நாம பிறந்து வளர்ந்து பள்ளி கல்லூரி பருவம் தாண்டி சம்பாதிக்க ஆரம்பித்து மனைவி மக்கள் என்று குடும்பமாகி கடைசியில் இவ்வுலகை விட்டு மறைகிறோம் .
இந்த இடைப்பட்ட காலத்தில் நமக்கென்று ஏதாவது லட்சியம் இருக்கும் . அதற்காக நாம் முயற்சி செய்கிறோம் .
நாம் ஏதாவது சாதனைகள் செய்து நம்மை உலகிற்கு அடையாள படுத்தவேண்டும் .
சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு நான் எப்பவும் பக்கபலமாக இருப்பேன் _ வல்லரசுவில் கேப்டன் விஜயகாந்த் _ பஞ்ச் .
சா த னை = சாதித்து காட்ட வேண்டிய லட்சியத்தை தனதாக்கிக் கொள்ளும் சிந்தனையின் செயல் வடிவம் சாதனை . இது என்னோட பஞ்ச் ....
அப்படி சாதனைகள் செய்த சிலரை பற்றி இந்த பதிவில் ....
எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (1871-1937)
---------------------------------------------
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரிசோதனை இயற்பியல் விஞ்ஞானி எனப் பொதுவாகக் கருதப்படுபவர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு ஆவார். கதிரியக்கம் பற்றி இன்று நாம் பெற்றிருக்கும் அணுவியல் இயற்பியல் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்தவரும் அவரே.
ரூதர்ஃபோர்டு, நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்தார். அங்குள்ள கான்டர்பரிக் கல்லூரியில் பயின்று, தம் 23 ஆம் வயதுக்குள்ளேயே மூன்று பட்டங்களை (பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்சி.,) பெற்றார்.
யுரேனியத்திலிருந்து வெளியேறும் கதிரியக்க உமிழ் பொருள்களில் முற்றிலும் வேறுபட்ட இரு அமைப்பான்கள் அடங்கியுள்ளன என்பது ரூதர்ஃபோர்டின் முதல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இவற்றுக்கு "ஆல்ஃபா கதிர்கள்", "பீட்டா கதிர்கள்" என்று அவர் பெயரிட்டார். கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளிவரும் அணு நுண்ம வரிசையே ஆல்ஃபாக் கதிர்கள் ஆகும். கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுடைய எதிர்மின்மங்களின் வரிசை தான் பீட்டாக் கதிர்கள். இந்த அமைப்பான்கள் ஒவ்வொன்றின் இயல்பையும் அவர் பின்னர் செயல் விளக்கமாகக் காட்டினார். இவற்றில் விரைந்து இயங்கும் துகள்கள் அடங்கியுள்ளன என்று மெய்ப்பித்தார். அத்துடன், மூன்றாவது அமைப்பான் ஒன்றும் இருப்பதாக மெய்ப்பித்தார். அதனை "காமாகக் கதிர்கள்" என்று அழைத்தார். இவை, மிகக் குறுகிய ஒளிக் கதிரலையுள்ள ஊடுருவு கதிர்கள் ஆகும்.
கதிரியக்கத்தின் மிக முக்கியமான அம்சம் அதில் அடங்கியுள்ள எரியாற்றலே ஆகும். இந்த எரியாற்றல், ஒரு புற ஆதாரத்தைக் கொண்டிருப்பதாக பெக்கரல், கியூரிகள், பெரும்பாலான மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் கருதினார்கள். ஆனால், இந்த எரியாற்றல், யுரேனியத்தின் தனித்தனி அணுக்களின் உள்ளிருந்து வருகிறது என்று ரூதர்ஃபோர்டு மெய்ப்பித்துக் காட்டினார். இந்த எரியாற்றலின் அளவு, வேதியியல் வினைகளிலிருந்து வெளிப்படும் அளவை விட மிகமிக அதிகம் என்பதையும் அவர் மெய்ப்பித்தார். அவ்வாறு செய்ததன் மூலம், அணு ஆற்றல் என்ற முக்கியமான கோட்பாட்டை உருவாக்கினார்.
