Pages

Friday, July 31, 2009

சிந்து சமவெளி






சிந்து சமவெளி நாகரீகத்தைப் பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...




(மொகஞ்சதாராவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைய கால கட்டடப்பகுதி)





மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.





இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள்.




(கராச்சி , தேசிய தொல்பொருட்காட்சி நிலையத்தில் கி.மு.2500 ஆண்டு பழமையான சிலை)


மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதிஇது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.



இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.


வரலாறு


மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.


ஹரப்பா


அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன.


கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.


மெஹெர்கர்


மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன.


இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.


பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.


மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.


லோத்தல்

(இந்திய தொல்லியல் ஆய்வத்தின் கருத்துப்படி லோத்தலின் பண்டைய காலத்தின் தோற்றம்)


லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 2400 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் நாள் தொடக்கம் 1960 ஆம் ஆண்டு மே 19 வரை அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.

Post Comment

Thursday, July 30, 2009

சிநேகிதனே சிநேகிதனே ....


எனக்கு நண்பர் சந்ரு நல்ல நண்பர் விருது கொடுத்துள்ளார் .

அது போல நம்ம டி வி ராதா கிருஷ்ணனும் நல்ல நண்பர் விருது கொடுத்துள்ளார் .

இவர்கள் கொடுத்த இந்த விருது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

நான் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனை நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது .

நானும் இந்த விருதை நண்பர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .


1. கோவி . கண்ணன்

2. சுரேஷ் ( பழனி வள்ளல் )

3. அக்பர்

4. முரளி கண்ணன்

5. சப்ராஸ் அபுபக்கர்

6. ஜெகநாதன்

7. வசந்த் குமார் ( ப்ரியமுடன் வசந்த் )

8. எம் எம் அப்துல்லா

9. அபு அப்ஃஸர்

10. சங்கா

வாங்க எல்லோரும் ...

சந்தோசமா ஆனந்தமா கொண்டாடுவோம் ...

உங்கள் ஸ்டார்ஜன்னுடன் ...

Post Comment

Tuesday, July 28, 2009

பற பற பட்டாம்பூச்சி ....

நண்பர் வசந்த் குமார் ( பிரியமுடன் வசந்த் ) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளார் .

நான் இப்போ பறக்கலாமே ... எப்படி ?...

எங்கிட்டதான் பட்டாம்பூச்சி இருக்கே ...

என்னை மாதிரி இவங்களும் பறக்கிறாங்க‌ ....

எந்த கவலையும் இல்லாம ...







நீங்களும் பறங்க சந்தோசமா......





Post Comment

Wednesday, July 22, 2009

நானும் சுவையார்வ வலைப்பதிவு விருதும் ...


வ்லைப்பதிவு நண்பர்களே , ஒரு நிமிசம் என்னன்னு கேட்டுட்டு போங்க .

நேற்று என்னடான்னா அக்பர் எனக்கு சுவையார்வ பதிவர் விருது கொடுத்திருக்கிறார் .

இன்று அய்யா ஜெகநாதன் அவர்கள் எனக்கு The Intersting Blog அவார்ட் கொடுத்து உள்ளார் .

இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது .

இந்த விருது என் வலைப்பதிவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .

இதற்கு முக்கிய காரணம் உங்களுடைய ஆதரவு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன் . என்னுடைய எழுத்துக்கு கிடைத்த பரிசு .


இதன் மூலம் நானும் எனக்கு பிடித்த வலைப்பதிவுக்கும் வலைப்பதிவர்களுக்கும் விருது கொடுக்க ஆசைப்படுகிறேன் . அந்த வகையில் பார்த்தால் எனக்கு எல்லோருடைய வலைப்பதிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .

அவங்க யார் யாருன்னா ....

முரளிகண்ணன் சினிமா பத்தி பதிவுகள் ரொம்ப நல்லா எழுதுவார் . நான் முதன்முதலாக வலைப்பக்கம் படித்தது இவருடைய பக்கத்தை தான் .

வ‌ச‌ந்த் குமார் (பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்) வலைப்பதிவு எனக்கு ரொம்பப் பிடிக்கும் .

சுரேஷ் (க‌ன‌வுக‌ளே) வலைப்பக்கம் வெரைட்டியா இருக்கும் .

