட்டியில கஞ்சியையும் வெங்காயத்தையும் பச்சை மிளகாயை கொண்டுக்கிட்டு வயக்காட்டுக்கு போகும் ஆம்பளைங்களும் ...., அவங்க பின்னாடியே , தம் புள்ளைங்களுக்கு கஞ்சித்தண்ணியை கொடுத்துட்டு எலய் நானும் உன் அப்பாரும் வரந்தண்ணியும் சமத்தா இருக்கோனும் ...என்ன சரியால ...என்று வயக்காட்டுக்கு போவாங்க பொம்பளைகள் .

சாயங்காலமானா டீக்கடைக்கு போய் ஒரு காப்பித்தண்ணிய குடிச்சிப்புட்டு சீட்டு தாயக்கட்டை விளையாடுவாங்க . அப்போ ஒருத்தன் ஓடிவந்து , அப்பூ , என்ன இங்க விளையாண்டுக்கிட்டு இருக்கீக ...., அங்க , கீழத்தெரு மாயாண்டியும் மேலத்தெரு செவத்தம்மாளும் ஊர விட்டு ஓடிட்டாக ....., அப்புறம் நம்ம பயலுக போய் இழுத்துட்டு வந்தாக ... , அதேன் பஞ்சாயத்தை கூட்டிப்புட்டாக . நானென் போறேம்முல .. நீ வாரியால.... நீ முன்னாடி போ . நா எல்லாத்துக்கும் சத்தங்க்காட்டிட்டு வாறேம்முல ...
ஆத்தங்கரை ஓரமா ஒய்யாரமா தன் கிளைகளை வீற்றிருக்கும் அந்த ஆலமரத்தை சுற்றிலும் மனிதக் கூட்டம் கூடியிருப்பாங்க . முக்கியமான ஒருத்தருக்காக காத்திருப்பாங்க . அவர் தான் அந்த ஊர் நாட்டாமை . அவருக்கு அந்த ஊரில் நிறய்ய செல்வாக்கு இருக்கும் . அவர் சொல்றது தான் சட்டம் . அவர் பேச்சுக்கு மறுப்பேதும் கிடையாது . அவர் வர்ற வரைக்கும் இருந்த ( ஒரே கலபுலாவாக ) பேச்சு , அவர் வந்த பிறகு கப்சிப் என்று ஆகிவிடும் .
காலங்காலமாக , அவர் குடும்பம் தான் நாட்டாமையா இருப்பாங்க . அந்த அளவுக்கு அந்த ஊர்க்காரங்க ரொம்ப மரியாதை கொடுத்து வச்சிருப்பாங்க . அந்த ஊர் மக்கள் அறியாமையில இருக்குற வரைக்கும் தான் அவர் அந்த ஊர் நாட்டாமை . ஒரு ஆள் புதுசா அவங்க ஊருக்கு போகும்போது எல்லொரும் கூடிருவாங்க . என்ன ஏதுன்னு ரொம்ப அன்பா விசாரிச்சு உபசரிப்பாங்க . அந்த அன்புக்கு ஈடுஇணையே கிடையாது .

இது உண்மையான ஒரு அன்பு . இந்த அன்புக்கு நாம கொடுத்து வச்சிருக்கனும் . காந்தி அடிகளே இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள் தான் என்று சொல்லி இருக்கிறார் . கிராமத்துல இருக்கிற மக்களுக்கு நல்ல வசதி ஏற்படுத்தி கொடுக்கணும் . அவங்களை அறியாமையில இருந்து வெளிக்கொணர வேண்டும் . அதுக்கு அவங்களுக்கு படிப்பறிவு வேண்டும் . உலக விசயங்கள் தெரிந்து இருக்க வேண்டும் . நல்ல முன்னேற்றம் வேண்டும் அவர்கள் வாழ்விலே ....
நம் நாடு முன்மாதிரியாக வேண்டும் . அப்போ தான் நம் இந்தியா உலக அரங்கில் வல்லரசாக ஆக முடியும் ......

கனவு காணுங்கள் நன்றாக .... நம் திறமை வெளிப்பட .....

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் ......

Post Comment

Sunday, June 21, 2009

படம் பார்த்து ..... கதை சொல்க ...

இன்னைக்கு எவ்வளவு அறிவியல் முன்னேற்றம் அடைந்திருக்கிறது . அதுவும் இணையம் வந்த பிறகு எவ்வளோ முன்னேற்றம் .
மனிதன் ஒரு சேட்டைக்கார பய . நம்ம ஆளுகளுக்கு குசும்புக்கு அளவே இல்லை .
நான் இணையத்தில் பார்த்த சில குசும்பு காட்சிகளை இங்கே படமாக தந்துள்ளேன் .

அந்த காட்சிகளை கண்டு , ரசித்து வாய்விட்டு சிரியுங்கள் .எவ்வளோ குசும்பு பாத்திங்களா .....

Post Comment

பள்ளிக்கூடம் போகலாமா 2...... தந்தையர் தினம்

என்னை பெற்று வளர்த்து ஆளாக்கி ,

என் கல்வியை மேம்படுத்திய ,

நான் விரும்பிய பெயரை வைத்துக் கொள்ள சொன்ன ,

எங்கப்பாவுக்கு ,

நான் எழுதிய பள்ளிக்கூடம் போகலாமா ..... தொடர்ப்பதிவை
தந்தையர் தினத்துக்கு சமர்ப்பணம் செய்கின்றேன் .....

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள

ஸ்டார்ஜன்.

பதிவு பார்க்க
பள்ளிக்கூடம் போகலாமா .....

Post Comment

பள்ளிக்கூடம் போகலாமா ..... தொடர்ப்பதிவுநேற்றும் இன்றும் எனக்கு நிறைய்ய வேலை. தமிழ்மணம் பார்க்க முடியவில்லை . என் வலைப்பதிவையும் பார்க்க வில்லை . என் முந்திய பதிவான பறவையைக் கண்டேன் பதிவில் படங்களை போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது . ப்ளாக்கர் ரொம்ப ஹேங்க் ஆகி விட்டது . இதுக்கு 3 நாட்கள் ஆகிவிட்டது. இன்று சுமார் இரவு 9 மணிக்கு என் வலைப்பதிவைப் பார்த்தேன் . ஒரே அதிர்ச்சி .ஆச்செர்யம் .

