Pages

Sunday, September 19, 2010

உம்ரா - ஒரு இனிய பயணம் 2

உம்ரா - ஒரு இனிய பயணம் முதல் பகுதியை படிக்க..

மக்கா நகரத்தின் க‌ஃபா பள்ளிக்குள் நுழையும்போது எங்கள் செருப்புகளை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். அங்கே வைக்கப்பட்டிருந்த செஃல்புகளில் செருப்பை வைத்து செஃல்பின் நம்பரை குறித்து வைத்துக்கொள்ளலாம். சிலர் செருப்பை கையிலே வைத்திருந்தபடியே கஃபாவை வலம் வந்தார்கள். அவர்களுக்கு அருவெருப்பாக தோன்றவில்லைபோலும். எங்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.. என்ன செய்ய இவர்களை..

க‌ஃபா ஹரமை கண்களால் பார்த்ததும் நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது.. உலகம்பூராவும் எந்த எந்த தேசத்திலிருந்து வந்திருந்த மக்களுடன் எங்களையும் கஃபாவை வலம் வரச்செய்த இறைவன் கிருபை எண்ணி எண்ணி பேருவுகை அடைந்தேன்.

உலகத்தில் உள்ள அனைவர்களும் இறைவனின் இல்லமான கஃபாவை தவாப் செய்யும், காணும் பாக்கியத்தை தந்தருள்வாய் எங்கள் இறைவா.. ஆமீன்.

உம்ரா செய்வதற்கு கஃபாவை ஏழுமுறை சுற்றி வலம்வர வேண்டும். கஃபாவை சுற்றி வலம்வர ஆரம்பிப்பதற்கு ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் முனையிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இந்த இடத்தில் பச்சை விளக்கு (ட்யூப் லைட்) எரியும். இங்கிருந்து "பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்" என்று சொல்லி தவாஃபை ஆரம்பிக்க வேண்டும்.

ஹஜருல் அஸ்வத் கல் என்பது ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்ராஹிம் நபி (அலை)வாழ்ந்த காலத்தில் இறைவனின் ஆணைப்படி இப்ராஹிம் நபி (அலை) முதன்முதலில் கஃபா ஆலயத்தை கட்டும்போது அவர்கள் கையால் எடுத்து வைத்த புனிதகல். உம்ரா செய்யும் அனைவரும் அந்தகல்லை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும். முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிடவேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தூரத்திலிருந்து சைகையால் முத்தமிட்டுக்கொள்ளலாம்.
இந்த ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் முனையில் ஏகப்பட்ட கூட்டம் அலைமோதும். ஒருவரை ஒருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு கூட்டமாய் இருப்பார்கள். மூச்சுமுட்டும். சிலர் அந்த கல் இருக்கும் இடத்தில் தங்களது தலையை நுழைப்பார்கள். இதற்கு ரொம்ப போட்டாபோட்டி இருக்கும். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்கள், கூட்டத்தை கன்ட்ரோல் செய்யமுடியாமல் திணறுவர். ‌அந்த கூட்டத்தில் நம்மால் அந்த கல்லை முத்தமிட முடியாது. அதனால் சுற்றிவரும்போது கையால் சைகையால் முத்தமிட்டுக் கொள்ளலாம்.முதல் மூன்று சுற்றுகளில் கொஞ்சம் விரைவாக சுற்றி நடக்கவேண்டும். நடக்கும்போது வெயிலில் கால்சுடாத அளவுக்கு அதிக வெப்பத்தை உள்ளிழுத்து குளிரை வெளிப்படுத்தும் தன்மையுள்ள உயர்தர கிரானைட் கற்களை கஃபா ஆலயம் முழுவதும் பதித்துள்ளார்கள். ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்துவரும்போது கெட்ட எண்ணங்கள் தலைதூக்காது.

அல்லாஹ்
சைத்தானை விட்டும் நம்மை பாதுகாப்பானாக.,, ஆமீன்.

க‌ஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி மூலையையும் தொடுவது நபிவழியாகும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே "ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி ஹஸனதன் வகினா அதாபன்னார்" என்று ஓதிக்கொள்ளலாம்.

