சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து குழந்தைகளின் ஆசையை நிவர்த்தி செய்வார்கள். ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்கும் பொருள்களை வாங்கிக்கொடுக்க முடியாத சூழ்நிலைகளில் இருப்பார்கள். அதனால் குழந்தைகளை சாக்குபோக்கு சொல்லி சமாளிப்பார்கள். சிலர் சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லி புரியவைப்பார்கள். குழந்தைகள் அதையும் மீறி கேட்கும்போது சிலர் அதட்டி வைப்பார்கள்.
அடம்பிடிக்கும் சேட்டை செய்யும் குழந்தைகள் பயம்காட்டி வைப்பார்கள். எல, நீ சேட்டை பண்ணினா அந்த பூச்சாண்டி சாக்கு (கோணிப்பை) வச்சிருக்கான்பாரு.. அதுல புடிச்சிட்டு போயிருவான்.. புள்ள புடிக்கிறவன் நம்ம தெருவுல அலையுறான். கவனமா இருந்துக்கோ.., அந்த பல்லு நீண்டுருக்குமே ஒத்தக்கண்ணு தாத்தாக்கிட்ட பிடிச்சி கொடுத்திரவா.. முக்கூட்டு லெப்ப புடிச்சிக்கிட்டு போயிருவாரு., மோதினாரு வந்துருவாரு.. இப்படியெல்லாம் சேட்டை பண்ணுற பிள்ளைகளை சமாளிப்பதற்கு சொல்லி வச்சிருப்பாங்க..
வெங்காயத்தை தட்டி கண்ணுல ஊத்திருவேன் அப்படின்னு சொல்லி பயங்காட்டுவார்கள். நான் சிறுவயதில் எங்க நன்னி (அம்மம்மா) வீட்டுக்கு போயிருக்கும்போது சேட்டை பண்ணும்போது இப்படித்தான் வெங்காயத்தை தட்டி கண்ணுல ஊத்திருவேன் என்று பயங்காட்டும்போது அத கண்ணுல ஊத்தும்போது கண்ணு தெரியாம போயிருமோ என்று நான் பயப்படுவதுண்டு. ஆனா ஆக்சுவலா வெங்காயம் கண்ணுக்கு ரொம்ப நல்லது என்று பெரிய பையனானதும் தெரியவரும்போது அடடா.. சே.. இது தெரியாம நாம பயந்துல்ல இருந்திருக்கிறோம் என்று அசடு வழிவதுண்டு.
அதுபோல அங்கே பள்ளிவாசல்ல உள்ள மோதினாருக்கு கழுத்து சரிந்து இருக்கும். அது பிறவியிலே இருந்ததா..இல்லையான்னு எனக்கு தெரியாது. அவரை கண்டாலும் எனக்கு பயம்தான். அதேமாதிரி எங்க வீட்டுக்கு வரும் சலவைத் தொழிலாளிக்கும் பயம்தான். ஏன்னா அவர், வெத்தலை பாக்கு பொட்டியில் பாக்குவெட்டி வச்சிருப்பார். நான் சேட்டை பண்ணும்போது பாக்குவெட்டியை கொண்டு மூக்கை வெட்டிருவேன்னு பயம்காட்டுவார். எங்கப்பா, நன்னி வைத்திருக்கும் வெத்தலைபொட்டியிலும் பாக்குவெட்டி இருக்கும். பயப்பட மாட்டேன். ஆனால் சலவைக்காரர் வச்சிருக்கிற பாக்குவெட்டியும் அவர் கண்ணை உருட்டி பயம் காட்டும்போது ஆட்டோமெட்டிக்கா எனக்குள் பயம் தொத்திக்கும்.
சேட்டை பண்றவங்களை சமாளிக்கத்தான் இந்தமாதிரியெல்லாம் பயங்காட்டுவாங்க. ஆனால் அவையெல்லாம் குழந்தைகளின் நன்மைக்காகத்தான். ஆனால் குழந்தைகள் அவற்றையெல்லாம் மனதில் போட்டு குழப்பிக்கொண்டு அதையே நினைத்துக் கொண்டு இருப்பார்கள். மேலும் சில குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தங்களை பயங்காட்டி அடிக்கிறார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு பெற்றோரை வெறுக்கும் குழந்தைகளும் உண்டு.
