புத்தரிசியும் புதுப்பானையும்
போட்டியிட்டு பொங்கலிட
சந்தோசமும் பூரிப்பும் பெருமிதமிட
இவ்வாண்டும் மகசூல் அதிகமாகிட
எங்கள் வாழ்வும் வளமும் பெருகிட
மங்களமாய் வசந்தம் வீச
குலவையிடுவோம்
பொங்கலோ பொங்கல் என்று!!
உழக்கரிசி நெல்லுமணி
பல கோட்டைகளாக
உருவெடுத்திட
உண்ணாமல் உறங்காமல்
கண்ணிமை போல
களத்துமேட்டினில் காத்த
உரமிட்டு உரமிட்டு
உரமேறிய கரங்களும்
சொல்லுதே
பொங்கலோ பொங்கல் என்று!
தன் பசி துறந்து பிறர்
பசி நீக்கும் மருத்துவனாய்
உழைப்பின் பெருமையை
உலகறிய செய்த
விவசாயியே! என்றும் நீ வாழியவே!
என்றும் உங்கள் வாழ்வினில்
வசந்த ஒளிவீசிட
வாழ்த்துதே எங்கள் மனம்
என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
*****
இனிய பொங்கல் திருநாளில் எல்லா வளமும் பெற்று இந்த தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாக மலர இறைவனிடம் பிரார்த்திப்போம் .
அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்....
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteநல்ல பகிர்வு.அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteபொங்கல் கவிதை ரொம்ப நல்லாருக்கு.
அருமையான கவிதை வாழ்த்துகள்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!!
ReplyDelete