Pages

Wednesday, December 30, 2009

ரெட்டை ஜடை வயசில் நான் ...

ரெட்டை ஜடை வயசு படம் நம்ம அஜித் தல நடித்து 1997 ல் வெளி வந்தது . இதுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு . அந்த கதை என்னன்னு தெரிந்து கொள்வதற்கு முன்னாடி இந்த படத்தை பத்திய விமர்சனம் பாக்கலாமே ...

ரெட்டை ஜடை வயசு படம் நம்ம தல அஜித் , நம்ம பிகர் மந்த்ரா நடித்து சிவக்குமார் இயக்கத்தில் 1997 டிசம்பரில் வெளிவந்தது .

சும்மா துருதுருவென சுற்றித்திரியும் நம்ம தல அஜித் காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி .. என்று பாட்டுப்பாடி ஜாலியாக இருக்கிறவருக்கு மாமா கவுண்டமணி துணை . சும்மா தளதளவென இருக்கும் மந்த்ரா அஜித்துக்கு அத்தைப்பெண் .

இருவரும் விரும்புகின்றனர் . அப்போது அஜித்தின் அக்கா மாப்பிள்ளையான பொன்வண்ணனுக்கு கிட்னி பெயிலியர் . நம்ம தல தான் கிட்னி கொடுத்து காப்பாத்துகிறார் . அஜித்துக்கு தன் பெண்ணை கொடுக்க நினைக்கும் அத்தை , பின் வாங்குகிறார் .

தன் மகனுக்கு கிட்னி கொடுத்த மருமகனின் பெருந்தன்மையை எண்ணாமல் , ஒரு கிட்னி இல்லாததால் , தன் மகள் வாழ்வுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்றெண்ணி தன் உறவுக்கார பையனான அஜய் ரத்னத்துக்கு ( போலீஸ் அதிகாரி ) மணமுடிக்க நினைக்கிறார் .

தன் அத்தையின் மனதை மாத்தி , அஜய் ரத்னத்தின் சூழ்ச்சியை வென்று தல மந்த்ராவை கரம்பிடிக்கிறாரா என்பதை படம் பாக்காதவங்க வெள்ளித்திரையில் காண்க .

தல அஜித் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடித்திருப்பார் . காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி ... பாட்டில் ரொம்ப அனுபவித்து நடித்திருப்பார் . காமெடியும் ரொம்ப சூப்பர் . அதுவும் கவுண்டமணியும் அஜித்தும் அடிக்கும் லூட்டி செம கலாட்டா .

கவுண்டமணி தன் காமெடியால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் . ஹீரோவுக்கு இணையான ரோல் . ஏற்கனவே நேசம் படத்தில் அஜித்துடன் கலக்கியிருக்கும் இவர் இந்த படத்திலும் நல்ல காமெடி .

மந்த்ரா , சும்மா தளதளவென தக்காளி போல இருக்கிறார் . இட்டிலிக்கு மாவு ஆட்டயில ... பாட்டில் எல்லோரையும் ஆட்டுகிறார் .

அத்தையாக , வில்லியாக , நம்ம லதா , நல்ல முதிர்ந்த நடிப்பு ..

இசை தேவா என்று நினைக்கிறேன் . சரியா தெரியல .. தெரிந்தவங்க கொஞ்சம் சொல்லுங்க . காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி ... பாட்டில் மெலடியில் கலக்கல் . அதே மாதிரி இட்டிலிக்கு மாவு ஆட்டயில.. பாட்டில் மந்த்ராவோடு நம்மையும் ஆட்ட வைத்திருப்பார் .

கதை சுமார் என்றாலும் திரைக்கதையில் நம்மை ஒட்ட வைத்திருப்பார் இயக்குனர் சிவக்குமார் .

இட்டிலிக்கு மாவு ஆட்டயில ... என்று நான் ரசித்துக் கொண்டிருக்கும் போது என்னையும் ஒருத்தன் ஆட்டிப்புட்டான் .


**************************************


நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் ,

ஒரு நாள் , அந்த நாளுக்குரிய பாடவேளைக்கு ஆசிரியர் வராததால் அன்று எங்களுக்கு ஃப்ரி ( விடுமுறை ) . ஹைய்யா ஜாலி என்று நாங்கள் அனைவரும் காலை ஷோ படம் பாக்க போகலாமுன்னு கிளம்பினோம் .

