Pages

Wednesday, January 11, 2012

அவளா இவள்?.. 250வது இடுகை

"டே..டேய்.., எங்கடா பாத்துட்டு போறே?.. கொஞ்சன்னா செத்துருப்பியே.. ஆளும் மூஞ்சியும் பாரு!.. சரியான சாவுக்கிராக்கி" என்ற ஆட்டோக்காரன் திட்டிக்கொண்டே சென்றான். செவி நரம்புகள் மூளைக்கு சென்றனவா என்று தெரியாது. அந்த ஜனநெருக்கடியிலும் அவள் மட்டும் காலையில் பூக்கும் பனிபடர்ந்த ஒற்றை ரோஜாப்போல அழகாய் பூத்திருந்தாள்.

அவளை கடந்ததும்தான் 'ஒருவேளை இது அவளா இருக்குமோ?' என்றெண்ணியது மனம். சே சே.. இருக்காது என்றாலும் மனது அவள்தான் என்று அடித்து சொல்லியது. பார்த்தது ஒரு நிமிடம்தான் என்றாலும் நினைவெல்லாம் அவளே நிறைந்திருந்தாள். பார்க்காமலாவது இருந்திருக்கலாம். அவளருகில் செல்வதற்குள் பஸ்ஏறி சென்றுவிட்டாளே.. இப்போ எங்கிருக்காளோ தெரியலியே..

"டேய் கணேஷ்.. காலேஜ் பஸ் வந்திருச்சிடா; அங்க என்னடா பாத்துட்டு இருக்கே.. சீக்கிரம் வாடா" என்று மூர்த்தி என் தோளை உலுக்கியதும் பஸ்ஸில் ஏறினேன். "பாடம் ந‌டத்துறத கவனிக்காம அங்க என்ன யோசனை" என்று சாக்பீஸை என்மேல் எறிந்த பாலா சார், "எங்கே நீரிலிருந்து ஹைட்ரஜனை டீஹைட்ரேட் செய்யும் முறையை சொல்லுங்க சார்?" என்றார். நான் பதிலறியாது நின்றிருந்தேன். "என்ன அதுக்குள்ள மறந்துருச்சா.., சரிசரி உட்கார்ந்து தொல" என்ற வசவுகள் எனக்கு புதுசா என்ன!.

மறக்கக்கூடியவளா அவள். சிறுவயதில் ஒன்றாய் படித்து விளையாண்டு மகிழ்ந்த காலங்கள் இப்போதும் நினைவிலிருந்து மாறலியே.. பள்ளியில் படிக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையே யார் முதல்ராங்க் வாங்குவது என்ற ஒரே போட்டிதான். ஒருதடவை அரையாண்டு தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும்போது, நான் பள்ளியறை வாசலில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தேன். அவள் வரும்போது நான் வாசலில் கைவைத்திருந்ததை அவள் கவனிக்கவில்லை. விருட்டென உள்ளே நுழைந்த அவள் என்கையில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு விட்டது. அவளால் பரிட்சை எழுத முடியாமல் போயிவிட்டது.

வேதனையில் மனம் துடித்து அவளிடம் சாரி சொன்னேன். டேக்இட்ஈஸியாக எடுத்துக்கொண்ட அவள் என்னிடம் நெருங்கி பழகினாள். ஆண்டுவிழாவில் அவளின் (அழகுமலர் ஆட...அபிநயங்கள் கூட‌) நாட்டிய நடனம் கண்டு மெய்சிலிர்த்தேன். பள்ளியை விட்டு இருவரும் பிரியும்போது இனம்புரியாத உணர்வு என்னை ஆட்கொண்டது. இது காதலா?...

மறுநாள், பாலா சாரின் வகுப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தபோது, என் செல்போன் அலறியதை கேட்ட பாலா சார், "போங்க சார்!.. உங்க வேலையெல்லாம் முடித்துக்கொண்டு வந்தால்போதும். வெளியே போறீங்களா" என்று கத்தினார்.

