Pages

Thursday, October 7, 2010

இசை எனும் இன்பவெள்ளத்தில்...


ச..ரி..க..ம..ப..த..நீ.. சரிகமபதநீ.. என்ன இது ஸ்டார்ஜன் இசை கத்துக்கிறாரா என்று நீங்க கேட்பது எனக்கு கேக்குது.. ஆஹா! என்னப்பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்.. என்பது போல தமிழருக்கும் இசைக்கும் அப்படி ஒரு பொருத்தம். இசை என்பது இனிமையான ஒலி. இசை, மனதை லயிக்கவைத்து தன் வசப்படுத்தும். இசைக்கு மயங்காதோர் யாரும் கிடையாது என்றுகூட சொல்லலாம். நாம் மட்டுமில்லாமல் அந்த காலத்திலே சங்ககால தமிழர்களும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இசை அனைவரையும் கட்டிப்போடும் ஒரு வசீகரன்.

சங்ககால இலக்கியங்களிலும் இசை முக்கிய இடத்தை பிடித்திருந்தது. அதனால்தான் சங்ககால இலக்கியங்களை இயல் இசை நாடகம் என்ற மூன்று வகைகளாக பிரித்திருந்தனர். இசையை இனிமையாக வெளிப்படுத்தும் கருவிகள் இசைக்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இசை ஆய்வாளர்களின் கருத்துப்படி இசைக்கு ஐந்து கருவிகளால் உரிய ஓசைகள் உண்டாகின்றன. அந்தகால இசைக்கருவிகளை ஐந்து வகையாக பிரிக்கலாம்.

அவைகள்: தோல்கருவிகள், துளைக்கருவி, நரம்புகருவி, கஞ்சக்கருவி, மிடறு என்பனவாகும்.

தோல் கருவிகள்:

இந்த வகை இசைக்கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்டவை.

பெரும்பறை, சிறுபறை, பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வலையம், மொந்தை, முரசு, நிதாளம், கண்விடுதூம்பு, துடுமை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை.

மத்தளம்

இதற்குத் தண்ணுமை என்றும், மிருதங்கம் என்றும் பெயர்கள் உள்ளன. மத்து என்பது ஓசைப்பெயர். தளம் என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. ஆதலால் மத்தளம் என்று பெயர் பெற்றது.

குடமுழா

தோற்கருவிகளில் ஒன்றாகக் கூறப்படும் குடமுழா என்பது ஐந்துமுக வாத்தியம் என்று இப்போது கூறப்படுகிறது.இது இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல் மறைந்து விட்டது.

தவுல்

இது நாதசுரத்துடன் வாசிக்கப்படுகிற தோற்கருவி. அந்த காலத்தில் இதன் பெயர் மட்டூகம் என்றும் சொல்வார்கள்.

பதலை

இது தோற்கருவி இன்றைக்கு தபலா என திரிந்து வழங்குகிறது. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டு பிற்காலத்தில் மறைந்துவிட்டது. ஆனால் வடநாட்டில் தபலாவாக புகழ்சூடி இன்றும் இருக்கிறது.

முரசு

இது ஒரு ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல்கருவி. அந்தகாலத்தில் அரசர்களின் ஆணையை மக்களுக்கு அறிவிக்க பயன்பட்ட ஒரு தோல்கருவி. இன்றும் சில ஊர்களில் இருக்கிறது. பள்ளிவாசல்களில் மின்சாரம் இல்லாத நேரத்தில் முரசு அறிவித்து மக்களை தொழுகைக்கு அழைப்பார்கள்.

துளைக்கருவிகள்

இந்த வகை இசைக்கருவிகள் துளைகளின்மூலம் காற்றின் வழியாக இசையை தருவிக்கும் கருவிகள் துளைக்கருவிகள் எனலாம்.

* புல்லாங்குழல்
* முகவீணை
* மகுடி
* சங்கு
* தாரை
* கொம்பு
* எக்காளை
* எஆசருஅம்

புல்லாங்குழல்

இது மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது.

புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி.

இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.


