Pages

Tuesday, January 11, 2011

தண்ணி விட்டா வளர்த்தோம்?..

சின்ன வயசுல எனக்கும் என் தங்கைக்கும் பக்கத்து வீடுகள்ல செடி கொடிகள், பூந்தொட்டிலாம் பார்க்கும்போது கொள்ளை ஆசையா இருக்கும். அதுமாதிரி நம்ம வீட்டுலயும் வைக்கலான்னு பார்த்தா, எங்க பெரியத்தா, "என்னல.. செடி, கிடி வளக்கணும் சொல்லுறே. ஆங்.. படிக்கிற வழியப்பாருடா" என்று கம்பைத் தூக்கிட்டு வந்துருவாக. அதேமாதிரி கோழி வளர்க்கணுமென்று ஆசையா இருந்தாலும் வீட்டில் அதற்கான இடவசதியும் சூழ்நிலையும் நமக்கு ஒத்துவராது. பெரியத்தாவுக்கு பயந்தே, சரி நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு மனச தேத்திக்கிருவோம்.

அத்தாவும் அம்மாவும் சத்தம் போடுவாக. வீட்டுல கஷ்டம். ஆனாலும் எங்களுக்கு செடி, கோழி வளர்க்கணும் என்ற ஆசை மட்டும் மாற‌வே இல்ல. எப்பவாவது எங்கத்தா கோழி வாங்கிட்டு வந்தாலும் அதை வீட்டுல கட்டிப்போட்டிருப்போம். கோழிய பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கும். பள்ளிக்கூடத்து பசங்ககிட்ட சொல்லி சந்தோசப்பட்டுக்கிருவேன். ஆனா மறுநாள் அந்த கோழி கழுத்துக்கு கத்தி வந்திரும். வீட்டுல கோழி பீ பேன்டு அசிங்கப்படுத்துன்னு பெரியம்மா சொல்லி பெரியத்தா கோழி கழுத்துல கத்தி வைச்சிருவாக. இதுல கொடுமை என்னன்னா அந்த கோழிய பிடித்துக் கொள்வது நான்தான். வருத்தமா இருந்தாலும் வெளிய காட்ட முடியாது. ஏன்னா அடி விழுகும்.


இப்படித்தான் ஒவ்வொரு கோழி வாங்கிட்டு வரும்போதெல்லாம் அந்த கோழிக்கு இதே கதிதான்.

எங்க செய்யது அப்பா காலமான பின்னர் நாங்கள் தனிக்குடித்தனம் சென்றோம். புதுவீட்டுக்கு சென்றபின்னாடியும் அந்தவீட்டில் செடி, கோழி வளர்க்க இடமில்லாததால் அந்த ஆசை நிராசையாகியது. "ஒருநாள் எங்கிட்ட மாட்டவா மாட்டேன்னு" ஒரு வைராக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்தவீட்டிலிருந்து காலிபண்ணி வேறவீட்டுக்கு குடியேறினோம். அங்கு சென்ற எங்களுக்கு சந்தோசமுன்னா அப்படியொரு சந்தோசம்தான் போங்க.. அங்கே வீட்டுக்கு பின்னாடி வள‌வுல ஒரு ரெண்டு மீட்டர் அள‌வுக்கு மண் தரையுடன் கூடிய இடம் இருந்தது.

உடனே எங்களுடைய செடி, கோழி வளர்க்கிற ஆசை மறுபடியும் முழிச்சிருச்சி..

"கோழிக்குஞ்சு, கரண்டு குஞ்சி 2ரூபாய்க்கு 1" என்று கூவிக்கிட்டே செல்லும் கோழிக்காரர் வியாபாரம் சூடுபிடிக்கும். நான் 5 ரூபாய்க்கு 3 வாங்கிட்டு வருவேன். "மறுபடியும் போய் ஐந்து ரூபாய்க்கு வாங்கிட்டுவா" என்று என் தங்கை அனுப்பிவைப்பாள். சிலசமயங்களில் பிரைஸில் வேறு கோழிக்குஞ்சு கிடைக்கும். வாங்கிட்டு வந்த கோழிக்குஞ்சுகள் அழகழகா கலர்கலரா பார்க்க பார்க்க ஆசையா இருக்கும். கோழிக்குஞ்சுகளுக்கு ஏற்ப கடையிலிருந்து வாங்கிய அட்டைப்பெட்டியில் வீடு தயார் செய்து கொடுப்பேன். கடைகளில் கஷ்டப்பட்டு கம்மம்புல் வாங்கிவந்து கோழிக்குஞ்சுகளுக்கு கொடுப்போம். என் தம்பிகள் ஆசையோடு கோழிக்குஞ்சுகளை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிருவாங்க.