அடசே.., என்றபடி வெளியே வந்த நான், மொபைலில் வந்த நம்பரை பார்த்தால் ஒரு புதிய நம்பர். இதென்ன புது நம்பரா இருக்கு; யாராக இருக்கும் என்றெண்ணியபடியே ஹலோ என்றேன்.

மறுமுனை "ஹலோ கணேஷ்தானே இது!.. எப்படிங்க இருக்கீங்க?.." என்றது ஒரு பெண்குரலில்.

"நான் நல்லாருக்கேன். யாரு நீங்க!.. தெரியலியே..குரலும் பரிச்சயப்படலியே" என்றேன்.

"நல்லா யோசிச்சு பாருங்க‌.. யாருன்னு தெரியும்?!" என்றாள்.

"ம்ஹூம் ஞாபகத்துக்கு வரலியே.. சீக்கிரம் சொல்லுங்க. இங்க பாலா சார் என்னை காய்ச்சி எடுத்துருவார்" என்றேன்.

"நேத்து பஸ்ஸ்டாண்டுல நீங்க என்னை பார்த்துட்டு போனதாக என் பிரண்டு சொன்னாள். பேசுறதுக்குள்ள பஸ் வந்ததால் போயிட்டேன். மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் பேசுவோம். எனக்கும் இங்க மாலதி டீச்சர் வர்ற நேரமாகிருச்சி. பை பார் நவ்" என்றபடி போனை கட் பண்ணினாள்.

ஒருவேளை இது அவளா இருக்குமோ?.. என்று நினைக்கும்போதே மனம் சந்தோசத்தில் துள்ளியது. அன்றுமுழுவதும் அவள்தான் நிறைந்திருந்தாள்.

இன்று மாற்றம்கண்ட அம்மாவுக்கு புதிதாக தெரிந்தேன். எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்ற உத்வேகம்தான் இருந்தது. பரபரப்பான சாலையில் ஜனத்திரள்கள் மத்தியில் அவள்மட்டும் தனித்திருக்க மாட்டாளா என்று கண்கள் தேடின.

"ஏய் விஜி! என்னடி இன்னக்கி காலேஜ் வரலியா?.. யாரையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்கே?. என்னடி விசயம்" என்று கேட்ட மீராவுக்கு "அதெல்லாம் ஒன்னுமில்லடி" என்றாள் விஜி. 'இன்னக்கி பார்த்து 7சி நேரத்தோட வந்திருச்சே.., இப்போ கணேஷ் தேடிக்கிட்டு இருப்பாரே.. பார்க்கமுடியாம போயிருச்சே' என்ற வருத்தம் அவளுக்கு.

"ஹலோ யாரு கணேஷா!.. சாரிங்க., இன்றும் பார்க்கமுடியாம போயிருச்சே" என்றாள்.

"அதெல்லாம் பரவாயில்லீங்க. ஆமா உங்க பெயரை சொல்லவே இல்லியே" _ கணேஷ்.

"விஜி" _ விஜி.

"வாவ்.. நைஸ் நேம்"

"தேங்க்ஸ்

“என் செல்நம்பர் எப்படி கிடைத்தது?..”என்றேன். “என் பிரண்டு கொடுத்தாள். நாளைக்கு எப்படியாவது சந்திக்கணும். பை சீ யூ” என்றபடி போனை கட் செய்தாள். எனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்றே தெரியவில்லை. ஆனந்த‌த்தில் மனம் துள்ளி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போது எப்படியாவது என்காதலை அவளுக்கு தெரியப்படுத்தி விடவேண்டும்.

மறுநாள், அவளுக்காக‌ கொஞ்ச நேரத்தோடு பஸ்ஸ்டாண்டிற்கு வந்து காத்திருந்தேன். அவள் வருவாளா?.. அவள் வருவாளா?.. என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?.. என்று பாடலாம் போல இருந்தது. நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவள் தோழிகள் வந்தாலும் அவளை மட்டும் காணவில்லை. ‘என்னடா இது?.. இன்று சந்திக்க வருகிறேன்; என்றாளே! இன்னும் ஆளைக் காணவில்லையே. என்ன ஆனதோ அவளுக்கு?..’ மனம் பதைபதைப்பாய் இருந்தது.