கோவிக் க‌ண்ணனின் காலம் உங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி . ந‌டுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் க‌ருத்துக்கள் இவருடைய எழுத்தின் ஒரு பரிமாணம் . எனக்கு பிடித்த வலைப்பதிவரும் கூட .

அக்பர் இவர் எனக்கு பிடித்த பதிவர் .இவ‌ருடைய‌ எழுத்து எல்லோரையும் க‌வ‌ர‌க்கூடிய‌து . என‌க்கு பிடித்த‌ பக்க‌ங்க‌ளில் ஒன்று . என‌க்கு இந்த‌ விருதை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் .

நாம‌க்க‌ல் சிபி ரொம்ப நல்ல பதிவர் . எனக்கு பிடிக்கும் .

நையாண்டி நைனா இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு பிடிக்கும் .

ல‌க்கிலுக் யுவ‌கிருஷ்ணாவின் க‌தைக‌ள் என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் . என‌க்கு பிடித்த‌ வலைப்ப‌திவ‌ர் .

டி வி ராதாகிருஷ்ண‌ன் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வலைப்ப‌திவ‌ர் .

ஜாக்கிசேக‌ர் என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இவ‌ருடைய‌ ப‌க்க‌மும் ஒன்று .

கேபிள்ச‌ங்க‌ரின் விம‌ர்ச‌ன‌ம் பாக்காம‌ல் நான் சினிமா பார்ப்ப‌தில்லை .

உண்மைத் த‌மிழ‌ன் இவ‌ருடைய‌ ப‌க்க‌த்தை சீக்கிர‌ம் ப‌டித்து முடித்திட‌லாம் . அவ்வ‌ளோ சின்ன‌தா எழுதுவார் . ஆனாலும் எழுத்து ந‌டை ரொம்ப‌ சூப்ப‌ர் .

ஆசிப் மீரான் என‌க்கு பிடித்த‌ ப‌திவ‌ர் .

குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் இவ‌ருடைய‌ ப‌க்க‌ம் ரொம்ப‌ வெரைட்டியா இருக்கும் .

மாத‌வ‌ராஜ் சிறுக‌தை ம‌ன்ன‌ர் .

சென்ஷி இவ‌ர் ரொம்ப‌ வித்தியாச‌மா எழுதுவார் .

செந்த‌ழ‌ல் ர‌வி மாதிரி தொழில் நுட்ப‌ ப‌திவு போட‌வே முடியாது . த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் . ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள் இவ‌ர் ப‌திவில் பொதிந்திருக்கும் .

எம் எம் அப்துல்லா ரொம்ப எனக்கு பிடித்தவர் . ந‌ல்ல‌ ப‌திவ‌ர் .

ஜெக‌நாத‌ன் வித்தியாச‌மா போட்டுத் தாக்குவார் இவ‌ர் ப‌க்க‌ங்க‌ளில் . என‌க்கு இந்த‌ விருதை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் . வெரைட்டி ம‌ன்ன‌ர் .

சங்கா இவ‌ரும் வித்தியாச‌மான‌ ப‌க்க‌ங்க‌ளை கொண்ட‌வ‌ர் .

ச‌ந்ரு என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌திவ‌ர் . இவ‌ர் எழுத்து என‌க்கு பிடித்த‌து .


இன்னும் நிறைய‌ என‌க்கு பிடித்த‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் ப‌திவுல‌கில் உலா வ‌ருகின்ற‌ன‌ர் .

இவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் விருது கொடுக்க‌ என‌க்கு ரொம்ப‌ ஆசை . ஆனா பாருங்க‌ எல்லோரும் கொடுக்கிற‌ மாதிரி ஆறு பேருக்கு கொடுக்க‌ என் ம‌ன‌ம் விரும்ப‌வில்லை .

என் வ‌லைப்ப‌திவில் என்னை ஊக்க‌ப்ப‌டுத்திய‌து நீங்க‌ள் அனைவ‌ரும் தான் . என்னை ஊக்க‌ப்ப‌டுத்தும் நீங்க‌ளே இந்த‌ விருதுக்கு உரிய‌வ‌ர்க‌ள் .


ஆக‌வே நான் கொடுக்க‌வேண்டிய‌ இந்த‌ விருதை உங்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ழங்குறேன் .

உங்க‌ள் மேலான க‌ருத்துக்க‌ளை எதிர்பார்த்த‌வ‌னாக‌ .....

