Pages

Sunday, December 5, 2010

கடைசி பஸ்..


ஆளரவம‌ற்ற வெறிச்சோடிய சாலையை முனைடீக்கடையில் உள்ள ஒற்றைபல்பு ஒளிரூட்டிக் கொண்டிருந்தது. அந்த டீக்கடை கூரையின் ஓலைகள் டமடம.. டமடம.. என்று இடித்த இடி எங்கே தன்மேல் விழுந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தன. பளிச்.. பளிச்.. என மின்னல் வேறு கண்ணை பறித்துக் கொள்வதுபோல மிர‌ட்டியது. ரோட்டில் கிடந்த‌ குப்பைகளெல்லாம் 'நாங்கல்லாம் வேறெடத்துக்கு போறோமே..' என்றபடி பறந்தன. மாடசாமி டீக்கடை என்றிருந்த போர்டு காற்றுக்குஏற்ப தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

'அய்யயோ மழை தூத்தப் போவுதே.. இன்னக்கி யாபாரம் அம்புட்டுதேன்.. பத்தர மணிக்கே வரும் கடைசி பஸ், இன்னக்கி பார்த்து பதினோறு மணிஆகியும் காணலியே.. பஸ் வந்தாலாவது எதாவது யாபாரம் இருக்கும். மழைவேற.. சே.. பெரிய தூத்தல் வர்றதுக்குள்ள வீடுபோய் சேர்ந்திரணும்..' என்று நினைத்தபடியே எல்லாச் சாமானையும் சட்டுபுட்டுன்னு எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

முட்டாய் பாட்டலெல்லாம் அழுக்கா இருக்கு.. காலம்பர வந்து துடச்சி வைக்கணும்.. நாளைக்கி வர்ற பால்காரனுக்கு பாக்கிய 2நாளு கழிச்சி தாரேன்னு சொல்லணும். புள்ளைங்க ஆசப்படுற மாதிரி எப்படியாவது கடனஉடன வாங்கியாவது கறிச்சோறு ஆக்கிப்புடணும். எத்தன நாளைக்கிதான் கூழும் கஞ்சியையும் பச்சமுளகாய கடிச்சிக்கிட்டு குடிக்கிறது. ம்ம்ம்.. ம்ம்ம்.., என்ன செய்ய.. வருமானந்தேன் இல்ல.. கருப்பண்ண சாமி.. நீதான் அம்பட்டையும் கொடுக்கணும் என்றதுக்கு கருப்பண்ண சாமி படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

கடய சாத்திட்டு சிமிண்டு சாக்கை தலையில் போட்டபடி 2 எட்டுதான் நடந்திருப்பேன்.. கண்ணெல்லாம் கூசியது.. தூரத்தில் கடைசி பஸ் வந்துகொண்டிருந்தது. ஆட்கள் இறங்கினால் எதாவது யாபாரம் இருக்குமே என்று நினைத்தபடி கடையை நோக்கி திரும்பவும் நடந்தேன். ஒரு பயப்புள்ளயும் இறங்குனமாதிரி தெரியல.. சரி மழைத் தூத்துறதுக்குள்ள வீட்டுக்கு போயிருவோம் என்றபடி நடந்தேன். பஸ்ஸும் திரும்பி போயிட்டான்.

கொஞ்சதூரம் சென்றிருப்பேன்.. யாரோ பின்னால் "மாடசாமி அண்ணே மாடசாமி அண்ணே" என்று அழைத்தபடியே வருவது தெரிந்து திரும்பி பார்த்தேன். 'என்னடா இது கூப்பிட்டமாதிரி இருந்துதே.. ஒருத்தரையும் காணோமே.. ஒருவேள மோகினி பிசாசா இருக்குமோ' என்று மனதுக்குள் கிலி பிடித்துக் கொண்டது.

"எலேய் மாடசாமி!.. ராத்திரி வரும்போது பாத்து பரிவிச்சி வாலே.. மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. நம்ம மூக்கைய்யா தாத்தா சொன்னாருலே.. வாரபோற ஆள்களையெல்லாம் பயம்காட்டுதாம்.. மோகினிய பாத்துட்டு ரெண்டுமூணு பேரு காய்ச்ச வந்து கிடக்கானுவ.. ரத்தக்குறி பாக்காம விடாதாம்லே.. ஜாக்கிரதையா வாலே" என்று நடராஜன் சொன்னபோது நான் நம்பவில்லை. "எலே.. நா எத்தனவாட்டி ராத்திரி நேரம் தன்னந்தனியா வந்திருக்கேன்.. ஒருநாளாவது..?.. மோகினியாவது கீகினியாவது... நானாவது பயப்படுறதாவது.. நல்லா கதகட்டி விட்டிருக்கானுவ.. நீயும் நம்பிக்கிட்டு இருக்கியே.." என்ற என் வீராவசனம் தவிடுபொடியாகிரும்போல.

