சிந்து சமவெளி நாகரீகத்தைப் பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...
(மொகஞ்சதாராவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைய கால கட்டடப்பகுதி)
மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள்.
(கராச்சி , தேசிய தொல்பொருட்காட்சி நிலையத்தில் கி.மு.2500 ஆண்டு பழமையான சிலை)
மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதிஇது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
வரலாறு
மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.
ஹரப்பா
அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன.
கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.
மெஹெர்கர்
மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன.
இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.
லோத்தல்
(இந்திய தொல்லியல் ஆய்வத்தின் கருத்துப்படி லோத்தலின் பண்டைய காலத்தின் தோற்றம்)
லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 2400 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் நாள் தொடக்கம் 1960 ஆம் ஆண்டு மே 19 வரை அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.
மிக அருமையாக வரலாற்றை சொல்லிய விதம் அருமை.
ReplyDeleteஅந்த கால கட்டத்தின் நாகரீகத்தை அறிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.
இவ்வளவு அருமையாக தகவல் தொகுத்து ஒரு கட்டுரை வெளி இட்டிருக்கும் நீங்கள் இவ்வளவு நாள் அடக்கி வாசித்தீர்களா ?
ReplyDeleteபாராட்டுகள் !
மிகப் பெரிய கடுமையான வேலை செய்து செய்து உள்ளீர்கள்
ReplyDeleteஎன்னங்க இது பாட்ஷா மாதிறி...
ReplyDeleteஉங்க உண்மையான முகம் இப்போ தான் தெரியுது..
கலக்குங்க..
ஸ்டார்ஜன் .. ஸ்டார்ஜன் ..ஸ்டார்ஜன்....(இது பின்னனி கோரஸ்ங்க...)
//கலக்குங்க..
ReplyDeleteஸ்டார்ஜன் .. ஸ்டார்ஜன் ..ஸ்டார்ஜன்....(இது பின்னனி கோரஸ்ங்க...)//
இதை நான் ரிப்பீட்டுகிறேன்
//என்னங்க இது பாட்ஷா மாதிறி...
உங்க உண்மையான முகம் இப்போ தான் தெரியுது.//
அவருதான் உண்மையான முகம் பதிவில் பக்கத்தில் போட்டு இருக்காரே
நல்லதொரு இடுகை, பகிர்வுக்கு நன்றி நண்பா...
ReplyDeleteவாங்க அகபர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க கோவி.கண்ணன்
ReplyDeleteபாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
வாங்க சுரேஷ்
ReplyDeleteபாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
பழங்கால நகரத்தை பார்ப்பது என்பது எண்ணிலடங்கா அதிசயம் மற்றும் மகிழ்ச்சி
ReplyDeleteஅழகான அலசல்...
ஆகா...கலக்கல்..கொஞ்சம் கொஞ்சமாக..ஸ்டார்ஜன் தன் திறமையை காட்டிவருகிறார்..இது எஸ்..நோ..அல்ல.
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாங்க ராஜ்குமார்
ReplyDeleteபாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
பாட்ஷா ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க
அந்தளவுக்கு ஒர்த் இல்லீங்க
வாங்க கோவி.கண்ணன்
ReplyDeleteஅந்தளவுக்கு ஒர்த் இல்லீங்க
வாங்க சந்ரு
ReplyDeleteவருகைக்கு நன்றி
நல்லா இருக்கு கடுமையான உழைப்பு பதிவில் இருக்கு
ReplyDeleteவாங்க அபு அஃப்ஸர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க டி வி ஆர் சார்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க சுரேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி
அறிந்து கொள்ள வேண்டிய பதிவொன்றை அழகாக பதிந்திருந்தீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்......
வாங்க சஃப்ராஸ் அபுபக்கர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமையான அரிய செய்திகளை அறிய கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteவாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி