Pages

Thursday, January 7, 2010

டோண்டு

அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !!

இன்று எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . எந்த துறையையை எடுத்துக் கொண்டாலும் எங்கும் முன்னேற்றம் முன்னேற்றம் . அறிவியலில் அசூர வளர்ச்சி . ஆனால் நம்முடைய உடல் நலத்தை பேணுகிறோமா என்றால் இல்லை . இந்த அவசர உலகத்தில் அது ஏனோ தெரியல .

எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .

1 . இன்றைக்கு அலைபேசி இல்லையென்றால் நம்மளால் ஒன்றும் செய்ய முடியாது . அந்தளவுக்கு நம்மோடு இணைந்து விட்டது செல்போன் . ஆனால் இதுல கவனிக்க வேண்டிய விசயம் என்னனா ...

நாம் ஒருவரை அழைக்கும்போது நம்பரை டயல் செய்த உடன் ,ரிங் போயிக்கிட்டு இருக்கும் போது காதில் வைக்க கூடாது . எதிர்முனையில் இருக்கும் நபர் லைனில் வந்தவுடன் ஹலோ என்று பேச வேண்டும் .ஏன்னென்றால் நாம் அழைக்கும் போது செல்போனில் உள்ள சிக்னல் அலைவரிசை ரொம்ப ப‌வராக இருக்கும் . அதிலிருந்து வரும் கதிர்கள் நமது காதுகளை தாக்கி மூளையையும் தாக்க கூடிய ஆற்றல் உண்டு . ஆகவே செல்போன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் .


2 . பட்ஸ் , த‌மிழ்ல்ல‌ சொல்ல‌னுன்னா காது துடைக்கும் பஞ்சுட‌ன் கூடிய‌ குச்சி . இதுவும் நம் வாழ்க்கையில் ரொம்ப‌ இன்றிமையாத‌து.

சில் பேர் ப‌ட்ஸ் உப‌யோக‌ப்ப‌டுத்துகிறார்க‌ள் ; சில‌ பேர் கையில் கிடைத்த‌தையெல்லாம் எடுத்து காது குடைய‌ ஆர‌ம்பித்து விடுவார்க‌ள் .சில பேர் , ரோட்டோர‌மா விற்கும் விலைக்குறைவான‌ ம‌லிவான‌ த‌ர‌ம் குறைந்த‌ ப‌ட்ஸ் வாங்குவார்க‌ள் .

கேட்டால் , ப‌ட்ஸ் விற்ப‌வ‌ர் வ‌றுமையில் வாடுகிறார் , அத‌னால் உத‌வி செய்வோம் என்கிறார்க‌ள் .இந்த‌ மாதிரியான‌ ப‌ட்ஸ்க‌ள் ந‌ம்முடைய‌ காதுக‌ளை ப‌த‌ம் பார்த்து விடும் . இந்த‌ ப‌ட்ஸ்க‌ள் காதுக‌ளை துடைக்கும் போது ந‌ம‌து காதுக‌ளில் உள்ள‌ செவிப்ப‌றையை தாக்குகிற‌து . இத‌னால் காது செவிப்ப‌றையில் உள்ள‌ ச‌வ்வு கிழிந்து காது கேட்காது .

ஆத‌லால் ந‌ல்ல‌ த‌ர‌மான‌ க‌ம்பெனி ப‌ட்ஸ்க‌ளை உப‌யோக‌ப‌டுத்துத‌ல் ந‌ல‌ம் .

Post Comment

23 comments:

 1. இரு தகவல்கள், அழகாய், விளக்கத்துடன்.

  பயனுள்ள இடுகை நண்பா!

  பிரபாகர்.

  ReplyDelete
 2. ஆமாம் ஸ்டார்ஜன் காதுல பட்ஸ் போட்டு ஏர் ட்ரம் ஓட்டை ஆனவங்களை நான் பார்த்து இருக்கேன்

  எனவே ஜாக்கிரதையா இருக்கணும்

  ReplyDelete
 3. நல்ல பதிவு,

  ஆனா, எதுக்கு டோண்டு சாரை கூப்பிட்டீங்கன்னு தெரியலையே :)))

  ReplyDelete
 4. தலைப்பிற்கும் இடுகைக்கும் என்ன தொடர்பு ?

  ReplyDelete
 5. இந்த பதிவு எல்லாருக்குமா இல்ல டோண்டுக்கு மட்டும்தானா? குழப்புறீங்களே தல...

  என்னவோ போங்க ஆனா நல்லபதிவுதான்

  ReplyDelete
 6. நல்ல தகவல்கள் ஸ்டார்ஜன். இரண்டையும் நானும் கடைபிடிக்கிறேன்.

  ReplyDelete
 7. பயனுள்ள தகவல்கள் நண்பா. தலைப்புக்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.

  ReplyDelete
 8. Exaggerated fear.

  Buds are there to help clean only the external ear. (புறச்செவி).

  It is you who should take care not to insert the bud deep into your inner ear where, at the entrace, ear drum is present.

  Careful users of buds clean only the external ears.

  If buds can harm you, then Medical profession would have come down heavily upon its marketing.

  They did not.

  In every country, buds are being sold.

  Nevertheless, it is better to warn children, or not to clean your ears in front of them. After you are gone, they will take one and insert deep into their ears.

  There are many, many things in life, which, if you use carelessly, will harm you.

  Can we say they should not be.

  ReplyDelete
 9. என்ன நண்பர்களே !!

  தலைப்பில் குழப்பமா ...

  டி வி ராதாக்கிருஷ்ணன் சார் சொன்னது தான் ...

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி

  அக்பர்

  நசரேயன்

  பிரபாகர்

  thenammailakshmanan

  சங்கர்

  ILA(@)இளா

  கோவி.கண்ணன்

  T.V.Radhakrishnan

  SUREஷ் (பழனியிலிருந்து)

  நாஞ்சில் பிரதாப்

  S.A. நவாஸுதீன்

  செ.சரவணக்குமார்

  ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

  ReplyDelete
 11. சில‌ பேர் கையில் கிடைத்த‌தையெல்லாம் எடுத்து காது குடைய‌ ஆர‌ம்பித்து விடுவார்க‌ள் .  இன்னும் சில மருத்துவர்கள்..
  காதைக் குடைய வேண்டியதே இல்லை..
  இயல்பாகவெ காது தம்மைக் காத்துக்கொள்கிறது..
  உள்ளிருக்கும் அழுக்குகளை தாமே வெளியேற்றும் பண்புடையனவாகவே காதுகள் இருக்கின்றன என்கின்றனர்..

  ReplyDelete
 12. வருகைக்கு மிக்க நன்றி

  முனைவர்.இரா.குணசீலன்

  ReplyDelete
 13. என்னை வச்சு காமெடி ஒண்ணும் பண்ணல்லியே. அவ்வ்வ்

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 14. சே சே ... அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே ...

  வருகைக்கு நன்றி டோண்டு சார் .

  ReplyDelete
 15. //சில‌ பேர் கையில் கிடைத்த‌தையெல்லாம் எடுத்து காது குடைய‌ ஆர‌ம்பித்து விடுவார்க‌ள்//
  துளசி டீச்சரின் உறுமி மேலம் பதிவ படிங்க.

  ReplyDelete
 16. வருகைக்கு மிக்க நன்றி ILA(@)இளா

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்