நெல்லை பார்வதியில் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும் ரத்னாவில் அப்பாஸ் , சிம்ரன் நடித்த பூச்சூடவா படமும் போட்டிருந்தார்கள் . பாதி பேர் சிம்ரனை பாக்க போறோமுன்னு போயிட்டனுங்க . நானும் கொஞ்ச பேரும் மந்த்ராவை பார்க்க போனோம் . கேர்ள்ஸ் வீட்டுக்கு போயிட்டாங்க .

நண்பர்கள் கூட படம் பார்ப்பது என்றாலே ஒரே ஜாலி தான் . அதுவும் தல அஜித் , மந்த்ரான்னா கேட்கவா வேணும் . ஒரே ஆட்டம் பாட்டம் விசிலுன்னு தூள் பறந்தது . தியட்டரே அதிருமுல்ல ... ஒரே ஜாலி தான் .

இடைவேளையில் நண்பர்கள் அனைவரும் முறுக்கு , போண்டா , டீ சாப்பிட்டோம் .

படம் முடிந்து அனைவரும் கிளம்பினோம் .அப்போது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி வந்த எனக்கு ஒரே அதிர்ச்சி . ஏன்னா என்னோட பர்ஸ்ஸை காணோம் . எனக்கு கதக் கதக் என்றிருந்தது . பர்ஸ்ஸில் என்னோட கல்லூரி அடையாள அட்டை , பாஸ் , பணம் என்று எல்லாம் இருந்தது . பர்ஸ்ஸை தேட ஆரம்பித்ததை பார்த்து நண்பர்கள் என்னவென்று கேட்டனர் .

நண்பர்களிடம் சொன்னேன் . அவர்களுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது . நாங்க தியட்டர் முழுவதும் தேடினோம் . பர்ஸ் கிடைக்கவே இல்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை .

அரை மனதுடன் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தேன் . மதியம் சாப்பிட்டு விட்டு நல்ல பிள்ளை மாதிரி புக் எடுத்து படித்துக் கொண்டிருந்தேன் .

ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும் , அப்போது பக்கத்து வீட்டில் ஒருவர் வந்து சேக் முகைதீன் வீடு எங்கே என்று விசாரித்துக் கொண்டிருந்தார் . நான் எழுந்து , வெளியே சென்று , நான் தான் சேக் மைதீன் , என்ன விசயம் என்று கேட்டேன் . அதற்கு அவர் , நீங்க காலையில் எங்கே சென்று இருந்தீங்க என்று கேட்டார் . நான் காலையில் பார்வதியில் ரெட்டை ஜடை வயசு படம் பார்க்க சென்றிருந்தேன் என்று சொன்னேன் .

உங்க பர்ஸ் தியட்டரில் கிடந்தது ; கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தேன் . எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியல .. அவர் கையை பிடித்து நன்றிகள் சொன்னேன் . சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த எங்கப்பா முழித்து என்னவென்று விசாரித்தார் .

பர்ஸ் கொண்டு வந்து கொடுத்தவர் , எங்கப்பாவிடம் உங்க பையன் பார்வதி தியட்டரில் பர்ஸ்ஸை தொலைத்து விட்டார் . அதை நான் எடுத்து , கொடுக்கலாமுன்னு வந்தேன் . எங்கப்பா உடனே அவருக்கு ரொம்ப நன்றி தம்பி என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் . நானும் எங்கப்பாவும் அவரை பாராட்டி அனுப்பி வைத்தோம் .

அவர் சென்றதும் எங்கப்பா , எங்கம்மாவிடம் உன் பையன் எங்கே போயிருக்கான் தெரியுமா , பார்வதி தியட்டருக்கு போயி பர்ஸ்ஸை தொலைத்திட்டு வந்திருக்கான் . ஒரு ஆள் வந்து கொடுத்துட்டு போறார் . ஏன் படம் பாக்க போனே ! காலேஜ் லீவுன்னா வீட்டுக்கு வர வேண்டியதுதானே ! . சொல்லிட்டு போனா என்ன .. படம் பாக்க போனுன்னா நான் விடவா மாட்டேன் . இனிமே இப்படி செய்யாதே என்ன என்று அப்பா சத்தமிட்டார் .

Post Comment

26 comments:

 1. படிக்கப்போற பிள்ளைக்கு படம் தேவையா.

  அதுவும் மந்த்ரா படம்.

  ஏய் அது சரி ஒரு வார்த்தை சொன்னா நானும் அந்த படத்தை பார்த்திருப்போமுல்ல.

