Pages

Saturday, January 1, 2011

புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்

அன்புள்ள நண்பர்களே.. இன்னும் சில மணித்துளிகளில் 2010ம் ஆண்டு நம்மைவிட்டு மறையப்போகிறது. சிலருக்கு 2010ம் ஆண்டு சோதனையாகவும் வேதனையான மறக்க முடியாத சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கக்கூடும். சிலருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்திருக்கக்கூடும். வரப்போகும் 2011ம் ஆண்டு எப்படி எந்தமாதிரியான சூழ்நிலைகளை தரக்கூடியதாக அமையப்போகிறதோ.... தெரியவில்லை.

எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்க நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே 2011ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.



நான் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போது மன‌தில் வேண்டிக்கொள்வேன்.

* இறைவா... இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கவேண்டும்.

* மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டும். சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள்க்கூடிய வழிமுறைகளை நீதான் எங்களுக்கு காண்பிக்க வேண்டும்.


* தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் எங்களுக்கு தந்தருள்வாய்..


* எல்லா மக்களும் இன்புற்று அவர்கள் வாழ்க்கையை ஒளிவீசிடச் செய்திடுவாய்..


* நோய்நொடி, தீயசக்திகளிடமிருந்து மக்களை நீயே பாதுகாப்பாயே..


* சோதனைகள் வந்தாலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத சோதனைகளை தந்துவிடாதே..


* கஷ்டப்படும் ஏழைஎளியவர்களுக்கு உதவக்கூடிய மன‌தினை எங்களுக்கு தந்தருள்வாயே...


* விலைவாசி, பொருளாதார வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், எல்லாம் குறைந்து நாடு முன்னேற வேண்டும்.


* எல்லா மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்.


* நாட்டில் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருவாயே..


* கடந்த ஆண்டு விட்டுபோன நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற வேண்டும்.


* நம்முடைய வேண்டுதல்கள் யாவும் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திப்போம்.....


*********

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். ஹைய்யா புதுவருசம் பிறந்திருக்கு.. ஜாலிதான் என்று மனதில் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறையும்.

தினத்தந்தியில் ஒவ்வொரு புத்தாண்டும் ஜனவரி முதல்நாள் அன்று முகப்பில் ஒரு கருத்துப்படம் வெளியிடுவார்கள். அதில் என்னவென்றால் ஒரு வீட்டில் இருந்து கிழவர் ஓடுவார். ஒரு சிறுவன் அந்த வீட்டின் வாசலிலிருந்து அதை ரசித்துக்கொண்டிருப்பான். அந்த கிழவர் நடந்துமுடிந்த‌ ஆண்டு. அந்த சிறுவன் பிறந்த‌ புத்தாண்டு.

தினத்தந்தி வாசிப்பவர்கள் இதை கவனித்து இருப்பார்கள். நானும் அதனை ரசித்துப்பார்ப்பேன்.

*********

மேற்கத்திய கலாச்சாரங்களை மக்கள் பின்பற்றி வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரியங்கள் மிக வருந்தத்தக்கதாக இருக்கிறது. இதனை பற்றி பதிவர் ஸாதிகா அக்கா சிறப்பான இடுகை வெளியிட்டுள்ளார். எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

*********

2011ம் ஆண்டை எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகள்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

,

Post Comment

31 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தல!!

    சீக்கிரம் ஊருக்கு வெகேஷன் போகணும் என்று ஒரு வரி சேர்த்திருக்கலாமோ??!! அவ்வ்வ்வவ்வ்வ்.....!!!!

    ReplyDelete
  3. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. புத்தாண்டு என்பதை எங்கிருந்து திருடினீர்கள்? புத்தாண்டு கொண்டாடினால், புது மாதம், புதிய நாள், புதிய நேரம் என இப்படியே நாழிகை வரை கொண்டாடுவதில்லயே ஏன்? சிந்தித்து இருக்கிறோமா? காலத்தைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. "நானே காலமாக இருக்கிறேன்" என இறைவன் கூறியதை அறிவீர்களா? ஒரே நேரத்தில் ஒருவருக்கு நன்மையும் பிரிதொருவருக்கு தீமையும் நேரலாம். எனவேதான் காலத்தைக் கொண்டாடாமல் போற்றிப் புகழுங்கள்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்து :)

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. உங்களது புத்தாண்டுப் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. தம்பி ஸ்டார்ஜன்,உங்கள் ஹலாலான பிரார்த்தனைகள அனைத்தும் நிறைவேறிட ஏகனிடம் இறைஞ்சுகின்றேன்.இந்த புத்தாண்டு உங்களுக்கு வளப்பமுள்ளதாக சிறப்புள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.எனது இடுகையை குறிப்பிட்டு இருந்தது மிக்க மகிழ்வைத்தந்தது.மிக,மிக நன்றி.

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

    இந்த வருடம் முழுவதும் நல்ல நாட்களாக அமைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  11. //தினத்தந்தியில் ஒவ்வொரு புத்தாண்டும் ஜனவரி முதல்நாள் அன்று முகப்பில் ஒரு கருத்துப்படம் வெளியிடுவார்கள்.//

    ஒவ்வோர் ஆண்டும் இரசிக்கக்கூடிய ஒரு
    நிகழ்வை ஞாபகப்படுத்தினீர்கள்.

    இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
    நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
    இறைஞ்சுகிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜெய்.இனிதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் 2011 !

    ReplyDelete
  14. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்க இறைவன் அருள் புரியட்டும்.

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
    -கலையன்பன்.

    இது பாடல் பற்றிய தேடல்!

    !

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. புத்தாண்டு வாழ்த்துகள் ஷேக்!

    ReplyDelete
  18. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. தங்கள் மன வேண்டுதல்களை அனைவரும் படிக்க வேண்டியது.. பின்பற்ற வேண்டியது.
    படித்தபின் நிறைவாக உணர்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் மாம்ஸ்!!

    ReplyDelete
  20. புது வருடத்தில் உங்கள் வேண்டுதல்கள் எல்லாமே.. அவசியமானவை தாம்..
    உங்களுக்கு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. :-)

    ReplyDelete
  21. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  24. அருமையான துஆ/

    http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

    உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியலில் உங்கள் பெயரும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  27. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. தேவையான கருத்துக்கள்.. ஸ்டார்ஜன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்