என்னை பெற்றெடுத்து அன்போடு வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவுக்கு இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன் .
அம்மா
இந்த வார்த்தையை கொஞ்சம் உற்று பாருங்கள் . இதுவெறும் வார்த்தை அல்ல
ஒரு உயிரின் தியாகம் , மத்தவங்களுக்காக தன்னை அர்ப்பணம் செய்த ஒரு பெண்ணின் வாழ்க்கை .
ஒரு பெண் வளர்ந்து பெரியவளாகி தன் கணவனை மணந்து அம்மா என்ற அந்தஸ்தை அடைகிறாள் .
தன் குழந்தை தன்னை அம்மா அழைத்தவுடன் அவள் அடைகின்ற சந்தோசம் இருக்கிறதே ! அப்பப்ப என்ன ஒரு ஆனந்தம் !!!!. அதை சொல்ல வார்த்தையே இல்ல இல்ல இல்ல .....
தான் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தாலும் தன் குழந்தை முகம் பார்த்து பேசும் தாய்க்கு நிகர் உண்டோ ?...
ஒரு குழந்தைக்கு தெரிகின்ற முதல் முகம் அம்மா . முதன்முதலில் மத்தவங்களை அறிமுகம் செய்து வைக்கிற முதல் முகமும் அம்மாதான் !!.
திரைப்படத்திலும் அம்மாவை மையபடுத்திதான் கதைகளை திரைப்படம் எடுத்து வெற்றியும் பெறுகின்றனர் .
தன் குழந்தையை சீரும் சிறப்பாக வளர்த்து , தன் குழந்தைக்கு நேர் வழியை காட்டும் அம்மா அம்மாதான் !!.
தன் குழந்தைக்கு ஏற்ற வாழ்க்கை துணையை அமைத்து கொடுக்கிறதும், அம்மா அம்மாதான் !!!..
அதை குழந்தை கடேசி காலத்தில் தன்னை உதாசினம் செய்தலும் தன் குழந்தையை எண்ணி பேர் உவகை அடையும் முதல் உயிரும் அம்மா அம்மாதான் !!!.
அம்மா இங்கே வா வா !!!.....
"தன் குழந்தை தன்னை அம்மா அழைத்தவுடன் அவள் அடைகின்ற சந்தோசம் இருக்கிறதே ! அப்பப்ப என்ன ஒரு ஆனந்தம் !!!!. "
ReplyDeleteஅருமை அருமை .
கணவன் , மனைவி , அக்கா , தங்கை ,அண்ணன் , தம்பி இப்படி அனைத்து உறவுகளிலும் எதிர்பார்ப்பு இருக்கும் .
அம்மா நம்மை வளர்க்கும் போது எதையும் எதிர்பார்ப்பதில்லை .
அன்னையர் நன்னாளுக்கு பெருமை சேர்க்கும் உங்கள் கருத்துகள் அருமை !
ReplyDeleteஅருமையான கருத்துக்கள் தல
ReplyDeleteகோவி. கண்ணன் , சுரேஷ் , அக்பர்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி
நச்சென்று உள்ளது.
ReplyDeleteபடிக்கும் போது அம்மா வின் ஞாபகம் வருது. கண் கலங்குது. இன்றைய அவசர வாழ்க்கையில் எத்தனைப்பேர் அம்மாவின் அன்பையும் தியாகத்தையும் நினைத்துப்பார்க்கிறோம்? சிங்கப்பூர் முத்தையன் மதிவொளி
ReplyDeleteவருகைக்கு நன்றி முத்தையன்
ReplyDelete