Pages

Thursday, December 31, 2009

புத்தாண்டே வருக ...


வருவாய் நலம் தருவாய்

எங்கள் இனிய புத்தாண்டே

சாதி மத மூட நம்பிக்கைகளை

கலைத்தெறியும் முகமூடியாய்

வாழ்வில் வசந்தம் பொங்கிட‌

நல் உள்ளங்களைக் கொண்ட

அன்பர்களையும் நண்பர்களையும்

தந்தருள்வாய் நீயே

பொறாமை தீ பொசுங்கிட

எல்லா வளமும் பெற்றிட

நாடும் வீடும் நலம் பெற

நாமும் உயர்ந்திட

நல்லதொரு இனிய புத்தாண்டினை

எங்களுக்கு நீயே

அருள் புரிவாய் எங்கள் இறைவா ....***********************************
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Post Comment

Wednesday, December 30, 2009

யாருண்டு ? ...அலையே சிற்றலையே

என்ன வேகம் எங்கே போற !!

நாங்கள் உலா வருவது

பிடிக்கலியா உனக்கு ?

நான் அம்மாவிடம் பாப்கார்ன்

கேட்டபோது அம்மாவை காணோமே !

எங்கேன்னு கேட்க தெரியாது எனக்கு

பதில் வந்ததோ உன்னிடம் வந்தார்களென !

எனக்கு பசிக்கிறது ! சோறூட்ட யாருண்டு ?

ஐஸ்கிரீம் வாங்கித் தர யாருண்டு ?

என்னில் அன்பு செலுத்த யாருண்டு ?

பள்ளி அனுப்ப யாருண்டு ?

என்னைத் தாலாட்ட யாருண்டு ?

நீ எடுத்துக் கொண்டால் எனக்கென யாரு ?

உனக்கு அம்மா வேணுமின்னா

எங்கம்மாவை எடுத்துக்கிட்ட !!!

சொல்லு அலையே சிற்றலையே !!

உன் கோபத்துக்கு நாங்களா ...

நான் அம்மாவைத் தேடி

தினமும் வருவது தெரியலியா

நீ அனாதையென்றால்

நானும் ஆகணுமா அனாதை ?

திருப்பிக் கொடு அலையே

எங்கம்மாவை எனக்கு ....
*****************************************
இந்த பதிவு 2004 ல் டிசம்பர் 26 ல் சுனாமியால் இறந்தவங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் .

இறந்தவங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திப்போமா ....Post Comment

ரெட்டை ஜடை வயசில் நான் ...

ரெட்டை ஜடை வயசு படம் நம்ம அஜித் தல நடித்து 1997 ல் வெளி வந்தது . இதுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு . அந்த கதை என்னன்னு தெரிந்து கொள்வதற்கு முன்னாடி இந்த படத்தை பத்திய விமர்சனம் பாக்கலாமே ...

ரெட்டை ஜடை வயசு படம் நம்ம தல அஜித் , நம்ம பிகர் மந்த்ரா நடித்து சிவக்குமார் இயக்கத்தில் 1997 டிசம்பரில் வெளிவந்தது .

சும்மா துருதுருவென சுற்றித்திரியும் நம்ம தல அஜித் காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி .. என்று பாட்டுப்பாடி ஜாலியாக இருக்கிறவருக்கு மாமா கவுண்டமணி துணை . சும்மா தளதளவென இருக்கும் மந்த்ரா அஜித்துக்கு அத்தைப்பெண் .

இருவரும் விரும்புகின்றனர் . அப்போது அஜித்தின் அக்கா மாப்பிள்ளையான பொன்வண்ணனுக்கு கிட்னி பெயிலியர் . நம்ம தல தான் கிட்னி கொடுத்து காப்பாத்துகிறார் . அஜித்துக்கு தன் பெண்ணை கொடுக்க நினைக்கும் அத்தை , பின் வாங்குகிறார் .