பார்த்தால் கோவி. கண்ணன் தொடர்ப்பதிவுக்கு அழைத்திருந்தார் . என்னால் நம்பமுடியவில்லை .என் நண்பரிடம் காட்டினேன் . ஒரே சந்தோசம் தாங்க முடியவில்லை.

பள்ளிப் படிப்பை பற்றியும் அங்கே சொல்லித்தந்த ஆசிரியர்களைப் பற்றியும் தன்னுடைய காலத்தை என் பக்கமாக திருப்பி இருந்தார் கோவி. கண்ணன் .


என்னவென்று சொல்வது எப்படி சொல்வது அந்த பொற்காலத்தை .....


ஒன்னாப்பு :


யெய் சேக் ! இங்க வா இது அப்பாவின் குரல். "என்னப்பா" இது நான் . நாளைக்கு பள்ளிக்கூடம் போவனும் நா ஒன்னையை பள்ளிக்கூடத்துல சேக்கப்போறேன் . அப்படியா ஹைய்யா ஜாலி ! .எனக்குள் ஒரே சந்தோசம் . எங்கண்ணே [ பெரியப்பா மகன் ].கூட பள்ளிக்கு போம்போது நானும் போவேனா ...அதான் சந்தோசம்.


முதல் நாள் போன போது பயம் . உன் பேர் என்ன என்று டீச்சர் கேட்டபோது , எம் பேரு சேக் சிந்தா மதார் மைதீன் , டீச்சர் என்றேன். { இதான் எம் முழுப் பெயர் }. ஆங் நல்ல பையன் , இந்தா முட்டாய் சாப்பிடு என்றார் டீச்சர் . எங்க வலது கையை வச்சி இடது காதைத் தொடுப் பாப்போம் .,என்று சொன்னார் டீச்சர் . நானும் கையை எடுத்து தலைக்கு மேல வச்சி ஒரு வழியா காதைத் தொட்டேன் .எங்கத் தெரு பயலுக பூரா பேரும் இருந்தாங்க . மிட்டாய் சாப்பிட்டு முடிந்ததும் , பக்கத்துல இருந்த பொம்பள புள்ளக்கிட்ட ஏப் புள்ள ஒரு முட்டாய் கொடேன் கேட்டேன். ஆம் புஸ்ஸூக்கு ! நானே இரண்டே ரெண்டு வச்சிருக்கேன் . ஒன் முட்டாய தின்னுட்டு எங்கிட்ட கேக்கிறியோல என்றாள் . சரி சரி ரொம்ப பீத்திக்கிறாதே என்றேன் . இப்படியே ஒரே ஜாலியா நாட்கள் ஓடியது .அப்புறம் கொஞ்ச நாள்ல எங்கம்மா குழந்தை { என் தம்பி } பெற போனாங்களா .நானும் என் தங்கையும் அம்மாக்கூட பாட்டி வீட்டுக்கு போயிட்டோம் . பாதி நாள் { மொத்த நாள்ல } பள்ளிக்கூடம் போகவே இல்லை .முழு ஆண்டு லீவு முடிஞ்சி நான் ரெண்டாப்பு போவனும் . பயலுக எல்லாம் சொன்னாங்க , எல சேக் , நீ ரெண்டாப்பு போக முடியாதே , டீச்சர் சொல்லிட்டாங்களே ஹைய்யா . என்று சொல்லிட்டானுக . ஹெட் மாஸ்டர் வந்தார் . ரெண்டாப்பு போற பையனுக பேரை எங்க டீச்சர் வாசிச்சாங்க . என் பேரை வாசிக்கலை . எனக்கு அழுகை அழுகையா வந்திச்சி . ஹெட் மாஸ்டர் எங்கப்பாவுக்கு தெரிந்தவர் தான் . தோட்ட சார் முத்தையா சார் எங்கப்பாக்கூட படிச்சவர் . டீச்சர் இவனை ஒன்னாப்புலயே போட்டுறலாம்ன்னு சொல்லுறீங்களா என்று ஹெட் மாஸ்டர் கேட்டார். ஆமா சார் என்று டீச்சர் சொன்னாங்க . தோட்ட சார் , " சார் இவன் நம்ம ஆளு பையன் அனுப்புங்க , எல நீ போலே " என்று சொன்னார் . எனக்கு ஒரே சந்தோசம் , தாங்கல ......


ரெண்டாப்பு :

ரெண்டாங்கிளாஸ் போன உடனே பசங்கள் எல்லாம் என்ன ! சார் உட்டுட்டாங்களான்னு கேட்டானுக . எனக்குள் ஒரே சந்தோசம் . அவனுகளுக்கு கடுப்பு . அப்புறம் ரெண்டாப்பு படிக்க ஆரம்பிச்சேன் . ரெண்டாப்பு டீச்சர் பேர் தெரியல . நல்ல டீச்சர் . அந்த டீச்சர் எங்கப்பாக்கு சொல்லிக் கொடுத்த டீச்சர்ன்னு அப்புறம் தான் தெரியும் , எங்கப்பா சொன்னாங்க . பள்ளிக்கூடத்தில் ஒரே விளையாட்டுதான் .


