நாம் அந்த படங்களை பத்தி பார்ப்பதற்க்கு முன்னால் , நேற்று நண்பர் செ. சரவணக்குமார் எங்களை காண வந்திருந்தார் . நானும் அக்பரும் அவரை வரவேற்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் . அந்த நேரம் பார்த்து எங்களுக்கு நிறைய கஸ்டமர்கள் /வேலை இருந்ததால் விரிவாக பேசமுடியவில்லை . அவர் ஊருக்கு செல்வதால் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .
பின்னர் , 2 மணி நேரம் கழித்து அவர் எங்களிடமிருந்து விடைபெற்றார் . இந்த பதிவர் சந்திப்பு பத்தி இன்று சரவணக்குமார் பதிவிட்டுள்ளார் . மேலும் விவரங்களுக்கு அவரது பதிவிற்கு சென்று அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
இப்போ என்னை ( சிறு வயதில் ) பாதித்த ஐந்து திரைப்படங்களை பற்றி பார்ப்போம் .
1 . படிக்காதவன்
எனக்கு சிறுவயது இருக்கும் போது படிக்காதவன் படம் பார்க்க நான் என் அப்பா ,அம்மா , தங்கை , அண்ணன் (பெரியப்பா மகன்) எல்லோரும் கிளம்பினோம் . பஸ் ஏறுவதற்கு பஸ்ஸை எதிர் பார்த்து காத்திருந்தோம் . அப்போது ஒரு பஸ் வந்தது . அப்பாவும் அண்ணனும் பேசிக்கொண்டிருந்தனர் . நான் உடனே பஸ்ஸுக்குள் ஏறிவிட்டேன் . கூட்டமாக இருந்ததால் மத்தவங்க ஏறவில்லை போல . பஸ் கிளம்பி விட்டது .
உடனே எங்கண்ணன் நான் ஏறிவிட்டதை பார்த்து ஏ சேக் ஏறிட்டான் பஸ்ஸை நிப்பாட்டுங்க என்று கத்தினார் . எங்கப்பா பஸ் பின்னாடியே ஓடி வந்து பஸ்ஸை நிப்பாட்ட முயற்சித்தார் . உடனே பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ்ஸை நிப்பாட்ட கத்தினர் . ஒரு வழியாக டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார் . நானும் இறங்கி ஓடி வந்து அப்பாவைக் கட்டிக்கொண்டேன் . பின்னர் வேறு பஸ்ஸில் ஏறி படம் பார்க்க சென்றோம் .
படம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது . நான் ரசித்து பார்த்த படம் . இந்த படத்தில் தம்பிக்காக கஷ்டபடும் ஒரு அண்ணனின் கதை . இதில் சிவாஜி , ரஜினிக்காந்த் , அம்பிகா , மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் . பாடல்கள் ரொம்ப அருமையாக இருந்தது . ரஜினிகாந்த் இந்த படத்தில் டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார் . அவரது நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கும் .
ரஜினி தோன்றும் முதல்காட்சி ரஜினியின் தம்பியிடம் கேப்பாங்க . உங்கண்ணன் எப்படி , இப்போ எங்கிருக்கிறார் என்று . அதற்கு எங்கண்ணன் ஒரு பிஸினஸ்மேன் .ரொம்ப பிஸியா இருப்பார் என்று பாபு சொல்வார் . அப்போது ரஜினி காருக்கு அடியில் இருந்து வருவார் . நான் கை தட்டி ரசித்தேன் . அப்புறம் அம்பிகா வயிற்றில் கேன் வைத்து சாராயம் கடத்துவார் . அதற்கு ரஜினி நாகேஷ்யிடம் விளக்கம் கேட்பது அருமையாக இருக்கும் . அப்புறம் ராஜாவுக்கு ராஜா நாந்தான் பாட்டில் ரஜினியின் கார் கட்டிடங்களுக்கு மேலே செல்லும் . பறக்கும் . ரொம்ப அருமையாக அந்த பாட்டை எடுத்திருப்பார்கள் .
நான் மிகவும் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .
2 . அம்மன் கோவில் கிழக்காலே
இந்த படம் விஜயகாந்த் , ராதா . ரவிச்சந்திரன் , ஸ்ரீவித்யா செந்தில் மற்றும் பலர் நடித்த படம் . சூப்பர் ஹிட்டான படம் . ரொம்ப அருமையாக இருக்கும் . பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் . நான் நிறைய தடவை பாத்திருக்கிறேன் . விஜயகாந்த் ரொம்ப அருமையாக நடித்திருப்பார் .இயக்கியது ஆர் .சுந்தரராஜன் . ராதா மிக அருமையாக இருப்பார் . பார்க்க பார்க்க ரசனையான படம் . கதை உங்களுக்கே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .
நான் மிகவும் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .
தொடரும் ...
பழைய நினைவுகளை கிளறி விட்டீர்களே.
ReplyDeleteஇரு படங்களும் எனக்கும் பிடிக்கும்.
அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி.
5 படம்னு சொன்னீங்க 2 தான் இருக்கு...
ReplyDeleteபடிக்காதவன் படத்துல ஒரு நிகழ்ச்சிக்குப்போய் ரஜீனி இங்கிலிஷ் பேசற காட்சி டாப்பா இருக்குமே அதை சொல்லலை.
அம்மன் கோயில் கிழக்காலே. ராதாவுக்காக எத்தனை தடவை வேணும்னாலும் பார்க்கலாம், அப்புறம் இசைஞானிக்காக. கேப்டன் இப்படியும் சில நல்ல படங்கள் கொடுத்திருக்காரு.
அம்மன் கோவில் கிழக்காலே அப்படின்னா நினைவே ஒரு சங்கீதம் சேர்ந்ததுதானே தல..,
ReplyDeleteஅப்போ அல்-அஹ்சா ல கூட நிறைய பதிவர்கள் இருக்கீங்களா?
ReplyDeleteசொன்ன இரண்டுமே நல்ல படங்கள். தொடரும் என்று இருப்பதால் மீதி மூன்று அடுத்த பதிவிலா?
இந்த இரண்டு படங்களுமே சிறு வயதில் விரும்பி பலதடவை பார்த்தது,அதுவும் எங்க ஊரில் இருக்கும் கொட்டகையில்...
ReplyDeleteஇரு படங்களும் எனக்கும் பிடிக்கும்.
ReplyDeleteஅருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்டார்ஜன். அடுத்த பார்ட் எப்போ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட படங்கள் ரொம்ப அருமை
ReplyDeleteஎனக்கும் ரொம்ப பிடித்தது ; பாக்கி எங்கே !!
வருகைக்கு நன்றி அக்பர்
ReplyDeleteவாங்க பிரதாப் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
ReplyDeleteஇரு படங்களும் எனக்கும் பிடிக்கும்.
ReplyDeleteநினைவே ஒரு சங்கீதமுதம் சூப்பர் ஹிட் படம்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர்
வாங்க நவாஸ் மீதி 3 படமும் விரைவில் எழுதுறேன் .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பூங்குன்றன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டி வி ஆர் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணக்குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கட்டபொம்மன்
ReplyDeleteசந்திப்புக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஇளைய வயதில ரஜினி படம்னா ஒருமாதிரி பரவசம் வரும்.”ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்” பாட்டு படிக்காதவன்லதான?
அம்மன் கோயில் கிழக்கால படம் பார்த்ததில்லை. ஆனால் பாட்டுகளைச் சலிக்காம கேட்டிருக்கேன்.
“அக்கா மக, அண்ணணோட அக்கா மக!!”
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷங்கி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆனந்த்
ReplyDelete