Pages

Sunday, April 11, 2010

வலைச்சரத்தில் மீண்டும் உங்கள் ஸ்டார்ஜன்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

இன்றுமுதல் உங்கள் ஸ்டார்ஜன் மீண்டும் வலைச்சரத்தில் ஒருவார காலம் அலங்கரிக்கப்போகிறேன். திரு.சீனா அய்யா அவர்கள் மீண்டும் எனக்கொரு வாய்ப்பு வழங்கி வலைச்சரத்தில் ஆசிரியராக்கி அழகு பார்த்துள்ளார். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களினால் இன்றுமுதல் ஒருவாரகாலத்துக்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற செல்கிறேன்.

சீனா அய்யாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கொடுத்துவரும் ஆதரவுகளினால் என்னால் மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் புதுபுது விஷயங்களை பற்றி எழுத முடிகிறது.

உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் என்பாதையில் நீங்கள் தூவும் பூக்கள்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


********************************

சென்ற வருடம் என்னால் இந்த வாரத்தை மறக்கமுடியாது. என்னவென்று கேட்கிறீர்களா.. அது நான் இந்தியாவிலிருந்து சவுதிக்கு பயணமானது. ஏப்ரல் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ப்ஹ்ரைன் வழியாக தமாம் செல்லும் கல்ப் ஏர்விமானத்தில் பயணமானேன். இது ரெண்டாவது முறையென்றாலும் இந்த பயண‌ம் புதிய அனுபவமாகும். ஏனென்றால் நான் புதிதாக கல்யாணம் ஆகி 3 மாதத்தில் பயணமாகிறேன் என்றால் சும்மாவா. இப்போது நினைத்தாலும் அந்த நினைவுகள் எப்போதும் பசுமையானது.

அன்று நான் பயணம் கிளம்புவதால் என்னை வழியனுப்ப நெருங்கிய உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு வழியனுப்ப வந்தனர். நான் புதிதாக திருமணம் ஆனதால் திருமதி ஸ்டார்ஜனின் வாப்பா அம்மாவும், அவங்க பெரியம்மா பெரியவாப்பா எங்க தாய்மாமா இருவர் குடும்பத்தினரும் என்று எல்லோரும் வந்திருந்தனர். சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முழுவதும் எல்லோருடனும் சகஜமாக பேசி பிரிவு தெரியாமல் பார்த்துக்கொண்டேன்.

என்னவளுக்கும் பிரிவு துயரம் வாட்டாமல் இருக்க அவ்வப்போது கலகலப்பாக பேசினேன். அவருக்கு ஆறுதல் சொன்னேன். அவருக்கு ரொம்பவே வருத்தம். நான் எவ்வளவுதான் பேசினாலும் என்மனதினுள் பிரிவின்கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணிக்கு மக்ரிப் தொழுகை முடிந்ததும் எல்லோரிடமும் வழிசொல்லிக் கொண்டேன். என்னவளிடமும் வழிசொன்னேன். நாங்கள் இருவரும் கண்களில் நீர் ததும்பியவாறே கண்களாலே வார்த்தைகளை பரிமாறிகொண்டோம்.

அன்றுஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்; நான் நடந்து போகும்போது தெருக்கள் எல்லாம் புதிதாக தெரிந்தன. என்னடா பிறந்ததிலிருந்து சுற்றித் திரிந்த தெருக்கள் இன்று எல்லாமே புதிதாக இருந்தன. என்னுடன் எங்க வாப்பாவும் எங்க மாமா இருவரும் திருவனந்த‌புரம்வரை வந்தனர். என்தம்பிகளும் மாமாபையனும் திருநெல்வேலி பஸ்நிலையம் வரை வந்தனர். அவர்கள் நான் சோகமாக இருப்பதைக்கண்டு அவர்களுக்குள்ளே சிரிப்புகாட்டி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பஸ்பயணத்தில் என்னவளின் நினைப்பு வாட்டியது.

திருவனந்தபுரம் வந்து சரியாக 2மணிக்கு உள்ளேசென்று போர்டிங்பாஸ் வாங்கிக்கொண்டு இருக்கையில் கண்மூடி நினைத்துபார்த்தபடி இருந்தேன். 3 1/2 மணிக்கு பிளைட் உள்ளே அனுமதித்தனர். 4 மணிக்கு பிளைட் கிளம்பியது. ரன்வேயில் ஓடி மேலே பறக்க தயாராகிக் கொண்டிருந்த விமானம் திடிரென மீண்டும் ரன்வேக்கு தரையிறங்கியது.