உங்க‌ள் ஸ்டார்ஜ‌ன்

Post Comment

Monday, July 20, 2009

வலைப் பதிவு எப்படி எழுதலாம் ??....


வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே ,

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் எனக்காக ஒரு 5 நிமிடம் ஒதுக்க முடியுமா ?.. சகோதரர்களே !!!!.

எல்லோரும் நல்ல நல்ல பதிவுகளை போட்டுத் தாக்குறாங்க . ஹிட்ஸ்களையும் ஏத்துறாங்க . நானும் அப்படி எழுதலாம் என்று நினைக்கிறேன் . என்ன எழுதலாம் என்று நினைச்சி நினைச்சி மண்டை காஞ்சிப் போச்சு . ஒண்ணுமே தோணமாட்டேங்குது . இந்த மரமண்டைக்கு ஏறல .

எப்ப‌டி எழுத‌லாம் ..... எப்ப‌டி எழுத‌லாம் !!!....

முர‌ளிக‌ண்ண‌ன் மாதிரி சினிமா ப‌ற்றி ப‌திவு எழுத‌லாமா ...

வ‌ச‌ந்த் குமார் (பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்) மாதிரி ப‌ட‌ம் போட்டு க‌லாய்க்க‌லாமா...

சுரேஷ் (க‌ன‌வுக‌ளே) மாதிரி வெரைட்டியா போட்டுத் தாக்க‌லாமா ...

கோவிக் க‌ண்ண‌ன் மாதிரி ந‌டுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் க‌ருத்துக்க‌ளை ப‌ற்றி எழுத‌லாமா ...

நாம‌க்க‌ல் சிபி மாதிரி ந‌ய‌ன்தாராவின் பயோடேட்டா மாதிரி நடிகைகளின் பயோடேட்டா ப‌த்தி எழுத‌லாமா ....

நையாண்டி நைனா மாதிரி ந‌க்க‌ல் ப‌ண்ண‌லாமா ...

அக்ப‌ர் மாதிரி த‌மிழ்ம‌ண‌த்துல‌ ஹிட்ஸ் வாங்குவ‌து பத்தி எழுத‌லாமா ...

ச‌க்திவேல் மாதிரி த‌மிழ்ம‌ண‌த்துல உள்ள ஓட்டையை ப‌த்தியும் அன்னிய‌ன் அம்பி ஸ்டைலில் அநியாய‌த்தை த‌ட்டிக் கேட்கும் முறைக‌ளை ப‌ற்றி எழுத‌லாமா ....

ல‌க்கிலுக் மாதிரி சிறுகதைகளா எழுத‌லாமா ...

உண்மைத் த‌மிழ‌ன் மாதிரி 10 பக்கம் எழுதலாமா ...

ஆசிப் மீரான் மாதிரி ஒன்னும் புரியாத‌தை ப‌த்தி எழுத‌லாமா ...

குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் மாதிரி பதிவுலகத்தை வெறுத்து அறிக்கை விட‌லாமா...

மாத‌வ‌ராஜ் மாதிரி சிறுக‌தைகளா எழுத‌லாமா ...

சென்ஷி மாதிரி வித்தியாச‌மா எழுத‌லாமா ...

செந்த‌ழ‌ல் ர‌வி மாதிரி தொழில் நுட்ப‌ ப‌திவு போட்டுத் தாக்கலாமா ...

சுமஜ்லா மாதிரி டிசைன் டிசைன் டெம்ப்ளேட்டை ப‌த்தி க‌ல‌ர் க‌ல‌ரா எழுத‌லாமா...

க‌விதைக‌ளா போட்டுத் தாக்க‌லாமா ....

இல்லை என் ஸ்டைலில் நான் எழுத‌லாமா ...

உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா

எனக்கு சொல்லிட்டுப் போங்க ....

Post Comment

Tuesday, July 14, 2009

நீ வருவாய் என‌

நீ வருவாய் என‌
** நீ வருவாய் என காத்திருந்தேன்

வந்தாய் என் வாழ்வில் வசந்தமாய்

உன் வருகையினால் நான்

என்னை மறந்தேன் .


** நிலாவாக நீ வந்தால்

நான் இருப்பேன் வெளிச்சமாய் !!

மழையாக நீ வந்தால்

நான் இருப்பேன் மேகமாய் !!!


வண்டாக நீ வந்தால்

நான் இருப்பேன் நீ தேடும் மலராய் !!!


