ஓவர்டேக் செய்து போய்க்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தில் புதியபடம் ஓடுவதை நினைத்து எனக்கு வயித்தெரிச்சலாக இருந்தது. சரி நமக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்றபடி பயணத்தை தொடர்ந்தேன். சாத்தூர் அருகே ஹோட்டலுக்குள் பஸ் சென்றதும் நான் இறங்கவில்லை. எங்கப்பா ஜன்னத் ஹோட்டலில் வாங்கித்தந்த பிரியாணியை சாப்பிட்டேன்.
மதுரை வந்ததும் படமும் முடிந்தது; எல்லோரும் உறங்க ஆரம்பித்தார்கள். எனக்கு உறக்கம் வராமல் இருக்கமுடியவில்லை.
சிறிதுநேரம் உறங்கியும் சிறிதுநேரம் உறங்காமலும் என் பயணத்தை தொடர்ந்தேன். நான் முதல்தடவை சென்னைக்கு செல்வதால் இறங்கவேண்டிய இடம் தெரியாததால் கண்டக்டரிடம் சென்று இறங்கவேண்டிய இடத்தை சொன்னதும் கோபப்பட்டார். என்ன இவ்வளவுநேரம் தூங்கினாயா.. அந்த இடத்தை கடந்து நிறைய தூரம் வந்தாச்சி, சீக்கிரம் இறங்கு.. என்று எரிச்சலோடு இறக்கிவிட்டார். என்ன செய்ய.. சரின்னு இறங்கினேன்
இறங்கி விசாரித்ததில் நான் இருப்பது கிண்டிக்கு அருகில்.. ஆஹா ரொம்ப தூரம் வந்திட்டோமே.. தாம்பரத்திலிருந்து வேறு பஸ் ஏறி மாமாவின் நண்பருடைய மச்சான் வீட்டுக்கு செல்ல வேண்டும். அவர் அரசு வேளாண் மையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தாம்பரத்திலிருந்து பஸ் ஏறி அவருடைய ஊர் ஸ்டாப் எது என்று தெரியாததால் கண்டக்டரிடம் அந்த ஸ்டாப் வந்ததும் என்னை இறக்கிவிட்டுட்டுங்க என்று கேட்டிருந்தேன். அவரும் சரி என்றார். நான் ஊர் வந்திருச்சா வந்திருச்சா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால் அவர் இதாம்பா இறங்கிக்கோ என்று சொல்லி இறக்கிவிட்டுட்டார். இறங்கி விசாரித்ததும்தான் தெரிந்ததும் இரண்டு கிலோமீட்டருக்கு முன்னாடி இருந்த ஊரில் இறக்கி விட்டுட்டார்.
அடப்பாவி இப்படி பண்ணிட்டானே என்ற வருத்தத்தில் கால்வலிக்க நடந்தேன். பின்னர் உறவினரின் வீட்டின் வழி தேடி அவரது இல்லத்துக்கு சென்றேன். அவர்கள் என்னை நன்றாக உபசரித்ததார்கள். மறுநாள் காலையில் அவரே தேர்வு எழுதும் மையத்துக்கு அழைத்து சென்று விட்டுட்டு அவர் வேலைக்கு சென்றுவிட்டார். தேர்வு எழுதி முடிந்ததும் வீட்டுக்கு சென்று மதியம் சாப்பிட்டுவிட்டு நான் ஊருக்கு செல்கிறேன் என்று கிளம்பினேன்.
எப்பா.. இப்போ கிளம்பினால் எப்படி சரியாகும்.. இன்று இருந்துவிட்டு சுற்றிபார்த்துவிட்டு நாளைக்கு செல்லலாமே என்றார். இல்லசார். நா கிளம்புறேன். நான் நேரா திருநெல்வேலிக்கு செல்லலை. மதுரையில் உள்ள எங்கமாமி வீட்டுக்கு செல்கிறேன். அங்கு இப்போது கிளம்பினால்தான் இரவுக்குள் சென்றுவிடமுடியும் என்றதும் அவர் மகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைத்தார்.
ரொம்ப தூரமாக இருந்த பூக்கடை பஸ்ஸ்டாண்டுக்கு செல்லாமல் சோம்பேறியாக அதான் தாம்பரம் வழியாத்தான் எல்லா பஸ்ஸும் செல்லும், இங்கிருந்தே சென்றுவிடலாமே என்று தாம்பரத்தில் பஸ் ஏற காத்திருந்தேன்.
அங்கு நின்றிருந்த தனியார் சொகுசு பேருந்துகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நான் நிற்பதை பார்த்ததும் என்னிடம், நீ எங்கே போகணும் என்றதும் நான் மதுரைக்கு போகணும் என்றேன். உடனே அவர்கள் ஏறு..ஏறு.. மதுரைக்குதான் போறோம் என்றார்கள். அப்போது அந்த பஸ்ஸில் அப்போது வெளியான ஜீன்ஸ் படம்போட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் ஜீன்ஸ் படம்பார்க்கும் ஆவலில் அந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன்.
அந்த பஸ்பயணம் எனக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
எங்கமாமி அப்போதுதான் புதியவீட்டுக்கு குடித்தனம் சென்றிருந்தார்கள். நான் வரும்தகவல் அறிந்து என்னிடம் புதுவீட்டுக்கு வரும்வழியை சொல்லிருந்தார்கள். நான் ஏற்கனவே மதுரைக்கு அடிக்கடி சென்றிருந்ததால் எல்லா ஏரியாவும் தெரியும் அந்த நம்பிக்கையில் நான் வந்துடுவேன் என்று சொல்லிருந்தேன்.
இரவு 7மணி இருக்கும்.. பஸ் திருச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. சமயபுரம், மலைக்கோட்டை, தென்னூர் வழியாகசென்றதால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மதுரைக்கு பஸ் செல்வதானால் பைபாஸ் வழியாத்தானே போகணும் என்ற சந்தேகம் இருந்தது. ஒருவேளை ஆட்கள் ஏற்றிக்கொள்ள திருச்சிக்குள் செல்கிறதுபோல என்று நினைத்துகொண்டேன். பஸ்ஸிலிருந்து ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் பஸ்ஸின் உள்ளே உட்கார்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கண்டக்டர் என்னை பார்த்து ஏய் தம்பி.. இறங்கு இறங்கு.. என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியானது. நா எதுக்கு இறங்கணும்., நா மதுரைக்குதான் செல்கிறேன்., இறங்கமாட்டேன் என்று கூறினேன். அதற்கு அவன் இந்தபஸ் திருச்சிவரைக்கும்தான் போகும் என்றுதும் எனக்கு வந்ததே கோபம். நீ எப்படி என்னை ஏமாத்தி பஸ்ல ஏத்தலாம். நீ திருச்சிவரைக்கும்தான் போகுமுன்னு முதல்லயே சொல்லிருக்கலாமே.. எனக்கு எவ்வளவு அலைச்சல். நான் திட்டமிட்டிருந்த நேரத்தில் மதுரைக்கு சென்றிருப்பேனே.. சே.. என்ன மனுசன்நீ.. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே.. என்று அவனிடம் சண்டையிட்டேன்.
சரி சரி ரொம்ப பேசாதே.. இந்தாப்புடி மீதி ரூபா.. இந்தாருக்கு பஸ்ஸ்டாண்ட். பஸ்ஏறி மதுரைக்குப்போ.. அப்புறம் இவர் திருநெல்வேலிக்கு போகணுமாம். அவரை திருநெல்வேலிக்கு பஸ் ஏற்றிவிடு என்றதும் அவனுக்கும் எனக்கும் வாக்குவாதமானது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்துவைத்தார்கள். தம்பி எப்போதும் இவங்க இப்படித்தான் பண்ணுவாங்க. தனியார் பஸ்ஸை நம்பவே கூடாது. சென்னையிலிருந்து வரும்ஆட்களை எல்லாஊருக்கும்போகுமுன்னு சொல்லி ஏற்றி இங்கவந்து இறக்கிவிட்டுடுவாங்க. சரி நீங்க ஊருக்குபோங்க என்று அங்கிருந்தவர் என்னிடம் கூறினார்.
என்னுடன் பயணம் செய்தவரையும் கண்டக்டர் ஏமாத்திட்டான். அவர் சென்னையில் ஒரு கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு சொந்த ஊர் பெங்களூராம். வேலைவிசயமாக திருநெல்வேலிக்கு செல்கிறாராம். எனக்கு வழிதெரியாது; நீங்கதான் எனக்கு வழிகாட்டணும்; என்னை திருநெல்வேலி பஸ்ஸில் ஏற்றிவிடுங்க என்று கேட்டுக்கொண்டார்.
பஸ்ஸ்டாண்டில் மதுரைக்கு செல்லும் பஸ் அந்தநேரத்தில் இல்லை. திருநெல்வேலிக்கும் பஸ் எதுவும் இல்லை. என்னடா செய்றது என்று யோசித்தேன். ஒரே ஒரு பஸ் நாகர்கோவிலுக்கு விரைவு பேருந்து மட்டும் இருந்தது. அதில் டிக்கெட் கிடைக்குமா என்று விசாரித்தேன். என்கூட வந்தவருக்கு திருநெல்வேலி செல்லணுமென்று டிக்கெட் கேட்டேன். அப்படியே நான் மதுரைக்கு போகணும் எனக்கும் டிக்கெட் வேணும் என்று கேட்டேன். அதற்கு பஸ்பூத் அலுவலர்., டிக்கெட்ல்லாம் புல்லாகிருச்சே.. முடியாது., வேற பஸ்ஸுக்கு டிரை பண்ணுங்க என்றார்.
சிறிதுநேரம் கழித்து பஸ்பூத் அலுவலர் யோசனை செய்து, சரிப்பா அவருக்கு ஒரு சீட் ஒதுக்கித்தாரேன் என்றார். நான் உடனே, அவர் என்சகோதரர். அவருக்கும் எனக்கும் டிக்கெட் வேணும்., நாங்க இரண்டுபேரும் ஒண்ணாத்தான் போவோம். தயவுசெய்து டிக்கெட் தாங்க என்று கேட்டேன். பின்னர் ஒருவழியாக அவர் எனக்கும் டிக்கெட் தர சம்மதித்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இரவு 9 மணிக்கு பஸ் கிளம்பியது.
சிறிதுநேரம் கழித்து ஒரு சாப்பிடுவதுக்கு ஹோட்டலுக்குள் பஸ் சென்றதும் அங்கே இருவரும் சாப்பிட்டோம். ஒரு செட் தோசைக்கும் சின்ன கப்பில் சிக்கனுக்கும் ஒரு ஆளுக்கு 90 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். என்ன செய்வது?..
பஸ் மதுரையை நெருங்கியதும் கண்டக்டரிடம் என்னை கோரிப்பாளையம் தேவர் சிலை திருப்பத்தில் இறக்கிவிடுங்க என்று கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் முடியாது. உனக்காகத்தான் மதுரையில் பஸ்ஸை நிறுத்திறேன். அண்ணா பஸ்நிலையத்தில் இறங்கிக்கோ என்றதும் அவருக்கு நன்றிசொல்லிட்டு என்னுடன் பயணம் செய்தவரிடம் விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.
அண்ணா பஸ்நிலையத்திலிருந்து கோரிப்பாளையத்துக்கு சுமார் 4 கிலோமீட்டர் இருக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கிய நேரம் நள்ளிரவு 11.40 மணி இருக்கும். கோரிப்பாளையத்தில் மாமிவீடு இருக்கும் தெருவுக்கு நடந்துவர 30 நிமிடம் ஆனது. மணி 12.10 இருக்கும். தெருவே உறங்கிக்கொண்டிருந்தது. மாமி மாடியில் உள்ள வீட்டில் குடியிருப்பதாக சொன்னதால் எது என்று சரியாக தெரிவில்லை. திறந்திருந்த வீடுகளில் நான் மாமியின் பெயரும், மாமா பெயரையும் அவர் பணிபுரியும் விபரங்களையும் கூறி கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் இரண்டுநாட்களுக்கு முன்னாடிதான் இந்த பகுதிக்கு குடிவந்திருந்ததால் அவர்களை பற்றிய விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
மணிவேறு 12 தாண்டிருச்சி.. எப்படி கண்டுபிடிக்கப்போறோம்; என்ன நடக்கப்போகுதோ என்று மனது திக்திக் என்றது. வீட்டை கண்டுபிடிக்கும் வழி தெரியவில்லை. எப்படியாவது கண்டுபிடிச்சிரலாம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மாடியில் குடியிருக்கும் வீடுகளை தட்டி விபரங்கள் கேட்டேன்.
அப்போது ஒரு வீட்டில் சென்று கேட்டுக்கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் பேய்தான் கதவை தட்டுகிறது என்று நினைத்து ஒரு கட்டையை படிகளில் உருட்டிவிட்டனர். உடனே நான் பயந்துபோய் ஓடிவிட்டேன். பின்னர் ஒரு வீட்டில் கேட்கும்போது ஆமா அவர்களை எனக்கு தெரியுமே என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் சொன்னதும்தான் நிம்மதியானது.
அவர் மாமாவின் வீட்டைக்காண்பித்ததும் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவருக்கு நன்றி சொன்னேன். மாமா.. மாமி.. நா சேக் வந்திருக்கேன் என்றதும் அவர்கள் உடனே கதவை திறந்தார்கள்.
மறுநாள் காலையில் நான் நடந்தவற்றை சொன்னதும் மாமி பசங்க, "நல்லவேளை மச்சான் அந்த வீட்டுக்காரய்ங்க உங்கள கட்டையால அடிக்காம விட்டாங்களே" என்று சொல்லி எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம்.
***************
இந்த இடுகையை குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கும் விகடன் குழுவினருக்கும் என் நன்றிகள்.
,
பயண கட்டுரை அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteதெய்வ வாக்கு படம் ராயல் திரை அரங்கில் தானே வந்தது, கிழக்கு வாசல், தெய்வ வாக்கு ...
நல்ல அனுபவம்
ReplyDeleteநல்ல கட்டுரை nanbare
ReplyDeleteஇப்படி ஒரு அனுபவம் திருச்சியிலிருந்து நெல்லை வரும்போது எனக்கும் ஏற்பட்டது. மதுரையிலேயே இறக்கி விட்டு விட்டனர். பின்பு வேறு பஸ் பிடித்து சென்றேன். தொலைதூரம் செல்லும் பிரபலமில்லாத ஆம்னி பஸ்களில் சென்றால் பிரச்சனைதான்.
ReplyDeleteஊர் தெரியாத நண்பரை பொறுப்புடன் பஸ் ஏற்றி விட்டது பாராட்டுக்குரிய விசயம்.
அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை.
ReplyDeleteவாங்க ராம்ஜி அண்ணே @ வாழ்த்துக்கு மிக்க நன்றி. ஆமா தெய்வவாக்கு, கிழக்குவாசல் திரைப்படங்கள் ராயல் தியேட்டரில்தான் வந்தது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராஜசேகர் @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல அனுபவம்.. இனிமே யார் வீடு கதவை தட்டும்போதும் கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்
ReplyDeleteஇப்படி எல்லாம் ஏமாற்றுவார்களா?
ReplyDeleteஅன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteஇயல்பான கதை - நல்ல நடை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நல்லா எழுதி இருக்கீங்க ஷேக்! :-)
ReplyDeleteநல்ல அனுபவ பகிர்வு ஜி...எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு சுவாரசியமா இருந்துச்சு உங்கள் அனுபவம்...வாழ்த்துகள்...
ReplyDeleteஅந்தக் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டால், அந்த நள்ளிரவு நேரத்தில்,
ReplyDeleteநாய், வழிப்பறித் திருடர் இவர்களிடமிருந்து காத்துக் கொள்ள பயன்பட்டிருக்குமே!
அந்தக் கட்டையை என்ன செய்தீர்கள் *ஜான்?
அழகான பயணம் அதோடு பாடங்களும்...
ReplyDeleteநல்லதொரு அனுபவம்தான்..
ReplyDeleteநல்ல அனுபவம் ஸ்டார்ஜன்..
ReplyDeleteநீங்க இவ்வளவு அப்பாவியா..ஹா..ஹா
ReplyDelete//"நல்லவேளை மச்சான் அந்த வீட்டுக்காரய்ங்க உங்கள கட்டையால அடிக்காம விட்டாங்களே" என்று சொல்லி எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம்.//
பின்ன நட்ட நடு ராத்திரி கதவை தட்டினா...பூரி சட்னியா கிடைக்கும்.. பூரி கட்டை அடிதான் கிடைக்கும்..ஹி..ஹி..
’’நல்ல’’ அனுபவம்...!!
நல்லா எழுதிரூக்கீங்க ஸ்டார்ஜன்.
ReplyDeleteஇப்படியெல்லாம் கூட அனுபவம் கிடைக்குமா...
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க...
நல்ல பயண கட்டுரை.
ReplyDeleteபகிர்ந்த விதமும் அருமை.
நல்ல பயண அனுபவம் ஸ்டார்ஜன்...
ReplyDeleteஇப்போல்லாம் ஆம்னி பஸ்ஸில் அந்தந்த வாரத்தில் ரிலீஸ்ஸான புதுபடத்தைதான் போடுகிறார்கள்.ஆனால் அரசு போக்குவரத்து கழகமோ இன்னமுன் 90 ஐ தாண்டி வரமாட்டேங்குறாங்க....
அரசு பஸ் காரங்க கமிஷனுக்கு ஆசைப்பட்டு உலகத்துலயே மோசமான மோட்டலாத்தான் தேடிப்பிடிச்சு நிப்பாட்டுவானுவ..
நல்லா விவரிச்சு இருக்கீங்க ஸ்டார்ஜன்
:)
ReplyDeleteநல்ல கலகலப்பாக இருந்தது.
சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான பதிவு. சாலையோர உணவு விடுதியில் சாப்பிட்டுருந்தால் இன்னொரு அதிர்ச்சி கிடைத்திருக்கும்.
ReplyDeleteவாங்க எல்கே @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி மேடம் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க செந்தில் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
வாங்க ஸாதிகா அக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
வாங்க சீனா அய்யா @ நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteவாங்க பாரா அண்ணே @ நன்றி வாழ்த்துக்கு
வாங்க சீமான்கனி @ அப்படியா.. உங்க அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்
வாங்க நிஜாம் @ நல்ல யோசனையா இருக்குதே.. ஆனா அந்த வீட்டின் கதவு கிரில் கேட் போட்டது. அதனால் கட்டையை எடுத்துக் கொள்ளமுடியாது. :))
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க வசந்த் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அமைதிச்சாரல் அக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஜெய்லானி @ நா ஒழுங்கா பூக்கடை பஸ்ஸ்டாண்ட் போய் மதுரைக்கு பஸ் ஏறிருந்தேனா இந்த ப்ராப்ளம் வந்திருக்காது... இருந்தாலும் எனக்கு இதுமாதிரி நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராமசாமி கண்ணன் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க கமலேஷ் @ ஆமா.. ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கும். நன்றி கருத்துக்கும் வருகைக்கும்
ReplyDeleteவாங்க அம்பிகா @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க கண்ணா @ ரொம்ப நன்றி.. சரியா சொன்னீங்க.. இப்படித்தான் பண்ணுவானுக.. சாலையோர விடுதிகள் சுமார்தான்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க கோவி அண்ணே @ நனறி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க மாஞ்சூர் ராஜா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க வில்சன் @ ரொம்ப நன்றி.. சரியாச் சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா @ ஆமாக்கா இப்படித்தான் ஏமாற்றுவாங்க.. உசாரா இல்லாட்டி கஷ்டம்தான்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
எழுத்து அருமையா இருக்கு அண்ணா.