தனித்தனி அணுக்கள் அழிக்க முடியாதவை-மாற்ற முடியாதவை- என்று விஞ்ஞானிகள் எப்போதுமே கருதி வந்தார்கள். ஆனால், ரூதர்ஃபோர்டு, பிரெடெரிக் சோடி என்ற மிகத் திறமை வாய்ந்த இளம் உதவியாளரின் உறுதுணையுடன், ஓர் அணு ஆல்பாக் கதிர்களையோ, பீட்டாக் கதிர்களையோ உமிழும் போதெல்லாம், அந்த அணு முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ள ஓர் அணுவாக உருமாற்றமடைகிறது என்பதை மெய்ப்பித்தார்.
இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள், ரூதர்ஃபோர்டுக்கு 1908 இல் நோபல் பரிசு பெற்றுத் தந்தது.
என்ரிக்கோ ஃபெர்மி (1901 - 1954)
----------------------------------------
உலகின் முதலாவது அணு உலயை வடிவமைத்தவர் என்ரிக்கோ ஃபெர்மி ஆவார். இவர், இத்தாலியில் ரோம் நகரில் 1901 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அருந்திறன் வாய்ந்த மாணவராகத் திகழ்ந்தார். பிசா பல்கலைக் கழகத்தில் பயின்று தம் 21 ஆம் வயதிலேயே இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.
1933 ஆம் ஆண்டில் "பீட்டாச் சிதைவு" என்னும் ஒருவகை கதிரியக்கம் பற்றிய ஒரு கோட்பாட்டை ஃபெர்மி வகுத்தமைத்தார். இதில், மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்களாகிய "நியூட்ரான்கள்" பற்றியும் வலுவற்ற எதிரெதிர் செயல் விளைவுகள் குறித்தும், முதலாவது அளவீட்டு ஆய்வுரை அடங்கியிருந்தது. இவை இரண்டுமே இன்றைய இயற்பியலில் மிக முக்கியமான விவாதப் பொருள்களாகும்.
1934 ஆம் ஆண்டு முதற்கொண்டு, ஃபெர்மி அறியப்பட்டிருந்த வேதியியல் தனிமங்களை நியூட்ரான்களைக் கொண்டு தகர்த்துப் பார்க்கலானார். பல்வேறு வகையான அணுக்களால் நியூட்ரான்களை ஈர்த்துக் கொள்ள முடிகின்றது என்பதும், பல நேர்வுகளில், அத்தகைய 'அணுவியல் உருநிலை மாற்றம்' காரணமாக அணுக்கள் கதிரியக்கம் பெறுகின்றன என்பதையும் இவரது பரிசோதனைகள் காட்டின.
நியூட்ரான்களின் ஈர்ப்பு பற்றிய ஃபெர்மியின் முக்கியமான ஆராய்ச்சிக்காக 1938 ஆம் ஆண்டில் இவருக்கு இயறபியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பெற்றது.
ஃபெர்மியின் கண்காணிப்பின் கீழ் சிகாகோவில் வடிவமைக்கப்பட்டு, நிறுவப் பெற்ற முதலாவத அணு உலை, 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாளன்று வெற்றிகரமாகச் செயற்படத் தொடங்கியது.
சூயி-வென்-தை (541 - 604)
--------------------------------
பல நூற்றாண்டுகளாகப் பிளவுபட்டுச் சிதறுண்டு கிடந்த சீனாவை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்திய சீனப் பேரரசர் சூயி-வென்-தை ஆவார். இவருடைய இயற்பெயர் யாங்-ஷியன் என்பதாகும்.
வடக்குச் சீனாவில் பெருஞ்செல்வாக்கு வாய்ந்த ஓர் உயர்குடியில் 541 ஆம் ஆண்டில் யாங்-ஷியன் பிறந்தார். இவரது 14 ஆம் வயதிலேயே இவருக்கு முதலாவது இராணுவப் பதவி கிடைத்தது.