என்னவென்று விசாரித்ததில் விமானத்தில் முகப்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது சரிசெய்ய ஒரு மணிநேரம் ஆகும் அதனால் ஓய்வெடுங்கள் என்றே பதில் வந்தது. என்னடா இது சோதனை.., மனைவி சொந்தங்கள் அனைவரையும் விட்டு பிரிவு துயரத்தில் இருக்கும்போது இதுவேறையா.. மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தது. ஆனாலும் விமானத்தில் பழுது இன்னும் சரிசெய்யப்படவில்லை. என் வீட்டுக்கு போன் செய்து விவரம் சொன்னேன்; அனைவரும் வருத்தப்பட்டனர்.

எல்லோரும் சேர்ந்து ஏர்போர்ட் மேனேஜரிடம் முறையிட்டோம். அவர் ப்ஹ்ரனிலிருந்து பழுதுநீக்குபவர் வந்து பழுதுநீக்கணும் அதனால் ஒருநாள் தாமதமாக விமானம் செல்லும்; நீங்கள் அனைவரும் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் இன்று தங்கி ஓய்வெடுங்கள் என்று எங்கள் அனைவரையும் ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தார்.

என்னசெய்ய! எல்லாம் நம்ம நேரம் என்று நொந்தபடியே ஹோட்டலுக்கு சென்று தங்கினேன். அப்படியே ஊருக்கு சென்றுவிடலாமா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இரவு 8 மணிக்கு விமானம் தயாராகிவிட்டது என்று அழைத்து சென்ற‌னர். அதன்பின்னரும் மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன. விமானம் பழுது சரிசெய்யவில்லை தாமதமாக செல்லும் என்று நிலையில்லாத பதிலே வந்துகொண்டிருந்தன. பின்னர் எல்லோரும் ஏர்போர்ட் மேனேஜரிடம் முறையிட பின்னர் இரவு 2மணிக்கு விமானம் கிளம்பியது. மறுநாள் கிளம்பும் விமானபயணிகளுடன் எங்களையும் பயணிக்க வைப்பதே அவர்கள் எண்ணமாக இருந்திருக்ககூடும்.

இந்த சூழ்நிலை அக்பருக்கும் தர்மசங்க‌டமானது. ஏனென்றால் நான் உறுதியாகவரும் நேரம் தெரியாததால் என்னை ரிசீவ் செய்ய கார் ஏற்பாடு செய்ய முடியாதநிலை. அக்பர் அன்று இரவுமுழுவதும் தூங்கவில்லை. நான் ப்ஹ்ரைன் வந்ததும் அக்பருக்கு போன்செய்து வந்ததை உறுதி செய்து கொண்டேன்.

அப்பாடி ஒருவழியாக நானும் அக்பரும் எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தோம். இந்த அனுபவத்தை என்னால் மறக்கவேமுடியாது.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

23 comments:

 1. அட நேரில் பர்ர்த்தைப்போல் ஒரு விறுவிறுப்பு.இதனைத்தான் உணர்ச்சிததும்ப என்று சொல்லுவார்களோ..!மீண்டும் வலைசர ஆசிரியராகி இருப்பதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அன்பின் ஸ்டார்ஜன்

  வாங்க வாங்க - வந்து கலக்குங்க - நல்வாழ்த்துகள்

  ஒரு ஆண்டு முன்னால் இதே வாரத்தில் - தாய்கத்திலிருந்து அயலகம் செல்லும் போது நடந்தவற்றை அசைபோட்டு ரசித்து எழுதியமை நன்று

  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. வலைச்சரத்தில் மீண்டும் ஸ்டார்ஜன்..

  வாழ்த்துகள்.

  விமான பயண அனுபவம்... அருமையான நடையில், விருவிருப்பாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 4. ஹோட்டல்ல சாப்பாடு எல்லாம் நல்லாயிருந்த்தை சொல்லவே இல்லை.

  ஊர் திரும்புதல் மிக கடினமான ஒரு விசயம்.

  மீண்டும் வலைச்சர ஆசிரியராக கலக்க வாழ்த்துகள்.

  நம்மளை அறிமுகப்படுத்தும் போது ரெண்டு பிட் சேர்த்து போடுங்க.