" பாம்பு வரும் பல்லி வரும் ஒரு குச்சிப் போடு !!! " . அப்புறம் , சிலெட்டுல தண்ணி வச்சி அழிக்கும்போது ஏன்சட்டை காயாது , காக்கா சட்டை காயும் !!!!.. காக்கா சட்டை காயாது , ஏன்சட்டை காயும் !!!!.. இப்படின்னு பாட்டு . டீச்சர் வருகைபதிவு வாசிக்கும் போது , சேக் சிந்தா மதார் மைதீன் , ஆஜர் டீச்சர் . இன்னும் சின்ன பெயராக் கிடைக்கலியா ... டீச்சர் இது எங்க தாத்தா வச்சது , என்றேன் . ரொம்ப பெரிய பேரா இருக்கு , ரிஜிஸ்டரில் இடம் காணல . சுருக்கிருவோமா என்று டீச்சர் கேட்டாங்க . முதல்ல உள்ள சேக்கையும் கடைசியில உள்ள மைதீனையும் சேத்திடுவோமால . எனக்கும் அந்த டீலிங் பிடிச்சிருந்தது . அந்த பெயர் { சேக் மைதீன் } பிடிச்சிருந்தது . இனிமே உன் பெயர் சேக் மைதீன் , என்ன சரியா என்று டீச்சர் சொன்னாங்க . சரி டீச்சர் . எனக்கு பிடிச்ச பெயரை வச்சிகிட்டு , வீட்டுக்கு வந்து எங்கப்பாகிட்ட சொன்னேன் . அவரும் சரின்னுட்டார் . எனக்கு சந்தோசமாயிருந்தது .....


அப்ப , எனக்கு லீவு லட்டரை பற்றி விவரமே தெரியாது . ஒரு தடவை , எங்க பெரியம்மாவோட அப்பா இறந்துட்டாங்க . அதுக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு உடனே போகனும் . டீச்சர்கிட்ட லீவு கேட்டேன் . எத்தனை நாள்ன்னு கேட்டாங்க . எனக்கு விவரம் தெரியாதா , நான் , டீச்சர் 4 வாரம் லீவு வேணும் . போகக்கூடாது . லீவு லெட்டர் கொடுத்துட்டுப்போ . டீச்சர் 40 நாள் . உஹும் , லீவு லெட்டர் கொடு . டீச்சர் 4 மாதம் , 4 வருசம் . உஹும் முடியாது , லீவு லெட்டர் கொடு என்றார் டீச்சர் . எனக்கு அழுகை வந்திருச்சு .அழுதுகிட்டு இருக்கேன் . அந்த சமயம் என் தங்கையும் என் மாமாவும் வந்தாங்க . மாமா டீச்சரிடம் டீச்சர் இவனுக்கு 4 நாள் லீவு கொடுங்க . திருச்சிக்கு போகனும் . .. கூட்டிக்கிட்டு போங்க இவனை , ஒரே அழுகை.... .

மூனாப்பு :மூனாப்பு சேர்ந்த உடன் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன் . அப்போ என் தங்கை ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்தாள். அவ கொஞ்சம் துருதுரு என்று இருப்பாள் . தொட்டியில ஏறி விளையாண்டு சேட்டை பண்ணி இருக்காள். டீச்சர் அவளை அடித்து உங்க அண்ணனை கூட்டி வா என்று அனுப்பி இருக்கிறார் . என் தங்கை அழுதுகொண்டு வந்து என்னை கூட்டிக் கொண்டு போனாள் . " இது யாரு உன் தங்கச்சியா ! ரொம்ப சேட்டை . இவ பெய்ரு இந்த கிளாஸில் இல்லை . எங்கன்னு பார்த்து சேர்த்து விடு ! " என்றார் . நானும் அவ கிளாஸ் எது என்று பார்த்து சேர்த்து விட்டேன் .


ஒரு சில மாதம் கழித்து நான் படிக்கும்போது விளையாடிக் கொண்டு இருந்தேன் . அப்போது என் மூக்கில் பொடி கல்லை போட்டுவிட்டேன் . வலி தாங்க முடியவில்லை . உடனே டீச்சர் என் வீட்டுக்கு ஆளை அனுப்பி எங்கப்பாவை கூட்டி வந்து ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தார் .ஒரு தடவை நான் ஒண்ணுக்கு போகும் போது மரத்தடியில் என் தங்கையோட வகுப்பு நடந்து கொண்டிருந்தது . நான் என் தங்கைக்கு டாட்டா காட்டி கொண்டிருந்தபோது வாசல் படி தடுக்கி கீழே விழுந்து மண்டையில் அடிப்பட்டு விட்டது . உடனே என் தங்கை ஓடிப்போய் எங்க வீட்டுல எல்லாத்தையும் கூட்டி வந்து விட்டாள் .


எங்க பள்ளிக்கூடம் , எங்க வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கு . டீச்சர் பரவாயில்லையே அண்ணனுக்கு அடிப்பட்ட உடனே ஆளைக் கூட்டிட்டு வந்திட்டியே என்று என் தங்கையை பாராட்டினாங்க .

நாலாப்பு :


நாலாப்புல இருந்து ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சேன் , என்று நினைக்கிறேன் . நல்லா படிச்சேன் . ஒரு நாள் எங்க கிளாஸ் சார் எல சேக் மைதீன் எந்திரு என்றார் . எனக்கு பயம் , எங்க அடிக்க போறாரோ என்று .. .. . இவண் தான் நம்ம கிளாஸ் லீடர் .என்ன சரியா என்றார் .எனக்கு ஒரே சந்தோசம் . ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது .

ஐந்தாப்பு :ஐந்தாப்பில் நான் தான் எல்லா மாதத் தேர்விலும் முதல் ராங்க் எடுத்தேன் . என் கூட எல்லா பயலுகளும் , பொம்பள புள்ளைகளும் போட்டிப் போட்டாங்க . ஒரே போட்டி யார் முதல் ராங்க் எடுப்பது என்று . ஆண்டு விழாவில் எனக்கு தான் பரிசு .இப்படி பள்ளி பருவத்தில் ரொம்ப ஜாலியா இருந்தது . அத இப்போ நினைத்து பார்த்தால் அப்ப இருந்த சேக்கா இப்போ இப்படி என்று தோணும் .


நான் படித்த பள்ளியிலும் சரி , காலேஜ்ஜிலும் சரி எனக்கு நல்ல பெயர் உண்டு . எல்லா ஆசிரியர்களும் என்னிடம் அன்பா இருந்தாங்க .


என்னாடா இது என்னை பற்றி எழுதும் போது , வேற யாரோ சேக் மைதீனை பற்றி எழுதி இருக்கேனே என்று பார்க்கீங்களா ...../..