ஃபா ஆலயத்துக்கு அருகில் (ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் முனைக்கு அருகில்) இப்ராஹிம் நபியவர்களின் பாதங்கள் பதிந்த கல் ஒரு கூண்டுக்குள் இருக்கும். இந்த இடத்துக்கு மகாமு இப்ராஹிம் என்று பெயர்.க‌ஃபாவை வலம் வரும்போது துஆ செய்தபடியே வலம்வரலாம். ஏழுமுறை கஃபாவை சுற்றி வலம்வந்தபின் அங்கே இரண்டு ரக்அத் நபில் தொழுகை தொழுது துஆ செய்து கொள்ளலாம்., தவாஃபை நிறைவேற்றிவிட்டோம் என்று. உற்றார், உறவினர், உலகத்தில் உள்ள அனைவரின் நலனுக்கும் நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் துஆ செய்து கொள்ளலாம்.

பின்னர் ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்ய வேண்டும். ஸஃயீ என்றால் ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும்
மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்" என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள்.
கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்)"பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137.

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137.

இப்போது கஃபா ஹரம்ஷரீபில் ஸ‌ஃபா மர்வாவுக்கு இடையே நடந்து செல்வதற்கு உயர்தர கிரானைட் கற்கள் பதித்துள்ளனர். ஸஃபாவிலும், மர்வாவிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் பச்சை விளக்கு எரியும். அந்த இடத்துக்கு வரும்போது ஓடவேண்டும். மற்ற இடங்களில் நடந்து வரலாம். இப்படியே ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.

(ஸ‌ஃபா, மர்வா மலைகள் இருக்கும் இடத்துக்கு வெளியே வராந்தாவில் நானும் அக்பர் தம்பியும். எங்கள் பிண்ணனியில் இருக்கும் கட்டடம் ஸஃபா மர்வா செல்லும் இடம்.)ஸ‌ஃபா, மர்வாவை ஏழுதடவை சுற்றி முடித்ததும் வெளியே சென்று அங்கே சலூன் கடைகள் உண்டு. அங்கே முடி நீக்கி மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும். முதல் தடவை உம்ரா செய்கிறவர்கள் கண்டிப்பாக மொட்டையடிக்க வேண்டும். மறுதடவைகள் வருபவர்கள் வேன்டுமென்றால் மொட்டை அடிக்கலாம். இல்லையெனில் முடி வெட்டிக் கொள்ளலாம். பெண்களுக்கு லேசாமுடி மட்டும் வெட்டிக்கொண்டால் போதுமானது.

"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்கு கிடையாது. சிறிதளவு மயிரை குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் 1694.

இத்துடன் உம்ரா செய்வது நிறைவேறுகின்றது.

உம்ரா முடித்தவுடன் குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு ஜியாரத் செய்ய (வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்க்க) கிளம்பினோம். அன்று முழுவதும் மக்காவில் இருந்துவிட்டு அன்று இரவு மதீனாவுக்கு கிளம்பினோம். மதீனாவில் 2 நாட்கள் தங்கியிருந்து ஜியாரத் (வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்த்து) செய்தோம்.

எல்லா இடங்களையும் கண்டு மனதில் சந்தோசத்துடன் அல்ஹசா வந்து சேர்ந்தோம்.

எங்களுடைய உம்ரா பயணத்தை சிறப்பாக்கி தந்த இறைவனுக்கு எல்லாப்புகழும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

,

Post Comment

44 comments:

 1. விளக்கமான இடுகை. பகிர்வுக்கு நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 2. இன்னும் பதிவை நீட்டி இருக்கலாம் நன்ராக இருந்தது

  ReplyDelete
 3. உம்ராவைப் பற்றி தெளிவாகவும்,சிறப்பாகவும் விளக்கி இருக்கிறீர்கள் சேக்.
  எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் இந்த பாக்கியத்தை தருவானாக.ஆமீன்.

  சிறப்பான பதிவும்,பகிர்வும்.
  நன்றி சேக்.

  ReplyDelete
 4. சிறந்தப்பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அல்ஹம்துலில்லாஹ்.பதிவை படிக்கையில் பரவசமாக உள்ளது ஸ்டார்ஜன்.விரைவில் நாமும் போக வேண்டும் ஆவலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது உங்கள் பகிர்வு.மதீனா சென்ற அனுபவத்தையும் பகிரலாமே?