“ஹலோ விஜியா.. எங்கிருக்கீங்க. வரலியே என்னாச்சி?..” என்றேன்.

“சாரி கணேஷ்!.. கிளம்பும்போது கால் சுளுக்கிவிட்டது. நடக்க முடியவில்லை” என்றாள்.

“அய்யய்யோ.. என்னாச்சி. இப்போ எப்படி இருக்கு.. டாக்டரிடம் காண்பித்தீங்களா” என்றேன். “தைலம் போட்டு தடவியிருக்கேன். டாக்டர் 2 நாள்ல சரியாகிரும் என்றிருக்கிறார். இப்போ வலி பரவாயில்லை” என்றாள். “சே!.. இப்படி ஆகிருச்சே விஜி., உடம்ப பாத்துக்கோங்க., எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதீங்க” என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. அவளுக்கு வலியென்றதும் என்மனதும் சேர்ந்து வலித்தது.‌

இரண்டு நாட்கள் கழித்து,

இன்று எப்படியும் வருவாள். என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். தூரத்தில் அவள் தோழிகள் புடைசூழ வந்து கொண்டிருந்தாள். இங்கே என்மனம் குதூகலித்து எப்படி சொல்ல எப்படி ஆரம்பிக்க..,என்ற தயக்கம்தான் மேலிருந்தது. என்காதலை ஏற்றுக்கொள்வாளா.. பேசியிருக்கும்போது இருந்த தைரியம்., இன்று நேரில் காணும்போது இல்லையே. என்ன செய்ய?! என்ற தவிப்பில் இருந்தேன்

சிறிதுதூரத்தில், விஜி அவளது தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது இந்தபக்கம் பார்ப்பதும் அங்கே பார்ப்பதுமாக எனக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள்.

நான் அவளருகே சென்று பேச எத்தனிக்கும்போது என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு உள்ளூற மனதில் குறுகுறுப்பும் பயமும் சேர்ந்து ஒட்டிக்கொண்டது.

விஜி என்னிடம் வந்து, “ஹலோ மிஸ்டர், என்ன வேணும் உங்களுக்கு! நானும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் நடவடிக்கையே சரியில்லையே. யார் நீங்க?..” என்றதும் எனக்கு தூக்கிவாரி போட்டது.

“ஹலோ என்னை தெரியலியா.. தெரியாத மாதிரி கேக்குறீங்க.. நல்லா யோசித்து பாருங்க” என்றேன் பதபதைப்புடன்.

“ஹலோ யாருன்னே தெரியலைங்கிறேன். அப்புறம் எப்படி தெரியாதமாதிரி இருப்பது?.. என்ன விளையாடுறீங்களா?.. ஈவ் டீசிங் பண்றீங்கன்னு போலீஸ்ல சொல்லவா?!..”

“நாந்தான் கணேஷ். என்னை தெரியலியா.. தினமும் போனில் பேசியிருக்கீங்க.. தெரியலைன்னு சொல்றீங்களே என்னங்க விஜி!.”

“என்னது நான் உங்ககூட டெய்லி பேசினேனா.. சான்ஸே இல்ல. நீங்க யாருன்னே தெரியாதே.. என் பேர் எப்படி தெரியும்!” என்றாள் விஜி வியப்புடன்.

“ஆமா விஜி.. நாந்தான் கணேஷ். என்ன நம்புங்க. டெய்லி பேசியிருக்கீங்க. 2 நாளுக்கு முன்னாடி உங்களுக்கு கால் சுளுக்கிருந்ததே.. இப்போ பரவாயில்லையா” என்றேன் விளக்கமாக‌.

அவள் வியப்புடன், “அப்படியா.. நான் யார்க்கூடவும் பேசலியே., இதுல எங்கேயோ தப்பு நடந்துருக்கே.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.”