குழந்தை மனசு என்பது பசுமரத்தாணிபோல. அதில் நாம் என்னவெல்லாம் எழுதுகிறோமோ அதெல்லாம் ஆழமாக பதிந்து விடும்.
பயம் என்பது எல்லோர் மனதிலும் இருக்கும். ஆனால் சிலர் எதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உள்ளூர பயம் இருக்கும். சிலருக்கு சின்ன சின்ன விசயங்களிலும் பயம் இருக்கும். பல்லி, கரப்பான்பூச்சி, யானை, ரயில்பூச்சி, நசுக்கோட்டான் (கம்பளிப்பூச்சி) இப்படி நிறைய இருக்கும். பாம்பு இதில் விதிவிலக்கு.. ஏன்னா பாம்பைக்கண்டால் படையே நடுங்கும். பாம்புக்கு பயப்படாதவங்க யாரும் கிடையாது. யானை 2 தெருவுக்கு முன்னாடி வந்துக்கிட்டு இருக்கு என்றால் இங்க உள்ளூற பயம் எட்டிப்பார்க்கும்.
சில பேர் எல்லா விசயங்களுக்கும் பயப்படுவாங்க.. எதுக்கெடுத்தாலும் பயப்படுவாங்க.. உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் நம்ம தெனாலி கமலஹாசன் போல..
என் மனைவி, அவங்க சின்ன வயசுல பயந்த அனுபவத்தை பற்றி குறிப்பிடும்போது....
இதோ அவங்களே தொடருகிறாங்க..
எனக்கு ஒரு சில விசயங்களில் பயம் ஏற்படுவதுண்டு. எங்க ஊர்ல ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழா நடைபெறுவதுண்டு. விதவிதமா மாறுவேடங்கள் போட்டுக்கொண்டு பவனி வரும்போது பார்க்க நல்லாருக்கும். பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு வேண்டிக்கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்ற பல மாறுவேடங்களில் பவனி வருவார்கள். ஆனால் முகமூடி போட்டுக்கொண்டு அருகில் வரும்போது நமக்கு பயமாக இருக்கும்.
சின்ன வயசுல தசரா பார்க்க எங்க வாப்பா என்னையும் எங்க அக்காவையும் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது நாங்க ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, எங்கவாப்பா பக்கத்திலிருந்த கடைக்கு டீக்குடிக்க சென்றுவிட்டார். பின்னாடியே எங்க அக்காவும் ஓடிவிட்டாள். நான்மட்டும் மெய்மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது புலிவேசம் போட்ட ஒருவர் என் பக்கம்வந்து கையை தொட, நான் வீல் என்று கத்தி மயங்கி கீழே விழுந்துவிட்டேன்.
எனக்கு ஒருவாரம் கடும்காய்ச்சல்.
பயம் என்பது ஒருவித உணர்வு. அது நம் மனதை பொறுத்து அமைகிறது.
நம் மனதை பயம் தொற்றிக் கொள்ளும்போது அதிகப்படியான ஆற்றல் நம் உடம்பில் தேவைப்படுகிறது. உதாரணமாக, பயப்படும் நேரங்களில் இதயம் வேகமாக துடிக்கிறது. இதயத்துக்கு அதிகப்படியான ரத்தம் தேவைப்படும்போது உடம்பில் உள்ள மூளை உட்பட எல்லா உறுப்புகளும் சுறுசுறுப்பாகிறது. இதனால் ரத்தஓட்டம் மேலும் அதிகரிக்கிறது. இதயம் ஸ்தம்பித்து விடுகிறது.
அதிகமாக பயப்படும் சூழ்நிலைகளில், சிலருக்கு ஹார்ட்அட்டாக்கே வந்துவிடுகிறது.
பிள்ளைகளுக்கு சிறுவயதிலே நல்ல சிந்தனைகளையும் நல்ல நல்ல கதைகளை சொல்லலாம். தியானங்களை கற்றுக் கொடுக்கலாம். மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள் என்று அறிவுறுத்த வேண்டும். கஷடமான சூழ்நிலை ஏற்படும்போது தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையை சொல்லி புரியவைக்கலாம். அதேமாதிரி அந்த சூழ்நிலைகளுக்கு அவர்களையே தீர்வு காண சொல்லலாம்.
பிள்ளைகளும், பெற்றோர்கள் அடிக்கிறார்கள், பயமுறுத்துகிறார்கள் என்று நினைக்கக் கூடாது. தங்களது பெற்றோர்கள் நம் நன்மைக்குத்தான் சொல்றாங்க என்று நினைத்து பெரியவர்களின் வழிகாட்டலில் செல்லலாம். அது நமக்கு முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னால் பெரியவங்களானதும் நம்முடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும்.
**************
அன்பு நண்பர்களே!!.. இந்த கட்டுரை என் மனைவி எழுதிய கட்டுரை.
,
நல்ல பதிவு பாய். உண்மையிலேயே அருமையான விஷயம். சின்ன வயதில் எங்க வீட்டிலும் குழந்தைகள் (அப்போது கூட்டுக்குடும்பம்) படுத்தும் பாட்டை தவிர்க்கவும், பயமுறுத்தி உணவு ஊட்டவும், சில சமயம் கரண்ட் இல்லாத வேளைகளில் எங்களை அடக்கி வைக்கவும் எங்கள் உறவினர் ஒருத்தரே மண்டையோடு டிரஸ் போட்டு வருவார்(அது யார்னு பெரிதான பின்தான் தெரிய வந்தது.) அதைப் பார்த்த அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. இருட்டும் தனிமையும் எனக்கு இன்னமும் பழக்கப்படாத ஒன்று. அதனாலேயே எங்கள் பிள்ளையை இப்படி எதுவும் சொல்லி பயமுறுத்துவது இல்லை. நாளை அவர்கள் வாழ்வில் அது எப்படி விளைவுகளை கொடுக்கும் என்று தெரியாதல்லவா...?
ReplyDeleteநல்லாயிருக்குங்க
ReplyDeleteகுழந்தை மனசு என்பது பசுமரத்தாணிபோல. அதில் நாம் என்னவெல்லாம் எழுதுகிறோமோ அதெல்லாம் ஆழமாக பதிந்து விடும்.
ReplyDelete.....உண்மை... கவனமாக, ஒரு புரிதலுடன் வளர்க்க வேண்டுமே.... அருமையான பதிவு.
பதிவு அருமை.
ReplyDeleteதிருமதி ஸ்டார்ஜனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணாத்த, எங்க வீடு வாழு எதுக்கும் பயப் பட மாட்டேங்குது
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteதிருமதிக்கு வாழ்த்துக்கள்.
அருமையான கட்டுரை. சின்ன வயசில் அதுங்க மனசில் பதியறது அப்படியே பசுமரத்தாணிமாதிரி.. ரொம்ப கவனமா வளர்க்கணும்.
ReplyDeleteநல்லா எழுதி இருக்காங்க .. அம்மணிக்கும் ஒரு ப்ளாக் வச்சிக்குடுங்க..:)
ReplyDeleteதவறா செய்துட்டு ஏன் பயப்படறே.. உண்மையில் என்கிட்ட பயம்ன்னா நீ சரியா செய்திருக்கனுமேன்னு சொல்வாங்க அம்மா..
//கஷடமான சூழ்நிலை ஏற்படும்போது தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையை சொல்லி புரியவைக்கலாம். அதேமாதிரி அந்த சூழ்நிலைகளுக்கு அவர்களையே தீர்வு காண சொல்லலாம்.//
ReplyDeleteஇதெல்லாம் கட்டாயம் செய்யவேண்டிய விஷயங்கள்ங்க...