மனது திக்திக் என்று அடித்துக் கொண்டது. மறுபடியும் என்னை கூப்பிடுவது போல ஒரு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் யாரையும் காணல.. காற்று பலமாக ஊஊஊ..ஊஊவென இரைச்சலுடன் மரமெல்லாம் ஆடியது. ஊஊ..ஊஊவ்வ்வ்வ்... ஊஊஊ தூரத்தில் எங்கோ நாய் குலைப்பது கேட்டது. என்னை அழைப்பது போல இப்போதும் அதே குரல்.. நடையில் கொஞ்சம் வேகம் கூட்டினேன்.. பின்னால் வருபவரும் என்னைப் போல நடையில் வேகம்.

கண்ணுக்கெட்டும் தூரம்வரை யாரையும் காணவில்லை. 'கருப்பண்ண சாமி என்னைய பத்திரமா வீட்டுல கொண்டுபோய் சேத்துரு' என்று வேண்டியபடியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சே.. வீட்டுக்கு 2 பர்லாங் நடக்கணுமே. குளத்தாங்கரை பக்கம் வந்தாச்சி.. ஓடினேன்.. பின்னால் வருபவரும் ஓடிவருவதுபோல திமுதிமுவென சத்தம்.

'ஆஆ.. அய்ய்யோ அம்மா..' என்று கத்தியபடி கீழே விழுந்தேன். முட்டியிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. புள்ளைங்களுக்காக கையில் வச்சிருந்த பண்டமெல்லாம் அங்கொன்னும் இங்கொன்னுமாக சிதறிக் கிடந்தது. கீழே கிடந்தவற்றை எல்லாம் தூசித்தட்டி பையில் அள்ளிப்போட்டேன். மழைச் சாரல் முகத்தில் அறைந்தது. கண்ணுக்கெட்டும் தூரம்வரை யாரையும் காணவில்லை. முட்டி ரொம்ப வலித்தது. முன்புபோல வேகமாக நடக்க முடியவில்லை.

இப்போது அந்த உருவம் மிக அருகில்.. 'அய்யோ என்னை அடிக்காம விடாதுபோல.. இன்னக்கி நா அம்புட்டுதேன்' பயத்தில் அந்த மழைநேரத்திலும் வேர்த்துக் கொட்டியதை துடைத்தபடியே வந்தேன். "மாடசாமி அண்ணே.. மாடசாமி அண்ணே" என்று மிக அருகில் குரல் கேட்டது. என் தோள்பட்டையில் ஒரு கைவிழுந்து என்னை நிறுத்தியது.

"அய்யோ.. என்ன விட்டுரு.. விட்டுரு.. நா புள்ளக்குட்டிக்காரென்" பயத்தில் அழுகை வந்தது. அய்யோ என்ன மாடசாமி அண்ணே.. இப்படி ஆகிட்டீங்க என்றதும் திரும்பி பார்த்தால் அங்கே ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

"யாருப்பா நீயி.." என்றேன் திகைப்புடன். "அண்ணே என்னத்தெரியலியா.. நல்லா யோச்சிப்பாருங்க" என்ற அவனுக்கு "யாருன்னு தெரியலியேப்பா" என்றேன். உடனே அவன் "நாந்தான் செல்லாத்தா பாட்டியோட பேரன்., எம்பேரு முத்து. சின்னவயசுல வீட்டவிட்டு ஓடிப்போனேனே.. ஞாபகம் இல்லயா.. உங்க கடையில வந்து சல்லியம் பண்ணுவேனே.." என்றான்.

"அடப்பாவி நீயா அது" என்ற திகைப்பில் நான். "சரிண்ணே.. வீட்டுக்கு எப்படி போகணும்.. ஊருக்கு வந்து ரொம்ப வருசமாச்சா.. வழி தெரியல.. எப்படி போகணும்?." என்றானே பார்க்கலாம். "எலேய் இதுக்கா இப்படி?.. நானும் என்னவோ ஏதோன்னு பயந்து சே.. இத அங்கேவச்சு கேட்டுருக்கலாமுல்ல.. பின்னாடியே துரத்துற.." என்றேன்.

"என்னண்ணே.. நா எத்தனதடவ உங்கள்ட்ட விளாண்டிருக்கேன். சும்மா விளாட்டுக்குதாண்ணே., விளாட்டு காட்டினேனே" என்றான். "நீ விளாடுறது நாதேன் கிடைச்சேனா.. சரிசரி இந்தா இப்படியே சோத்தாங்கை பக்கமா கொஞ்சதூரம் போனீன்னா அங்க மாரியம்மன் கோவில் வரும். அதுலருந்து ரெண்டுதெரு தள்ளி குத்துக்கல் தெரு வரும். அதுல நாலாவது கிழக்க பாத்தவீடுதான் உங்கவீடு. சீக்கிரம்.. காலாகாலத்துல போய்ச்சேரு.. பத்திரமா போலே" என்று சொன்னேன்.

