Pages

Saturday, November 13, 2010

முதல் போணி..

அதிகாலை பனிவிழும் நேரம்
அழகான மனைவியின்
அன்பினால் உருவான‌
சூடான முத்தமும் காபியும்
கிளர்ந்தெழச் செய்தனவே..

உசும்பிய மகனை
"தூங்குடா செல்லம்"
என தட்டிக் கொடுத்த‌
கைகள், மனைவியிடம்
கொஞ்சலில் கெஞ்சியது..

"போதும் போதும்...
பையன் முழித்துவிடுவான்
வேலைக்கு போங்க..."
என்ற மனைவியின்
செல்ல சிணுங்கல்களை
கேளாமலும் இருந்தனவே காதுகள்.

காலையின் இனிமையை
ரசித்தபடியே விருவிருவென
கால்கள் முன்னேறின
கடையை நோக்கி..

முதலாய் வந்த ஆள்
கொடுத்த பணத்தை
கண்களில் ஒற்றியபடி
மனமோ வேண்டியது
"இன்று வருமானம்
நல்லாயிருக்க வேண்டும்" என்று!!..‌

,

Post Comment

20 comments:

  1. முதல் போணி சூப்பர்.

    ReplyDelete
  2. பதிவின் ஆரம்பத்தில் ஒன்றும் இறுதியில் ஒன்றுமாக இரண்டு தமிழ்மண ஒட்டுப்பட்டையை வைத்திருக்கிறீர்களே... எப்படி என்று சொல்ல முடியுமா...?

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  4. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே.

    ReplyDelete
  5. கவிதை ரொம்ப நல்லாருக்கு.. காலைப்பொழுதின் சுவாரசியத்தை சொல்லிருக்கீங்க.. நல்லாருக்கு.

    ReplyDelete
  6. முதல் போனி... கைராசி நல்லா இருக்கட்டும்....வாழ்த்துகள் ஷேக்

    ReplyDelete
  7. அன்பும் ஆதங்கமுமாய் கவிதை அழகு ஸ்டார்ஜன் !

    ReplyDelete
  8. :) தொடர்ந்து எழுதுங்க நானா. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனங்கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கவிதை அருமை. அதிலும்
    " இளங்காலை பொழுது " இன்னும் சூப்பர்.
    இனிய ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள் சேக்.

    ReplyDelete
  10. Nice..

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

    ReplyDelete
  11. அதிகாலை பனிவிழும் நேரம்
    அழகான மனைவியின்
    அன்பினால் உருவான‌
    சூடான முத்தமும் காபியும்
    கிளர்ந்தெழச் செய்தனவே..

    அப்புறம் ..இப்படிலாம் நடக்குதா ? கல்யாணத்திற்குப் பிறகு நம்ம வீட்டில் அப்படிலாம் இல்லை கவிஞரே, நாம்தான் அதிகாலையில் எழுந்து காப்பியைக் கலக்கி கொடுக்கணும்.
    இதுலாம் கனவில் வேணா நடக்கலாம்.

    கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அழைக்கும் ஷேக்,
    கவிதை சூப்பர்.பதிவின்[கவிதை]மூலம்
    தங்கைக்கு தெரியபடுத்துகிறீர்கள்.next month enjoy வாழ்த்துக்கள்.


    சகோ,அயுப் ,கருத்தில்உங்க வேதனை புரிகிறது மச்சியை கவிதையை படிக்க சொல்லவும்.

    ReplyDelete
  13. ஆஹா.. கண்விழித்த நேரம் முதல் கவிதையாய் கொட்டி இருக்கீங்க.. நைஸ்..!! :-))

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சூப்பரா இருக்கு கவிதை!

    ReplyDelete
  15. முதல் போணி செய்யத்தான்
    'முதல்ல போ நீ'ன்னு அனுப்பி வச்சாங்களோ.
    கடையில் வரும் எந்த முதல் போணியும் முதல் போணிதான். ஆனால்
    காலையில் வந்த கடைக்கண் போணியை 'மிஸ்' பண்ணிட்டீங்களே :)

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்