இங்க ஸ்டார்ஜன் பற்றி சொல்லவே இல்லையே என்று நினைக்கிறீங்கன்னு தெரியுது .

என்னோட உண்மையான பெயர் சேக் மைதீன் தான் ..ஸ்டார்ஜன் என்பது நானா கொடுத்துக்கிட்ட பெயர் .தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,


சுரேஷ் (கனவுகளே )
முரளிக்கண்ணன் ( நிரோடை )
வசந்த் ( பிரியமுடன் வசந்த் )


விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

Post Comment

Friday, June 19, 2009

பறவையைக் கண்டான்

பறவைகள் பறக்கும் போது என்னே ஒரு அழகு ... அதைப்பார்க்கும்போது என்னே ஒரு சந்தோசம் !!! நமக்குள் ஏற்ப்படுகிறது ...


பறவையை கண்டான் !..விமானம் படித்தான் ஒரு கவிஞன் பாடினார் .

அதனாலே நமக்கும் பறவைக்கும் ரொம்ப தொடர்பு உண்டு .


நீங்கள் இந்த மாதிரி பறவைகளை கண்டு ரசிக்க வேடந்தாங்களுக்கோ ,அல்லது வேறெந்த பறவைகள் சரணாலயத்துக்கு செல்ல வேண்டும் ....


அங்கே வந்த சில பறவைகளை இங்கே படமாக தந்துள்ளேன் ...


அதை கண்டு ரசியுங்கள் ....


இதுக்கு பெயர் Cedar Waxwing

இதுக்கு பெயர் Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து)...


இதுக்கு பெயர் racket-tailed . இது ஸ்ரைக் வகை பறவை . இதன் தலை ராக்கெட் மாதிரி இருக்குமாம் . இது மேற்குத்தொடர்ச்சி மலை காண கிடைக்குதாம் ...
இது மயில் ... இது எல்லாத்துக்கும் தெரிந்தது ....
மயில் தோகை விரிக்கிற அழகே தனி தான் என்னே அழகு !!!!இதுக்குபெயர் நத்தைக் குத்தி நாரை
இதுக்கு பெயர் ஓர் வேட [oor veda]

இதுக்கு பெயர் Downy Woodpecker [மரங்கொத்தி ]இதுக்கு பெயர் ஓபன் பில் எனப்படும் அகன்றவாய் நாரை
இதுக்கு பெயர் ஊசிவால் வாத்து . இது கனடாவிலிருந்து வந்ததாம் .


இதுக்கு பெயர் வழுக்கை கழுகு. [ PALD EAGLE ].

Post Comment

Wednesday, June 17, 2009

பட்டுப்பூவே மெட்டுப்பாடு

வண்ணத்துப் பூச்சிகள் ஐ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா ....
வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ? மேலும் வண்ண வண்ணமா அத்தனை வகையான இனங்களாக அறியப்படுவதாலும் இவைகள் நம் உலகில் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு பெண்களும்-வண்ணத்துப் பூச்சிகளும் இரண்டர கலந்து விட்டதோ!

இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை காணப்பெறலாம்.

(Bird wing) என்றொரு வகையான வண்ணத்துப் பூச்சிதான் மிக்க பெரிதாக அரையடி நீளத்திற்கு (இறகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு இறகின் முனை) பெரிதாக நீல கண்ணைப் போன்ற புள்ளியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்ட பூச்சி. அழகோ! அழகு!!!...


பூச்சி வகைகளே உலகத்தில் அதிகப்படியான இன வகைகளாக அமையப் பெற்றதால் புதிது புதிதாக முன்னமே அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட எல்லா விதமான பூச்சி இனங்களும் முட்டையிட்டு அதன் பிறகு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் (developmental stages) படிப்படியாக முதிர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை வளர்சிதை மாற்றம் என அறியலாம். நாம் அறிந்த பூச்சி இனங்கள்லே இரண்டு விதமான வளர்சிதை மாற்ற முறை நடைபெறுகிறதாம்.

வெட்டுக்கிளி, புள்ளப்பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் தட்டாம் பூச்சி இவைகள்லே என்ன நடக்குதாம் முழுமையற்ற வளர்சிதை மாற்றம்; எப்படின்னா,

முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இறக்கை மட்டுமில்லாம அதோட அம்மாப்பாவை ஒத்தே இருக்குதாம். இந்த பருவத்துக்கு பேரு நிம்ஃப்(Nymph) ஆம்.இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி, வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில்.

இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல.நான்கு நிலைகளை (முட்டை, லார்வா, ப்யூப்பா மற்றும் அடல்ட்) இவைகள் தாண்டி வர வேண்டியதா இருக்கு, அதற்கு பல புறக்காரணிகளும் சாதகமா இருக்கிற பட்சத்தில தடையின்றி அடுத்த தலைமுறைக்கான குடும்ப பொறுப்பை ஏத்துக்க ரெடியாகிடுதுகளாம்.

இப்போ ஒவ்வொரு படியா(stage) தாண்டி நாமும் போவோம், ரொம்ப உள்ளர போயிடாம. அசராம வாங்க! படிக்க ஆர்வமா இருக்குங்கிறதுக்காக இப்போ நாம வண்ணத்துப் பூச்சிய மட்டும் சுட்டிப் பேசுவோம்.எங்கெல்லாம் நான் பூச்சின்னு சொல்றேனோ அங்கே நீங்க வண்ணத்துப் பூச்சிய எடுத்துக்கூங்க .
முட்டை (Egg):
நாம எல்லாம் சாதாரணமா பார்த்திருப்போம் ரெண்டு வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து பறந்துகிட்டு திரியுறதை. அதப் பிடிச்சி பார்த்தோம்னா அதில ஒரு ஆண், ஒரு பெண் இருப்பாய்ங்க. அதுக ரெண்டும் சேர்ந்து முட்டை தயார் செய்ற வேலையில இருக்குதுகன்னு மட்டும் எடுத்துக்குவோம், சரியா!அதுக்குப் பிறகு பெண் பூச்சி என்ன பண்ணுது முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்திலோ இல்லன்னா இலைகளின் அடிக் காம்புகளில் நூற்றுக்கணக்கா இட்டு வைச்சிருதுகளாம்.

