2014ம் ஆண்டு சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த நேரம், நாடாளுமன்ற தேர்தல் சமயம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து அவசர வேலையாக நெல்லை செல்வதற்காக கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் பஸ் டிப்போவில் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய பேக்கை எனது காலடியில் வைத்து நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், அவரது பேக்கை எனது பேக்கிற்கு ஒட்டியபடி வைத்தார். உடனே நான் என்ன என்று முறைத்தபடி கேட்டேன். " சார், எனது பேக்கை பார்த்துக் கொள்ளுங்கள், நான் டாய்லெட் போயிட்டு வருகிறேன் என்று மெல்ல அவ்விடத்தை விட்டு அகல முயன்றார். "ஹலோ முதல்ல பேக்கை தூக்குங்க தூக்குங்க, இங்கே வைக்காதீங்க," ஆபீஸ்ல சொல்லி வைத்துவிட்டு செல்லுமாறு கூறினேன். ரொம்ப யோசித்தபடியே அவரது பேக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
நான் செல்ல வேண்டிய பஸ் வந்ததும் ஏறி அமர்ந்து எனது பயணத்தை தொடர்ந்தேன். சில மணி நேரங்கள் கழிந்திருக்கும், பஸ் நிற்பது போல உணரவே கண் விழித்து பார்த்தேன். நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களின் வரிசையில் எங்களது பஸ்ஸும் நிறுத்தப்பட்டிருந்தது.
போலீசார் ஒவ்வொரு பஸ்ஸாக சோதனை போட்டு எங்களது பஸ்ஸையும் சோதனையிட்டனர். ஒவ்வொருத்தர் லக்கேஜ்ஜையும் செக் பண்ணினாங்க, அவங்க எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கோயம்பேட்டில் அந்த ஆள் வைத்து விட்டுச் சென்ற பேக்கை கொண்டு வந்திருந்தால் போலீஸில் மாட்டியிருப்பேன். நல்ல வேளை இறைவன் அருளால் உசாராக இருந்ததினால் தப்பித்தேன்.
இது போன்ற பயணங்களில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். யார் எப்படி இருப்பாங்கன்னே தெரியாது. இல்லாவிடில் சொந்த செலவில் சூன்யம் வைத்தாற் போலாகிவிடும்.
Te St
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி சகோ
ReplyDeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News