தன் மகனுக்கு கிட்னி கொடுத்த மருமகனின் பெருந்தன்மையை எண்ணாமல் , ஒரு கிட்னி இல்லாததால் , தன் மகள் வாழ்வுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்றெண்ணி தன் உறவுக்கார பையனான அஜய் ரத்னத்துக்கு ( போலீஸ் அதிகாரி ) மணமுடிக்க நினைக்கிறார் .

தன் அத்தையின் மனதை மாத்தி , அஜய் ரத்னத்தின் சூழ்ச்சியை வென்று தல மந்த்ராவை கரம்பிடிக்கிறாரா என்பதை படம் பாக்காதவங்க வெள்ளித்திரையில் காண்க .

தல அஜித் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடித்திருப்பார் . காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி ... பாட்டில் ரொம்ப அனுபவித்து நடித்திருப்பார் . காமெடியும் ரொம்ப சூப்பர் . அதுவும் கவுண்டமணியும் அஜித்தும் அடிக்கும் லூட்டி செம கலாட்டா .

கவுண்டமணி தன் காமெடியால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் . ஹீரோவுக்கு இணையான ரோல் . ஏற்கனவே நேசம் படத்தில் அஜித்துடன் கலக்கியிருக்கும் இவர் இந்த படத்திலும் நல்ல காமெடி .

மந்த்ரா , சும்மா தளதளவென தக்காளி போல இருக்கிறார் . இட்டிலிக்கு மாவு ஆட்டயில ... பாட்டில் எல்லோரையும் ஆட்டுகிறார் .

அத்தையாக , வில்லியாக , நம்ம லதா , நல்ல முதிர்ந்த நடிப்பு ..

இசை தேவா என்று நினைக்கிறேன் . சரியா தெரியல .. தெரிந்தவங்க கொஞ்சம் சொல்லுங்க . காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி ... பாட்டில் மெலடியில் கலக்கல் . அதே மாதிரி இட்டிலிக்கு மாவு ஆட்டயில.. பாட்டில் மந்த்ராவோடு நம்மையும் ஆட்ட வைத்திருப்பார் .

கதை சுமார் என்றாலும் திரைக்கதையில் நம்மை ஒட்ட வைத்திருப்பார் இயக்குனர் சிவக்குமார் .

இட்டிலிக்கு மாவு ஆட்டயில ... என்று நான் ரசித்துக் கொண்டிருக்கும் போது என்னையும் ஒருத்தன் ஆட்டிப்புட்டான் .


**************************************


நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் ,

ஒரு நாள் , அந்த நாளுக்குரிய பாடவேளைக்கு ஆசிரியர் வராததால் அன்று எங்களுக்கு ஃப்ரி ( விடுமுறை ) . ஹைய்யா ஜாலி என்று நாங்கள் அனைவரும் காலை ஷோ படம் பாக்க போகலாமுன்னு கிளம்பினோம் .

நெல்லை பார்வதியில் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும் ரத்னாவில் அப்பாஸ் , சிம்ரன் நடித்த பூச்சூடவா படமும் போட்டிருந்தார்கள் . பாதி பேர் சிம்ரனை பாக்க போறோமுன்னு போயிட்டனுங்க . நானும் கொஞ்ச பேரும் மந்த்ராவை பார்க்க போனோம் . கேர்ள்ஸ் வீட்டுக்கு போயிட்டாங்க .

நண்பர்கள் கூட படம் பார்ப்பது என்றாலே ஒரே ஜாலி தான் . அதுவும் தல அஜித் , மந்த்ரான்னா கேட்கவா வேணும் . ஒரே ஆட்டம் பாட்டம் விசிலுன்னு தூள் பறந்தது . தியட்டரே அதிருமுல்ல ... ஒரே ஜாலி தான் .

இடைவேளையில் நண்பர்கள் அனைவரும் முறுக்கு , போண்டா , டீ சாப்பிட்டோம் .

படம் முடிந்து அனைவரும் கிளம்பினோம் .அப்போது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி வந்த எனக்கு ஒரே அதிர்ச்சி . ஏன்னா என்னோட பர்ஸ்ஸை காணோம் . எனக்கு கதக் கதக் என்றிருந்தது . பர்ஸ்ஸில் என்னோட கல்லூரி அடையாள அட்டை , பாஸ் , பணம் என்று எல்லாம் இருந்தது . பர்ஸ்ஸை தேட ஆரம்பித்ததை பார்த்து நண்பர்கள் என்னவென்று கேட்டனர் .

நண்பர்களிடம் சொன்னேன் . அவர்களுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது . நாங்க தியட்டர் முழுவதும் தேடினோம் . பர்ஸ் கிடைக்கவே இல்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை .

அரை மனதுடன் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தேன் . மதியம் சாப்பிட்டு விட்டு நல்ல பிள்ளை மாதிரி புக் எடுத்து படித்துக் கொண்டிருந்தேன் .

ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும் , அப்போது பக்கத்து வீட்டில் ஒருவர் வந்து சேக் முகைதீன் வீடு எங்கே என்று விசாரித்துக் கொண்டிருந்தார் . நான் எழுந்து , வெளியே சென்று , நான் தான் சேக் மைதீன் , என்ன விசயம் என்று கேட்டேன் . அதற்கு அவர் , நீங்க காலையில் எங்கே சென்று இருந்தீங்க என்று கேட்டார் . நான் காலையில் பார்வதியில் ரெட்டை ஜடை வயசு படம் பார்க்க சென்றிருந்தேன் என்று சொன்னேன் .

உங்க பர்ஸ் தியட்டரில் கிடந்தது ; கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தேன் . எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியல .. அவர் கையை பிடித்து நன்றிகள் சொன்னேன் . சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த எங்கப்பா முழித்து என்னவென்று விசாரித்தார் .

பர்ஸ் கொண்டு வந்து கொடுத்தவர் , எங்கப்பாவிடம் உங்க பையன் பார்வதி தியட்டரில் பர்ஸ்ஸை தொலைத்து விட்டார் . அதை நான் எடுத்து , கொடுக்கலாமுன்னு வந்தேன் . எங்கப்பா உடனே அவருக்கு ரொம்ப நன்றி தம்பி என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் . நானும் எங்கப்பாவும் அவரை பாராட்டி அனுப்பி வைத்தோம் .

அவர் சென்றதும் எங்கப்பா , எங்கம்மாவிடம் உன் பையன் எங்கே போயிருக்கான் தெரியுமா , பார்வதி தியட்டருக்கு போயி பர்ஸ்ஸை தொலைத்திட்டு வந்திருக்கான் . ஒரு ஆள் வந்து கொடுத்துட்டு போறார் . ஏன் படம் பாக்க போனே ! காலேஜ் லீவுன்னா வீட்டுக்கு வர வேண்டியதுதானே ! . சொல்லிட்டு போனா என்ன .. படம் பாக்க போனுன்னா நான் விடவா மாட்டேன் . இனிமே இப்படி செய்யாதே என்ன என்று அப்பா சத்தமிட்டார் .

Post Comment

Monday, December 28, 2009

வ(லை)ழியிலே எலி ...


ஏற்ற வைத்தாய் நீயே

அதில் மாட்டியதும் நீயே

இருப்பது பொறி என்று

அறியாமலே அழகான வடையை

நோக்கி நீ சென்றபோது

வாசம் வீசியதாலோ என்னவோ

நடப்பது தெரியாமல்

ஆட்டம் போட்டாய் !!

எங்கள் வீட்டினிலே

உன்னாலே தொல்லைகள்

அடைந்தேன் பலபல !!

உன் மிச்சத்தை நீ

தொட்டால் ஒண்ணுமில்லை !

எனக்குரியதை தொடும்போதுதான்

பொறுக்கலை.

நீ பேசுவது புரியல எனக்கு

உன் குரலோ கீச்சு கீச்சு

உன் பேச்சால் ஆகப்போவது

ஒன்றுமில்லை !!!