இந்த முட்டைகள் சில நேரத்தில ரொம்பச் சின்னதாவும் வெறுங் கண்ணாலே பார்க்க முடியாத அளவிற்கு கூட இருக்கும் போல. அது ஏன் காம்பிலேன்னு கேட்டீங்கன்னா, இலையே பட்டு கீழே விழுந்துட்டாவோ, இல்ல மற்ற ஜீவராசிகள் அந்த இலையை திண்ணுப்புட்டாக் கூட அதன் காம்பு மரத்துடன் இணைந்து இருக்குமிடத்தில் இருந்து போனா மிச்சம் மீதி முட்டைகள் பொரித்து அடுத்த படிக்கு முன்னேறுமில்லே, அதான்.சரி, இந்த முட்டையிடுற காலம் தாவரங்களில் உணவு கிடைக்கும் பருவ காலத்தை முன்னிட்டு இருக்குமாம். அப்பத்தானே அந்த கம்பளிப் புழு(cattepillar) நிலையில சாப்பிட நிறைய கிடைக்கும் அதுனாலே.
இப்போ, இதிலருந்து அடுத்த படி என்னான்னா...
கம்பளிப் புழு நிலை (Catterpillar Stage):
நாம இந்தப் பருவத்தை பார்த்திருக்கலாம் வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங்கள்லே. அதான் புழு மாதிரி வண்ண வண்ண நிறங்களில் அதன் உடம்பு முழுக்க முடி மாதிரியான சுனைகளுடன் ஊர்ந்து இலைகளை மென்னு மேய்ஞ்சிக்கிட்டே இருக்கிறதை.இதன் முழு வேலையே சாப்பிடுறதுதான் பொழுதன்னிக்கும். ஏன்னா, இப்போ சாப்பிட்டு வைச்சிக்கிறதுதான் பின்னாளில் ரொம்ப உதவப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு. நான்கைந்து முறை இந்தப் பருவத்திலயே இதன் தோலுறித்தல் நடைபெற்றும் விடுவதால் நிறைய சக்தி தேவைப்படுது. இதன் பிறப்பு பருவத்திற்கும் இந்தப் படி நிலையின் வளர்ச்சி நிலைக்கும் வைச்சிப் பார்த்தா கிட்டத்தட்ட நூறு மடங்கு வித்தியாசத்தில உடம்பு போட்டுருக்குமாம். இப்படியே ஊர்ந்து, நகந்து அடுத்ததிற்கு போயி...

ப்யூப்பா நிலை(Pupa Stage):

இந்த நிலையில சுத்தமா சாப்பிடுறதை நிப்பாட்டிட்டு மெதுவா நகர்ந்து இலையோட இலையாவோ, இல்ல மண்ணுக்குள்ளரயோ ஒரு மெழுகுக் கூட்டை கட்டிக்கிட்டு சுருண்டுக்கிறாய்ங்களாம் உள்ளரயே. இந்த சமயத்திலதான் முக்கியமான சிதைவுகள், மறு கட்டமைவுகள்னு உள்ளர பட்டைய கிளப்பிட்டு இருக்குதுகளாம். எங்கங்கோ மறைந்திருந்த செல்களிலுள்ள செய்திக் கோர்வைகளை கொண்டு எங்கே எந்த உடற் பாகங்கள் இருக்கணுமோ அவைகளை அங்கங்கே வைச்சு வளர்ரதெல்லாம் இந்த நிலையிலதான். இந்த வளர்ச்சி இரண்டு மாசத்திலும் நடை பெறலாம், இரண்டு வருஷமும் எடுத்துக்குமாம் அது கொடுக்கப்பட்ட இன பூச்சி வகையைக் கொண்டு அப்படி நடக்குதாம்.
என்னடா இது முட்டை வடிவத்தில கூட்டைக் கட்டிக்கிட்டு வெளியில வர ரொம்ப கஷ்டப்படும் போலவேன்னு நாம உடைச்சு கொஞ்சம் ஈசி பண்ணிடுவோம்னு நினைச்சு ஏதாவது பண்ணி வைச்சோம். அம்பூட்டுத்தான் அதோட மிச்ச மீதி வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான் (இப்போ ஒப்பீடு பண்ணிக்கோங்க பெண்/ஆண் குழந்தைக வளர்ச்சி நிலையில எங்காவது ஒரு சறுக்கல் நடந்தா என்னாகுதோ அதே தான் இங்கும்...).ஒரு கொசுறுச் செய்தி, இந்த மெழுகுக்கூட்டை கட்டிக்கிது பார்த்தீங்களா அதத் தான் நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க. அதுவும் காந்தி பொறந்த, ஆன்மீகத்தில நெம்பர் ஒன் இந்தியாவில இந்த அநியாய்ம்ங்க.

