நண்பர்கள் தினம் .
நண்பர்களுக்காக நண்பர்களால் கொண்டாடப்படும் தினம் .
நண்பர்கள் தினத்தை கடந்த ( 2/8/09 ) ஞாயிறன்று உலகமெங்கும் உள்ள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினாங்க .
இன்னக்கி இவ்வளோ பேர் கொண்டாடுற நண்பர்கள் தினத்துக்கு கறுப்பு தினமும் உண்டு . அதாவது கொஞ்சம் பின்னோக்கி போனோமென்றால் , இந்த நண்பர்கள் தினம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம் .
1935 ல் ( அதாவது நாம பிறக்குறதுக்கு முன்னாடி ) ஆகஸ்டு முதல் சனிக்கிழமை அமெரிக்காவில ஒரு ஆளை ஏதோ தப்பு செஞ்சிட்டான்னு கொன்னுட்டாங்க , அமெரிக்கா அரசாங்கம் . அப்போ அவரோட நெருங்கிய நண்பர் ஒருவர் , நண்பர் இறந்த துக்கத்துல தானும் தற்கொலை செஞ்சிகிட்டாரு . மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை பண்ணிட்டாரு .
உடனே அமெரிக்கா அரசாங்கம் அவங்க நட்பை போற்றும் வகையில் , ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் என்று அறிவித்தது . அன்று முதல் இன்று வரை ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தின்ம் கொண்டாடப்பட்டு வருகிறது .
இது 2009 நண்பர்கள் தினம் 72 வது நண்பர்கள் தினமாகும் .
நண்பனுக்காக உயிர் நீத்த அந்த நட்பை போற்றுவோம் .
இந்த தகவலை என் நண்பர் அஜ்மல் அவர்கள் தான் தெரிவித்தார் .
அவருக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன் . அவருக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம் .
நண்பர்கள் தினம் என்றதும் நான் சமீபத்தில் பாத்த திரைப்படம் ஞாபகத்தில் வருகிறது . அந்த படம் நாடோடிகள் .
நாடோடி திரைப்படத்தில் தன் நண்பனின் காதலை சேத்து வைக்க மூன்று நண்பர்களின் போராட்டமே அந்த படத்தின் கதை . நண்பனின் காதலை சேத்து வைக்க ஒருவர் தன் வாழ்க்கையையும் காதலையும் பணயம் வைக்கிறார் . இன்னொருவர் தன் காலை இழக்கிறார் . மற்றொருவருக்கு காது கேட்காமல் போகிறது . இப்படி அவர்கள் கஷ்டப்பட்டு சேத்து வைத்த காதல் நிலைக்கவில்லை .
இதுக்கு காரணமான காதலை உதாசீனப்படுத்தும் காதலர்களை பழிவாங்க புறப்படுகிறார்கள் அந்த நண்பர்கள் . முடிவு என்ன என்பதை படம் பாக்காதவங்க படம் பாத்து தெரிஞ்சிக்கோங்க.
தனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நண்பனின் காதலை ஜெயிக்க வைக்க எத்தண பேர் போராடுறாங்க தெரியுமா . ஆனா அதுக்கு அப்புறம் நண்பர்கள் பட்ட கஷ்டத்தை நினைச்சு பாக்கிறதே கிடையாது இந்த காதலர்கள் , என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பாங்க .
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
Vaalthukkal nanbaa... vaalthukkal.
ReplyDeleteநல்லதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல தகவல். அஜ்மலுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க நையாண்டி நைனா
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி
வாங்க துபாய் ராஜா
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி
வாங்க அதிரை அபுபக்கர்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி
சூப்பர் மாம்ஸ்!! கொண்டாட்டத்தோட காரணத்தை விளக்கியதற்கு நன்றி!
ReplyDeleteநண்பர்தின வாழ்த்துக்கள்...
ReplyDelete//ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் என்று அறிவித்தது . அன்று முதல் இன்று வரை ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தின்ம் கொண்டாடப்பட்டு வருகிறது .//
ReplyDeleteஇதுல இருக்கும் நு(ஆ)ண் அரசியலைக் கவனிச்சிங்களா ?
எப்போதும் ஞாயிற்றுக் கிழமையிலேயே வருவதால் நண்பர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம் தான்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
ReplyDeleteவாங்க ஜெகநாதன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ராஜ்குமார்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி
வாங்க கோவி கண்ணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க இது நம்ம ஆளு
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாங்க சந்ரு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி