Pages

Monday, May 4, 2009

என்னை தெரியுமா

மனிதன் என்பவன் சதையும் உயிரும் சேர்ந்த ஒரு எந்திரம் . மனிதனிடம் பல விசயங்கள் உள்ளன . ஒவ்வொரு விசயத்தையும் நாம பார்த்தால் வியப்பாக இருக்கும் . மூளையை எடுத்துகிட்டால் நிறைய விஷயம் உண்டு . ஒரு வேலையை ஒழுங்காக செய்ய தெரியாவிட்டால் " ஏய் மூளை இருக்கா உனக்கு!" என்று தான் திட்டுவோம் . மூளை இல்லைஎன்றால் ஒன்னுமே இல்லை .

ஒருத்தர்கிட்ட இரண்டு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னால் ஒன்னை சாப்பிட்டுவிட்டு ஒன்றை தந்து விட்டு "அதான் இது" என்று சொல்லக்கூடிய கில்லாடிகள் உண்டு . சிலபேர் ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள் .

சிலபேருக்கு எதுவானாலும் எரிச்சல் வரும் . சிலபேருக்கு முன் கோபம் நிறைய இருக்கும் ,ஆனால் பின்னால வருத்தப்படுவார்கள் . சிலபேர் ஒன்னும் இல்லாத விஷயத்தை பெருசாக்கிருவாங்க . சிலபேர் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு வீண்விவாதம் செய்வாங்க .

சிலபேர் ரொம்ப அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டு போவாங்க . சிலபேர் ரொம்ப அமைதியாக பேசுவாங்க . சிலபேர் ரொம்ப சத்தமாக பேசுவாங்க .

சிலபேர் தன்னோடு உள்ளவர்களுக்கு ரொம்ப மதிப்பு கொடுப்பாங்க . சிலபேருக்கு தான் என்ற எண்ணம் நிறைய இருக்கும் . அடுத்தவனை எப்படி கவிழ்க்கலாம் என்பதை பற்றி நிறைய யோசிப்பாங்க .

சிலபேருக்கு உடம்பு ரொம்ப வலிமையாக இருக்கும் . புள் தடுக்கி செத்து போவாங்க . சிலபேர் சாதாரணமாக ரொம்ப நாள் இருப்பாங்க . ஒருவர் ரோட்டில் அடிபட்டு இருந்தாலும் பார்த்துவிட்டு பேசாம போகக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது .

இன்னும் நிறையபேரை நாம் பார்த்து இருப்போம் . இதல்லாம் மனித இயல்புதான் . அவங்களை திருத்தனும் என்றால் முடியாத ஒன்று .

அவங்களா திருந்தனும் ......

Post Comment

No comments:

Post a Comment

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்