Pages

Monday, November 22, 2010

கரகர மொறுமொறு - 22/11/2010

நான் இன்று மதியம் ஒரு முண்ணனி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு நேர்காணல் (நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு கல்லூரி பேராசிரியர், மாணவர்களுக்கு என்னென்ன மேற்படிப்புகள் படிக்கலாம்?.. என்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஆண் தொகுப்பாளர், கேள்விகள் கேட்பவர்களிடம் கேள்விகளை பெற்று அந்த கேள்விகளுக்கு பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியை நான் சுவாரசிய‌மாக பார்த்துக் கொண்டிருந்தேன். கேள்வி நேரத்தின்போது அந்த பேராசிரியர் மாணவர்களுக்கு தேவையான சில‌ பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அந்த தொகுப்பாளர் மாணவர்களுக்கு "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டார். பேராசிரியர் அந்த கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையிடையே அழைப்புகள் வந்ததினால் தொகுப்பாளர் அழைத்தவர்களின் கேள்விகளை பற்றி பேராசிரியரிடம் விளக்கங்கள் கேட்டுக் கொண்டார். ஆனால் பேராசிரியர் "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றி 2 வரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து அழைப்புகள் வந்ததினால் "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றிய கருத்துக்களை சொல்ல முடியவில்லை.

நானும் பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி இப்போ சொல்லுவார் அப்போ சொல்லுவார் என்று பார்த்தால், கடைசியில் தொகுப்பாளர் மீண்டும் நாளை இதே நேரம் மற்றொரு நேர்காணலில் சந்திப்போம் என்று நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

சே.. என்னடா இது.. பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் ஒன்னுமே சொல்லாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களே என்று வருத்தமாக இருந்தது. ஒண்ணு இந்த கேள்விக்கான விளக்கத்தை அந்த தொகுப்பாளர் கேட்டிருக்க கூடாது. இல்லையென்றால் இந்த விளக்கத்தை கேட்டபின்னர் நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இரண்டும் இல்லாமல் அழைப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டே பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி சொல்லுங்க சொல்லுங்க என்று தொகுப்பாளர் கேட்டதை நினைக்கும்போது வருத்தம்தான் மிஞ்சுகிறது.

அந்த பேராசிரியரை பார்க்கும்போது எனக்கு பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

இதிலிருந்து ஒண்ணு தெரியுது.. இந்த ஏமாற்றத்தைகூட பாஸிட்டிவ்வா எடுத்து கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி சொல்லாமல் சொல்லியது.

*************

நெல்லையில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறதாம். 2 நாட்களாக சரியான மழை. நேற்று இரவு ஊரிலிருந்து வந்த அக்பர் சொன்னபோது மழையில் நனைய கொள்ளை ஆசையா இருக்கு. ஆண்டுக்கு எப்போதாவது மழைபெய்யும் சவுதி அரேபியாவில் மழையை காண‌வே முடியாது. மழை பெய்தாலும் சிறுசிறு சாரல்தான். நான் சவுதிக்கு வந்த இந்த 5 வருடங்களில் 2 முறை மட்டுமே நல்ல மழை பெய்தது.

************

ஆம்! அக்பர் ஊரிலிருந்து வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறது.

************

அடம் பிடிக்கும் முதல்வர்

அரசாங்க நிலத்தை தன் உறவினர்களின் பெயருக்கு கையகப்படுத்திய கர்நாடக முதல் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எதிர்க்கட்சிகள் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இதனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவை பதவி விலக சொல்லியும் அடம்பிடிக்கிறாராம்.

"கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, டில்லிக்கு யாரும் செல்லவேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110ல் இருந்து, 120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என கேட்கின்றனர். எனக்கு பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை" இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடிப்பதால், பா.ஜ., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக பா.ஜ.,வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ., தலைவர்கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன கொடுமை இது!!...

நன்றி தினமலர் செய்திகள்.

***********

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ராஜா ராஜினாமா விவகாரம் மேலும் வலுவடைந்துள்ளது. ராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தபின்னரும் பார்லிமென்டில் குழப்பங்கள் நீடித்து வருகின்றது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பாலி., கூட்டு விசாரணை நடத்த உத்தரவிடும்வரை பார்லி.,யை நடத்த விட மாட்டோம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் பார்லி.,யில் விவாதிக்க தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்த பின்னரும் இதனை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்திய சமரச பேச்சுவாரத்தையும் தோல்வியடைந்தது.

இதனால் தொடர்ந்து அவைகள் முடங்கி வருவதால் அரசு என்ன செய்வதென்று சிக்கலில் தவிக்கிறது. பார்லிமென்ட்டில் இதே நி‌லை தொடருமானால் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவு்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பிரச்சனை பெரிதாகும்போல..

நன்றி தினமலர் செய்திகள்.

*************

இப்படியே ஊழல்கள் பெருகிக் கொண்டே வருகிறது. ஊழல் புகாரில் சிக்கியவரே லஞ்ச தடுப்பு கண்காணிப்பு ஆணையாராக மத்திய அரசு நியமித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையாளராக கேரளாவைச் சேர்ந்த பி.ஜெ.தாமஸ் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் மேல் பல ஊழல் குற்றச்சாட்டுகளினால் எழுந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் போது இவர் எவ்வாறு இந்த உயர் பதவியில் நியமிக்கப்பட்டார். குற்றம் புரிந்தது நிலுவையில் இருக்கும் போது இவர் எவ்வாறு நியாயமாக செயல்பட முடியும் என்றும் கேட்டுள்ளது.

கோழிக் குஞ்சுகளுக்கு காவலாக பூனை இருந்த கதையா இருக்கு..