ReplyDeleteநல்லதொரு பாடத்தை சொல்லி தந்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteபயண கட்டுரை அருமை.
நல்ல அனுபவம்
ReplyDeleteஎனக்கும் இது போல பல அனுபவங்கள் உண்டு, ஆனால், சேக் மிகவும் சுவையாக அதைப் படைத்த விதம் அருமை. சில நேரங்களில் சிலரின் (சீக்கிரமே இறக்கி விட்ட கண்டக்டர்) கோபம் வந்தாலும் பின்னாளில் அதை நினைக்கும் போது சிரிப்பு வருவது இயற்கை.
ReplyDeleteகாலேஜ்ல படிக்கிறப்போ, முதல் வருஷம் தீபாவளிக்கு டிக்கெட் கிடைக்காம, நானும் என் நண்பனும் திருச்சி போகிற ஒரு ஆம்னி(!?) பஸ்ல ஏறிட்டோம்.. எங்களோட இன்னொரு நண்பன் மதுரை போகிற ஒரு ஆம்னி பஸ்ல ஏறினான். எங்களுக்கு அந்த பஸ்ல டிக்கெட் கிடைக்காதது ரொம்ப வருத்தமா இருந்தது.. நாங்க திருச்சி போயி, அங்க இருந்து மதுரைக்கு ஒரு பஸ் புடிச்சி போனோம்.. மதுரைல இருந்து திருநெல்வேலி போறப்போ கோவில்பட்டி இடைசெவல்ல கேண்டீன்ல டீ சாப்பிட்டு இருந்தோம்.. அப்போ கேண்டீனுக்குள்ள வந்த ஒரு மதுரை டூ திருநெல்வேலி பஸ்ல இருந்து எங்களோட அந்த நண்பன் இறங்கினான்... அப்போ மணி மதியம் 2. நாங்க சென்னையில பஸ் ஏரும்போது இரவு 9. நண்பனோட பஸ் 8 மணிக்கே கிளம்பிடுச்சு.. என்னடா நமக்கு முன்னாடி கிளம்பி, அதுவும் மதுரை பஸ்ல வந்து, நமக்கு பின்னாடி வர்றானேன்னு நினைச்சுகிட்டே, 'என்னட மாப்ளே.. என்னாச்சுன்னு' கேட்டேன்.. அவன் கடுப்பாகி மேட்டர சொன்னவுடனே நாங்க விழுந்து விழுந்து சிரிச்சோம்... மதுரை பஸ் திருச்சி பஸ் ஸ்டாண்டுக்குள்ள வந்து திருச்சி டிக்கெட் எல்லாம் இறக்கி விட்டுட்டு மிச்ச இருந்த பயணிகளை இறங்க சொல்லிட்டு, பஸ்ல ஒரு சின்ன பிரச்சனை, சரி பண்ணிட்டு ஒரு 10 நிமிஷத்துல வந்துடறோம்னு போயிருக்கிறானுங்க... போனவனுங்க போனவனுங்கதான்... நண்பன் ½ மணி நேரம் நின்னு பார்த்துட்டு.. கடுப்பாகி மதுரை வந்து வந்திருக்கிறான்...நான் திருநெல்வேலி வந்து விகேபுரம் போய் சேரும்போது சாயங்காலம் 6 மணி... நெடும்பயணம்.... அதிலேருந்து..டிக்கெட் முன்பதிவு செய்யாம பஸ்ல ஏறுவதில்லை..
ReplyDeletegood work man
ReplyDeleteMadura beats Extended
அண்ணா பஸ்நிலையத்திலிருந்து கோரிப்பாளையத்துக்கு சுமார் 4 கிலோமீட்டர் இருக்கும்.////
ReplyDeleteஒரு கிலோமீட்டர் தான் இருக்கும் அண்ணே!