  ReplyDelete
 2. நானும் பார்வதியில் தான் பார்த்தேன். அப்போ நான் தாழையூத்து சிமெண்ட் பேக்டரியில வேலை பார்த்துகிட்டு இருந்தேன் ஸ்டார்.

  அந்த ஆள்மாறாட்ட காமெடி பத்தி ஒண்ணும் எழுதலை. :))

  ReplyDelete
 3. பாருங்க....பழைய அஜீத் எப்பிடி அழகா இருக்கார்.

  உங்க அப்பா சொல்லிட்டு விட்டுட்டாரே.எங்க வீட்ல்லன்னா காய்ஞ்ச பனை மட்டைதான்.

  ReplyDelete
 4. //அக்பர் said...

  படிக்கப்போற பிள்ளைக்கு படம் தேவையா.

  அதுவும் மந்த்ரா படம்.//

  படிக்கிற பிள்ளை அந்த மாதிரி படம் தானே பார்க்கும். அப்போதெல்லாம் மந்த்ரா இப்ப இருக்கும் நமீதா போல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்

  ReplyDelete
 5. ஆகா, மந்த்ரா ஏதும் மந்திரம் போட்டிருப்பாங்களோ?!

  ReplyDelete
 6. ///நம்ம பிகர் மந்த்ரா ////

  :-)))))

  ReplyDelete
 7. //பாதி பேர் சிம்ரனை பாக்க போறோமுன்னு போயிட்டனுங்க .//

  இவங்க எங்க குரூப்..,

  ReplyDelete
 8. மந்த்ராவை நம்ம பிகருன்னு நீங்க எப்படி உரிமைகொண்டாடலாம்...
  இப்படிக்கு அகிலஉலக மந்த்ரா ரசிகர்மன்றதலைவர்


  ஆமா அதுக்கு எதுக்குங்க படத்தோட விமர்சனம் போட்டீங்க... இதையே முதல்லயே சொல்லிருக்கலாமே...


  //நண்பர்களிடம் சொன்னேன் . அவர்களுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது . நாங்க தியட்டர் முழுவதும் தேடினோம் . பர்ஸ் கிடைக்கவே இல்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை .
  அரை மனதுடன் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தேன் . மதியம் சாப்பிட்டு விட்டு நல்ல பிள்ளை மாதிரி புக் எடுத்து படித்துக் கொண்டிருந்தேன்//

  ஸ்டார்ஜன் இதுக்கு முன்னாடி தினத்த்ந்தில எடிட்டரா வேலை பார்த்தீங்களா? அந்தப்பேப்பரை படிச்சமாதிரியே இருக்கே...:-)

  ReplyDelete
 9. பர்ஸ வீடு தேடி வந்து கொடுத்த அந்த நல்ல மனுஷன் ரொம்ப நல்லா இருக்கனும்.

  ReplyDelete
 10. வாங்க அக்பர் ,

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. வாங்க துபாய் ராஜா ,

  உங்களை பத்திய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி

  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 12. இந்தப் படம் வந்தப்ப நான் +2 படிச்சிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன். பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டீர்கள் சேக். நல்ல அனுபவப் பகிர்வு.

  ReplyDelete
 13. மந்த்ரா படத்தை போட்டு எல்லாத்தையும் குஷிப்படுத்திட்டீங்க ...

  மந்த்ரா படம் சூப்பர்

  அருமையான விமர்சனம்

  ReplyDelete
 14. //நம்ம பிகர் //

  ஓகே..ஓகே..
  இப்போ நீங்க மந்தராவை பார்க்கல போல...

  ReplyDelete
 15. வாங்க ஹேமா ,

  வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 16. வாங்க கண்ணன் அண்ணே ,

  வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 17. வாங்க ஷ்ங்கி ,

  இது மந்த்ரா மந்திரமா ...

  வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 18. வாங்க டிவிஆர் சார் ,

  வருகைக்கும் ப்கிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 19. வாங்க டாக்டர் ,

  வருகைக்கும் ப்கிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 20. வாங்க பிரதாப் ,

  நல்ல கற்பனை உங்களுடையது

  தினத்தந்தியில வேலை பாக்குற அளவுக்கு பெரிய ஆள் இல்லீங்க ...

  ReplyDelete
 21. வாங்க நவாஸ் ,

  மந்த்ரா போல , அந்த ஆளுக்கு பெரிய மனசு

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 22. வாங்க சரவணன் ,

  வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 23. வாங்க கட்டபொம்மன் ,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 24. வாங்க ஜெட்லி

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 25. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. வருகைக்கு நன்றி
  அத்திரி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்