** காத்திருந்தேன் இங்கே

பீர் பாட்டிலுக்காக‌தாடியுட‌ன் !


நீயோ இருந்தாய் அங்கே

க‌ண‌வ‌னுக்காக‌தாலியுட‌ன் !



* * என் சிந்த‌னை எனும் துடுப்பினை கொண்டு

த‌மிழ்ம‌ண‌ம் எனும் தோணியிலேறி

ப‌திவ‌ர்க‌ளாகிய‌உங்க‌ளைத்

தேடி வ‌ரும் போது

பின்னூட்ட‌மெனும் நீரினிலே வெற்றி எனும்

அக்க‌ரையை அடைய

இறைவா நீயே அருள்புரிவாய் ....
என்றும் அன்புடன் ,
ஸ்டார்ஜன் .

Post Comment

Saturday, July 11, 2009

முத‌லும் ச‌த‌மும்

ஸ்டார்'ஸ் திரைப்பார்வை 1


உங்கள் ஸ்டார்ஜன் வழங்கும் ஸ்டார்'ஸ் திரைப்பார்வையில் இப்போது நீங்கள் காணப் போவது :


நம்ம தமிழ் சினிமாவின் நாயகர்களும் கனவு நாயகிகளும் நடித்த முதல் படமும் நூறாவது படமும்




நடிகர்கள்




  1. பரத் : பாய்ஸ்

  2. விஷால் : செல்லமே

  3. சிபிராஜ் : ஸ்டுடண்ட் நம்பர் 1

  4. ஸ்ரீகாந்த் : ரோஜாகூட்டம்

  5. எஸ்.ஜே.சூர்யா : நியூ

  6. ஜீவன் : யூனிவர்சிட்டி

  7. பிரித்விராஜ் : கனா கண்டேன்

  8. ஜெய் : பகவதி

  9. சசிகுமார் : சுப்ரமணியபுரம்

  10. பிரகாஷ் ராஜ் : டூயட்

  11. ராஜ்கிரண் : என் ராசாவின் மனசிலே

  12. கார்த்தி : பருத்திவீரன்

  13. அப்பாஸ் - காதல் தேசம்

  14. குணால் - காதலர் தினம்

  15. சூர்யா - நேருக்கு நேர்

  16. ஷாம் - 12பி

  17. மாதவன் - அலைபாயுதே

  18. ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம்

  19. தனுஷ் - துள்ளவதோ இளமை

  20. சிலம்பரசன் - காதல் அழிவதில்லை

  21. பாலா- அன்பு

  22. ரவி - ஜெயம்

  23. நரேஷ் - குறும்பு

  24. ஆரியன் ராஜேஸ் - ஆல்பம்

  25. எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி

  26. சிவாஜி - பராசக்தி

  27. ஜெமினிகணேசன் - ஒளவையார்

  28. எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி

  29. முத்துராமன் - அரசிளங்குமரி

  30. ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண்

  31. சிவகுமார் - காக்கும் கரங்கள்

  32. ஜெய்சங்கர் - இரவும் பகலும்

  33. ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை

  34. விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி

  35. ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்

  36. கமலஹாசன் - களத்து£ர் கண்ணம்மா

  37. விஜயகாந்த் - இனிக்கும் இளமை

  38. சத்யராஜ் - சட்டம் என் கையில்

  39. பாக்யராஜ் - 16 வயதினிலே

  40. கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை

  41. பிரபு - சங்கிலி

  42. முரளி - பூவிலங்கு ( தமிழில் )