அடல்ட் அல்லது இனப்பெருக்க நிலை:
இங்கன வைச்சித்தான் நம்மில் பல பேருக்கு வண்ணத்துப் பூச்சின்னா என்னான்னே தெரியும். அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் பார்த்தீங்கன்னா நான் முன்னே கொடுத்திருந்த பின்னூட்டத்தில நினைச்சிட்டு இருந்தவங்க நிலைதான். எல்லாம் கடவுள் அந்தரத்தில இருந்து தொபுக்கடீர்னு வண்ண வண்ணமா பறக்க விட்டுடுறார்ங்கிற அளவில.இந்த நேரத்தில வைச்சிப் பார்த்தா எத்தனை விதமான இயற்கை நடத்தும் விந்தைகள்னு நினைச்சு ஆச்சர்யப்படுவோமில்லையா.
ஏன்னா, புழுவா இருக்கும் பொழுது சில நேரத்தில குட்டைக் கால்களும், பல கண்கள் மாதிரியுமா இருந்திருக்கும். அடல்டா பார்க்கும் பொழுது நீண்ட கால்கள், கூட்டுப் பார்வை கிட்டக் கூடிய கண்கள், அழகான நிறத்தில் உள்ள இறக்கைகள் அப்படின்னு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விசயங்கள் கூட்டுக்குள்ளர நிகழ்ந்துருச்சே. நம்ம மனுசப் பசங்களும் இப்படித்தானே!இதில பார்த்தீங்கன்னா இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறோம்ல இவைகளை, ஆனா, இதுகளில் ஒரு சிலது தான் சாப்பிடுதாம். அதுவும் பூக்களில் உள்ள நெக்டார்களை உணவாக. பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம். வந்ததே தன்னோட பார்ட்னரை கண்டுபிடிச்சு இனப்பெருக்கம் பண்ணத்தாங்கிற அளவில பறந்து திரிஞ்சு ஆளையும் கண்டுபிடிச்சு வேலையை ஆரம்பிச்சிடுதுகளாம்.
கடமையே கண்ணாயிரமா!இந்த நிலையில இந்த நெக்டார்களை (தேன்) எடுக்குதில்லையா அப்போ அப் பூக்களிலுள்ள மகரந்தத் தூளை போட்டு பொரட்டிக்கிட்டு அடுத்த பூவிற்கு விஜயம் பண்ணும் பொழுது அங்கே கொண்டு போயி அதுகளை விட்டுடுதா அதுனாலே மரங்கள் இனப்பெருக்கம் பண்ண உதவிப் போடுதுகள். எப்படி இயற்கையின் பரிணாம செட் அப்பு. ஒன்றை நம்பி மற்றொன்று.இந்த நிலையில ஒரு சில பூச்சிகள் கால சுழற்சியை(குளிர் காலத்து) ஈடுகட்ட பல மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்(Hibernation) போயிடுரதுமுண்டாம். ஆனா, பல வகை பூச்சிகளில் இதனோட வாழ்க்கை கால அளவோ இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள்ளே முடிஞ்சிடுதாம்.
என்னே !!! ஒரு வாழ்க்கை சுழற்சி வண்ண வண்ணமா! ....

Post Comment

என் கேள்விக்கு.... என்ன பதில் !!

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?...

இது நானா கொடுத்துகிட்ட பெயர் ... இதுவும் நல்லாத்தான் இருக்கு ...

2. உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?.....

என்ன இப்படி கேட்டுபுட்டிங்க ... பிடிக்காமலியா...

3. கடைசியாக அழுதது எப்போது?...

எதுக்குங்க அழுவனும் ..... என் ராஜா ....அழுவக்கூடாது என்ன சரியா ....தைரியமா இருக்கோனும் .... அம்மா சொன்னது !! ..

4. பிடித்த மதிய உணவு?...

சவுதி யில் ஓட்டலுக்கு போனா கப்சா தான் ... நான் சமைக்கிறது தான் பிடிக்கும் ...
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?....

எல்லோரும் நம் நண்பர்களே ....

6. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா...

அருவியில குளிக்கப் பிடிக்கும் ..

7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?...

ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேசும் கருத்துக்களை நன்றாக கவனித்து பதில் கூறுவேன்.
நான் சொல்லும் விஷயத்தை புரிந்து கொள்கிறாரா என்பதை, அவருடைய முக உடல் பாவனைகளை பார்ப்பேன்...

8. உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?...
பிடிக்காத விஷயம் ..
ஒன்னும் இல்லாத விஷயத்தை பற்றி வளவளவென்று பேசுவது..
பிடிச்ச விஷயம் ...
எது செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் ...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?..
மனதில் ஏற்படும் கோபத்தை ஓரிரு நாட்களுக்கு மேல் நீட்டிக்காதது. மனைவி கிட்ட பிடிக்காததுன்னு எதாவது இருக்க முடியுமா? இந்த கேள்வியே தப்பாச்சே:)
எல்லாமே பிடித்தது...

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?...
அப்படி எதுவும் இல்லை....
நல்ல தலைவர்கள் கூட இல்லியே என்ற வருத்தம் தான் ....

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?..
ப்ரெளன் கலர் சட்டையும் சிமெண்ட் கலர் பேண்டும்.....


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?...
என்ன !! உங்களை பார்த்துக்கொண்டு ...
இளையராஜா பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கேன்.....

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?.....
புளுக்கலர்

14. பிடித்த மணம்?.....
மல்லிகைப்பூ மணம்.....
அப்புறம் தமிழ் மணம்..... எப்பூடி.......

15. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?.....
நோ கமெண்ட்ஸ்....

16. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?.....
நோ கமெண்ட்ஸ்....

17. பிடித்த விளையாட்டு?.....
கிரிக்கெட்.

18. கண்ணாடி அணிபவரா?......
இல்லை .

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?.....

நல்ல கதை உள்ள படம் ,காமெடி ,காதல ,படங்கள் பிடிக்கும் ...

20. கடைசியாகப் பார்த்த படம்?...

பசங்க.

21. பிடித்த பருவ காலம் எது?...
வசந்த காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?....

. சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி.

23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?.....
வாரம் ஒரு முறை ....

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?.....
பிடித்தது நிசப்தம் .....
பிடிக்காதது இரைச்சல் ..

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?.....

வேரங்கே !!! சவுதி அரேபியாவுக்கு தான் ....

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?....

காலேஜ் படிக்கும்பொது கதை கட்டுரை எழுதிய ஞாபகம் ..
இப்போதும் உண்டு என்று ஞாபகம் ..

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?.....

தப்பு நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் மனோபாவம் எல்லோருக்கும் உண்டு ..
நல்லது செய்ய நினைக்கும்போது அதை தடுப்பவர்கள் ...

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?....

மனம்
எதுவும் தப்ப நடந்திடுமோ ... என்ற பயம் .
அப்புறம் , நல்லதே நடக்க !
இறைவனிடம் வேண்டுதல் ....

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?...