*********

Post Comment

34 comments:

  1. கரகர மொரு மொரு நல்லாவே இருக்கு

    ReplyDelete
  2. கரகர மொறு மொறு..நல்லாவே கலந்து கட்டி இருக்கீங்க ஸ்டார்ஜன்.கரகர மொறு என்ற பெயரும் நன்றாக உள்ளது..

    ReplyDelete
  3. ஆஹா இங்கே குளிர் ஆரம்பிக்க போவுதா !! அது தான் இந்த "கரகர மொறு மொறு"வா, ம்ம்ம்.. பலே பலே நல்லாவே டேஸ்டா இருக்கு!!

    அக்பரை சும்மா ஊர நெனச்சு தூங்கி முழிச்சிக்கிட்டு இருக்காம உடனே பதிவு போடச் சொல்லுங்க!! ஹி.. ஹி..

    ReplyDelete
  4. அக்பர்ஜி வந்த சந்தோஷத்தில இந்த கரகர மொருமொருவா.

    கலவை சூப்பர்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோ சேக்!

    நல்லா இருந்தது.

    ReplyDelete
  6. நன்றாக நொறுங்கத் தின்றேனுங்கோ....

    ReplyDelete
  7. அவர் போடற மொக்கையில் இருந்து தப்பித்தோம் என்று பாசிடிவா எடுத்துக்கணும்.

    ReplyDelete
  8. கர கர மொறு மொறுன்னு திண்ணாச்சி .

    நன்றி

    ReplyDelete
  9. நல்ல தொகுப்பு கரகர மொறுமொறுவென:)!

    ReplyDelete
  10. அக்பர் வந்தாச்சா?மகிழ்ச்சி.கரகரமொறுன்னு சூப்பர் முறுக்கு சாப்பிட்ட திருப்தி,பாஸிடிவ் அப்ரோச் பட்ட பாடு அப்பப்பா!

    ReplyDelete
  11. கர கர மொறு மொறு நல்லா மொறு மொறுப்பா இருக்கு.
    அக்பர் வந்தாச்சா... விசாரித்ததா சொல்லுங்க.

    ReplyDelete
  12. வாங்க கார்த்திக் @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  13. வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாங்க அப்துல்காதர் @ ஆஹா.. குளிர் ஸ்டார்ட் ஆகிருச்சி..இனி 2 மாதமோ 3 மாதமோ குளிர்..

    அக்பர் வந்தது ரொம்ப மகிழ்ச்சி..

    ரொம்ப நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete
  15. வாங்க நிஜாம் அண்ணே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  16. வாங்க ஆமீனா @ வ அலைக்கும் அஸ்ஸலாம்.. ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆமீனா.

    ReplyDelete
  17. வாங்க ம.தி.சுதா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  18. வாங்க கலாநேசன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    ஆமா இப்படிகூட எடுத்துக்கலாம்.. சரியான மொக்கை.

    ReplyDelete
  19. வாங்க விக்கி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க சைவகொத்துப்பரோட்டா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வாங்க ராமலக்ஷ்மி மேடம் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. வாங்க ஆசியாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. அக்பர் வந்தாச்சி..

    பாஸிட்டிவ் அப்ரோச்.. ஏண்டா பார்த்தோமுன்னு ஆகிருச்சி.. சரியான மொக்கை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  23. வாங்க குமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. அக்பர் வந்தாச்சி.. உங்களை நலம் விசாரித்ததாக சொல்ல சொன்னார்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  24. அக்பர் விடுமுறை முடிந்து திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நேற்றே அவரிடம் தொலைபேசியில் பேசினேன். இன்று முடிந்தால் அங்கு வருகிறேன்.

    ReplyDelete
  25. நல்லாயிருக்கு! :-)

    புது பழமொழியா? கோழிக்குஞ்சு-பூனை!!! நிறைய தகவல்கள்! நிறைய ஆதங்கங்கள்!!

    ReplyDelete
  26. நேரடி ஒளிபரப்பு அப்படித்தான் இருக்கும். நீங்கள் சொல்வதுபோல் கேள்விக்கு பதில் அளித்தவுடன் அடுத்த நேயரை அழைக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
  27. வாங்க சரவணகுமார் @ ரொம்ப நன்றி..

    வாங்க சேட்டைக்காரன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  28. வாங்க ஜெயந்தி மேடம் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. ஆமா நீங்க சொல்றதும் உண்மைதான்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. எதையும் ஆழ்ந்து பார்க்கும் பழக்கும் உடையவரா ஷேக் நீங்கள்?

    பாஸிடிவ் அப்ரோச் நல்ல விஷயம் ஷேக்

    நல்ல பகிர்வு!

    ReplyDelete
  30. கரகர மொறுமொறு நல்ல சுவை ஸ்டார்ஜன்..

    ஆம்! அக்பர் ஊரிலிருந்து வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறது//
    அக்பர் வந்தாச்சா .. சீக்கிரம் இடுகை போட சொல்லுங்க., எங்களுக்கும் சந்தோஷம்..

    ReplyDelete
  31. அனைத்தும் மொறுமொறு சுவை- சுவை!
    அக்பரை விசாரிததாகச் சொல்லவும்.

    ReplyDelete
  32. கோழிக் குஞ்சுகளுக்கு காவலாக பூனை இருந்த கதையா இருக்கு..

    ....ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  33. //இதிலிருந்து ஒண்ணு தெரியுது.. இந்த ஏமாற்றத்தைகூட பாஸிட்டிவ்வா எடுத்து கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி சொல்லாமல் சொல்லியது.//

    ஹெ ஹெ... பரவாயில்லையே அவர் சொல்லாமலே உங்களுக்கு பாசிட்டிவ் அப்ரோச் பத்தி புரிய வாச்சிட்டாங்க பாருங்க அந்த சேனல் காரங்க :))

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்