ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த இடுகை. ஒவ்வொரு நண்பர்களின் ஊர்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது. நன்றி ஸாதிகா அக்கா.
திருநெல்வேலி என்று சொன்னாலே உங்களுக்கு அல்வா என்றுதான் ஞாபகத்தில் வரும். இங்கு தயாரிக்கப்படும் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் நெல்லை டவுணில் உள்ள இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும்
ருசியே தனிதான். அந்த கடையில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என்ற பெயர். கூட்டம் அலைமோதும் அந்த கடையில் வியாபாரம் ஓஹோ. திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கே அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.
திருநெல்வேலிக்கு பெயர்க்காரணம் இந்துமத நம்பிக்கையின்படி, ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.
வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றான தாமிரபரணி வளம்கொழிக்கும் நெல்லைக்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. நம்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பல வீரர்களை வித்திட்டபூமின்னு சொல்லலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கான்சாகிப், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஊமைத்துரை மற்றும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாதவர்களும் வாழ்ந்த ஊர்ன்னு சொல்லலாம்.
தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பேசப்படும் வட்டாரமொழிகளில் நெல்லைத்தமிழும் பிரசித்தி பெற்றது. நெல்லையும் தூத்துக்குடியும் பிரிக்கப்பட்டாலும் இன்னும் இங்குள்ள மக்களின் சகோதரத்துவமும் பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறன்றன.
நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, கடையந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பை (அம்பாசமுத்திரம்), சேரன்மகாதேவி, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய நகரங்கள் உண்டு.
திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவனங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.
பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.
நெல்லை ஜங்சனில் ஆசியாவில் முதல் ஈரடுக்கு மேம்பாலம் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் காக்கிறது.
இங்குள்ள மக்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்களும் பெருமளவில் இந்து சமுதாயத்தவரும் நிறைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலபகுதி மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இங்கு உண்டு. பேட்டை, மேலப்பாளையம் மற்றும் சில ஊர்களில் உள்ள பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கு பெற்றோர் தயவை எதிர்பார்க்காமல் தம்மால் இயன்றளவுக்கு பொருளீட்டி சம்பாதிக்கின்றனர்.
நெல்லையில் சுற்றிப்பார்க்க நெல்லையப்பர் கோவில், அறிவியல் மையம், ஜூன் ஜூலை மாதங்களில் அரசு சார்பிலும் தனியாரும் பொருட்காட்சி நடத்துவார்கள். சில சமயங்களில் சர்க்கஸ்ம் நடத்துவார்கள். மக்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். தங்களுடைய ஓய்வு நேரங்களில் இதுமாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள ஜங்சன் பகுதி, கோபாலசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆற்றுக்கு குடும்பத்தினரோடு சென்று பொழுதை கழிப்பார்கள்.
இதுபோக பாபநாசம், குற்றாலம் அருவிகளுக்கும் மற்றைய சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.
இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அதெல்லாம் அப்போ... என்று சொல்லுமளவுக்கு இன்று எங்கும் விளைநிலங்கள் மனைகளாகவும் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது வேதனைக்குரியது. எங்கு பார்த்தாலும் அங்கே இத்தன சென்ட் நிலம் குறைவான தொகை, இங்கே இவ்வளவு தொகை என்று கூவிகூவி மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் விளம்பரம். காண சகிக்கலை.
இது நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும்தான்.
***************
அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!
நெல்லையில் வருகிற 17ம்தேதி வெள்ளிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு பதிவர் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளார்கள்.
வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.
நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி.
ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.
பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு உங்களுடைய அனுபவங்களையும் பகிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!..
உங்கள் ஸ்டார்ஜன்.
,
நல்ல பதிவு.
ReplyDeleteரியல் எஸ்டேட்.. உண்மைதான்:(!
நல்ல பதிவு..
ReplyDeleteதிருநெல்வேலிyin பெயர் சொல்லும் அருமையான பதிவு ஷேக்!
ReplyDelete"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.//
ReplyDeleteஇனிய பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
அழகு தமிழில் திருநெல்வேலியின் வரலாற்றை தொகுத்து எழுதியது அருமை சேக்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.
திருநெல்வேலியை சுற்றி பார்த்த திருப்தி ,நல்ல பதிவு. பதிவர்கள் சந்திப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteவிளக்கமாகவும்,விரிவாகவும் உங்களூரைப்பற்றி அதனது வரலாற்றுசிறப்பம்சங்களைப்பற்றியும் அழகுற சொல்லி இருக்கின்றீர்கள் ஷேக்.இருட்டுக்கடை அல்வா என்று கேள்விப்பட்டுள்ளேன்.இப்பொழுதுதான் அதன் பெயர் காரணத்தை அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபதிவர் சந்திப்பு இனிதே நிகழ வாழ்த்துகக்ள்.அதனையும் பகிருங்கள்.,
ReplyDeleteஎன் அப்பா படித்த ஜான்ஸ் கல்லூரியும் ,என் அம்மா படித்த சாரா டக்கர் கல்லூரியும் பல்லாண்டு தொன்மை வாய்ந்தவை .அப்புறம் இப்போது சென்னையில் சக்கை போடு போடும் போதீஸும் ஆர் எம் கே வியும் நெல்லையில் ஆரம்பித்தவை .
ReplyDelete//திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவனங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.//
ReplyDelete//பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.//
எங்கேயோ இடிக்குதே ...!!
:-)
நெல்லை - இலக்கியவாதிகள் பற்றி சொல்லியிருந்தால் முழுமை அடைந்திருக்கும்
ReplyDeleteதம்பி, ரொம்ப நாளாக ஆளைக் காணூமே ?
ReplyDeleteநிகழ்ச்சி நல்லபடியாக நடக்க நல்வாழ்த்துகள்
நீங்களும் தின்னவேலியா? பதிவு அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் சுற்றுலாத்தளங்கள் பற்றி கூறியிருக்கலாம். எங்களை போன்ற வெளியூர் காரர்களுக்கு தெரியுமல்லவா?
ReplyDeleteபதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
பத்தாம் வகுப்பில் பரீட்சைக்கு எழுதிய திருநெல்வேலி கட்டுரையை ஞாபகமாக மறுபதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனக்கு '' என் ஊர் - கடையநல்லூர்...'' கட்டுரை ஞாபகமில்லை!... இருந்தால் ஒரு பதிவிட்டிருக்கலாம்
சிந்துபூந்துறை பற்றி ஒன்றுமே இல்லையா?
ReplyDeleteசந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.
ReplyDeleteவெல்கம் பேக் சேக். கலக்கலா திரும்பி வந்துருக்கீங்க.
ReplyDeleteவீட்டில் அனைவரும் நலம்தானே..
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.
பதிவர் சந்திப்பு இனிதாய் நடைபெற வாழ்த்துக்கள்..! :)
ReplyDeleteஎங்க ஊர் பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. நன்றி :)
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.ஸ்டார்ஜன்.
ReplyDeleteபதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteரியல் எஸ்டேட் கொடுமைதான் தாங்கமுடியலை!! தின்னவேலி- நாகர்கோவில் ரோட்டுல, இப்பல்லாம் எத்தனை குடியிருப்புகள்!! அதேபோல, புதுபஸ் ஸ்டாண்ட் பைபாஸ் ரோட்லயும்!!
ReplyDeleteமிக நல்ல விஷயமுள்ள அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.
ReplyDeleteஆகா ஊரை சுற்றிப்பார்த்த திருப்தி. அருமையாக தொகுத்தளித்துள்ளீகள் ஷேக்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
ReplyDeleteஅழகு தமிழில் திருநெல்வேலியின் வரலாற்றை தொகுத்து எழுதியது அருமை.
ReplyDeleteபார்த்தேன் இரசித்தேன் நல்ல
ReplyDeleteபகிர்வு வாழ்த்துக்கள்................
அருமையான பதிவு.
ReplyDeleteதிருநெல்வேலியை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.
நல்ல எளிமையான அழகு தமிழ் நடை.
நேரில் பேசுவது போல் இருக்கிறது உங்கள் தமிழ் நடை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
திருநெல்வேலிக்கு நேசிக்கிறேன் படபிடிப்புக்காக வந்திருக்கிறேன்.... அங்கிருந்து பிறகு மனிமுத்தாறுக்கு சென்றோம்... இந்த பதிவை பார்த்த பிறகு எனக்கு ஞாபகம் வந்துவிட்டது... நல்ல பதிவு
ReplyDelete