. மலை சார்ந்த சுற்றுலா தலங்கள் பிடிக்கும் .
குற்றாலம் , ஊட்டி , கொடைக்கானல் ...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?....

நன்றாக உழைத்து , சம்பாதித்து , நாலுபேர் சொல்ல நன்றாக வாழவேண்டும் ...

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?....

அவங்க செய்யாத காரியத்தை செய்து , பாராட்டு வாங்குவது ..
சர்ப்ரைஸ்கள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?....


வாழ்க்கையே ஒரு மாயை தான் . அதில் எவ்வளவு பிரதிபலிக்க வேண்டுமோ அவ்வளவு பிரகாசிக்கவேண்டும் ....

Post Comment

Tuesday, June 9, 2009

இயற்கை எனும் பூங்காற்றே ....

இயற்கை வைத்தியம் பற்றி நான் படித்தவை

மக்காச்சோளக் கதிர் மருத்துவம்: யுனானி முறை
நாம் உணவாகப் பயன்படுத்தும் மக்காச் சோளம் தவிர அக்கதிரின் ஜடைநார், சக்கை ஆகியவை மகத்தான மருத்துவக் குணம் கொண்டவை என யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறைவனின் படைப்பின் வியப்பூட்டும் விந்தைச் செய்திகளைப் படித்துப் பயன்பெறுங்களேன்.


மக்காச்சோள விதை: இதை உணவாகப் பயன்படுத்த யுனானி மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தாய்ப்பால் பெருகும். மக்காச்சோள கஞ்சி சீதபேதியைக் குணப்படுத்தும்.


மக்காச்சோளக் கதிர்ஜடை நார்: சோளக்கதிர் ஜடை முடியை நிழலில் உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 12 கிராம் மக்காச்சோளக் கதிர் ஜடைநாரைப் போட்டுக் கொதிக்க வைத்து 'டீ' போன்று தினம் இருமுறை குடித்து வந்தால்
1 .சிறுநீரகவலி
2. சிறுநீர் அடைப்பு
3. சிறுநீர்ப்பாதைப்புண்
4. வீக்கம் குணமடையும்
5. தாராளமாகச் சிறுநீர் பிரியும்
6. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.
ஆறு கிராம் சோளக்கதிர் ஜடைநாரை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் குணமாகும் நோய்கள்:
1. இதய நோய்கள்
2. இந்திரியப்பை புண், வீக்கம்
3. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்
4. பித்தப்பை கற்கள்
5. மஞ்சள் காமாலை
6. கல்லீரல் வீக்கம்
7. கல்லீரல் செயலிழப்பு
8. ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம்


மக்காச் சோளக் கதிர் சக்கை: விதைகளை எடுத்தபின் சக்கையை வீசி விடுகிறோம். ஆனால் அதிலும் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்களைப் படியுங்கள்.


சோளக்கதிர் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிட,
1. மூலக்கட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறும் ரத்தம் கட்டுப்படுத்தப்படும்.
2. அதிகளவு மாதவிலக்கு ஏற்படுவதையும் தடுக்கும். இச்சாம்பலைச் சிறிது உப்பு கலந்து சாப்பிட,
1. இருமல் நீங்குகிறது
2. சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது
3. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.
இவையெல்லாம் யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்.


நீர்ச்சுருக்கு
சிறுநீர்ப்பாதையில் முள் சொருகியது போல் வலிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாது. வலியும் அதிகமாக இருக்கும். சிறுநீர் அளவில் குறைவாக வலியுடன் வெளியேறுவது நீர்ச்சுருக்கு எனப்படும்.


மருத்துவம்
1. தண்ணீர் நன்றாகக் குடிக்க வேண்டும். தினம் 8 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
2. நீரைக் கொதிக்க வைத்து அதில் பொரித்த சீரகத்தைக்{1டேபிள் ஸ்பூன்} கலந்து குடிக்கலாம். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் சீரகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
3. முள்ளங்கியைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கி இடித்துச் சாறு பிழிந்து 50 மி.கி. சாறில் சம அளவு நீர் சேர்த்து காலை, மாலையில் உணவுக்கு முன்பு சாப்பிட சிறுநீர் நன்கு பெருகும்.
4. முள்ளங்கிச் செடியின் கொழுந்து இலை 20 கிராம் எடுத்து சோற்றுப்பு(கல் உப்பு) சிறிது சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் அடைப்பு நீங்கும்.
5. முள்ளங்கிக் கிழங்கை சமையலில் அடிக்கடி சேர்த்துச் சாப்பிட நீர்க்கடுப்புடன் மலச்சிக்கலும் நீங்கும்.
6. முள்ளங்கி விதைகளைக் கழுவி 10 கிராம் விதைகளை 200மிலி நீரில் இரவு ஊறவைத்து, அதிகாலையில் குடிக்கலாம்.
7. முள்ளங்கி விதைகளை இள வறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து காலை, இரவு உணவுக்குப் பின் இரண்டு கிராம் பொடியை நீர் அல்லது வெல்லத்துடன் கலந்து சாப்பிட சிறு நீர் பெருகும்.
தீமை: முள்ளங்கியை அதிகளவில் பயன்படுத்தினால் மூட்டுக்களில் வாதம் ஏற்படும்.


பெப்டிக் அல்சர்
பெப்டிக் அல்சர் என்பது வயிற்றுப்பகுதி, முன் சிறுகுடல் பகுதி, உணவுப்பாதை ஆகியவற்றில் ஏற்படும் புண்.
காரணம்:
1. நேரம் தவறி சாப்பிடுதல்
2. காரமான உணவு உட்கொள்ளுதல்
3. வைட்டமின் பற்றாக்குறை
4. மனக்கவலை, மன அழுத்தம், கோபம், பயம்


மருத்துவம்
1. மணத்தக்காளிக்{மிளகுத் தக்காளி} கீரையை சமைத்துச் சாப்பிடலாம். சூப் செய்தும் சாப்பிடலாம்.
2. மணத்தக்காளி வற்றலை நல்லெண்ணையில் பொரித்து தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அல்சர் குணமாகும். சளித்தொல்லையும் நீங்கும்.
மணத்தக்காளிக் கீரையை வீட்டில் வளர்த்து பயன்பெறலாம். மணத்தக்காளி வற்றல் நாமே தயார் செய்து கொள்ளலாம்.


