Pages

Monday, October 17, 2011

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

கடந்த சில நாடகளாக பதிவுலகில் நடந்துவரும் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் மனதுக்கு வேதனை அளிக்கிறது.

நேற்று சில நண்பர்கள் போனிலும் இமெயிலிலும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை கேட்டபோது வருத்தமாக இருந்தது.
ஊரிலிருந்து வந்த எனக்கு இது புதிதாக இருந்தது. அப்படியென்ன என்று விசாரிக்கும்போது தமிழ்மண நிர்வாகி ஒருவர் பெயரிலி என்ற பெயரில் சக பதிவர் ஒருவரின் பதிவில் கீழ்தரமான கமெண்ட்களை பகிர்ந்துகொண்டது வருந்தத்தக்கது.

இந்த செயலுக்கு அனைத்து பதிவுலக நண்பர்களும் தங்கள் எதிர்ப்பினை காட்டியுள்ளனர். அது மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பியுள்ளது.

ஒரு சாதாரண மனிதன் பேச யோசிக்கும் கீழ்த்தரமான வார்த்தைகளை சர்வசாதாரணமாக பின்னூட்டங்களாக வெளியிட்டிருக்கிறார்(விபரம் கீழே).

**************

சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.


"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"


ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.


இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.


அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).


இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றேன்.


தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.

--------------------

ஒரு தமிழ்மணத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் இந்தமாதிரி கீழ்தரமாக எழுதுவதை கண்டிக்காமல் இருந்தால் அது தமிழ்மணத்துக்குதான் கெட்டபெயர். அந்தமாதிரிதான் தமிழ்மணம் இதுவரை அந்த மேற்படி நபரை தட்டிக்கேட்காமல் மௌனம் சாதிப்பது மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது.

எந்த ஒரு தனிமனிதனாக இருந்தாலும் தனது மத கோட்பாடுகள், மொழி, பழக்கவழக்கங்கள் அவற்றை சார்ந்தே இருப்பான். இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். அதேமாதிரி மாற்றுமத நண்பர்களின் கொள்கைகள், பழக்கவழக்கங்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது சிலர், அடுத்தவர்களின் மத, ஜாதி பிரச்சனையை கிளப்பிவிட்டு அவர்களுடைய மனத்தை புண்படுத்தும்படி பேசுவதோ, எழுத்தின்மூலமோ செய்து பெருகிவருகிறனர். நான் ஏற்கனவே கூறியுள்ளபடி,

எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி.

தினமும் நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிட்டுவருகிறார்கள். இதில் நிறைய புதியவர்கள் எழுத வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம். அவர்கள் இதையெல்லாம் பார்த்து ஏன்டா நாம் எழுதவந்தோம் என எண்ணி வருந்தும் அளவுக்கு நம்முடைய பதிவுகள் இருக்கக்கூடாது. காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும். பிற்காலத்தில் நமது சந்ததியினர் திருப்பிப்பார்க்கும்போது நமது எழுத்துக்கள் அவர்களை ஈர்க்கவேண்டும்.

நாம் அனைவரும் நமக்கு தோன்றியதை எழுதிவருகிறோம். யாரும் இலக்கியமெல்லாம் படித்துவந்து எழுதவில்லை. அதற்காக, நம்முடைய வலைப்பூவில் இடுகைகள் கொச்சையாகவும் மோசமாக தாக்கியும் இருக்கக்கூடாது. பதிவு எழுதும்போது எழுத்தில் கவனமும் கண்ணியமும் இருக்கவேண்டும். அப்படி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் பதிவுகளை நாம் எட்டிக்கூட பார்க்ககூடாது.


தமிழ்மணத்தின் இந்த செய்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. நானும் எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். உடனடியாக‌, இதற்கு தமிழ்மணம் விளக்கம் அளித்து தீர்வு காணவேண்டும்.

,

Post Comment

20 comments:

 1. Click the link below and read.

  1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

  2.தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.

  3.தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!

  4.தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!

  6.தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?

  7.தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..

  8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க

  9.மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

  10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?

  11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா

  12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >

  13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???

  14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

  15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

  16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

  17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

  18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

  19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

  20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

  21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

  22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

  23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

  24.சீ தமிழ் மனமே ..

  25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

  ReplyDelete
 2. நான் எனது தளத்தில் இருந்து தமிழ்மணத்தை நீக்கி விட்டேன்...

  தமிழ்மணத்தை நான் போடா வெண்ணை என்றேனா, இல்லை தமிழ்மணம் என்னை போடா வெண்ணை என்று சொல்லுமா...???

  http://nanjilmano.blogspot.com/

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்

  மண்ணிப்பு கேட்பார் என்று நம்புவோம் .அவரின்(தமிழ்மணத்தின்) நலனுக்காகவும் ...!! :-)

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. என்ன ஒரு கேவலமான கமெண்ட் அது.

  எனது கடுமையான கண்டனங்கள்.

  ReplyDelete
 7. இஸ்லாமியர்களின் நியாயம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்பதற்காகத்தான் அந்தக் கமெண்டை போட்டேன் அதற்கு பதில் சொல்லக் கூட விருப்பமில்லாமல் நீக்கியுள்ளீர்கள். உங்களை பற்றி சொன்னவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்களே மற்ற மதத்தினரைப் பற்றி மட்டும் என்ன வேண்டுமென்றாலும் எழுதுவீர்களா?

  ReplyDelete
 8. அவர்களுடைய பதிவை பார்த்தால், அவர்களிடம் விளக்கம் கேட்பது வேஸ்ட்டு... தூக்கி வீசுங்க பாஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 9. சகோதரர் ராபின்,

  அஸ்ஸலாமு அலைக்கும்...

  இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். அடுத்தவரை அழைக்கும்போது அழகான உபதேசங்களை கொண்டு அழைக்குமாறு கூறுகின்றது. இதற்கு மாறாக அநாகரிகமான, வக்கிரமான முறையில் விமர்சனம் செய்தால் அது கடுமையான கண்டனத்திற்கு உரியது. இதில் மாற்று கருத்து இல்லை. அடுத்த மதத்து கடவுள்களை திட்ட வேண்டாமென்றும் கூறுகின்றது இஸ்லாம். ஆகையால் தாங்கள் கூறியது போல அந்த தளங்கள் செயல்பட்டால் அது கடுமையான கண்டனத்திற்குரியது.

  மேலும், தாங்கள் கொடுத்த முதல் லிங்க் முஸ்லிம்களுடையதாக தெரியவில்லை. இரண்டாவது லிங்க் ஒரு முஸ்லிம் சகோதரர் எழுதுவதாக தெரிகின்றது. இன்ஷா அல்லாஹ் அந்த பதிவுகளை படித்து பார்க்கின்றேன். அவைகளில் தாங்கள் சொல்லியப்படி இருந்தால் என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

  இதனை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி..

  வஸ்ஸலாம்,

  இதே பின்னூட்டத்தை என்னுடைய தளத்திலும் பதித்துள்ளேன். இது குறித்து மேலும் பேச விரும்பினால் என்னுடைய தளத்திற்கு வரவும்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்,

  தமிழ்மணம் தற்போது விளக்கம் வெளியிட்டுள்ளது. பார்க்க http://blog.thamizmanam.com/archives/359

  ReplyDelete
 11. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

  1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

  SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

  ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

  ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

  Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

  3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
  மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

  உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

  இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

  SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

  ReplyDelete
 12. எனது நண்பர் நீங்களும் இணைய தளத்துக்கு வாருங்கள் என்றபோது,சந்தோசப்பட்டேன் இப்போது,ஏன் வந்தேன் என்று வருந்துகிறேன்.தமிழ்மணம் சர்ச்சைகள் வருத்தம் தருகிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

  ReplyDelete
 13. தமிழ்மணமே மன்னிப்புகேள்


  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

  ReplyDelete
 14. உணமையிலேயே அவர்கள் விளக்கம் என்ற போர்வையில் அடிக்கும் சப்பை கொட்டு தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நிரூபிக்கிறது.

  மண்ணிப்பு கேட்காவிட்டால்..

  பொறுத்திருந்து பாருங்கள்

  ReplyDelete
 15. எனது கடுமையான கண்டனங்கள்.

  ReplyDelete
 16. ஒரு முடிவு வரும்போல் தெரிகிறது.

  ReplyDelete
 17. தமிழ்ர்களுக்கு வார்த்தை, செயல், எழுத்து எல்லாவற்றிலும் ஆத்திரம் வன்முறை அதிகம் தான்.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்