Pages

Monday, March 22, 2010

உலக தண்ணீர் தினம் - கேள்விக்கு உங்கள் பதில் 4

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று உலக தண்ணீர் தினம். தண்ணீரின் மகத்துவம், சிக்கனங்களை பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். தண்ணீரை அளவாய் பயன்படுத்துவோம். தண்ணீரை வீணாக்காதீர்கள்.

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.

சென்ற வாரம் நீங்கள் ஆவலுடன் பங்குபெற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கேள்விக்கு உங்கள் பதில் பகுதியில் இதோ இந்த வார கேள்வி...

கேள்வி :

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பாடுபடுவது அரசாங்கமா... இல்லை மக்களா....

சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

17 comments:

  1. // தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பாடுபடுவது அரசாங்கமா... இல்லை மக்களா.... //

    பற்றாக்குறையை அதிகமாக்க அரசாங்கமும், அதற்கு உதவ மக்களும் பாடு படுகின்றார்கள்.

    எனக்கு தெரிஞ்ச ஒரு உதாரணம்..

    மடிப்பாக்கத்தில் ஐய்யப்பா நகர் என்று ஒரு நகர் இருக்கின்றது. மொத்தம் 15 தெருக்கள் உள்ளன. அங்கு ஒரு அழகான ஏரி இருக்கின்றது. நம் மக்கள் எல்லோரும் குப்பையை அங்குதான் கொண்டு கொட்டுவார்கள்.

    மடிப்பாக்கம் பஞ்சாயத்து குப்பை அள்ளும் வண்டிகள் அங்கு வராது. நம் மக்களும் அங்கு குப்பையைப் போடக்கூடாது என்று நினைக்க மாட்டார்கள்.

    இதற்கு மேல் கொடுமையான விஷயம்.. அங்கு இன்னும் பாதாள சாக்கடை திட்டம் வரவில்லை. ஐய்ப்பா நகர் சன்னதித் தெருவில் இருப்பவர்கள் வீட்டு சாக்கடை எல்லாம் அந்த ஏரியில். ஒரு தெரிவில் இருக்கும் ப்ளாட்டில், அவர்கள் செப்டிக் டாங்கில் இருந்து, பம்ப் போட்டு இராத்திரி 11 மணிக்கு மேல் ஏரியில் கொண்டு விடுவார்கள்.

    இப்போ சொல்லுங்க யார் அதிகமா டேமேஜ் பண்றாங்க என்று..

    ஒரு தனிப் பதிவா போடற அளவுக்கு விஷயம் இருக்கு..

    ReplyDelete
  2. இரண்டு சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  3. தண்ணீருக்காக அபயக்குரல் கொடுப்பவர்கள் மக்கள்; குரல் உரக்கும்போதெல்லாம் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பது அரசு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. யாரும் பாடுபட்டதா எனக்கு தெரியலை..

    ReplyDelete
  5. /////////மரம் வளர்ப்போம்; /////////

    இருக்கிற மரங்களாயாவது வெட்டாமல் இருந்தால் சரிதான் .

    ////////மழை பெறுவோம்.///////

    முயற்சி செய்வோம் !

    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  6. ////////இராகவன் நைஜிரியா said...
    // தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பாடுபடுவது அரசாங்கமா... இல்லை மக்களா.... //

    பற்றாக்குறையை அதிகமாக்க அரசாங்கமும், அதற்கு உதவ மக்களும் பாடு படுகின்றார்கள்.

    எனக்கு தெரிஞ்ச ஒரு உதாரணம்..

    மடிப்பாக்கத்தில் ஐய்யப்பா நகர் என்று ஒரு நகர் இருக்கின்றது. மொத்தம் 15 தெருக்கள் உள்ளன. அங்கு ஒரு அழகான ஏரி இருக்கின்றது. நம் மக்கள் எல்லோரும் குப்பையை அங்குதான் கொண்டு கொட்டுவார்கள்.

    மடிப்பாக்கம் பஞ்சாயத்து குப்பை அள்ளும் வண்டிகள் அங்கு வராது. நம் மக்களும் அங்கு குப்பையைப் போடக்கூடாது என்று நினைக்க மாட்டார்கள்.

    இதற்கு மேல் கொடுமையான விஷயம்.. அங்கு இன்னும் பாதாள சாக்கடை திட்டம் வரவில்லை. ஐய்ப்பா நகர் சன்னதித் தெருவில் இருப்பவர்கள் வீட்டு சாக்கடை எல்லாம் அந்த ஏரியில். ஒரு தெரிவில் இருக்கும் ப்ளாட்டில், அவர்கள் செப்டிக் டாங்கில் இருந்து, பம்ப் போட்டு இராத்திரி 11 மணிக்கு மேல் ஏரியில் கொண்டு விடுவார்கள்.

    இப்போ சொல்லுங்க யார் அதிகமா டேமேஜ் பண்றாங்க என்று..

    ஒரு தனிப் பதிவா போடற அளவுக்கு விஷயம் இருக்கு..

    March 22, 2010 10:30 PM /////////////

    ஆஹா நண்பரே உங்களுக்கு இவளவுதான் தெரிந்து இருக்கிறது . இன்னும் அத்திப்பட்டி போல் உலக வரைப்படத்திலே வராத எத்தனையோ கிராமம் இருக்கு .

    //////இதற்கு மேல் கொடுமையான விஷயம்.. அங்கு இன்னும் பாதாள சாக்கடை திட்டம் வரவில்லை.//////////

    நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் இன்னும் பலபேர் அந்த பாதாளத்தில்தான் வாழ்கிறார்கள் யார் கவனிப்பது இதை எல்லாம் ????????

    ReplyDelete
  7. நல்ல கேள்வி அரசாங்கம் இன்னும் போதுமான
    அளவு வழங்கவேண்டும் மற்றும் மக்களும் பொறுப்பு உணர்ந்து செயல்படணும்

    ReplyDelete
  8. சமூகம் என்றாலே மக்களும் அரசும் சேர்ந்ததுதான்.

    சுற்று சூழல் மாசுபடாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சட்டதிட்டங்கள் வகுத்து, அதை கண்காணித்து, வழி நடத்துவது ஒரு அரசின் கடமை.

    இதில் அரசு கடமை தவறும் போது மக்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். கோன் எவ்வழி குடி அவ்வழி.

    ReplyDelete
  9. மக்கள்தான் தண்ணீர் பற்றாக்குறைய தீர்க்க முயலவேண்டும். ஒரு அரசாங்கம் மக்களுக்கு நலத்திட்டங்கள்தான் அறிவிக்க முடியும். ஆனால் அதனை முறையாக பயன்படுத்துதல் மக்கள் கையில் இருக்கிறது. மக்கள் தண்ணீரை வீணாக்காமல் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  10. இரண்டுபேரும் உழைக்க வேண்டும்

    ReplyDelete
  11. பற்றாக்குறையை அதிகமாக்க அரசாங்கமும், அதற்கு உதவ மக்களும் பாடு படுகின்றார்கள்.

    ReplyDelete
  12. ஸ்டார்ஜான்

    ########
    கலைசாரலில் மலீக்காக்கா அவார்ட் கொடுத்துள்ளார்கள் வாங்கி கொள்ளவும்

    http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html

    ##########

    ReplyDelete
  13. வருகை தந்து வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  14. அருமையான கருத்துக்கள்

    நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன்; உங்கள் ஆதரவு தேவை.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்