உன் மறு வருகையை எதிர்பார்த்து ....

Post Comment

Tuesday, December 22, 2009

கவிதையே தெரியுமா ...


முதல் முறை நீ என் கனவிலே !

மறுநாள் ஒளிப்படமாய் என் கையிலே

நீ பேச மாட்டாயா என ஏங்க வைத்தாயே !!

எல்லோரும் பேசினர் நமக்காக

நீயும் என்னைப் போல தானா ..

முதல் தடவை நீ பேசினாயே

எப்படியோ என் நம்பர் தெரிந்து !!

ஹலோ என்று நீ பேசுவது தெரியாமல்

யாரென்று நான் கேட்க !!

நீ என்று தெரிந்ததும் நான் அடைந்த

பரவசம் இருக்கே அப்பப்பா ...

காலையிலும் நீயே மாலையும் நீயே

இதனால் சட்டியும் சுட்டதே !

நானோ ஆனந்த வலியில் இருக்க !

அம்மாவோ கண்டும் காணாததாக இருக்க !

கண்மணி நீயேன் ?

என்னுள் கலந்தாய் ? ..

நீ என்னிடம் பேசும் நேரம் எப்போ ..

என்னவனே !! உன்

முகம் காண்பது எப்போ ...


*************************************
Post Comment

சொல்லாமலே ...

அன்பே உன்னாலே

நானும் மறந்தேன்

நினைப்பதற்காக

உன்

மறு வருகை எப்போ !!
****************************

டிஸ்கி : நன்றி ஹேமா , இது ஹேமா இட்ட பதிவுக்காக ..

Post Comment

Monday, December 21, 2009

என்னை பாதித்த திரைப்படங்கள் - பகுதி 2 ...

நண்பர் அக்பர் என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார் . அது என்னவென்றால் நம்மை பாதித்த / பிடித்த ஐந்து திரைப்படங்களை பத்தி எழுத அழைத்திருந்தார் .

நான் , நேற்று எழுதிய பதிவில் என்னை சிறுவயதில் பாதித்த ஐந்து திரைப்படங்களில் 2 திரைப்படங்களை குறிப்பிட்டிருந்தேன் . அந்த பதிவினை பார்க்க இங்கே செல்லவும் .


மீதி உள்ள மூன்று திரைப்படங்களை இப்போது பார்க்கலாம் .
3. உன்னால் முடியும் தம்பி

உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் , ஜெமினிகணேசன் , சீதா , ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் . சூப்பர் ஹிட்டான படம் . பாலசந்தர் இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார் . பாடல்கள் சூப்பர்ஹிட் . கேட்டுக்கொண்டே இருக்கலாம் .

வழக்கமான பாலசந்தர் படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது . ஆச்சாரமான சங்கீத வித்வான இருக்கும் ஜெமினி கணேசன் தன் மகன் கமலும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் . ஆனால் எப்போதும் துருதுருவாக இருக்கும் கமல் இந்த ஆச்சாரமான வாழ்க்கையிலிருந்து விடுபட நினைக்கிறார் . இதனால் கண்டிப்புடன் இருக்கும் அப்பாவை சமாளித்து , தன் சமூக சீர்திருத்த கருத்துக்களால் அந்த கிராம மக்களை நல்வழிப்படுத்துகிறார் .

இந்த படத்தில் ஜெமினிகணேசன் ஒரு சங்கீத வித்வானாகவும் ஒரு கண்டிப்பான அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம் . நடிப்பு அருமை . கமலும் இந்த படத்தில் நல்லா நடித்திருக்கிறார் . மீசை அரும்பிய வயதில் துருதுருவென கமல் போடும் ஆட்டமும் வயது வந்த பின் அனுபவமும் சூப்பர் .

சீதா இந்த படத்தின் ஹீரோயின் . கமலுக்கு ஏத்த ஜோடியாக நடித்திருக்கிறார் . இன்னொருவரை பற்றி குறிப்பிடவேண்டும் , அவர் தான் ஜனகராஜ் .