இந்தக்காலத்தில் கஷ்டம் தெரியாம வளர்க்கிறோம்னு சொல்லி, பிள்ளைகள் தங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தேவையான தைரியமின்றி வளர்த்துவிடுகிறார்கள்.
நல்ல பதிவுக்கு நன்றிகள், உங்கள் இல்லத்தரசிக்கும் சேர்த்து.
ரெம்ப நல்லா எழுதியிருக்காங்க ஸ்டார்ஜன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லா எழுதி இருக்காங்க.
ReplyDeleteபேசாம அவுங்களுக்குன்னு ஒரு வலைப்பூவை ஆரம்பிக்கச் சொல்லுங்க.
பயம் பற்றிய விளக்கம் சரியான பார்வை .. \
ReplyDeleteகுழந்தைகளை நாம்தான் சிறிய வயதிலேயே பயபடுத்தி வைக்கிறோம்..
உங்கள் மனிவியும் நன்றாக எழுதுகிறார்.
ReplyDeleteமச்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் அருமையான அவசியமான பதிவு.
கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
ReplyDeleteஎன் மனைவியும் ப்ளாக் எழுதுறாங்க.. பெயர் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லிட்டாங்க.. நேரம் வரும்போது சொல்லுவேன் என்று சொல்லிவிட்டாங்க.
அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
வாங்க அன்னு @ நீங்களும் நல்லா பயப்படுவீங்களா.. ஆமா நீங்க சொன்னமாதிரி சேட்ட பண்ணுற பிள்ளைகளை பயங்காட்டி வச்சிருப்பாங்க..
ReplyDeleteநன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
வாழ்த்துகள் திருமதி ஸ்டார்ஜன்னுக்கு..
ReplyDeleteஉங்க மனைவி அருமையான கட்டுரை எழுதியிருக்காங்க.
ReplyDeleteமிகச் சிறப்பான கட்டுரை!
ReplyDelete// என் மனைவியும் ப்ளாக் எழுதுறாங்க.. பெயர் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லிட்டாங்க.. நேரம் வரும்போது சொல்லுவேன் என்று சொல்லிவிட்டாங்க.//
ReplyDeleteசரி உங்க மனைவியின் பெயர் என்ன சொல்லுங்க நாங்க கண்டுபிடி சிக்கிறோம் ஹா.. ஹா. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான
விஷயங்களை உள்ளடக்கிய பதிவு. வாழ்த்துக்கள் பாஸ்.
பயனுள்ள பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பதிகள் இருவருக்கும்.
வாங்க ராஜசேகர் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க சித்ரா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஆசியாக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..
ReplyDeleteவாங்க சைவகொத்துப்ப்ரோட்டா @ ரொம்ப நன்றி.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகளுக்கு நன்றி..
ReplyDeleteவாங்க கார்த்திக் @ உங்க வீட்டு வாலு ரொம்ப சேட்ட பண்றானா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அவனிடம் கேட்டதாக சொல்லுங்க..
ReplyDeleteநன்றி வருகைக்கும் கருத்துக்கும்
வாங்க அம்பிகா @ ரொம்ப சந்தோசமாக உள்ளது. நன்றி உங்கள் பாராட்டுக்கு.. வாழ்த்தை வீட்டுல சொல்லிடுறேன்.
ReplyDeleteஏன் ஆளையே காணோம்..
ReplyDeleteஅருமையா இருக்கு ஸ்டார்ஜன்.திருமதி ஷேக் க்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
ReplyDeleteNalla irukku nanbarey...
ReplyDeleteAnnikku en sarpaga vazhththu sollunga...
thani valaippoovil kalakkach sollunga...
பயம் பற்றிய நல்ல அலசல்!
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கும்
உங்கள் துணைவியாருக்கும்.
//என் மனைவி, அவங்க சின்ன வயசுல பயந்த அனுபவத்தை பற்றி குறிப்பிடும்போது....
ReplyDeleteஇதோ அவங்களே தொடருகிறாங்க..//
-இந்த வரிவரை நீங்களும் அதைத் தொடர்ந்து உங்கள்
மனைவியும் எழுதியதா இந்த இடுகை?
