Pages

Monday, January 7, 2013

முஸ்லிம்கள் என்றால்???.சில ஆண்டுகளுக்கு முன்னர், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் தினமும் பஸ்ஸில் தான் செல்வேன். பஸ்பாஸ் இருந்தால் செலவை சிக்கனப்படுத்தலாமே என்று நெல்லை பஸ் டிப்போவில் பஸ்பாஸ் வாங்கி பயணம் செய்வேன். மாதாமாதம் அதை புதுப்பிக்க டிப்போவுக்கு செல்வதுண்டு. அங்கு அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்க்கும் பெண் எங்க ஊரை சேர்ந்தவர்; நன்கு பழக்கமானவர். அந்த அக்கா பெயர் ஞாபகமில்லை. இதனால் அங்குள்ள மேலாளார் என்னிடம் நன்கு பழகிவிட்டார்.

ஒருநாள் காலையில், பாஸை புதுப்பிக்க டிப்போ அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது மேனேஜரிடம் கையெழுத்து வாங்கும்போது, ”தம்பி உன்னப்பார்த்தா எனக்கு பயமிருக்குப்பா” என்றார். நான் திடுக்கிட்டு, ”என்ன சார்! என் தலையில் கொம்பு முளைத்து அகோரமாவா இருக்கேன்” என்றேன் சிரித்துக் கொண்டே. அதற்கு அவர், ”அதுல்லப்பா, முஸ்லிம்கள் என்றால் தாடிவைத்துக் கொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு தீவிரவாதி போல இருப்பாங்களாம். அவங்க எங்க குண்டு வைப்பாங்கன்னே தெரியாது. அதமாதிரி நீயும் எதாவது வச்சிருக்கியா” என்றார் சிரித்தபடி. நானும் சிரித்துக்கொண்டே, ”யார் சார் சொன்னா உங்களுக்கு முஸ்லிம் என்றால் தீவிரவாதின்னு??..” என்றேன். அவர் உடனே, ”அதான் டிவியில சினிமாவுல காட்டுறானேடே. முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டுக்குள்ள ஊடுவிருயிருக்காங்க.. ஆங்காங்கே குண்டு வைக்கிறாங்கன்னு படத்துல காட்டுறாங்களே., அதற்கு என்னப்பா சொல்றே” என்றார்.

சார், முதல்ல ஒண்ணு புரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம் என்றால் அமைதியானவன் என்று அர்த்தம். நாட்டுல இருக்கிற முஸ்லிம்கள் இருபது சதவீதம் பேரும் கையில் துப்பாக்கியும் குண்டும் வைத்துக் கொண்டு இருந்தால் நீங்களும் நானும் நிம்மதியா வாழ முடியுமா.. அதுபோக இந்த நாட்டில் முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் என்று ஒரு குடும்பம் போல பழகிக்கிட்டு இருக்கோம். இது இன்னக்கி நேற்றல்ல.. காலம் காலமா இப்படித்தானே வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம். சினிமா என்பது ஒரு நிழல். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை” என்றேன். மேலும் நான், ”சார்! எங்கோ ஒருவன் மதவெறி பிடித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்றீங்களே இது சரியா??.. தீவிரவாத செயல்கள்ல ஈடுபடுகிறவங்களுக்கு ஏன் மத அடையாளப்படுத்துறீங்க??.. அவன் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்டியனோ.. தண்டிக்கப்பட வேண்டியவன். மற்ற மதத்தினர் செய்யும் இதுபோன்ற தீவிரவாத செயலுக்கு மத அடையாளம் பொருத்தாத மீடியாக்கள் அவன் முஸ்லிமாக இருந்தால் உடனே எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க சார்??” என்றேன்.

உடனே அந்த மேனேஜர் ”ஆமா தம்பி! எல்லோரையும் குற்றம் சொல்வது கூடாது. எனக்கு தெரியும்.. முஸ்லிம்கள் என்றால் ரொம்ப நல்லவங்கன்னு.. இல்லன்னா கொடுக்கல் வாங்கல் வச்சிருப்போமா சொல்லு., ஆனா இதுபோன்ற கருத்துக்களை மீடியாக்கள் பரப்பும்போது இதனைப் படிக்கும் அல்லது அந்தமாதிரி படங்களை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?! நம் அருகில் உள்ளவர்கள் இப்படியாப்பட்டவங்களான்னு நம்மிடையே முஸ்லிம்கள் தீய எண்ணத்தோடே பழகுறாங்கபோலன்னு நினைப்பாங்களே.. இது நெஞ்சில விஷத்தை விதைத்ததுக்கு சமம். சே! என்ன மாதிரியான உலகம்டா இது!! என்று நொந்து கொண்டார்.


தம்பி அருமையா சொன்னேப்பா.. நல்ல தெளிவான சிந்தனை. நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய்” என வாழ்த்தியனுப்பினார். பின்னர் எங்க ஊர் அக்காவும், நல்லா சொன்னேடா தம்பி என்றார்.

எல்லாம் இறைவனின் சித்தம். சரி சார் எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது நான் வருகிறேன்” என்றபடி இருவரிடமும் விடைப்பெற்று கிளம்பிய எனக்கு கல்லூரியில் நுழைந்ததும் ஆசிரியரிடம், ”ஏண்டா இவ்வளவு லேட்டு!” என்று திட்டு விழுந்தது.

Post Comment

22 comments:

 1. அருமையான விளக்கம் கொடுத்திருகிறீங்க ஷேக்... மாஷா அல்லாஹ்...
  பாருங்க இந்த விபச்சார ஊடகங்களும் சினிமா போன்ற விஷுவல் மீடியாக்களும் எந்த அளவுக்கு நஞ்சை மக்கள் மனதில் விதைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது சமூகத்தில் நம்மீது இருக்கும் பொறுப்பு அதிகமாகிகொண்டே போகிறது என்பதை மறுப்பதற்கில்லை... நன்றி ஷேக் நல்ல கருத்தை விதைத்தமைக்கு.... ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்

  ReplyDelete
 2. மிக்க நன்றி அபுபைசல் பாய்.

  ReplyDelete
 3. மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 4. அருமையான விளக்கம் கொடுத்திருகிறீங்க ஷேக்... மாஷா அல்லாஹ்...

  ReplyDelete
 5. நீங்கள் கொடுத்த தெளிவான விளக்கத்தை, டிப்போ மேனேஜர் சரியாகப் புரிந்து கொண்டார். இதுபோலவே அனைவரும் புரிந்து கொண்டால் பிரச்னையேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. அனைவரும் புரிந்து கொள்வார்கள். மிக்க நன்றி நிஜாமுத்தின்

   Delete
 6. ///சினிமா என்பது ஒரு நிழல். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை””என்றேன்.///// செமா பஞ்ச் உண்மையை சொன்னிங்கோ அண்ணா
  நல்ல பதிவு ஆமாம் ஏன் நீங்கள் தொடர்ந்து ..எழுத கூடாது பதிவை ???????????????? ...

  ReplyDelete
 7. ஓட்டு போடா லிங்கே காணோம் அண்ணா .??????????????????/

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ்.. அருமையாக பொறுமையா விளக்கம் சொல்லி இருக்கீங்க சகோ...

  ReplyDelete
 9. எங்கோ ஒருவன் மதவெறி பிடித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்றீங்களே இது சரியா??.. தீவிரவாத செயல்கள்ல ஈடுபடுகிறவங்களுக்கு ஏன் மத அடையாளப்படுத்துறீங்க??.//super. read this too.
  http://rsgurunathan.blogspot.in/2013/01/blog-post_5.html

  ReplyDelete
 10. சலாம் சகோ.

  //மற்ற மதத்தினர் செய்யும் இதுபோன்ற தீவிரவாத செயலுக்கு மத அடையாளம் பொருத்தாத மீடியாக்கள் அவன் முஸ்லிமாக இருந்தால் உடனே எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர்.//

  இது இன்னும் தொடர் கதையாகவே இருந்துக் கொண்டிருக்கிறது. அதைவிட கொடுமை, முஸ்லிம்கள் செய்யாத தீவிரவாதங்களுக்கெல்லாம் அப்பாவி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு குற்றவாளிகளைத் தப்பவிடுவதுதான் :( இந்த அநியாயங்களுக்கு எதிராக‌ தற்போது நம்மிடையே விழிப்புணர்வு வந்திருப்பது நிம்மதியான விஷயம், அல்ஹம்துலில்லாஹ்!

  பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 11. ரொம்ப நாள் கழித்து எழுதியிருக்கீங்க, பகிர்வு நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.தொடர்ந்து பதிவிடுங்க.

  ReplyDelete
 12. அருமையான விளக்கம் சகோ.

  ReplyDelete
 13. ரொம்ப நாள் கழித்து எழுதியிருக்கீங்க,தொடர்ந்து பதிவிடுங்க.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. அருமையான விளக்கம் சகோ...மீடியாக்களின் வரம்புமீறல்கள் அதிகம்...மீடியாக்களும் ,பத்திரிக்கைகளும் யாருடைய கைகளில் இருப்பதென்பது நாடறிந்த உணமை.இறைவன் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.... Hameeddvk

  ReplyDelete
 16. சரியான பதில். நல்ல பகிர்வு சேக்.

  ReplyDelete
 17. மிக நீண்ட நாட்கள் கழித்து நல்லதொரு இடுகை ஷேக்.இனி அடிக்கடி தொடருங்கள் பதிவுகளை

  ReplyDelete
 18. நல்ல பதிவு நல்ல கருத்தை விதைத்தமைக்கு.... ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்