ஜனகராஜின் காமெடி ரொம்ப சூப்பர் . அதிலும் குடித்துவிட்டு தன் வீட்டை கயிறு கட்டி இழுக்கும் காட்சி ரொம்ப சூப்பர் .

நான் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .

4 . முந்தானை முடிச்சு

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் , ஊர்வசி , தீபா , தவக்களை மற்றும் பலர் நடித்திருப்பார்கள் . பாக்யராஜ்ஜின் டிரேடு மார்க் படம் . பாக்கியராஜ் இந்த படத்தில் வாத்யாராக நடித்திருப்பார் . அருமையான விசயங்களை படத்தில் சொல்லி இருப்பார் . நல்ல ரசனையாளர் பாக்யராஜ் . அருமையான காமெடியுடன் கூடிய நடிப்பு . முருங்கைக்காய் மேட்டரை மறக்க முடியுமா ... என்ன ....

படத்தில் காமெடி நடிகர்கள் இல்லாமலே பாக்யராஜும் , ஊர்வசி , பசங்க காமெடி ரொம்ப சூப்பர் .

ஊர்வசி இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் . துருதுருவென வெகுளித்தனமாக சிறு ப‌சங்க கூட சுற்றித்திரியும் ஊர்வசி நல்லா நடித்திருப்பார் . அறிமுக காட்சியிலே அசத்தி இருப்பார் .

பாக்யராஜின் சக ஆசிரியராக வரும் தீபா ரொம்ப சூப்பர் . என்ன அருமை ! . அவர் பாடம் சொல்லிக்கொடுக்கும் போதும் வரும்போதும் , போகும்போதும் ஜொள்ளு விடும் கிழடுகட்டைகள் நல்ல தேர்வு .

இந்த படத்தை இப்போதும் சலிப்பு தட்டாமல் பார்க்கலாம் .

நான் மிகவும் ர்சித்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .

5 . கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் , கனகா , கவுண்டமணி , செந்தில் , காந்திமதி , சண்முகசுந்தரம் , சந்தானபாரதி மற்றும் பலர் நடித்திருப்பார்கள் .
கரகாட்டகலையை பத்தி சொன்ன இந்த படத்தை கங்கை அமரன் இயக்கி , இளையராஜா இசையமைத்திருப்பார் . பாட்டுக்கள் ரொம்ப அருமை . கேட்க கேடக அருமையான பாடல்கள் .

இந்த படத்தின் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் . கவுண்டமணி செந்தில் காமெடி இன்னைக்கும் மக்களால் மறக்க முடியாதது .

நான் மிகவும் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .

Post Comment

Sunday, December 20, 2009

பதிவர் சந்திப்பும் & என்னை பாதித்த திரைப்படங்களும் - தொடர்பதிவு

நண்பர் அக்பர் என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார் . அது என்னவென்றால் நம்மை பாதித்த / பிடித்த ஐந்து திரைப்படங்களை பத்தி எழுத அழைத்திருந்தார் .

நாம் அந்த படங்களை பத்தி பார்ப்பதற்க்கு முன்னால் , நேற்று நண்பர் செ. சரவணக்குமார் எங்களை காண வந்திருந்தார் . நானும் அக்பரும் அவரை வரவேற்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் . அந்த நேரம் பார்த்து எங்களுக்கு நிறைய கஸ்டமர்கள் /வேலை இருந்ததால் விரிவாக பேசமுடியவில்லை . அவர் ஊருக்கு செல்வதால் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .

பின்னர் , 2 மணி நேரம் கழித்து அவர் எங்களிடமிருந்து விடைபெற்றார் . இந்த பதிவர் சந்திப்பு பத்தி இன்று சரவணக்குமார் பதிவிட்டுள்ளார் . மேலும் விவரங்களுக்கு அவரது பதிவிற்கு சென்று அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

இப்போ என்னை ( சிறு வயதில் ) பாதித்த ஐந்து திரைப்படங்களை பற்றி பார்ப்போம் .

