Pages

Thursday, October 14, 2010

சிவா - (சவால் சிறுகதை)

"அம்மா சீக்கிரம் வாம்மா., நா கிளம்பணும், நேரமாச்சி" என்று அம்மா லட்சுமியை சிவா அழைத்தான். "இருடா, செத்த நேரம் பொறு, ராகு காலம் முடியட்டும். அப்புறமா கிளம்புப்பா" என்றாள். "என்னம்மா இதெல்லாம் பாத்துக்கிட்டு., இன்னும் அந்த காலத்துலேயே இருக்கீங்களே.. சே" என்று சிவா சொன்னான்.

"போடா உனக்கெங்க இதெல்லாம் தெரியப்போவுது.. சரி சரி.. பாத்து பத்திரமா போயிட்டு வா. புது இடம் புதுபுது ஆளுங்க; எல்லாத்தையும் அனுசரிச்சி நடந்துக்கணும். யார்க்கிட்டயும் கோவப்படக்கூடாது. உடம்ப பாத்துக்கோ.. எப்போதும் கவனமா இருக்கணும். உன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணனும். வீட்டுக்கடனையெல்லாம் அடைக்கணும். நாங்கெல்லாம் உன்னநம்பித்தான் இருக்கிறோம். சரிப்பா நீ போயிட்டுவா, அடிக்கடி போன் பண்ணிக்கோ சரியா போயிட்டுவா" என்று லட்சுமி சொன்னதை சிவா கேட்டு தலையாட்டினான்.

"அம்மா சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டியா.. நல்லபடியா போயிட்டுவாப்பா.." என்று அப்பா மூர்த்தி சொன்னார்." போயிட்டு வாரேன் ப்ரியா, காயத்ரி.. அப்பா அம்மா சொல்படி கேட்டு நல்லாருக்கணும். அப்பா அம்மாவ கவனமா பாத்துக்கோங்க" என்று சொல்லியவாறே தங்கைகளிடம் விடை பெற்றான் சிவா.

சிவா ஒரு வேலையில்லா பட்டதாரி.. எம்எஸ்சி கம்யூட்டர் சயன்ஸ் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறான்.

சென்னை நகரம் அப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருந்தது. என்ன இனிமையான காலைப்பொழுது. அந்த இனிமையை அனுபவித்தபடி பஸ்ஸிலிருந்து இறங்கினான்.

************

"ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்.." போன் அலறிக்கொண்டிருந்தது. யாரு இந்த நேரத்துல.. சே காலைத்தூக்கம் போயிருச்சே.. - கணேஷ் பெட்சீட்டை உதறியபடி எழுந்தான்.

"ஹலோ யாரு.. இந்த நேரத்துல போன் பண்றீங்க.." என்றவனுக்கு "டேய் நாந்தான்டா பரந்தாமன் பேசுறேன்.. என்னடா இன்னும் தூக்கம்.. சீக்கிரம் கிளம்பிவாடா.. இன்னக்கி நியூ அப்பாயிண்ட்மென்ட்ஸ் எல்லாம் இருக்கு.. நா வேற போர்டு மீட்டிங்குக்கு போகணும்.. நிறைய வேல இருக்கு.. சீக்கிரம் வரல.. தேடி வந்து உதப்பேன்.. " என்று பரந்தாமன் சொன்னார்.

"பாஸ்.. இதோ வந்துடுறேன் பாஸ்.. இன்னும் அரைமணி நேரத்தில அங்க இருப்பேன்" என்று சொல்லியபடி அரக்க பரக்க கிளம்பினான். கணேஷ் பரந்தாமனுக்கு உதவியாளராக வேலை செய்கிறான். மாதம் பதினைந்து ஆயிரம் சம்பளம். மனைவி, ஒரே செல்ல மகன் என்று அளவான குடும்பம்.

"என்னங்க என்னங்க காபி சாப்பிடுங்களேன்.. " - பரந்தாமனின் மனைவி காமாட்சி.

"இன்னக்கி நிறைய வேலைகள்.. நினைச்சி பார்க்கும்போது டென்சனா இருக்கு.. இந்த கணேஷ் வருவதற்கு லேட்டாக்கிட கூடாதே., ஆமா காமினி என்ன இன்னும் எழுந்திருக்கலியா.. " - பரந்தாமன்.

"பாவம்ங்க கணேஷ்.. நல்ல பையன்., கல்யாணமாகி 2 வருசம்தான் ஆகுது. ஆனாலும் நீங்க இப்படி பண்ணக்கூடாது. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளையுறான். காமினி எழுந்திருக்க இன்னும் ஒரு மணி நேரமாகும்." - காமாட்சி.

"உம்பொண்ணுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கிறே.. பாத்துக்கோ., பின்னாடி வருத்தப்படுவே.." என்று சொல்லியபடியே ரூமுக்குள் சென்றார் பரந்தாமன்.

"ஹலோ யார் பேசுறது.. "
"அய்யா நா மாரிமுத்து பேசுறேன். "
"என்னப்பா விசயம்.."

"அய்யா.. நாம அன்னக்கி ஒரு இடத்தை பார்த்தோமில்ல.. அந்த இடத்துக்கு சொந்தக்காரன் மசியமாட்டேங்குறான். நானும் பேசிப் பாத்துட்டேன். நம்ம வழிக்கி வரமாட்டேங்குறான். என்ன செய்யலாம் அய்யா.. "

"டேய் என்னடா இது சின்னப்புள்ளத்தனமா சொல்லிக்கிட்டு இருக்கே.. வழிக்கு வரலைன்னா நம்ம ஆள்களோட போயி ரெண்டு தட்டு தட்டிரு.. அப்புறம்பாரு தன்னால வழிக்கு வந்துருவான். ‍‍"

************

சே.. வருகிற பஸ்லாம் கூட்டமாயிருக்கே.. சரி சரி இந்த பஸ்ல ஏறிருவோம். அப்போதான் கம்பெனி இன்டர்வியூக்கு சீக்கிரம் போகமுடியும் என்று நினைத்தபடியே சிவா கூட்டமாக இருந்த 12பி பஸ்ஸில் அடித்துபிடித்து ஏறினான்.

ஏம்ப்பா படியில நிக்கிறவங்கெல்லாம் உள்ள ஏறிவாங்க.. டிக்கெட் டிக்கெட் கேட்டு வாங்குங்க என்று கண்டக்டர் குரல் கொடுத்து கொண்டிருந்தார்.

சிவா படியிலிருந்து மேலேறினான். கால் வைக்க இடமில்லை. ஆட்கள் ஒருவருக்கொருவர் ஒட்டிக்கொண்டு மேலே உள்ள கம்பியை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தனர். அந்தளவுக்கு நெருக்கடி.

தேனாம்பேட்டை நாலாவது சிக்னல் எது என்று சிவா கண்டக்டரிடம் கேட்டுக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினான்.

சிறிது தூர நடைபயணத்தில் உள்ள அந்த பெரிய பில்டிங் உள்ளே, பரந்தாமன் எக்ஸ்போர்ட் அன்ட் இம்போர்ட் கம்பெனி சிவாவை வரவேற்றது.

"ஐ யம் சிவா, ப்ரம் திருநெல்வேலி. இன்டர்வியூக்காக வந்திருக்கிறேன்" என்று அங்குள்ள ரிசப்சனிஸ்ட்டிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"பிளீஸ் டேக் யுவர் சீட்., கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இப்ப கூப்பிடுவாங்க" என்றாள் ரிசப்சனிஸ்ட் புன்னகை மாறாமல். அவள் போனில் பேசும் அழகை ரசித்தபடியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான் சிவா.

இன்டர்வியூவில் சிவாவின் நேர்த்தியான பதில்களும் அவனுடைய நடவடிக்கைகளும் பரந்தாமனுக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்தது.

"சிவா., உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. நீங்க நாளைக்கே வேலையில சேந்திருங்க.. அப்புறம் தங்குவதற்கு வசதிகள், வேலை எப்படி என்று எல்லாம் பிஏ கணேஷ்க்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. எதுவும் சந்தேகமென்றால் கேட்கலாம்."

"ரொம்ப தேங்க்ஸ் சார்.." என்றவனுக்கு "தேங்க்ஸ் எல்லாம் எதுக்குப்பா., வேலையில சின்சியரா இருங்க, அது போதும்.. ஹா ஹா ஹா" என்று சிரித்தார் பரந்தாமன்.

***********

ஹைய்யா, வேலை கிடைச்சிருச்சி.. இனி கவலையில்லை என்று மனதில் மகிழ்ச்சி பொங்க வந்த சிவா எதிரே வந்த ஆளை கவனிக்காமல் மோதிவிட்டான். இருவரும் கீழே விழுந்தனர். சுதாரித்து எழுந்த சிவா எதிரே நிற்பவளை பார்த்து சொக்கிப்போய் மதிமயங்கி நின்றான்.

"ஏய் மிஸ்டர் கண்ணு தெரியல..............."என்று காமினி சிவாவை பார்த்து திட்டிக்கொண்டே இருந்தாள். எதுவுமே காதில் வாங்காதவன்போல அவளையே பார்த்தபடியே நின்றிருந்த சிவாவின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளை கேட்டு பிரமித்து நின்றாள் காமினி.

"ஐ லவ் யூ... ஐ லவ் யூ.."

காமினி சிவாவை முறைத்துப் பார்த்தபடியே சென்றதும் சுயநினைவுக்கு வந்தவனாக அவள் போகும் திசையை பார்த்த சிவாவுக்கு தூக்கிவாரி போட்டது.

ஆஹா.. அவள் எம்டி ரூமுக்குள்ள போறாளே.. வசமா மாட்டிக்கிட்டோமே.. என்று நினைத்தபடியே சென்றவன் எதிரில் கணேஷ் நின்று கொண்டிருந்தான். "என்ன பாஸ் பார்த்தஉடனே லவ்வா.. அதுவும் எம்டி பொண்ணுக்கிட்டே லவ்வ சொல்லிருக்கீங்க.. ரொம்ப தைரியம்தான்., ம்ம்ம்.. நடக்கட்டும்.. பார்த்து நடந்துக்கோங்க.. பெரிய இடம்......." என்று கணேஷ் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் சிவா.

ஒரு பத்துநிமிடம் கழித்து எம்டி ரூமிலிருந்து காமினி வெளிப்பட்டாள். கோபமாய் சிவா அருகினில் வந்தாள்.

"ஹலோ உங்க பேரு சிவாவா.. உங்கள பத்தி அப்பா சொன்னாரு. வேலைக்கி சேர்ந்த அன்னக்கே தகிடுதத்தம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா.. இருங்க அப்பாட்ட சொல்லிக்கொடுக்கிறேன்." என்றாள் சிவாவிடம் கோபமுடன்.

"சாரி, நீங்க எம்டி பொண்ணுன்னு தெரியாது. உங்கள முதன்முதல்ல பார்த்ததுமே எனக்குள்ள ஒரு மாற்றம். எதோ பத்துவருசம் பழகினமாதிரி ஒரு பிலீங். உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. என் மனசுல நீங்கதான் நிறைஞ்சிருக்கீங்க.. காதல் என்பது ஜாதி, மதம், அந்தஸ்து பாக்காம வரக்கூடியது. உங்கள முதல்ல பாக்கும்போதே காதல் வந்திருச்சி.. என்னோட மனசுல இருந்ததை சொல்லிட்டேன். என்னை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம்" என்று சிவா காமினியிடம் சொன்னான்.

அதற்கு விடையாய் காமினியிடமிருந்து புன்முறுவல் கிடைத்ததை அறிந்த சிவா சந்தோசத்தில் துள்ளினான். "சிவா, ஒரு நிமிசம்!!.. நானும் உங்க நிலமையில்தான் இருக்கிறேன்" என்று காமினி சொன்னதும் இருவர் மனதும் ரெக்கைக் கட்டி பறந்தது.

************

"டேய் மாரி.. நம்ம ஆளுகளையெல்லாம் எங்கடா.. நாளைக்கி ஒரு பார்ட்டி சிங்கப்பூர்ல இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திக்கிட்டு வாரான். அவனை எப்படியாவது மடக்கி அந்த தங்கத்தை அடிச்சிக்கிட்டு வந்துருங்க.. ஒரு நாலுபேர் மட்டும் போங்க.. ராயப்பேட்டைல சங்கர் ரொம்ப ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். அவன நேரம் பாத்து தூக்கிருங்க.. எந்த மிஸ்டேக்கும் இல்லாம பாத்துக்கோங்க நம்ம பேர் ரிப்பேர் ஆகிடக்கூடாது. காரியம் கச்சிதமாக இருக்கணும். எதாவது மிஸ் ஆச்சி.. தொலைச்சிடுவேன் தொலைச்சி.." என்றார் பரந்தாமன்.

"அதெல்லாம் தப்புஎதும் நடக்காம பாத்துக்கிறோம்.. அய்யா அதுவந்து... அதுவந்து..." என்று மாரிமுத்து தலையை சொறிந்தபடியே சொன்னான்.

"என்னடா அதுவந்து இதுவந்துன்னு சொல்லிக்கிட்டு.. பணம்தானே, நீ இதெல்லாம் செஞ்சி முடிச்சிட்டுவா, உனக்கு நிறைய தாரேன்" என்றார் பரந்தாமன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்கய்யா.. நா சொன்னா கோவிக்ககூடாது......" என்று மாரிமுத்து இழுத்தான்.

"என்னன்னு சொல்லித் தொலையேன்டா.. உசிர வாங்குதே" - பரந்தாமன்.

"அதுவந்து, நம்ம காமினியும் புதுசா வேலைக்கு வந்தானே சிவா., அவனும் லவ் பண்றாங்க‌ய்யா" - மாரிமுத்து

இதைகேட்ட பரந்தாமனுக்கு கண்கள் சிவந்தது.

"என்ன தைரியம் அவனுக்கு.. எங்கிட்ட வேலை பாத்துக்கிட்டு.. எம்பொண்ணயே லவ் பண்றானாக்கும். சரி அவன் கதையை நா பாத்துக்கிறேன்" - பரந்தாமன்.

"சரி அய்யா நா போயிட்டு வாரேன்" என்றபடி மாரிமுத்து சென்றான்.

சே என்ன செய்யலாம் இவனை.. இப்படி பண்ணிட்டானே., எவ்வளவு நம்பிக்கை அவன்மேல வச்சிருந்தேன்.

"ஹலோ யாரு கஜாவா.. எம்பொண்ணு பின்னாடி சிவான்னு ஒருத்தன் சுத்திக்கிட்டு இருக்கான். அவன நீ ரெண்டு தட்டு தட்டிரு" என்றார் பரந்தாமன் போனில் யாரையோ அழைத்து.

"சரிங்கய்யா.. நா பாத்துக்கிறேன்" என்றது மறுமுனையில் ஒரு குரல்.

மாரிமுத்துவும் பரந்தாமனும் பேசியதை ஒரு உருவம் திரைக்கு பின்னாலிருந்து கேட்டு அதிர்ச்சியானது.

*************

"சிவா நீ இன்னக்கி சாயங்காலம் பெசன்ட்நகர் பீச்சு பக்கத்துல இருக்கிற பார்க்கு வந்துடுவியா.. உன்ன பாக்கணும்போல இருக்கு.. உங்கிட்ட நிறைய பேசவேண்டியிருக்கிறது". என்றாள் காமினி சிவாவிடம்.

"வழக்கமா வர்ற இடம்தானே வந்துருவேன் காமினி" என்றான் சிவா.


"டேய் அதோ பாருங்கடா அதோ போறானே அவன்தான்.. தூக்கிரு" என்று கஜா சொன்னதும் ட்ரைவர் சீட்டில் இருந்தவன் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினான்.

"சிவா... சிவா.. தள்ளிப்போ.. கார் வேகமா வருகிறது.." என்று சிவா வரும் திசைக்கு எதிர் ரோட்டிலிருந்து காமினி கத்தியபடியே ஓடிவந்தாள்.

சிவா சுதாரிப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி எறியப்பட்டனர். ஏற்றிய கார் மின்னல் வேகத்தில் காணாமல் போனது.

"நா எங்கிருக்கேன் எங்கிருக்கேன்" என்று சுயநினைவுக்கு வந்தவளாய் கண்விழித்தாள் காமினி.

"மேடம் உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி இப்போ ராயபுரம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல இருக்கீங்க.. ஸ்ரைன் பண்ணிக்காதீங்க.. ஃபுல் ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லியபடி நர்ஸ் சென்றாள்.

"அய்யோ சிவாவுக்கு என்னாச்சின்னு தெரியலியே.. என்னால்தானே இப்படி ஆச்சி.. இப்போ என்ன செய்வேன். சிவா நீ எங்கிருக்க.." என்று காமினி கத்தியதும் நர்ஸும் டாக்டரும் ஓடிவந்தனர்.

"ஹலோ.. ஸ்ரைன் பண்ணாதீங்க., காம் டவுன். தூங்குங்க" என்று நர்ஸ் காமினியை சமாதானப்படுத்தினாள்.

"அதெல்லாம் முடியாது.. என் சிவாவுக்கு என்னாச்சின்னு தெரியல, நா போகணும்.. என்ன விடுங்க டாக்டர்.." என்று கூச்சலிட்டாள்.

டாக்டர் நர்ஸிடம் "இவங்களை பாத்துக்கோங்க" என்றபடி பக்கத்து வார்டுக்கு சென்றார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

**************

"அய்யா.. ஒரு சின்ன தப்பு நடந்துப்போச்சி.. நா சிவாவை தூக்கும்போது காமினி குறுக்கே வந்து விழுந்துட்டாள். அவளை லட்சுமி ஆஸ்பிட்டலில் சேத்திருக்காங்க.." என்றான்.

"அட சூப்பரா சொன்னவேலையை செஞ்சிருக்கியே.. வெல்டன். இந்தமாதிரி அடியாள் இருக்கிறவரைக்கும் என்னை யாராலும் அசைச்சுக்கமுடியாது ஹா ஹா ஹா ஹா.." என்று பலமாக சிரித்தார் பரந்தாமன்.

"அய்யா என்ன மன்னிச்சிருங்கய்யா., நா அடுத்த தடவ ஒழுங்கா செய்வேன். என்ன விட்டுருங்கய்யா" என்று கஜா பரந்தாமன் காலில் விழுந்து கதறினான்.

"தடிமாட்டு பசங்களா.. நீங்கெல்லாம் சோத்தை திங்கிறதுக்குதான் லாயக்கு.. சொன்னவேலையை அரைகுறையா செய்வீங்கன்னு தெரிஞ்சிதான் நானே சிவாவை அடிச்சி இங்க இழுத்துட்டு வந்துட்டேன். என் துப்பாக்கிக்கு வேலை கொடுத்திட்டீங்களேடா" என்று பரந்தாமன் சொல்லியபடி துப்பாக்கியை எடுத்து கஜாவையும் அவன் கூட்டாளியையும் சுட்டார்.

"டேய் மாரிமுத்து.. இத கிளீன் பண்ணிருடா.." என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது காமினி அங்கு வந்து சேர்ந்தாள்.

காமினியை அங்கே பார்த்ததும் "அய்யோ காமினி.. உனக்கு என்னாச்சி.. யாரோ கார் ஏத்திட்டாங்க என்றதும் பதறிவிட்டேன். ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்குள்ள நீயே...." என்று பரந்தாமன் சொல்லி முடிக்குமுன்னே காமினி கையை காட்டி நிறுத்தினாள்.

"என்ன வேஷம் கலைஞ்சிருச்சேன்னு பதறுகிறீங்களா அப்பா.. சே.. அந்த அப்பா என்ற வார்த்தையை சொல்றதுக்கே கேவலமா இருக்கு.. போதும் உங்க போலி பாசமெல்லாம்.. சொந்த மகளையே கார் ஏத்தி கொல்லப் பாத்திருக்கீங்களே.. நீயெல்லாம் ஒரு அப்பா.. தூ..." என்று காமினி சொன்னாள்.

"சரிதான் நிறுத்துடீ.. உட்டா பேசிக்கிட்டே இருக்க.. நா இப்படித்தான்.. சின்னவயசிலேருந்து கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லாத்தையும் கவுத்திட்டுதான். உன்ன பணத்தோட அருமை தெரியாமலே வளர்த்திருக்கேன் பாரு.. நீ இதுவும் பேசுவே இதுக்கு மேலயும் பேசுவே.. டேய் இவளையும் பிடிச்சி கட்டுங்கடா" என்று பலமாக சிரித்தார் பரந்தாமன்.

"சார் சார்,, எங்கள விட்டுருங்க சார்.. நாங்க எங்காவது கண்காணாம போயிருகிறோம்.. எங்கள சேத்து வையுங்க சார், பிளீஸ்" என்றான் சிவா.

"ஆமாம்பா.. எங்க காதலை பிரித்துவிடாதீங்க" என்றாள் காமினி.

சில நேர யோசனைக்கு பின்னர், "சரி சரி.. உங்க ரெண்டு பேரையும் விட்டுறேன். ஆனா.. நாளைக்கு கோகினூர் வைரம் கண்காட்சிக்கு வருது. சிவா நீ அதை எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் உங்கள விட்டுறேன்" என்றார் பரந்தாமன்.

"இல்ல நா போறேன் அப்பா" ‍- காமினி என்றதுக்கு சிவா, "நாந்தான் போவேன்" என்றான். "இல்ல முடியாது நாந்தான் போவேன் சிவா" என்றாள் காமினி.

அருகில் நின்றிருந்த பரந்தாமனின் கைகளில் இருந்த துப்பாக்கியை தட்டிவிட்டு சிவா கையிலெடுத்து,

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஹா ஹா ஹா ஹா.. ரெண்டு பேரும் சண்டையிடவேண்டாம். உன் காதலன் உயிரோட வேணுமென்றால் காமினி நீயே போ.." என்றார் பரந்தாமன்.

காமினி வைரத்தை எடுத்துவர மாரிமுத்துவுடன் கிளம்பினாள். மறுபடியும் சிவாவை கட்டிப்போட்டார்கள்.

**************

"ஹா ஹா ஹா ஹா.. இனி நாந்தான் இந்தியாவுலே பெரிய பணக்காரன். என்னையாரும் அசைக்க முடியாது.. ஆஹா என்ன அற்புதமா இருக்கு.. என் ராசா செல்லம்.. டேய் மாரி இங்கபாரேன்.. எவ்வளவு அழகா இருக்கு.." என்ற பரந்தாமனின் கைகளில் கோகினூர் வைரம் பளபளத்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"புலிக்கு பிறந்தது பூனையாகாதுன்னு நிரூபிச்சிட்டே காமினி. எனக்கு தப்பாம பிற‌ந்துருக்கே காமினி.. எவ்வளவு நாளா இதுமேல ஆசை.. தெரியுமா" என்ற பரந்தாமனின் கண்களில் ஆசை வெறி மிளிர்ந்தது.

காமினியை கட்டியணைக்க ஆசையோடு பரந்தாமன் வந்தார். திடீரென டமால் சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். காமினி கையில் வைத்திருந்த துப்பாக்கி பரந்தாமனின் மூளையோடு விளையாடியது.

பரந்தாமனின் உயிரற்ற உடல் மண்ணில் சரிந்தது.

*************

அன்பு நண்பர்களே!!.. இந்த சிறுகதையை நண்பர் பரிசல்காரன் நடத்தும் சிறுகதை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

,

Post Comment

21 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு

  ReplyDelete
 2. வாங்க ம.தி. சுதா @ நன்றி நன்றி... வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 3. வாங்க கார்த்திக் @ நன்றி நன்றி.. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்..

  ReplyDelete
 4. கதை நீளமாய் இருந்தாலும், நல்ல வளமான
  கற்பனை சக்தியுடன் பொருத்தமான
  இடங்களில் வாக்கியங்களை
  இணைத்து பிரமாதப்படுத்து
  விட்டீர்கள், ஸ்டார்ஜன்!

  ReplyDelete
 5. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 6. கதை நல்லா இருக்குதுங்க.... வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. ஸ்டார்ஜான் கதை நல்லாயிருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. காமினி அப்பாவ சுட்டு குற்றவாளி ஆயிட்டாளே... கோர்ட்டுல தண்டனை கொடுத்துடுவாங்களே !!
  இப்ப சொல்லுங்க காமினி நல்லவளா.. கெட்டவளா ?

  வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  (மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)

  ReplyDelete
 9. நல்லாயிருக்குங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. நல்ல இருக்கு பாஸ். வெற்றி பெற வாழ்த்துகள்!!

  ReplyDelete
 11. அருமையான கதை.வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. கதை நல்ல இருக்கு வெற்றி பெற வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 13. நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

  ReplyDelete
 14. நல்லாயிருக்கு...

  வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. கதை சூப்பரா இருக்குங்க.. கதையும் நல்ல எழுதுறீங்களே..!
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. konjam pepperm chilliyum kammiyaa irrukkupaa sariyaana alavula kalanthu irruntheengannaa suuper masala story aagi irrukkum........  some thing missing sorry!

  ReplyDelete
 17. வெற்றி பெற வாழ்த்துக்கள்.கதையை படிக்க இத்தனை நாளாகிவிட்டது ஸ்டார்ஜன்.உங்கள் மனைவி பதிவுலகில் இருக்காங்களா?உண்மை என்றால் சந்தோஷம்.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்