  43. ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு

  44. பார்த்திபன் - தாவணிக்கனவுகள்

  45. அர்ஜூன் - நன்றி

  46. சரத்குமார் - கண் சிமிட்டும் நேரம்

  47. விக்ரம் - தந்துவிட்டேன் என்னை

  48. பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி

  49. அஜீத் - அமராவதி

  50. விஜய் - நாளைய தீர்ப்பு

  51. பிரபுதேவா - இதயம்

  52. அரவிந்தசாமி - தளபதி

  53. அருண்குமார் - பிரியம்

  54. வினித் - ஆவாரம்பூ

  55. விக்னேஷ் - சின்னத்தாயி

  56. வடிவேலு - என் ராசாவின் மனசிலே

  57. விவேக் : மனதில் உறுதி வேண்டும்

  58. தங்கவேலு - சதி லீலாவதி

  59. சுரேஷ் - பன்னீர் புஷ்பங்கள்

  60. மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே

  61. ராமராஜன் - நம்ம ஊரு நல்லஊரு

  62. ராதாரவி - தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

  63. காத்தாடி ராமுர்த்தி - பெண்ணே நீ வாழ்க

  64. கரண் - அண்ணாமலை

  65. வையாபுரி - மாணிக்கம்

  66. ஆனந்த பாபு - உயிருள்ளவரை உஷா

  67. ரஞ்சித் - சிந்துநதிப் பூ

  68. நெப்போலியன் - புது நெல்லு புது நாத்து



நடிகைகள்




  1. அசின் : உள்ளம் கேட்குமே

  2. நயன்தாரா : ஐயா

  3. சந்தியா : காதல்

  4. தமன்னா : கேடி

  5. ப்ரியாமணி : கண்களால் கைது செய்

  6. பூஜா : உள்ளம் கேட்குமே

  7. நமிதா : எங்கள் அண்ணா

  8. ஸ்ரேயா : எனக்கு 20 உனக்கு ௧௮

  9. சதா : ஜெயம்

  10. பாவனா : சித்திரம் பேசுதடி

  11. சிம்ரன் : விஐபி

  12. த்ரிஷா : ஜோடி

  13. பூமிகா : பத்ரி

  14. சங்கவி : அமராவதி

  15. விஜயலக்ஷ்மி : சென்னை-௨௮

  16. மீனா - நெஞ்சங்கள்

  17. குஷ்பு - தர்மத்தின் தலைவன்

  18. ரோஜா - செம்பருத்தி

  19. மதுபாலா - அழகன்

  20. ரேஷ்மா - மாங்கல்யம் தந்துனானே

  21. சங்கீதா - பவுர்னமி நிலவில்

  22. வினிதா - ஊழியன்

  23. ரம்பா - உழவன்

  24. நக்மா - காதலன்(தமிழ் )

  25. கனகா - கரகாட்டக்காரன்

  26. தேவயானி - தொட்டாச்சிணுங்கி

  27. சுவலட்சுமி - ஆசை

  28. மந்த்ரா - பிரியம்

  29. சுவாதி - தேவா

  30. மனோரமா - மாலையிட்ட மங்கை

    31 .கோவை சரளா - முந்தானை முடிச்சி
    32 . சாவித்ரி - பாதாள பைரவி
    33 . பத்மினி - கல்பனா
    34 . சரோஜாதேவி - தங்கமலை ரகசியம்
    35 . சௌகார் ஜானகி - வளையாபதி
    36 . கே,ஆர்விஜயா - தங்க ரத்தினம்
    37 . ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
    38 . வைஜெயந்தி மாலா - வாழ்க்கை
    39 . வாணிஸ்ரீ - காதல் படுத்தும் பாடு


    40 . ஜெயந்தி - அன்னை இல்லம்


    41 . நிர்மலா - வெண்ணிற ஆடை
    42 . லட்சுமி - ஜீவனாம்சம்
    43 . பி.பானுமதி - நல்லதம்பி(தமிழில்)
    44 . ஜெயசித்ரா - குறத்தி மகன்(தமிழில்)
    45 . சுஜாதா - அவள் ஒரு தொடர்கதை
    46 . ஸ்ரீப்ரியா - முருகன் காட்டிய வழி
    47 . ஜெயசுதா - பெத்த மனம் பித்து
    48 . ஸ்ரீதேவி - துணைவன்
    49 . மஞ்சுளா - சாந்தி நிலையம்
    50 . லதா - உலகம் சுற்றும் வாலிபன்
    51 . கவிதா - ஓ மஞ்சு
    52 . சரிதா - தப்பு தாளங்கள்
    53 . மாதவி - புதிய தோரணங்கள்
    54 . அம்பிகா - தரையில் வாழம் மீன்கள்
    55 . ரசிகா - பகவத்சிங்
    56 . ராதா - அலைகள் ஒய்வதில்லை
    57 . ராதிகா - கிழக்கே போகும் ரயில்
    58 . விஜயசாந்தி - கல்லுக்குள் ஈரம்
    59 . ரேவதி - மண்வாசனை
    60 . ஊர்வசி - முந்தானை முடிச்சி
    61 . ஷோபனா - எனக்குள் ஒருவன்
    62 . பானுப்பிரியா - மெல்லப்பேசுங்கள்
    63 . ப்ரீத்தா விஜயகுமார் - தர்மா
    64 . ஸ்ரீவித்யா - திருவருட்செல்வர்
    65 . கீதா - பைரவி
    66 . அமலா - மைதிலி என்னை காதலி
    67 . நளினி - ராணுவவீரன்
    68 . சீதா - ஆண்பாவம்
    69 . கவுதமி - குரு சிஷ்யன்
    70 . கஸ்தூரி - ஆத்தா உன் கோயிலிலே
    71 . சுகன்யா-புது நெல்லு புது நாத்து
    72 . ஹீரா - இதயம்
    73 . விந்தியா-சங்கமம்


    74 .ஜெயமாலினி - சக்களத்தி
    75 . அஞ்சலிதேவி - ரம்பா மேனகா
    76 .ரதி - புதிய வார்ப்புகள்
    77. ரஞ்சனி - முதல் மரியாதை
    78 . சிவரஞ்சனி - மனசார வாழ்த்துங்களேன்
    79 . சாந்திகிருஷ்ணா - பன்னீர் புஷ்பங்கள்
    80 . சுஹாசினி - நெஞ்சத்தை கிள்ளாதே


    81 . இந்து - இளவரசி
    82 . சோனியா - மை டியர் குட்டிச்சாத்தான்
    83 . ஜூஹிசாவ்லா - பருவராகம்
    84 . சுஷ்மிதா சென் - ரட்சகன்
    85 . ஐஸ்வர்யா ராய் - இருவர்
    86 . விஜி - கோழிகூவுது
    87 . பிந்துகோஷ் - கோழிகூவுது
    88 . சுபாஸ்ரீ - எங்க தம்பி
    89 . நீனா - நாயகன்
    90 . சௌந்தர்யா - பொன்னுமணி
    91 . ஜோதிகா - வாலி
    92 . மாளவிகா - உன்னைத்தேடி
    93 . கவுசல்யா - காலமெல்லாம் காதல் வாழ்க
    94 . இஷாகோபிகர் - காதல் கவிதை
    95 . மும்தாஜ் - மோனிஷா என் மோனாலிசா
    96 . ஸ்ருதி - கல்கி
    97 . ஸ்ருதிகா-ஆல்பம்


    98 .லைலா – கள்ளழகர்


    99 .சிலுக் ஸ்மிதா - வண்டிச்சக்கரம்
    100 . ரஞ்சிதா - நாடோடி தென்றல்
    101 . ஈஸ்வரி ராவ் - கவிதை பாடும் அலைகள்
    102 . சினேகா - விரும்புகிறேன்


    103 . மோகினி - ஈரமான ரோஜாவே



    பாத்தீங்களா ஆண்களை விட பெண்களே அதிகம்



    இனி நூறு படங்களில் நடித்தவர்களைப் பற்றி.....



    ர‌ஜினிகாந்த் : ஸ்ரீ ராகவேந்திரா


    எம் ஜி ஆர் : ஒளி விளக்கு
    சிவாஜி : நவராத்திரி
    க‌ம‌ல‌ஹாச‌ன் : ராஜப் பார்வை
    விஜ‌ய‌காந்த் : கேப்ட‌ன் பிரபாக‌ர‌ன்
    கே பால‌ச‌ந்த‌ர் : பார்த்தாலே ப‌ர‌வ‌ச‌ம்
    இளைய‌ராஜா : மூடுப‌னி
    சிவ‌க்குமார் : ரோசாப்பூ ர‌விக்கைக்காரி
    கே ஆர் விஜ‌யா : ந‌த்தையில் முத்து
    சாவித்திரி : கொஞ்சும் ச‌ல‌ங்கை
    ஜெய‌சித்ரா : நாய‌க‌ரின் ம‌க‌ள்
    ச‌த்ய‌ராஜ் : வாத்தியார் வீட்டுப் பிள்ளை
    பிர‌பு : ராஜ‌ குமார‌ன்
    ச‌ர‌த்குமார் : த‌லைம‌க‌ன்
    ராமநாராய‌ண‌ன் : திருப்ப‌தி ஏழும‌லை வெங்க‌டேசா
    ச‌ரோஜாதேவி : பெண் என்ற‌ பெண்
    ரோஜா : பொட்டு அம்ம‌ன்
    அர்ஜுன் : ம‌ன்ன‌வ‌ரு சின்ன‌வ‌ரு













Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்