“நீங்க நம்பலைன்னா என் மொபைல்லயும் உங்க மொபைல்லயும் கால்ஹிஸ்ட்ரி பாருங்க. அப்ப புரியும்” என்றேன் வருத்ததுடன்.

"இதுல என் தோழியோட அண்ணனுக்கு தானே போன் செய்தேன். இதுல எப்படி உங்க நம்பர்!!....... ஆ!!.. அடடா.. ஒரு நம்பர் மாறியிருக்குது அட ஆமா!!!!. அவர் பேரும் கணேஷ்தான். ஓ.. ஐ ம் சாரி. தப்பான நம்பருக்கு பேசிட்டேன். இது இந்தளவுக்கு போகுமுன்னு நா நினைக்கலை. எதுவும் தப்பா நினைச்சு மனதை போட்டு குழப்பிக்காதீங்க" என்றாள்.

விஜி இப்படி சொன்னதும் எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. இத்தனை நாள் காதல் முடிவுக்கு வந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது.

விஜிக்கு அவள் மனதில், இவனுடன்தான் பேசியிருக்கிறோமா; இதயத்தை கொள்ளை கொண்ட காதலன் இவந்தான் என்றதும் வெட்கமும் வேதனையும் கலந்து முகத்தினில் தெரிந்தது.

“ஏய் விஜி! அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே.. 7சி வந்திருச்சி. சீக்கிரம் வா” என்று மீரா அழைத்ததும் விஜி ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் அங்கிருந்து நகன்றாள்.

நான் உடனே விஜியிடம், “விஜி! மறுபடியும் எப்போ போன் பண்ணுவீங்க” என்றேன்.

அவள் என்னை குறுகுறு பார்வையுடன் வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள்.

“போலாம் ரைட்” என்று 7சி கண்டக்டர் விசில் கொடுத்தார்.

Post Comment

13 comments:

  1. 250 க்கு வாழ்த்துக்கள் சகோ.
    த.மாவில் இணைத்தும் விட்டேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. 250-க்கு நல்வாழ்த்துகள். தொடருங்கள்.

    ReplyDelete
  3. 250 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.இதென்ன வம்பு? நல்ல கதை தான்..

    ReplyDelete
  4. 250-க்கு வாழ்த்துகள்..

    காதல் இங்கே க்ராஸ்டாக்ல ஆரம்பிச்சுருக்கு.. சீக்கிரமே நேர்பாதைக்கு திரும்பட்டும் :-))

    ReplyDelete
  5. ரொம்ப ஜாக்கிருதயா இருங்க அது தான் இப்ப சொல்ல முடியும்

    ReplyDelete
  6. அருமையா எழுதி இருக்கீங்க நிலா அது வானத்து மேலேன்னு சொல்லி நிலாவைக் கிழே கொண்டு வந்திடிங்க.உங்களுக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  7. 250 வது பதிவிற்கு வாழ்த்துகள்.
    அருமையான கதை.
    எங்களது இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாங்க நண்பர் ராஜசேகர் @ எப்படி இருக்கீங்க. ரொம்ப நன்றி.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. வாங்க ராமலக்ஷ்மி மேடம் @ ரொம்ப நன்றி. தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ஆசியாக்கா @ ரொம்ப நன்றி. சும்மா... ஒரு காதல் கதை எழுதியிருந்தேன். அதை இங்கே வெளியிட்டுள்ளேன்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க சாந்தியக்கா @ ரொம்ப நன்றி.

    கதையில் இருவருக்கும் இப்போதான் காதல் ஆரம்பிச்சிருக்கு. வெற்றியடையட்டும்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. மனதார வாழ்த்துகிறேன் ஸ்டார்ஜன்.கதை கதைதான்.அருமை !

    ReplyDelete
  13. 250 இடுகைக்கு வாழ்த்துகள் சேக்.

    சுவாரஸ்யமான கதைதான். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்