  ReplyDelete
 6. //உலகத்தில் உள்ள அனைவர்களும் இறைவனின் இல்லமான கஃபாவை தவாப் செய்யும், காணும் பாக்கியத்தை தந்தருள்வாய் எங்கள் இறைவா.. ஆமீன்.//

  ஆமீன்..

  ReplyDelete
 7. விளக்கமான இடுகை. பகிர்வுக்கு நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 8. அருமை, ஸ்டார்ஜன்.உள்ளமெல்லாம் சிலிர்க்க உங்கள் உம்ரா பயணத்தை விவரித்த விதம் பாராட்டத்தக்கது.என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு,ஸபா மர்வா ஏழு முறை சுற்றி முடித்து உம்ரா முடித்த களைப்பில் வெளியே வந்து ஜன்னல் திண்டில் நானும் மகளும் ஏறி அமர்ந்தோம் மொபைலை விட்டு வைத்து தண்ணீர் குடித்தோம்.அதன் பின்பு அந்த மொபைலை எடுக்க மறந்து விட்டேன்.ரூமிற்கு வந்தாச்சு,மொபைலை சார்ஜ் போட தேடினால் மொபைல் இல்லை.எனக்கு வைத்த இடம் நினைவு வந்தது,என்றாலும் இரவு நேரம் கூட்டம் வேறு ,மொபைல் கிடைக்குமோ என்ற ஐயம் இருந்தாலும்,தேடிப்பார்போம் என்று வந்தால் ஒரு மணி நேரம் கழித்து அந்த மொபைல் அங்கேயே இருந்தது.இது என் வாழ்வில் மறக்க முடியாத ஆச்சரியம்.அல்ஹம்துலில்லாஹ்!நாங்கள் மக்காவில் ஆறு நாட்கள்,மதினாவில் 5 நாட்க்ள் இருந்து வந்தோம்.ஸ்டார்ஜன் ,ஜித்தா மக்காவில் இருக்கும் எங்கள் உறவினர்கள் எண்ணிலடங்கா உம்ரா செய்வதை கூறும் பொழுது மிக ஆசையாக இருக்கும்.இன்ஷா அல்லாஹ் ! இனி அந்த பாக்கியம் எப்ப கிடைக்குமோ!ஹஜ் கடமையையும் நிறைவேற்ற வேண்டும்.

  ReplyDelete
 9. விளக்கமாக நன்றாக சொல்லி இருக்கீங்க... வரலாற்று சிறப்பம்சமிக்க இடங்களை சுற்றி பார்த்த படங்கள், இன்னும் நிறைய போட்டு இருக்கலாமே.

  ReplyDelete
 10. //சிலர் செருப்பை கையிலே வைத்திருந்தபடியே கஃபாவை வலம் வந்தார்கள். அவர்களுக்கு அருவெருப்பாக தோன்றவில்லைபோலும். எங்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.. என்ன செய்ய இவர்களை..//

  சில மக்களை திருத்தவே முடியாது...

  உங்களுடன் க‌ஃபாவை வலம் வந்தது போல் இருந்தது... :-))
  படங்களுடன் அருமையாக உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு.. நன்றி..

  ஹஜருல் அஸ்வத் கல் பற்றி நீங்க குறிப்பிட்டதும், அதற்கு அலை மோதும் கூட்டமும்...பற்றி கூறியதும்..கேட்பதற்கே... அங்கே சென்றது போல் பிரம்மை உண்டானது... உங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டியதில் ரொம்ப சந்தோசங்க.. :-))

  ReplyDelete
 11. உங்க‌ளுட‌ன் ப‌ய‌ணித்த‌ பிர‌மை ஸ்டார்ஜ‌ன். வாழ்த்துக்க‌ள்.

  ReplyDelete
 12. அருமை நண்பரே வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 13. இரண்டு பாகமும் நல்லா இருக்கு, அரபு சொற்களின் பொருள் தான் மனதில் பதியவில்லை

  ReplyDelete
 14. அருமையான விளக்கங்களுடன் அருமையா எழுதியிருக்கே சேக்.

  ReplyDelete
 15. தாங்களின் உம்ராவை இறைவன் ஏற்றுக்கொள்வானாக, இதுவரை எத்தனை முறை புனித மெக்கா சென்றிருக்கீங்க‌

  ஜம் ஜம் தண்ணீர் பற்றியும் சொல்லிருக்கலாம், நேரம் கிடைத்தால் தனி பதிவிடவும்

  ReplyDelete
 16. சிறப்பான பதிவும்,பகிர்வும்

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அழைக்கும்,
  உங்கள் உம்ரா பயணம் இனிது.
  உம்ரா,ஹஜ் போகணும் என்ற
  நிய்யத்.உங்கள் பதிவை
  படித்தபின் இன்னும் ஆவல் அதிகம்.
  அல்லாஹ் நம் அனைவருக்கும்
  அந்த பாக்கியத்தை தருவானாக.
  ஆமீன்.

  ReplyDelete
 18. வாங்க பாலாண்ணே.. @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 19. வாங்க மரைக்கார் @ ரொம்ப நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் விரிவாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 20. வாங்க அபுல் @ நல்லாருக்கீங்களா.. ரொம்ப நன்றி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 21. வாங்க நிஜாம் அண்ணே @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

  ReplyDelete
 22. வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப மகிழ்ச்சி.. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் மதீனாவை பற்றியும் மக்கா பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 23. வாங்க ஜெய்லானி @ ரொம்ப் நன்றி

  ReplyDelete
 24. வாங்க குமார் அண்ணே @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. வாங்க ஆசியாக்கா @ ரொம்ப மகிழ்ச்சி.. மக்கா அனுபவம் மறக்க முடியாத ஒன்று.. உங்கள் அனுபவத்தை பற்றி குறிப்பிட்டது மிக்க நன்றி..

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 26. வாங்க சித்ரா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி.. இனிவரும் காலங்களில் இது குறித்து விரிவாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 27. வாங்க ஆனந்தி @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி.. இனிவரும் காலங்களில் இது குறித்து விரிவாக எழுதுகிறேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 28. வாங்க ஸ்டீபன் @ ரொம்ப மகிழ்ச்சி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 29. வாங்க சசிக்குமார் @ ரொம்ப மகிழ்ச்சி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 30. வாங்க கோவி அண்ணே @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி..

  அரபிச்சொற்களுக்கு விளக்கம் எழுத நினைச்சேன்.. வேலையால் முடியல..

  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 31. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி..

  ReplyDelete
 32. அருமையான பகிர்வு.படித்ததிலேயே மனசு நிறைஞ்சு போச்சு. கூடவே வந்த ஒரு உணர்வு..

  ReplyDelete
 33. நிறைய புதிய விஷயங்கள்.. புனித பயணம் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி.. ஸ்டார்ஜன் மற்றூம் அக்பர்..:))

  ReplyDelete
 34. வாங்க ராஜா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 35. வாங்க அப்துல்மாலிக் @ ரொம்ப மகிழ்ச்சி.. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் விரிவாக எழுதுகிறேன்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 36. வாங்க அம்பிகா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 37. வாங்க ஆயிஷா அபுல் @ ரொம்ப மகிழ்ச்சி.. இன்ஷா அல்லாஹ்.. இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 38. வாங்க அமைதிக்கா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 39. வாங்க தேனக்கா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 40. வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 41. இனிய பயணம் அருமை,
  நாங்களும் குடும்பத்துடன் இரண்டு வருடம் முன் உம்ரா சென்றோம்,.

  இன்னும் நோன்பு நேரத்தில் உம்ரா சென்றால் ஹஜ்ஜில் இருப்பது போ ல் இருக்கும் என்றார்கள்.
  நோன்பு நேரத்தில் உம்ராவும் ,பிறகு ஹஜ்ஜும் செய்யனும் நாட்டம் இருக்கு ஆண்ட்வன் என்று நிறை வேற்று வானோ.
  ஜம் ஜம் பற்றியும் சொல்லி இருக்கலாம்.
  என் பயனுள்ள டிப்ஸில் உம்ரா போக டிப்ஸ்கள் பற்றி போட்டுள்ளேன்.

  ReplyDelete
 42. இப்போதுதான் படித்தேன்.. மிக நல்ல பகிர்வு.

  நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 43. மிகவும் அருமையன பதிவுSTARJAN.camera எடுக்க அனுமதி இருக்கா சொல்லவும்

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்