மணத்தக்காளி வற்றல் தயாரிக்கும் முறை:
மணத்தக்காளிக் காயை ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து இரவு புளித்த தயிரில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் ஊறியபின் தயிர் வற்றியதும் வெயிலில் வைத்து நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பித்தம்
பித்தத்தினால் தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். இதைத் தவிர்க்க கீழாநெல்லிச் செடியை முழுதாக புளித்த தயிர்விட்டு அரைத்து ஒரே உருண்டையாக உருட்டி அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.

நன்றி "தாருல் ஸஃபா

Post Comment

Sunday, June 7, 2009

நான் STARJAN .... ரெடி ...நீங்க ரெடியா ?...

நாம் ஒவ்வொரு பொருளை வாங்குவதற்கு முன்னால் அதைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்போம் . சிலபேர் அதைப்பற்றி ரொம்ப யோசிப்பாங்க . அந்த பொருள்களின் தரம் , விலை ,நண்பர்களிடம் கேட்டல் ,இப்படி நிறைய தெரிந்த பின் வாங்குவார்கள் .

ஒரு பொருள் சந்தைக்கு வரும்போது அதைபற்றிய விவரங்கள் அந்தந்த கம்பெனிகளில் விளம்பரங்கள் கொடுப்பாங்க .
அதுவும் மக்களை ரொம்ப கவருகிற மாதிரி விளம்பரம் செய்வாங்க . அதை பார்த்த மக்கள் , ரொம்ப பிடித்துபோய் உடனே வாங்கிடுவாங்க .
கம்பெனிகள் நிறைய விளம்பரம் செய்து மக்களை கவருவாங்க . விதவிதமா விளம்பரம் செய்து மக்களுக்கு தம் கம்பெனிகளின் வியாபாரத்தை பெருக்குவாங்க .
அப்படி, நிறையபேர் மனதில் விளம்பரங்கள் பதிந்து இருக்கும் . டிவியில் நமக்கு பிடித்த வரும்போது அதை விரும்பி பார்ப்போம் . இப்போது டிவி ப்ரோகிராம்களில் விளம்பரங்கள் தான் முக்கிய இடத்தை பிடிக்கின்றன . அந்த அளவுக்கு விளம்பரத்தை நம்மிடமிருந்து பிரிக்க முடியாது .

அப்படி ,
நமக்கும் எனக்கும் பிடித்த விளம்பரங்கள் என்னன்னா ....

  1. வாஷிங் பவுடர் நிர்மா ... வாஷிங் பவுடர் நிர்மா .... நிர்மா விளம்பரத்தை யாராலும் மறக்கமுடியாது .....
  2. ஷாலிடர் டிவி விளம்பரம் .... இந்த விளம்பரத்தை மோகன் நடித்த பாடுநிலாவே படத்தில் கூட காட்டி இருப்பாங்க ... அப்புறம் ரஹ்மான் நடித்த புதுபுது அர்த்தங்கள் படத்திலும் காட்டி இருப்பாங்க ....
  3. BPL TV விளம்பரம் .... VIDEOCAN .... ONEDA TV விளம்பரம் ....
  4. ரின் சோப்பு விளம்பரம் .... 501 சோப்பு விளம்பரம் .....
  5. ரேக்ஸ்சூனா விளம்பரம் .... SANTHOOR ...சோப்பு விளம்பரம் .....
  6. மேனி பராமரிப்புக்கு என்றென்றும் ஷிந்தால்..... ஷிந்தால் சோப்பு விளம்பரம்
  7. உங்க மேனியின் அழகுக்கு காரணம் ...! என்றுமே LUX தான் .....
  8. ஹமாம் சோப்பு விளம்பரம் .... இன்னக்கி எல்லோரையும் ரொம்ப கவர்ந்த விளம்பரம் .... இதை யாராலும் மறக்க முடியாது ....
  9. சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி விளம்பரம் .....
  10. கோல்ட்வின்னர் சன்பிளவர் ஆயில் விளம்பரம் .....

இப்படி நிறைய விளம்பரங்கள் நமக்கு பிடித்து இருக்கும் ......

உங்களுக்கு பிடித்த விளம்பரங்கள் இருந்தா சொல்லுங்க .....

Post Comment

Wednesday, June 3, 2009

இந்தியா -பாகிஸ்தான் பிரிவின் போது....

இந்தியா -பாகிஸ்தான் பிரிவின் போது

மக்கள் இடம் பெயர்ந்த படங்கள்.

எத்தனை துயரங்களுக்கு மத்தியில் பயணப்படுகிறார்கள் என்பதை

நீங்களே பாருங்கள் ....
பிறந்த மண்ணில் இருந்து பயன்ப்படுகிறோம் .....நம் சொந்தங்களே கவலைப்படாதிர்கள் , நம்மை இறைவன் காப்பாற்றுவான் ...
சென்று வருகிறோம் {சாரி , திரும்பி வருவோமா ...}....என்னங்க ! எனக்கு கால் வலிக்கிறது ..
அம்மா ! எனக்கு பசிக்கிறது ...
அய்யா ! எனக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுங்க ...
டேய் பேராண்டி ! என்னை தூக்கிட்டு போடா !!!!
சீக்கிரம் ! மழை வருவதற்குள் முடித்தாக வேண்டும்


இனி இங்குதான் இருப்போமா ..., நம் நாட்டிற்கு போகமாட்டோமா ....

வேலை முடிந்து சீக்கிரம் போக வேண்டும் ...
குழந்தை பட்டினியாக இருப்பான் ....

நாம் வாழ்க்கையிலே ,
பொறுமையுடன் இருந்து நல்லபடியாக சம்பாதித்து ,
நம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி,
நாடு போற்ற முன்னேற வேண்டும் ......

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்