நரம்புக் கருவிகள்

* யாழ்
* வீணை
* தம்பூரா
* கோட்டுவாத்தியம்
* சாரங்கி9

யாழ்

இது மிகவும் பழமையான இசைக்கருவி. இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது.

வேட்டைக்கு செல்லும் மக்களின் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம் என்று சொல்கிறார்கள். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.

சங்ககால இலக்கியங்களில் யாழுக்கு முக்கிய இடம் உண்டு. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

யாழில் 4 வகைகள் உண்டு.... பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ்.

வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன.

வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வீணையின் பாகங்கள்

குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

கஞ்சக்கருவிகள்

* கரம்

மிடறு கருவிகள்

* கற்தூண்கள் இசை.

அந்தகாலத்தில் இந்த மாதிரியான இசைக்கருவிகள் மக்களிடையே பயன்பட்டிருக்கின்றன. இப்போது அவை காலத்தால் மறைந்து விட்டன. சில வகையான இசைக்கருவிகள் இன்றும் பல ஊர்களில் இருக்கலாம்.

அவை நம்ம தாத்தா பாட்டி கால பொக்கிஷங்கள். ஆனால் இன்று அதன் இருப்பிடமோ பழைய சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம் என்று சொல்லப்படும் அரங்கு வீட்டில் தூசியோடு தூசியாக இருக்கின்றன.

இப்போவெல்லாம் மேற்கத்திய இசைகள் நம்மை ஆட்டிவைக்கின்றன. அதிலிருந்து வரும் இரைச்சல் தான் நம் காதை அதிரவைக்கின்றன. நம்முடைய காது 120 டெசிபல் அளவு சத்தத்தைதான் உள்வாங்கும் என்று சொல்லப்படுகிறது. இசையென்ற பெயரால் வரும் இரைச்சல் ஒலிகள் நம் காதுகளை தாக்காதவண்ணம் நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

நம்முடைய அருகாமையில் நிறைய அந்தகால பொக்கிஷங்கள் இருக்கலாம். அவற்றை பாதுகாத்து இனிமையான இசையினை கேட்டு மகிழுங்கள்.

,

Post Comment

29 comments:

  1. கொடடாங்குச்சின்னு ஒரு புகழ்பெற்ற இசைக்கருவி இருக்கே அது எந்த வகைல வரும் சொல்லவே இல்லையே குரு.... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்


    இப்படிக்கு
    கொட்டாங்குச்சி இசை நிபுணர் சங்கம்

    ReplyDelete
  2. அப்ப உங்களுக்குள் ஒரு இளையாராஜா ஒரு எம்எஸ்வி சம்மணம் போட்டு உக்காந்துருக்காங்கன்னு சொல்லுங்க...:)

    ReplyDelete
  3. ஹையா..அடுத்த ஏ ஆர் ரஹ்மானா?நல்ல அலசல்.

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகளில் மிகவும் மிகவும் பிடித்த பதிவாயிருக்கிறது ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. இவ்வளவு விரிவாக இசைக்கருவிகள் பற்றி தகவல்களை தந்ததற்கு மிக்க மிக்க நன்றி!

    ReplyDelete
  6. இசைகுருவும் ஆகி விட்டீர்களா? அருமை. கச்சேரியை ஆரம்பிங்க.

    ReplyDelete
  7. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

    ReplyDelete
  8. கச்சேரி கல கட்டிட்ட மாதிரி தெரியுது!! பலே! பலே!!

    ReplyDelete
  9. // அப்ப உங்களுக்குள் ஒரு இளையாராஜா ஒரு எம்எஸ்வி சம்மணம் போட்டு உக்காந்துருக் காங்கன்னு சொல்லுங்க//

    உட்கார்ந்தவங்களை வெளியே போக விட்டுடாதீங்க, ஏதாவது ஒரு ஆலாபனை பாடிய பிறகு தான் அனுப்போணும் சரியா. ஹி ஹி

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு சகோதரா வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. இனி தொடர்ந்து தங்கள் தரம் வரலாம் என முடிவெடுத்துள்ளேன்..

    ReplyDelete
  12. @!@ நாஞ்சில் பிரதாப் said...