அப்படியென்றால்
//அன்பு நண்பர்களே!!.. இந்த கட்டுரை என் மனைவி எழுதிய கட்டுரை.//
என்று குறிப்பிட்டிருப்பது சற்றே குழப்புகிறது, ஸ்டார்ஜன்.
விளக்குவீர்களா?
வாங்க நிஜாமுதீன் @ என் மனைவி நானும் உங்க பதிவுல குழ்ந்தைகளின் பயத்தை பற்றி ஒரு இடுகை எழுதி வைத்திருக்கிறேன்., எழுதட்டுமா என்றார். நான் உடனே ரொம்ப சந்தோசம் என்று சொல்லி எழுத சொன்னேன். அப்போது நான் கூறிய கருத்துக்களையும் (எனக்கு சின்ன வய்தில் நடந்த சம்பவங்களை) நான் சொல்வது போலவும், அவங்களோட கருத்துக்களையும் (சின்ன வயதில் நடந்த சம்பவத்தை) அவர் சொல்வது போலவும் எழுதியுள்ளார்.
ReplyDeleteஉங்க அன்புக்கு ரொம்ப நன்றி நிஜாமூதீன்.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்களது பாராட்டுக்களை என் மனைவியிடம் தெரிவித்தேன். ரொம்ப சந்தோசப்பட்டார்.
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க அமைதிக்கா @ ரொம்ப சந்தோசமாக உள்ளது. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteவாங்க முத்துலட்சுமி மேடம் @ ரொம்ப நன்றி.. உங்க பாராட்டை மனைவியிடம் தெரிவித்தேன்.. நன்றி சொல்ல சொன்னார்.
ReplyDeleteவாங்க சுந்தரா @ ரொம்ப நன்றி.. உங்க பாராட்டை மனைவியிடம் தெரிவித்தேன்.. நன்றி சொல்ல சொன்னார்.
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி.. உங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தேன்.. நன்றி சொல்ல சொன்னார்.
ReplyDeleteவாங்க துளசி டீச்சர் @ ரொம்ப நன்றி.. உங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தேன்.. நன்றி சொல்ல சொன்னார்.
ReplyDeleteவாங்க செந்தில் @ ரொம்ப நன்றி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..
ReplyDeleteவாங்க சசிக்குமார் @ ரொம்ப நன்றி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..
ReplyDeleteவாங்க மல்லிகா @ ரொம்ப நன்றி.. உங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் மனைவியிடம் தெரிவித்து விட்டேன்.. ரொம்ப நன்றி சொல்ல சொன்னார்.
ReplyDeleteவாங்க மின்மினி @ ரொம்ப நன்றி
ReplyDeleteவாங்க ஜெயந்தி மேடம் @ ரொம்ப நன்றி.. உங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து வ்ட்டேன். ரொம்ப நன்றி..
மிகவும் பயனுள்ளக் கட்டுரை நண்பரே .பெற்றோர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒன்றுதான் இந்தப் பதிவு . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDelete//குழந்தை மனசு என்பது பசுமரத்தாணிபோல. அதில் நாம் என்னவெல்லாம் எழுதுகிறோமோ அதெல்லாம் ஆழமாக பதிந்து விடும்///
ReplyDeleteநாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்..
அழகா எழுதி இருக்காங்க.. வாழ்த்துக்கள்.. :-))
நல்லா எழுதி இருக்காங்க.
ReplyDeleteபதிவு அருமை.
ReplyDeleteமுதலில் உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்க அரு்ையான மிக மு்க்கியமான கருத்ை பகிர்ந்து கொண்டீர்கள்.
ReplyDeleteஇது நல்ல் இருக்கே, இரண்டு பேரும் ஒ்ே பிளாக்கி்்்ெழுதி மிச்சம் பண்ணுவ்து போல் இருக்கே.
எம் அப்துல் காதர் ஏன் இப்படி பெய்ை சொ்்லாமல் உ்க்ள் மனைவி எழுதுறா்்க
ReplyDeleteமிக அருமை ஸ்டார்ஜன்.. ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க..
ReplyDelete