"சரிண்ணே" என்றபடி அவன் நடந்துபோனதை பார்த்தபடியே நான் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். 'பாவிப்பய.. என்னைய பயங்காட்டி இப்படி ஆக்கிப்புட்டானே' என்று நினைத்தபடியே வீடுபோய் சேர்ந்தேன்.

காலையில், "அண்ணே.. ரெண்டு சாயா கொடுண்ணே" என்ற குரல்வந்த திசையை பார்த்தால் அங்கே முத்து நின்று கொண்டிருந்தான். "என்னல முத்து ராத்திரி நா சொன்னமாதிரி போனீயா.. வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா., இல்ல வழி தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னியா.." என்றேன் அவனிடம்.

"மாடசாமி அண்ணே!! என்ன உளருதீரு.. நானாவது எங்கவீட்டுக்கு வழி தெரியாம நிக்கிறதாவது. நான் வந்து ஒரு வாரமாச்சே. ராத்திரி வழி கேட்டேன்னு சொல்தீரு.. காலையிலேயே தண்ணிகிண்ணி போட்டுட்டீரா" என்று சொன்ன அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து "மாடசாமி அண்ணே.. மாடசாமி அண்ணே.." என்று யாரோ கூப்பிடுவதுபோல இருந்தது.

,

Post Comment

34 comments:

  1. கடைசி பஸ் அருமை ... பேய் இருக்கா இல்லையா ??

    ReplyDelete
  2. சூப்பர் கதை,முத்து விளையாடுவது இனி தொடரும்,பாவம் மாடசாமி அண்ணன்.எழுதிய விதம் அருமை.

    ReplyDelete
  3. முத்து திரும்பவும் காலையில் விளையாடுரானா? இல்லை அது பேய்தானா?

    ReplyDelete
  4. விடாது கருப்பு .... மாடசாமி சூப்பர். பகிர்வுக்கு வாழ்த்துக்க
    ள்

    ReplyDelete
  5. பேச்சு வழக்கு ரசித்தேன்....

    நல்ல கதை...

    ReplyDelete
  6. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ஸ்டார்ஜன் !

    ReplyDelete
  7. பேய் உண்மையில் இருக்கோ இல்லையோ,
    கதை திகிலுடன் பயங்காட்டியது உண்மை!

    ReplyDelete
  8. உங்க கதைப்படி 'பேய் இருக்கின்றது'
    என்றுதான் நீங்கள் இக்கதையில்
    குறிப்பிட்டுள்ளிர்கள். #கண்டுபிடிப்பு!
    அந்த முத்து பயல் ஊருக்கு வந்து
    ஒரு வாரம் ஆகிவிட்டாலும் எப்படி கரெக்ட்டா
    'பேய்'(?) பயங்காட்டிய இரவுக்கு மறுநாள்
    மாடசாமி கடைக்கு வருகிறான்? #வியப்பு!

    ReplyDelete
  9. இப்புடிக் கதையெல்லாம் சொன்னா பயந்தடுவமா.. திருப்பியும் புளொக்குக்குள்ள வருவமுல்ல...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  10. கலக்குறீங்க சேக்.

    முந்தா நேத்து தனியா போன அனுபவமா :)

    ReplyDelete
  11. பேய் இருக்கா இல்லயா? நம்பலாமா நம்பப்பிடாதா????

    ReplyDelete
  12. கடைசி பஸ்...!
    நல்ல எழுத்து நடை...
    ஆமா அனுபவம் இருக்கோ ஸ்டார்ஜன்...?

    ReplyDelete
  13. அருமையான எழுத்து நடை.ச்டார்ஜன் நிஜத்திலேயே நீங்க பேயைப்பார்த்து இருக்கீங்களா?

    ReplyDelete
  14. வாங்க எல்கே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. பேய் இருக்கா இல்லையா?..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. வாங்க ஆசியாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  16. வாங்க சிவா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. ஒருவேள அது பேயா இருக்கலாம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  17. வாங்க மதுரை சரவணன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  18. வாங்க ஆமீனா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வாங்க நிஜாமுதீன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  21. வாங்க மதி. சுதா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  22. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  23. வாங்க பாலாண்ணே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  24. வாங்க யோகேஷ் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  25. வாங்க சித்ரா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  26. வாங்க குமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    அனுபவமெல்லாம் இல்லை குமார்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  27. வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    அனுபவமெல்லாம் இல்லை அக்கா. பேயை பார்த்தது கிடையாது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  28. கதை ரொம்ப நல்லாருக்கு ஸ்டார்ஜன். பயத்தோடவே படிச்சேன். நடை அருமை.

    ReplyDelete
  29. நண்பரே... என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்