ஆனால் நம் கண்காணிப்பை மீறியும் கோழிக்குஞ்சுகள் அங்கே நடமாடும் பூனைகளுக்கு விருந்தாகிவிடும் சோகம் தாங்கமுடியாது. மிஞ்சி இருக்கும் கோழிக்குஞ்சுகளை பத்திரமாக பார்த்துக்கொள்வோம். சில நோய்வந்தும் சில பூனைகளுக்கு விருந்தாகவும் ஆகி கடைசியில் ஒரே ஒரு கோழிக்குஞ்சு பெருசா வளர்ந்து சேவலாகியதை பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது. எங்க தெருவில் அது கம்பீரமாக பெட்டைக்கோழிகளுடன் உலா வரும். சில சமயங்களில் நான் கடைக்கு பஜாருக்கு செல்லும்போது என்பின்னாலே குடுகுடுவென ஓடிவரும். நான் அதை "வீட்டுக்கு போ" என்று சொன்னதும் போய்விடும்.


வளவில் உள்ள 2 மீட்டர் இடத்தில் எங்கத்தா முருங்கை மரத்தண்டை ஊன்றிவைத்தார். முருங்கை மரத்தண்டு நாளடைவில் தளிர்க்க தொடங்கியது. ஒரே மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மரமாக வளர ஆரம்பித்தது. சிலவிதைகளை முருங்கை மரத்தடியில் போட்டு வைப்போம். அப்படி போடப்பட்ட அவரை விதைதான் வேரூன்றி விருட்சமாகி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் முருங்கை மரத்தை ஒட்டி வள‌ர்ந்த அவரைச்செடி நாளடைவில் கொடியாக மாறியது. வளர்ந்த கொடிக்கு பந்தல்போட்டும் அதையும் மீறி வளர்ந்ததால் முருங்கை மரத்தோடு சுற்றிவிட்டோம். முருங்கை மரத்தில் முருங்கைக்காயும் காய்த்தது. அவரைக்கொடியும் பூத்து காய்க்கத் தொடங்கியது. எங்கம்மாவுக்கு சந்தோசம். முருங்கைக்காயும் கிடைக்குது; அவரக்காயும் கிடைக்கிறதென்றால் சும்மாவா.. வீட்டில் உணவில் முருங்கையும் அவரைக்காயும் போட்டி போட்டன.

எங்க தெருவில் உள்ளவங்களுக்கு வியப்போ வியப்பு. ஆச்சர்யம். எல்லோருடைய பேச்சில் எங்கவீட்டு முருங்கையும் அவரையும் தான் நிறைந்திருந்தது.

நாங்கள் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு காய்களை கொடுத்தோம். இப்படியே கொஞ்சநாள் போனது. அவரைக்கொடியில் நசுக்கோட்டான் பூச்சி உலாவரத் தொடங்கியது. முருங்கை என்றாலே நசுக்கோட்டானுக்கு கொண்ட்டாட்டம் அதிலும் அவரை என்றால் கேட்கவா வேணும். இப்படியே நிறைய பூச்சிகள் வரத்தொடங்கின. மருந்துகள் அடித்தாலும் பிரயோசனமில்லை என்பதால் அவரைக்கொடியை முருங்கைமரத்தோடு சேர்த்து வெட்டிவிட்டோம்.

பின்னர் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று எல்லோருக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய் அவரைக்காய் கொடுத்தது போக மீதமும் இருந்தது.

எங்க வீட்டில் பூத்துகாய்த்து விருட்சமாக வளர்ந்த எங்க செல்லம் அவரைக்கொடியை இப்போது நினைத்தாலும் சந்தோசமும் பெருமிதமும் குடிகொள்ளும்.

,

Post Comment

29 comments:

 1. வீட்டுல தோட்டமும், செல்லப்பிராணிகளும் இருந்தாலே ஒரு தனி கொண்டாட்டம்தான்..

  ReplyDelete
 2. ஸ்டார்ஜன்,அப்படியே திருநெல்வேலி பேச்சு வழக்கு மாறாமல் அழகுற வீட்டுத்தோட்டத்தையும்,கோழியைப்பற்றியும் எழுதியதை மிகவும் ரசித்தேன்.ஊருக்கு போகும் நாள் நெருங்க நெருங்க ஊர் சார்ந்த பதிவுகள் அதிகம் வருகின்றது பார்த்தீர்களா?

  ReplyDelete
 3. வாங்க சாந்தியக்கா @ வீட்டுல‌ தோட்டம் இருந்தா மனசுக்கு இதமா இருக்கும். ரொம்ப சந்தோசமா இருக்கும்.

  ரொம்ப நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

  ReplyDelete
 4. வாங்க ஸாதிகாக்கா @ ஊருக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரொம்ப சந்தோச்மா இருக்கு.. கரெக்டா சொன்னீங்க.. அது என்னன்னே தெரியல.. என்ன மாயமோ தெரியல..

  ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 5. அடடடா அருமையான பதிவு, பால்ய பருவம் நியாபகம் வந்து விட்டது.....அருமை...

  ReplyDelete
 6. அட! கலக்கலா சொல்லியிருக்கே மக்கா.

  //வீட்டுல கோழி பீ பேன்டு அசிங்கப்படுத்துன்னு பெரியம்மா சொல்லி பெரியத்தா கோழி கழுத்துல கத்தி வைச்சிருவாக. இதுல கொடுமை என்னன்னா அந்த கோழிய பிடித்துக் கொள்வது நான்தான். //

  அடப்பாவி. கோழி அடிச்சு ஒரு வெட்டு வெட்டிபுட்டு பேச்ச பாரு :)

  //நான் கடைக்கு பஜாருக்கு செல்லும்போது என்பின்னாலே குடுகுடுவென ஓடிவரும். நான் அதை "வீட்டுக்கு போ" என்று சொன்னதும் போய்விடும்.//

  ஒரு வேளை தமிழ் தெரிஞ்ச கோழியா ஒருக்குமோ.

  //மருந்துகள் அடித்தாலும் பிரயோசனமில்லை என்பதால் அவரைக்கொடியை முருங்கைமரத்தோடு சேர்த்து வெட்டிவிட்டோம்.//

  மரம் போச்சே.

  ஏதோ என் பங்குக்கு சொல்லிட்டேன். மீதியை உன் ஸ்பெஷல் சிஷ்யர் நாஞ்சிலு வந்து தொடர்வார்.

  ReplyDelete
 7. நல்ல அருமையான நினைவுகள் நண்பா.
  ஊருக்கு போகும் நாள் நெருங்க நெருங்க ஊர் சார்ந்த பதிவுகள் அதிகம் வருகின்றதோ...
  எல்லாருக்கும் உள்ளதுதானே இல்லையா நண்பா.

  ReplyDelete
 8. கொஞ்சம் நிதானித்து, பின்னோக்கித் திரும்பிப் பார்த்து பழைய நினைவுகளை அசைபோட வைத்த இடுகை!

  ReplyDelete
 9. என் சின்ன வயசை நியாபகப்படுத்திட்டீங்க ;)

  ReplyDelete
 10. நாங்களும் கோழி வச்சி இருக்கோம். சதா கோழி இல்லை எல்லாம் கட்டு சேவல்கள். "சண்டை கோழி"

  ReplyDelete
 11. வாங்க மனோ @ நன்றி நன்றி.. ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 12. ஊர்ஞாபகமும் சின்ன வயசில் அடை காக்கும் கோழிமுட்டைக்குப் பெயர் எழுதி வச்சுக் காத்திருந்ததும் மனசில ஓடுது !

  ReplyDelete
 13. ஹ்ம்ம்.. நல்ல நினைவலைகள்.. நானும், என் தம்பியும் கூட.. கோழி குஞ்சுகள் கலர் கலரா வாங்கி வளர்திருக்கோம்..
  வீட்டில் திட்டும் வாங்கி இருக்கோம் :-)

  ReplyDelete
 14. //// இதுல கொடுமை என்னன்னா அந்த கோழிய பிடித்துக் கொல்வது நான்தான் //

  முதல் ஆளா லெக்பீசை சாப்பிட்டுட்டு இதுல வருத்தம் வேறயா-? கொன்றால் பாவம் தின்றால் போச்சு குரு...

  ஆமா....யாராச்சும் இப்போ கோழியைப்பத்தி கட்டுரை எழுதச்சொன்னாங்களா குரு...:))

  ReplyDelete
 15. அதெல்லாம் ஒரு காலமுங்க.... நனக்காவது.... கொஞ்சம் கொடுப்பினை இருந்தது.... வரும் தலைமுறைகள் “போஞ்சாய்” செடிகளை பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 16. நல்ல பதிவு கொழுந்தனாரே

  பழைய நினைவுகளா?

  //ஸாதிகா
  ஊருக்கு போகும் நாள் நெருங்க நெருங்க ஊர் சார்ந்த பதிவுகள் அதிகம் வருகின்றது பார்த்தீர்களா//

  மீன் சினைப் புட்டு பார்சல் வரும்.
  அனுப்ப சொல்லி இருக்கிறேன் ஆசிய உமரிடம்.

  ReplyDelete
 17. சாப்பிட்ட சேவல் கனவில் வந்து செய்தி ஏதும் சொல்லியதா பாஸ்?? பழைய நினைவுகளை இருவரும் மாறி மாறி பகிர்ந்து கொள்கிறீர்களே என்ன விஷயம்?? ஹி..ஹி..பதிவு
  நச்ச்!!

  ReplyDelete
 18. //starjan ( ஸ்டார்ஜன் ) said...
  வாங்க ஸாதிகாக்கா @ ஊருக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரொம்ப சந்தோச்மா இருக்கு.. கரெக்டா சொன்னீங்க.. அது என்னன்னே தெரியல.. என்ன மாயமோ தெரியல..ஊருக்குப் போற நாள் நெருங்க நெருங்க மனதில் ஒரு பயம் தெரிகிறது கைலாம் நடுங்குது ஏன்னே தெரியலை.

  அந்நியன் : கவலைப் படாதிர்கள் சகோ..ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் போக போக சரியாகிவிடும்.
  ஆமா இந்த சேவல் வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவல் மாதுரி தெரியுது ?

  ReplyDelete
 19. //ஆமினா said...
  என் சின்ன வயசை நியாபகப்படுத்திட்டீங்க ;)//

  அட.......தங்கச்சி ஆமினா உங்கள் பிறப்பா ?
  ரொம்ப புத்திசாலிங்க !!!

  ReplyDelete
 20. முருங்கை மரம் - அவரை செடி - பப்பாளி மரம் - வாழை மரம் - சீத்தாப்பழ மரம் , வெண்டைக்காய் செடிகள்.... இன்னும் பல ... எங்கள் அப்பாவுக்கு, தான் வளர்க்கும் செடிகளில் இருந்து பறித்து உண்ணும் சந்தோஷமே தனி... இன்று எல்லாமே வெற்றிடமாய்.... உங்கள் பதிவு, எனக்கு இனிய நினைவுகளை மீட்டி தந்தது. ரொம்ப நன்றிங்க....

  ReplyDelete
 21. படிக்க...படிக்க...என் சின்ன வயது நினைவுகளும் கூடியது சகோ...நானும்,என் தம்பியும் கூட இந்த மாதிரி கலர் கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்து அதுக்கு அட்டை பெட்டி தயார் செஞ்சு வச்சுருப்போம்..ஒரு நாளைக்கு 100 வாட்டியாவது அதை தூக்குறது...அட்டை பெட்டியில் திறந்து பார்கிறது...கம்பு உணவு தூவுராதுன்னு...ஆனால் எதுவுமே தங்கலை...காக்கா..பூனை...நாய் னு ஏதாவது தூக்கிட்டு போயிரும்...இல்லாட்டி அதுவா செத்து போயி எறும்பு மொச்சு கிடக்கும்...செடி கொடி வளர்ப்பும் பிடிக்கும்...ஆனால் இப்போ எங்க வீட்டு பக்கம் அநியாயத்துக்கு பாம்பு சகோ...போன மாதம் பிச்சி பூ கொடியை வெட்டினோம்...அந்த பிச்சி பூ கொடி ராமர் பிச்சி னு சொல்ற தரமான கொடி வகை...தெருவே வாசம் வீசும்...ஆனால் அதில் பாம்பு சுத்தி இருக்கும்..அதான் மனசில்லாமல் வெட்டினோம்...அன்னைக்கு வெட்டிய பிறகு மனசே சரி இல்லை...அருமையான பகிர்வு சகோ...

  ReplyDelete
 22. ட்பழைய நினைவுகள் அபப்டியே நினைவில் ஓடுது.

  செடி வளர்த்தது. கோழிகுஞ்சு வளர்த்து அதை பெருச்சாலி கொண்டு சென்றதெல்லாம். நெனப்பு வருது.
  உங்க்ள் மனைவியும் பிலாக் எழுதுராங்கன்னு எப்பவோ படித்தேன்.

  ஹே ஹே யாருன்னு கண்டு பிடிச்சிட்டேனேன்

  ReplyDelete
 23. பழைய நினைவுகளை , திருநெல்வேலி தமிழில் கலக்கி இருக்கிறிர்கள் அருமை.

  ReplyDelete
 24. இளமைகால நினைவலைகள்.
  பதிவு எங்கும் மண்ணின் மனம்.
  யதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள் தம்பி.
  நம்ம ஊர் தமிழில் ஒரு புதிய
  புதினம்.
  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. ஸ்டார்ஜன் இப்ப தான் பார்க்கிறேன்,அருமையான பகிர்வு.அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்திட்டீங்க.ஊரில் அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்க.

  ReplyDelete
 26. எங்க வீட்டில் பூத்துகாய்த்து விருட்சமாக வளர்ந்த எங்க செல்லம் அவரைக்கொடியை இப்போது நினைத்தாலும் சந்தோசமும் பெருமிதமும் குடிகொள்ளும்.//
  சந்தோஷப் பகிர்வு மகிழ்ச்சிய்ளித்தது

  ReplyDelete
 27. நண்பரே நீண்ட நாட்களிற்கு பின் தொடர்புகொள்வதில் சந்தோசம்
  நலமாய் இருக்கிறீங்களா?

  நல்லாயிருக்குங்க........................நம்ம பக்கமும் வாங்க..............

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்