கண்ட நாள் முதல்
நான் உன்னை கண்ட நாள் முதல்
கட்டினேன் காதல் கோட்டையை !!! . 
அதில் ரோஜாவன வண்ண வண்ண பூக்களைத்   
தூவி வரவேற்றேன் , என் மனசெல்லாம்    
புன்னகை தேசமாகி !!   
உன் இதயத் திருடன் ஆனேன் ! 
திருடிய இதயத்தை திருப்பிக் கொடு    
என் காதலா காதலா என்றாய்  !!! .  
நானோ , அது என் மன வானில் என்று    
உன் மனதை திருடி விட்டேன் .  
ஏய் , திருடா திருடா என்று சொல்லி    
கன்னத்தில் முத்தமிட்டாய் !!! . 
போக்கிரியாய் இருந்த என்னை உன்    
மன்மதனாக்கி இதய சிறைச் சாலையில் இட்டாய் !!! .
பின்னர் , அங்கிருந்து தப்பிக்க முடியாமல்  
அரண்மனைக் காவலானாக ,  
காதலன் ஆனேன் !!! .
காதல் கடிதம் வரைந்தேன்    
செல்போனில் காதல் கவிதையாக ,
நான் பேச நினைப்பதெல்லாம் ,
நீ பேசினாய் !!!. 
என்னை வசீகரித்த என் செல்லமே !  
உன்னருகில் நான் இருந்தால் !  
ரோஜாக் கூட்டமும் வெக்கப்படும் !!! .
நானோ உன்னை நினைத்து  
நீயோ என்னை நினைத்து  
நாம் நினைப்பதோ நாளைய ராஜாவை  !!!.
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் ! 
நீ வருவாய் என , 
தென்றலாக நீ வந்தாய் !!! .
ஒரு தேவதை வந்து விட்டாள் ,
உன்னைத் தேடியே ,
காலமெல்லாம் காதல் வாழ்க என்று  
நண்பர்கள் பாட்டு பாட ஆரம்பித்தனர்  !!! .
பூக்களைத் தான் பறிக்காதீங்க ! 
காதலைத் தான் முறிக்காதீங்க ! என்று   
நம் பெற்றோரும் பார்த்தனர் 
நல்ல நாளான கல்யாண நாளை !!! .
அந்த ஒரு இனிய ராகம் இசைக்கும்  
நாளும் வந்தது , 
நானும் வந்தேன் உன் மாப்பிள்ளையாக !!! 
அங்கே ஒலித்தது 
கண்ணுபட போகுதய்யா , 
சின்ன கவுண்டரே என்று !!! ..
என் கண்களோ தேடியது உன்னை 
ஓரக் கண்ணால் நீ கண்டாய் என்னை  
மணக் கோலத்தில் மனசுக்குள் மத்தாப்பு !!! .
அருகில் வந்தாய் பூவெல்லாம் உன் வாசம் ! 
ஜோடி இது நல்ல ஜோடி , 
பல்லாண்டு வாழ்க என்று 
ஊரார் வாழ்த்தினர் .
அப்போது நாம் ஆனோம்  
இணைந்த கைகளாய்  
நம் மனசு ரெண்டும் புதுசு !
அந்த வானத்தை போல !!!
நாம் என்றும் வாழ்வோம்  
வசந்த மாளிகையில் !  
நீ பாதி நான் பாதியாகி  
சிவசக்தி ஆனோம் !!! .
நம் பயணங்கள் முடிவதில்லை என்றும் ,
என் நினைவிருக்கும் வரை  
நீயே என் காதலி !!!! ..
ஆனந்த பூங்காற்று வீச வேண்டும் ,  
வருசமெல்லாம் வசந்தமாக 
அந்த கடவுளுக்கு நன்றி !!! .
பூவையின் முகம் பார்க்க  
நானே வருவேன்  
நம் காதலர் தினமான  
கல்யாண நாளில் !!!.....
இப்படிக்கு  
என்றும் அன்புடன் 
உன் மன்னன் , 
' ஸ்டார் 'ஜன் .
 
 
எப்படி உங்களால் மட்டும் முடியுது.
ReplyDeleteகலக்கு கலக்குன்னு கலக்குறீங்க.
இவ்வளவு படப் பெயரை வைத்து கவிதையா ?
ReplyDeleteநல்லா இருக்கு ஸ்டார்ஜன் !
//சின்ன கவுண்டரே என்று !!! //
ReplyDeleteகவுண்டர் : ஹா ஹா ஹா.. நம்மைப்பற்றிய கவிதையா? நன்றிங்க..
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
இன்று போல் என்றும் வாழ்க...,
ReplyDeleteநாளைய தீர்ப்பு..,
ReplyDeleteவாங்க கோவி கண்ணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ராஜ் குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
'ஸ்டார்'ஜன் மட்டுமில்லே ஸ்'டார்ஜன்' கூட இருக்கிறாரு!
ReplyDeletesuperb....star
ReplyDeleteவாங்க சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி
வருகைக்கு நன்றி
வாங்க ஜெகநாதன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
நீநீநீநீளளமாம் இருந்தாலும் நல்லாருக்கு
ReplyDeleteவாங்க வசந்த்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க ராதாக் கிருஷ்ணன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
இந்த ஐடியா எனக்கு வரல்லையே...
ReplyDeleteஅசத்தல் இடுகை... வாழ்த்துக்கள்..
வாங்க சந்ரு
ReplyDeleteவருகைக்கு நன்றி
சினிமாவைக்
ReplyDeleteகண்ட நாள் முதலா?!
வாங்க சங்கா
ReplyDeleteஎன்ன செய்வது சினிமாதான் எல்லாம்
அவள் அப்பா வால்டர் வெற்றிவேல் உங்களை வேட்டையாட விளையாட வருகிறார்.
ReplyDeleteவாங்க கார்த்திக் வருகைக்கு நன்றி
ReplyDelete