யாங்-ஷியன் மிகவும் திறமைசாலியாக விளங்கியதால், வடக்குச் சீனாவை ஆண்ட சூ அரச மரபைச் சார்ந்த பேரரசின் ஆட்சியில், மிக விரைவாக முன்னேறி வந்தார்.
581 ஆம் ஆண்டில், இவரது 50 ஆம் வயதில், இவர் புதிய பேரரசராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
இப்படையெடுப்பு வெகு துரிதமாக வெற்றி தேடித் தந்தது. 589 ஆம் ஆண்டில் இவர் சீனா முழுவதற்கும் பேரரசரானார்.
முதலாம் ஜஸ்டீனியன் (483 - 565)
------------------------------------------
பேரரசர் ஜஸ்டீனியன் ரோமானியச் சட்டத்தைத் தொகுத்ததற்காகப் புகழ் பெற்றவர்.
ஜஸ்டீனியன் 483 இல் இன்றைய யூகோஸ்லாவியாவிலுள்ள டாரசீயம் எனுமிடத்தில் பிறந்தார். அவர் ஜஸ்டின் திரேஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தறிவற்ற உழவர் ; படையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னரானார்.
ஜஸ்டீனியன் பிறப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன் 476 ஆம் ஆண்டில் ஜெர்மானியமிலேச்சர் குலங்களின் தாக்குதலால் மேற்கு ரோமானியப் பேரரசு குலைந்து சரிந்தது. கான்ஸ்டான்டி நோப்பிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசே நிலைத்து நின்றது. இழந்த மேற்குப் பகுதிகளைத் திரும்பக் கைப்பற்றி ரோமானியப் பேரரசை மீட்க வேண்டுமென்று ஜஸ்டீனியன் உறுதி பூண்டார் .
ஜஸ்டீனியனுக்கு அவருடைய திறமைமிக்க துணைவியார் தியடோரா பெரிதும் உதவியாக இருந்தார்.
548 ஆம் ஆண்டில் தியடோரா புற்று நோயினால் இறந்தது ஜஸ்டீனியனுக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது .
இறுதியில் ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு ஐரோப்பா கண்டத்தின் சட்ட முறைகளின் முக்கிய அடிப்படையானது.
ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு ஐரோப்பாவின் பெரும் பகுதியில் அதன் பகுதிகள் சட்டத்துடன் இணைக்கப் பெற்றன. மேலும் அது சட்டப் படிப்பு பயிற்சி, ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையுமானது. நாளடைவில் ஐரோப்பிய அரசுகளல்லாத பல அரசுகளும் உரிமையியல் சட்டங்களை ஏற்றதால், ஜஸ்டீனியனின் சட்டம் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியது.
எட்வர்டு ஜன்னர் (1749-1823)
-----------------------------------
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர் ஆவார்.
அம்மை நோய் ஒரு பயங்கரத் தொற்று நோயாக இருந்தது. ஐரோப்பாவில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையினர், தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு முறை, இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டனர். இந்நோய் கண்டவர்களில் 10% - 20% பேர் மாண்டு போயினர். உயிர் பிழைத்தவர்களில், மேலும் 10% அல்லது 15% பேர் அம்மைத் தழும்புகளால் நிரந்தரமாக விகாரமடைந்தனர். அம்மை நோய்க் கொடுமை ஐரோப்பாவோடு நின்று விடவில்லை. வட அமெரிக்கா முழுவதிலும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும், உலகின் வேறு பல பகுதிகளிலும் அம்மை நோய் கோரத் தாண்டவமாடியது. எல்லா இடங்களிலும், குழந்தைகளே இந்நோய்க்குப் பெரும்பாலும் பலியானார்.