1 . படிக்காதவன்

எனக்கு சிறுவயது இருக்கும் போது படிக்காதவன் படம் பார்க்க நான் என் அப்பா ,அம்மா , தங்கை , அண்ணன் (பெரியப்பா மகன்) எல்லோரும் கிளம்பினோம் . பஸ் ஏறுவதற்கு பஸ்ஸை எதிர் பார்த்து காத்திருந்தோம் . அப்போது ஒரு பஸ் வந்தது . அப்பாவும் அண்ணனும் பேசிக்கொண்டிருந்தனர் . நான் உடனே பஸ்ஸுக்குள் ஏறிவிட்டேன் . கூட்டமாக இருந்ததால் மத்தவங்க ஏறவில்லை போல . பஸ் கிளம்பி விட்டது .

உடனே எங்கண்ணன் நான் ஏறிவிட்டதை பார்த்து ஏ சேக் ஏறிட்டான் பஸ்ஸை நிப்பாட்டுங்க என்று கத்தினார் . எங்கப்பா பஸ் பின்னாடியே ஓடி வந்து பஸ்ஸை நிப்பாட்ட முயற்சித்தார் . உடனே பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ்ஸை நிப்பாட்ட கத்தினர் . ஒரு வழியாக டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார் . நானும் இறங்கி ஓடி வந்து அப்பாவைக் கட்டிக்கொண்டேன் . பின்னர் வேறு பஸ்ஸில் ஏறி படம் பார்க்க சென்றோம் .

படம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது . நான் ரசித்து பார்த்த படம் . இந்த‌ படத்தில் தம்பிக்காக கஷ்டபடும் ஒரு அண்ணனின் கதை . இதில் சிவாஜி , ரஜினிக்காந்த் , அம்பிகா , மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் . பாடல்கள் ரொம்ப அருமையாக இருந்தது . ரஜினிகாந்த் இந்த படத்தில் டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார் . அவரது நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கும் .

ரஜினி தோன்றும் முதல்காட்சி ரஜினியின் தம்பியிடம் கேப்பாங்க . உங்கண்ணன் எப்படி , இப்போ எங்கிருக்கிறார் என்று . அதற்கு எங்கண்ணன் ஒரு பிஸினஸ்மேன் .ரொம்ப பிஸியா இருப்பார் என்று பாபு சொல்வார் . அப்போது ரஜினி காருக்கு அடியில் இருந்து வருவார் . நான் கை தட்டி ரசித்தேன் . அப்புறம் அம்பிகா வயிற்றில் கேன் வைத்து சாராயம் கடத்துவார் . அதற்கு ரஜினி நாகேஷ்யிடம் விளக்கம் கேட்பது அருமையாக இருக்கும் . அப்புறம் ராஜாவுக்கு ராஜா நாந்தான் பாட்டில் ரஜினியின் கார் கட்டிடங்களுக்கு மேலே செல்லும் . பறக்கும் . ரொம்ப அருமையாக அந்த பாட்டை எடுத்திருப்பார்கள் .

நான் மிகவும் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .

2 . அம்மன் கோவில் கிழக்காலே


இந்த படம் விஜயகாந்த் , ராதா . ரவிச்சந்திரன் , ஸ்ரீவித்யா செந்தில் மற்றும் பலர் நடித்த படம் . சூப்பர் ஹிட்டான படம் . ரொம்ப அருமையாக இருக்கும் . பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் . நான் நிறைய தடவை பாத்திருக்கிறேன் . விஜயகாந்த் ரொம்ப அருமையாக நடித்திருப்பார் .இயக்கியது ஆர் .சுந்தரராஜன் . ராதா மிக அருமையாக இருப்பார் . பார்க்க பார்க்க ரசனையான படம் . கதை உங்க‌ளுக்கே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

நான் மிகவும் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .

தொடரும் ...

Post Comment

Wednesday, December 16, 2009

என்னோடு பேச வா ...


பூங்குயில் பாட்டு பிடிச்சிருந்தது

என் பாட்டு ஏனோ பிடிக்கவில்லை !

புறாவின் வெண்மை பிடிச்சிருந்தது

என் கலர் ஏனோ பிடிக்கவில்லை !

ஆனால் சொல்வதோ சும்மா

என்னடா குளிப்பு சொன்னதோ அம்மா !

சாப்பிடுவதோ கஞ்சன்

அப்புறம் எனக்கு எப்படி !!

ஏமாற்றுவதோ இவங்க

ஆனா நான் தான் ஏமாளி !!

பசிக்காக நானோ அங்கே

திருட்டுப்பழியோ என் மேலே !!

என்னால என்ன செய்ய முடியும்

சுத்தி சுத்தி வர்ற எனக்கு

நான் யாருன்னு எனக்கே தெரியல

தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் !! ...

Post Comment

Tuesday, December 15, 2009

உங்கள் பொன்னான வாக்குகளை ...


அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !! நண்பிகளே !! வாக்காளப் பெருங்குடி மக்களே !! பெரியோர்களே !! தாய்மார்களே !! ... உங்கள் பொன்னான வாக்குகளை ...


என்னடா இது ! ஸ்டார்ஜன் !! ஓட்டுக் கேட்கிறாரே !! எப்போ தேர்தல்ல நின்னாரு ! என்னாச்சு இவருக்கு !! அப்படின்னு நீங்க நினைக்கிறது தெரிகிறது .


இப்படித் தானே எல்லா அரசியல்வாதியும் ஓட்டு கேட்டு வந்தாங்க . வந்தாங்க , வென்றாங்க , சென்றாங்கன்னு ஆகிப்போச்சில்ல . ஓட்டு வாங்கி ஜெயித்த பிறகு நம்ம பக்கம் வராம இருக்கிறது அவங்க பாலிசி . ஓட்டு போடுறது நம்ம பாலிசி .


இப்போ அந்த அரசியல்வாதிகளோட மறுபக்கத்தை புரட்டுவோமா ...


ஒரு தேர்தல்ல ஜெயித்து மக்களவைக்கு செல்லும் ஒரு உறுப்பினரின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா ...


மக்களவை உறுப்பினர் ( M . P )


அடிப்படை மாத சம்பளம் ரூ 12, 000/

அரசாங்க அரசியல் செலவுக்கு ரூ 10, 000/

அலுவலக செலவு ரூ 14, 000/

பயணப்படி ( கி.மீக்கு 8 ரூ ) ரூ 48, 000/

தினப்படி /பயணப்படி ஒரு நாளைக்கு ரூ 500/

ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் இலவசம் ( இந்தியா முழுவதும் )


வான ஊர்தியில் முதல் வகுப்பு டிக்கெட் இலவசம் ( மனைவி , அல்லது உதவியாளர் உடன் செல்லலாம் ) இது மாதிரி 40 தடவை செல்லலாம் .


டில்லியில் தங்கும் வீடு இலவசம் .

50,000 யூனிட் மின்சாரம் செலவு செய்யலாம் .

1,70,000 போன்கால்கள் இலவசம் .


ஒரு மக்களவை உறுப்பினருக்கு ஒரு வருடத்திற்கு 32 இலட்ச ரூபாய் செலவு செய்யப்படுகிறது .


ஒரு மாதத்திற்கு 2.66 இலட்ச ரூபாய் செலவு செய்யப்படுகிறது .


5 வருடத்திற்கு ஒரு கோடியே 60 இலட்ச ரூபாய் செலவாகிறது .


இதே மாதிரி இந்தியா முழுவதும் உள்ள் 534 மக்களவை தொகுதி உறுப்பினர்களுக்கும் மொத்தமாக 855 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது .அடேங்கப்பா ... என்று நீங்கள் பெருமூச்சு விடுவது நியாயமில்லை .ஆகவே , அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !! உங்கள் பொன்னான வாக்குகளை .....Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்