  ReplyDelete
 5. மீண்டும் வலைச்சரம் ஆசிரியர் பணி ஏற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே... சென்ற வருடம் இந்த நாள் நினைவு கூறல் அருமை.

  ReplyDelete
 6. என்ன குரு திரும்புவுமா-??? ஓகே ஓகே...

  விமான அனுபவம் சுவாரஸ்யம்....

  ReplyDelete
 7. //நம்மளை அறிமுகப்படுத்தும் போது ரெண்டு பிட் சேர்த்து போடுங்க.//

  ஏன் நான் என்ன பாவம் பண்ணேன்... குரு நமக்கு நாலு பிட்டு சேர்த்து... எவ்வளோ பண்ணிட்டீங்க...

  ReplyDelete
 8. ஆஹா மீண்டும் வலைச்சரத்தில் ஆசிரியரா.. கலக்குங்க.

  எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி., சென்ற வாரம் போல இந்தா வாரமும் தூள் கிளப்புங்க.

  வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 9. அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவது என்பது ஒரு தனித்திறமை. அதை உங்கள் பதிவின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  வலைச்சரத்தில் மீண்டும் கலக்கப்போவது இரட்டிப்பு மகிழ்ச்சி! கலக்குங்க!!

  ReplyDelete
 10. மீண்டும் வாழ்த்துகள்.
  பயண அனுபவம் நல்லா எழுதியிருக்கீங்க!

  ReplyDelete
 11. வ‌லைச்ச‌ர‌த்தில் க‌ல‌க்குங்க‌ ஸ்டார்ஜ‌ன்... விமான‌ ப‌ய‌ண‌ ப‌கிர்வு அருமை...

  ReplyDelete
 12. ////நம்மளை அறிமுகப்படுத்தும் போது ரெண்டு பிட் சேர்த்து போடுங்க.//

  ஏன் நான் என்ன பாவம் பண்ணேன்... குரு நமக்கு நாலு பிட்டு சேர்த்து... எவ்வளோ பண்ணிட்டீங்க...///

  அப்ப‌ நாங்க‌ ம‌ட்டும் என்ன‌ த‌ப்பு ப‌ண்ணினோம்......எட்டு பிட்டா சேர்த்து போடுங்க‌ த‌ல‌..

  ReplyDelete
 13. மலிக்காவின் கமெண்ட் சரியாக வெளியாகவில்லை.

  அன்புடன் மலிக்கா said...

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  வலைச்சரத்தில் மீண்டும் தொடர்வதர்க்கும். அழகிய விமாணப்பயண அனுபவத்திற்க்கும்..

  நான் இங்க வந்ததே ஏன் இத்தனைநாள் காணவில்லையேன்னு கேட்க.
  இரட்டிப்பு மகிழ்ச்சி அசத்துங்க..

  ReplyDelete
 14. // நான் எவ்வளவுதான் பேசினாலும் என்மனதினுள் பிரிவின்கலக்கம் இருந்து கொண்டே இருந்தது//

  பிரிவு எனது என்றுமே வருத்தம் அளிப்பதுதான். அதுவும் மனதுக்கு உரியவரை பிரிந்தால்..... ஒரு நாளோ ஒரு வருடமோ அது மிக கடினம்தான்

  ReplyDelete
 15. மீண்டும் அசத்துங்க ஸ்டார்ஜன்.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் தல..

  ஆரம்பமே அட்டகாசம்..தொடருங்கள்

  ReplyDelete
 17. வலைச்சரத்தில் இரண்டாம் முறையாக கலக்க வாழ்த்துக்கள்.
  அப்படியே நடந்ததை நேரில் கண்டது போல் இருக்கு நீங்கள் கூறியது.

  பிரிவின் வலி அதிகம், நானும் அனுபவத்திருக்கிறேன்.

  ReplyDelete
 18. உருக்கம் மாம்ஸ்!
  அங்காடித் ​தெருக்கள் ​சென்னையில் மட்டும் இல்லை என்பதை உணர்த்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 19. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 20. //////////சினிமா/சீரியல்கள் பெண்களுக்கு முன்னேற்றம் அமைத்துக் கொடுக்கிறதா இல்லை இழிவுபடுத்துகிறதா...
  ///////////


  நண்பரே உங்களின் இந்த கேள்விக்கான பதில் இந்த கேள்வியில் இறுதியில் அழுத்தமாக சொல்லி இருக்கிறது பாருங்கள் .

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்