அல்லது ரொம்ப திகில் அனுபவமா கூட இருக்கலாம்.
அப்படி ஒரு திகில் அனுபவம் எனக்கு நடந்திருக்கு. அது என்னனா....
நான் அப்போது ஒரு மோட்டார் வாகன கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் . நான் அடிக்கடி வெளியூர் செல்வதுண்டு . நான் என்னுடைய தலைமை அலுவலகத்க்கு மோட்டார் சைக்கிளில் செல்வதுண்டு .
நான் முதலில் ஒரே பாதையில் செல்வதுண்டு . பின்னர் அதே பாதையில் தான் வருவேன், போவேன் . அது குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும் . அந்த பாதை கிராமங்கள் வழியாகத்தான் செல்லும் .
எனக்கு தெரிந்த ஒருவர் "இன்னொரு வழி உள்ளது , அதில் சென்றால் பயண நேரம் குறைவாக வரும்" என்று சொன்னார் .
ஒருநாள் போகும்போது நான் வழக்கமான வழியில் சென்றேன் . வரும்போது
அவர் சொன்ன வழியில் செல்வோமே என்று தோன்றியது . நான் வரும்போது மணி மாலை ஐந்தை தாண்டிவிட்டது . கிராமங்களின் அழகாய்பார்த்து கொண்டே வந்தேன் . பாதி வழியை தாண்டி வந்து கொண்டிருந்தேன் .
இருட்ட ஆரம்பித்திருந்தது . திடீரென ஒருவர் கையை காட்டி நிறுத்தினார் .
நான் வண்டியை நிறுத்தி என்ன என்று கேட்டேன் . அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம் . அவர் "தம்பி இந்த ஊரில் அவ்வளவாக பஸ் வசதி கிடையாது , நான் பக்கத்து ஊருக்கு போயி, அங்கிருந்து வேற ஊருக்கு மினி பஸ் பிடித்து போகனும் . தயவுசெய்து என்னை ஏற்றி கொண்டு போங்க "என்று கேட்டார் .
அது நான் போகும் வழி தான் . எனக்கு பயம் , ஏன்னா அது கிராமம், சுற்றி வெறும் காடுதான் . நான் அவரிடம் " இல்லயா நான் முன்பின் தெரியாத ஆளை ஏற்றினால் எனக்கு ஆபத்து ஏதும் வரலாம் , அதனால் நான் ஏத்தமட்டேன் " என்று சொன்னேன் .அவர் தம்பி எப்படியாவது ஏத்தி கொண்டு போங்க என்று கெஞ்சுகிறார் .
என்ன செய்வது தமிழனுக்கு தான் இலகிய மனசயிற்றே !
சரியென்று அவரையும் ஏற்றி வந்துகொண்டிருந்தேன் . நன்றாக இருட்டி விட்டது . அவர் சொன்ன ஊர் வந்தது . அவரை இறங்கசொன்னேன் .
உடனே அவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு "அய்யய்யோ தம்பி நான் போகவேண்டிய பஸ் போயிவிட்டதே ! என்ன செய்ய" என்று கேட்டார் . நானும் என்ன செய்ய என்று கேட்டேன் . "ஆமா நீங்க எங்க போறீங்க" என்று அவர் கேட்டார் .நானும் போக வேண்டிய ஊரை சொன்னேன் ."அட அங்கதான் நானும் போறேன்" என்றார் அவர் . சரி வேறென்ன செய்ய என்று அவரையும் ஏத்திகொண்டு வந்தேன் .
பிறகு கொஞ்ச தூரம்போன உடன் எனக்கு போக வேண்டிய பாதை மறந்துவிட்டது .எனக்கு ஒரே பயம் . . இருட்டாவேற இருக்கு ,பாதையும் தெரியவில்லை . ஆனால் நான் அவரிடம் அதை காட்டிக்கொள்ள வில்லை .
நான் அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன் . அவர் எங்க ஊரில் உள்ள கோவில்கொடை விழாவுக்கு போகிறாராம் . நீங்க எனக்கு ரொம்ப உதவி செய்றிங்க ரொம்ப நன்றி என்றார் .
"நான் உங்க நிலைமையில் இருந்தால் வண்டியில் தெரியாத ஆளை ஏத்தி இருக்கமாட்டேன்" என்றார் . எனக்கு பாதை மறந்ததால் பாதை மாறி சென்றேன் .
உடனே அவர் தம்பி இப்படிபோகனும் என்று வழி கட்டினார் . நானும் வழி தெரிந்தமாறியே காட்டிக்கொண்டேன் . அவர் சொன்ன வழியில் சென்றேன் . ஒருவழியாக ஊர் வந்துசேர்ந்தேன் .
அவர் என் கையை பிடித்து ரொம்ப நன்றி என்றார் . நானும் அவருக்கு மனதில் நன்றி சொன்னேன் .
பின் வீட்டுக்கு வந்து இந்த சம்பவத்தை நினைத்துபார்த்தேன் . அந்த பெரியவர் மட்டும் வரவில்லைஎன்றால் என் நிலைமை என்னாயிருக்கும் ???....
மனம் திக் திக் ........
starjan
ReplyDeleteபடிக்கிற எனக்கே பக்குன்னு இருக்கு
அனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும்.
ஒரு திகில் கதை வாசித்த உணர்வு .
வருகைக்கு நன்றி
ReplyDeleteஎன்ன கடையில் கூட்டத்தை காணோமே!
கதை நல்லாயிருக்கு தல...
ReplyDeleteநல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்..,
பின் தொடர்பவர் பட்டியல் இணையுங்கள் தல..,
ReplyDeleteஓட்டுப் போட்டாச்சு தல
ReplyDeletesoory
ReplyDeleteசுரேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி !
இது நடந்த சம்பவம்
கதை அல்ல !
நன்றி சுரேஷ்
ReplyDeleteபின்தொடர்பவர்கள் பட்டியல் இணைத்து விட்டேன்
தகவலுக்கு நன்றி
என்ன அடுத்த பதிவை காணோமே !!
ReplyDeleteசீக்கிரம் !
ReplyDeleteஉங்கள் ஓட்டை போடுங்க
அக்பர் ,
ReplyDeleteவருகைக்கு நன்றீ
விரைவில் .....