    // கொடடாங்குச்சின்னு ஒரு புகழ்பெற்ற இசைக்கருவி இருக்கே அது எந்த வகைல வரும் சொல்லவே இல்லையே குரு.... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிக்கு... கொட்டாங்குச்சி இசை நிபுணர் சங்கம் //

    இருங்க பிரதாப்பு அவசரப்பட்டு கண்டனத்த சொல்லிடாதீங்க. பாவம் பச்ச புள்ள முகம் வாடிடப் போவுது. "வாடா என் மச்சி" சங்க தலைவர கூப்ட்டு கேட்டுடுவோம். ஹா..ஹா..

    ReplyDelete
  13. சார் இசை கருவிகள் பற்றி நான் பார்க்கும் முதல் சிறப்பான பதிவு...அப்படியே இசையும் சொல்லித் தருவீங்கதனே...

    ReplyDelete
  14. இசைக்கருவிகளைப் பற்றிய குறிப்புகளுடன் அருமையான பதிவு.

    //கற்தூண்கள் இசை.//

    இன்றைக்கும் கிடைக்கிறது நெல்லையப்பர் கோவிலின் சிறப்பம்சமாக.

    ReplyDelete
  15. ஆஹா.. இசை கருவிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தேங்க்ஸ்..
    சில இசை கருவிகளின் படங்களும் இணைத்திருக்கலாமே....!!

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  16. அப்புறம் மியூசிக் கிளாஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்குங்க? :-))))

    எங்கே ஸ்டார்ட் பண்ணுங்க பாப்போம்....
    ஸ...ரி...க..ம..ப..த..நி....ஸ

    ஓகே ஓகே... மீ கோஇங்.. :-))

    ReplyDelete
  17. இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்தால் வெறும் இசைக்கருவி மட்டும் தானா?எப்ப கச்சேரி?

    ReplyDelete
  18. இசைக்கருவிகளைப் பற்றிய அருமையான பதிவு.
    தகவல்களுக்கு நன்றி..

    ReplyDelete
  19. சூப்பர் பதிவு தெரியாதவர்கள் அறிந்துக்கொள்ள அருமையான வாய்ப்பு..!! :-))

    ReplyDelete
  20. இசைக்க‌ருவிக‌ளை ப‌ற்றி ந‌ல்ல‌ விள‌க்க‌ம் ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  21. சார் நீங்கலு கூறியுள்ள இசைக்கருவிகளில் 90 சதவிகிதம் பெயர்கள் கூட என்னக்கு தெரியாது . நல்ல பதிவு சார்

    ReplyDelete
  22. எப்ப இப்படி ஆராச்சியாளரா மாறினீங்க?

    ReplyDelete
  23. சிஷ்யா பிரதாப் @ நன்றி... கொட்டாங்குச்சி.. யாழ், வீணை வகைகளில் ஒன்றாக இருக்கும்.

    இளையராஜாவும் கிடையாது; எம்எஸ்வியும் கிடையாது. நான் ஸ்டார்ஜன்தான்.

    ReplyDelete
  24. நன்றி டிவிஆர் சார்..

    நன்றி ஸாதிகாக்கா @ நான் ஸ்டார்ஜன் ஷேக்தான். நன்றி நன்றி..

    ஹேமா @ நன்றி நன்றி..

    சசிக்குமார் @ நன்றி நன்றி

    ReplyDelete
  25. எஸ்கே @ நன்றி நன்றி..

    சித்ரா @ நன்றி நன்றி..

    சின்ஹாசிட்டி தளம் @ ரொம்ப நன்றி.. என்னுடைய இடுகையை தேர்ந்தெடுத்ததுக்கு..

    எம்.அப்துல்காதர் @ நன்றி நன்றி.. ஐய்யோ.. நான் சாதாரணமானவன்தான்.. சீக்கிரம் பச்சப்புள்ளய கூப்பிடுங்க..

    ம.தி.சுதா @ நன்றி நன்றி.. உங்க அன்புக்கு.. வாங்க அன்போடு வரவேற்கிறேன்..

    ReplyDelete
  26. விரிவான ஆராய்ச்சி.. எப்ப கச்சேரி?? :-))

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்