ஜென்னர் 1749 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிளவுசெஸ்டர்ஷயரிலுள்ள பெர்க்கிலி என்னும் சிறிய நகரில் பிறந்தார். பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போதே இவர் ஓர் அறுவை மருத்துவரிடம் தொழில் பயில்பவராகச் சேர்ந்தார். பின்னர், இவர் உடல் உட்கூறியல் பயின்றவாறே, ஓர் மருத்துவ மனையிலும் பணியாற்றி வந்தார். 1792 ஆம் ஆண்டில், புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் இவர் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் தமது 40 ஆம் வயதுகளில் இவர் கிளவுசெஸ்டர்ஷயர் நகரில் ஒரு சிறந்த மருத்துவராகவும், அறுவை மருத்துவராகவும் புகழ் பெற்றார்.
1796 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஜேம்ஸ்ஃபிலிப்ஸ் என்ற எட்டு வயதுச் சிறுவனுக்கு, ஒரு பால் பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கோ வைசூரியின் கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜென்னர் ஏற்றினார். எதிர்பார்த்தது போலவே, அச்சிறுவனுக்கு கோ வைசூரி கண்டது. ஆனால், அவன் விரைவிலேயே குணமடைந்தான். பல வாரங்களுக்குப் பிறகு, அம்மைப் பாலை பிலிப்சுக்கு ஜென்னர் ஊசி வழியாகச் செலுத்தினார். இவர் நம்பியதுபோலவே, அச் சிறுவனுக்கு அம்மை நோயின் அறிகுறிகள் உண்டாகவே இல்லை.
ஜென்னர் தாம் கண்டுபிடித்த இந்த முறையை இலவசமாக உலகுக்கு வழங்கினார். இதிலிருந்து ஆதாயம் பெற இவர் விரும்பவில்லை. எனினும், 1802 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இவரது அருந் தொண்டுக்கு நன்றி தெரிவித்து இவருக்கு 10,000 பவுன் பரிசு வழங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றம் இவருக்கு மேலும் 20,000 பவுன் அளித்தது. இவர் உலகப் புகழ் பெற்றார்.
இவர் 1823 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது 73 ஆம் வயதில், தம் சொந்த ஊராகிய பெர்க்கிலியில் காலமானார்.
தொடரும் .....
பல அரிய தகவல்களை தந்து சாதனை படைத்து வரும் ஸ்டார்ஜன்னுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅரிய தகவல்கள்
ReplyDeleteநாம் ஏதாவது சாதனைகள் செய்து நம்மை உலகிற்கு அடையாள படுத்தவேண்டும் .
ReplyDeleteசா த னை = சாதித்து காட்ட வேண்டிய லட்சியத்தை தனதாக்கிக் கொள்ளும் சிந்தனையின் செயல் வடிவம் சாதனை . இது என்னோட பஞ்ச்
அருமை .வாங்க நம்ம பதிவுக்கும்
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
வாங்க டி வி ஆர் சார்
ReplyDeleteவருகைக்கு நன்றி
சாதனை
ReplyDeleteஉண்மையிலேயே...,
சாதனை மன்னர்களின் சாதனைகளை வரிசைப்படுத்தி சாதனை செய்துவிட்டீர் டார்ஜன்... வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பதிவு நன்றிகள்...
ReplyDeleteவாங்க இது நம்ம ஆளு
ReplyDeleteவருகைக்கு நன்றி
உங்கள் பக்கம் அருமை
பயனுள்ள பதிவுங்க...வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅடுத்த கலக்கல் இடுகை... நன்றிங்க.. அப்படியே என் பேரையும் சேர்த்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. ஹி ஹி ஹி
ReplyDeleteவாங்க சுரேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க அபு அஃப்ஸர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க தமிழ் நண்பன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க சம்பத்
ReplyDeleteவருகைக்கு நன்றி
ஒவ்வொன்றாகப் போட்டிருக்கலாமே ஸ்டார்ஜன்!. அப்புறம் கொஞ்சம் கதை மாதிரி எழுதுங்கள், இன்னும் சுவையாக இருக்கும். வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க ராஜ் குமார்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க சங்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி