Pages

Friday, September 17, 2010

உம்ரா - ஒரு இனிய பயணம்

ஒவ்வொரு வருடமும் அந்த நாள் எப்போ வரும் காத்திருத்தல் எவ்வளவு சுகம். நோன்பு பெருநாள் பண்டிகை வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு போய் தொழுதுவிட்டு வரும்போது மனதுக்கு ரொம்ப‌ சந்தோசமாக இருக்கும். எல்லோரும் அன்போடு வாழ்த்துச் சொல்லி மகிழ்தல், சகோதரத்துவத்துக்கு ஒரு நல்ல அடையாளம். பெருநாளுக்கு எல்லோரும் அன்போடு தரும் காசுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாம், பலூன் வாங்கலாம், ப்ளாஸ்டிக் வாட்ச், கண்ணாடி வாங்கி போட்டுக்கிட்டு ஜாலியா ப்ரண்ட்ஸோட சுத்தி வரும் நாட்களை நம்மால் எப்போதும் மறக்க இயலாது.

பெரியவனா வளர்ந்த பின் இந்த சந்தோசங்களோடு பொறுப்புகளும் சேர்ந்து கொண்டது. பிற‌ந்ததிலிருந்து விளையாட்டு, ‌படிப்பு, வாலிபம், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் இப்படி ஒவ்வொரு நிலையை எட்டும்போது பொறுப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது.

இங்கே சவூதி வந்தபின்னும் அதே சந்தோசங்கள் தொடரத்தான் செய்கின்றன.. என்ன ஒன்று., நம் குடும்பம் நம்மோடு இல்லையே என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது. ஆனால் இங்கே, நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுடன் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளும்போது அந்த வருத்தங்கள் காணாமல் போவது உண்மைதான்..


பொதுவாக எனக்கு எங்காவது பயணம் செய்யும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கும். புதுபுது இடங்களை காணும்போது நம்முடைய கவலைகள், சோகங்கள் காற்றோடு காற்றாக கரைந்துவிடுகிறது.



நானும் அக்பரும் ஒவ்வொரு வருடமும் பெருநாள் லீவுக்கு ஜாலியா சுற்றுலா கிளம்பிவிடுவோம். அந்த பயணத்தில் மக்காவுக்கு உம்ரா செய்யும் பயணமும் ஒன்று. அப்படித்தான் சென்றமுறை 2008ல் மக்காவுக்கு பயணம் மேற்கொண்டோம். மனதுக்கு சந்தோசமாக இருந்தது. நானும், அக்பரும், அக்பர் தம்பிகளும், அக்பர் மச்சினன், நண்பர் ஒருவருமாக ஆறுபேர் கொண்ட ஒரு குழு இந்த வருடமும் மக்காவுக்கு செல்வதென தீர்மானித்து தனியார் பஸ் ட்ராவல்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.

இங்கிருந்து மெக்காவுக்கு 1200 கி.மீ தூரம் 12 மணிநேரம் பயணிக்க வேண்டும். பெருநாளுக்கு மறுநாள் மதியம் 4 மணிக்கு பஸ் கிளம்புவதாக ட்ராவல்ஸில் தெரிவித்திருந்தார்கள். நிறைய ஆட்கள் புக் செய்திருப்பார்கள்.. கூட்டம் அலைமோதியது.. எல்லோரும் முண்டியடிக்க நாங்கள் காத்திருந்தோம். ஆட்கள் ஏறஏற பஸ்களும் வந்து கொண்டிருந்தன.. நாங்கள் ஒரு பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். எங்கள் பயணம் தொடர்ந்தது.

இடையில் சாப்பாட்டுக்கும் இரவுநேர தொழுகைக்கும் பஸ்ஸை நிறுத்தினார்கள்..

மக்கா நகரத்துக்கு 100 கி.மீக்கு முன்னால் உள்ள தாயிப் நகரத்தில் இஹ்ராம் கட்டிக்கொள்வதற்கு (இஹ்ராம் என்பது ஹஜ்/உம்ரா செய்வதற்கு வெள்ளை நிறத்தில் உள்ள இரண்டு பெரிய துண்டுகளை உடம்பில் ஆடையாக உடுத்திக்கொள்ள வேண்டும். வேறெந்த ஆடைகளை உடுத்தியிருக்கக் கூடாது.) பஸ்ஸை ட்ரைவர் நிறுத்தினார்.

தாயிப் நகரம் மலைகளால் சூழ்ந்த ஒரு அமைதியான நகரம்., பார்க்க ரொம்ப நல்லாருந்தது. நாங்கள் குளித்து இஹ்ராம் கட்டிக்கொண்டு 2 ரக்அத் நபில் தொழுகை தொழுது உம்ரா செய்வதற்கு நிய்யத் வைத்துக்கொண்டோம்.

இஹ்ராம் கட்டியதும் மனதில் ஒரு சந்தோசமும் இறைஅச்சமும் குடிகொண்டது. பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தபின் பயணிக்கும்போது இறைவனை நினைத்தபடி இறைஅச்சத்துடன் தலபிய்யா சொல்லிக்கொண்டே சென்றோம்.

மக்கா நகரத்தினுள் முஸ்லிம் அல்லாதோர் உள்ளே நுழையமுடியாது. மக்காவுக்கு 20 கி.மீ தொலைவில் செக்போஸ்ட் ஒன்று உண்டு. அங்கே கண்காணித்துதான் மக்காவுக்குள் நுழைய அனுமதிப்பார்கள்.

மக்கா நகரத்தில் நுழைந்ததும் ரொம்ப பரவசமாக இருந்தது. இறைவனின் இல்லமான கஃபாவை காணும்போது நம்மையறியாமலே கண்களில் நீர்க்கோர்க்கிறது. உலக பிரசித்திப்பெற்ற கஃபாவுக்கு பயணம் செய்யவைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தியவாரே உள்ளே நுழைந்தோம்.

அங்கே லாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்) உண்டு. அங்கே நமது பொருட்களை வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட மணிநேரத்துக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் நமது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். சென்றமுறை சென்றபோது 1 மணிநேரத்துக்கு 5 ரியால் கட்டண‌மாக வாங்கினார்கள். ஆனால் இப்போது 5 மணிநேரத்துக்கு 5 ரியால் வாங்கியது ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சம் பெரிய பாதுகாப்பு அறையென்றால் 10 ரியால். நாங்கள் கொண்டுவந்த பொருட்களை 10 ரியால் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு கஃபா பள்ளிக்குள் நுழைந்தோம்.


தொடரும்.....

,

Post Comment

64 comments:

  1. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நல்ல எழுத்து நடையும் கூட. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மக்கா போயிருந்தீர்களா ஸ்டார்ஜன்.வாசித்தாவது புண்ணியம் தேடிக்கொள்வோம்.நன்றி நன்றி.

    ReplyDelete
  3. உங்களது புனிதப்பயணத்தில் பங்கேற்ற மகிழ்ச்சி எங்களுக்கு! நன்றி!

    ReplyDelete
  4. //பெருநாளுக்கு மறுநாள் மதியம் 4 மணிக்கு பஸ் கிளம்புவதாக ட்ராவல்ஸில் தெரிவித்திருந்தார்கள்//


    அடுத்த தடவை கடைசி பத்தில் முயற்சி செய்யுங்க இன்ஷா அல்லாஹ்..

    ReplyDelete
  5. உங்கள் உம்ரா பயணம் நல்லா இருக்கு ஸ்டார்ஜன் நானா! சவூதியில் இருப்பதால் நினைத்தபோது உம்ராவுக்கு புறப்பட்டுவிடுகிறீர்கள். கொடுத்து வைத்த‌வர்கள்தான் போங்க! அல்லாஹ்தஆலா எங்களுக்கும் அதுபோன்று பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்.

    ReplyDelete
  6. வாங்க சித்ரா @ முதல் வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  7. வாங்க ராமல்க்ஷ்மி மேடம் @ ரொம்ப நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  8. ஸ்டார்ஜன் 12 மணி நேரம் பயணமா?தொடர்ந்து எழுதுங்க,ஆரம்பமே ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது.என் கணவரும் அபுதாபியில் இருந்து பஸ்ஸில் 2 முறை உம்ரா சென்று வந்தாராம்,36 மணி நேரம் பஸ் பயணம்.ஆனால் எங்களை ஃப்ளைட்டில் தான் அழைத்து சென்றார்,நீண்ட பஸ் பயணம் இண்ட்ரெஸ்டாக இருக்கும் தானே!இன்ஷா அல்லஹ்!ஸ்டார்ஜன் விளக்கமாக எழுதுங்க,போட்டோக்களும் போடுங்க.

    ReplyDelete
  9. எங்களுக்கும் சேர்த்துதானே கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டீங்க...:))

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல பகிர்வுங்க...தொடருங்கள்..

    ReplyDelete
  11. அருமையான அனுபவம்.... உங்களுடன் பயணித்தது போல் இருந்தது..
    உங்கள் சந்தோஷத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சிங்க.. :-))

    ReplyDelete
  12. உங்கள் உம்ரா பயணத்தைப்பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் துஆக்களில்.

    ReplyDelete
  13. நிறைய சொல்லுங்க.. படிச்சாவது புண்ணியம் கட்டிக்கிடுவோம் :-)))

    ReplyDelete
  14. ஷேக்..உம்ரா சென்று வந்தமைக்கும் மகிழ்ச்சி.அதனை சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.இன்னும் விரிவாக எழுதுங்கள்.படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.

    ReplyDelete
  15. உம்ரா வாழ்த்துக்கள் ஷேக்
    அருமையான பதிவு

    நோன்பின் இறுதி நாட்களில் சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நான் 2008ல் நோன்பின் இறுதி 10ல் உம்ரா செய்தோம்.

    தொடருங்க‌

    ReplyDelete
  16. புனிதப்பயண அனுபவம்!! அழகாய் சொல்லி உள்ளீர்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  17. இந்த‌ வ‌ருட‌ம் முடிச்சாச்சா ஸ்டார்ஜ‌ன். ந‌ம்ம‌ ஏரியா தாண்டி தான் போக‌னும்.. :)

    ReplyDelete
  18. உம்ராவை நிறைவேற்றிய உங்களுக்கும்,நண்பர் அக்பருக்கும்,மற்றும் உறவினர்களுக்கும் என்னுடைய
    சலாம்.

    ReplyDelete
  19. அருமை நண்பரே உங்களின் எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடருங்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்டது பற்றி உயர்வான பகிர்வு.கூடவே மார்க்க சடங்குகள் குறித்த விரிவான பார்வை.இன்ஷா அல்லாஹ் என்னை போன்ற ஏனையோருக்கும் அக்கடமையே அல்லாஹ் நஷிபாக்கி வைப்பானாக! எனினும் //பெருநாள் லீவுக்கு ஜாலியா சுற்றுலா கிளம்பிவிடுவோம். அந்த பயணத்தில் மக்காவுக்கு உம்ரா செய்யும் பயணமும் ஒன்று. // ஜாலியான சுற்றுலாவோடு உம்ராவை இணைத்தது தான் ஒரு சிறிய வருத்தம்.

    ReplyDelete
  21. gulam sir,

    whenver you are coming from outside saudi arabia for umra, once you reach saudi arabia you will begin to see different faces with speaking arabic languages. suddenly those who come to do umra or haj begun to feel that they are in entirely new environment as usual people begaun to feel unsecured feeling and begun to pray with utmost attention.

    but we (i am stying in jeddah for the past 18 year , i often used to do umra and tawaf) those who are working in saudi arabia. we will as another trip till we reach the entrance of haram, once we reach inside we used to 1000 times thanks to allah for giving us a chance to pray there. Inside we all are same each and every visit to haram give us new energy and strength to live a new life.

    ReplyDelete
  22. மெக்காவுக்கு செல்வதுபோலவே உணர்வு..

    உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. வாங்க ஹேமா @ ஆமா ஹேமா மக்கா போயிருந்தேன்.. இது இரண்டாவது தடவை.. 2008ல் ஒருக்கா போனது..

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete
  24. வாங்க சேட்டைக்காரன் @ ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.. உங்கள் ஆர்வத்துக்கும் கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  25. வாங்க ஜெய்லானி @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    எங்களுக்கு பெருநாளுக்கு 3 நாள் லீவு கிடைக்கும் அந்த சமயத்தில் போக முடிந்தது. எங்களுக்கும் நோன்பு கடைசி பத்தில் போக ஆசை..கபில் லீவு தரமாட்டான்.

    ரொம்ப நன்றி..

    ReplyDelete
  26. வாங்க அஸ்மா @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

    நம் எல்லோருக்கும் இறைஇல்லமான கஃபாவை காணும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன். நம் எல்லோருக்காக வேண்டியும் துவா செய்தேன்..

    ரொம்ப நன்றி..

    ReplyDelete
  27. வாங்க ஆசியாக்க்கா @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

    12 மணிநேரம் பயணம் ரொம்ப இனிமையா இருந்தது.. ரொம்ப ஆர்வமாக இருந்தது.. நான் 2008ல் ஒருமுறையும் இப்போ ஒருமுறையும் சென்றுள்ளேன்.. உங்கள் அனுபவத்தையும் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி..

    ரொம்ப நன்றி..

    ReplyDelete
  28. வாங்க சிஷ்யா பிரதாப் @ ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    நம் எல்லோருக்காக வேண்டியும் இறைவனிடம் துவா செய்தேன்..

    ரொம்ப நன்றி..

    ReplyDelete
  29. நல்லா பகிர்வு தொடருங்கள் அடுத்தமுறை நானும் இணைந்து கொள்கிறேன்....

    ReplyDelete
  30. வாங்க கமலேஷ் @ ரொம்ப நன்றி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  31. வாங்க ஆனந்தி @ ரொம்ப மகிழ்ச்சி..

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்கிறேன்.

    ReplyDelete
  32. வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப மகிழ்ச்சி.. வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete
  33. வாங்க ரியாஸ் @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    கண்டிப்பாக எல்லோருக்காக வேண்டியும் இறைவனிடம் துவா செய்கிறேன்..

    ReplyDelete
  34. வாங்க அமைதிக்கா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    கண்டிப்பாக நிறைய எழுதுகிறேன்.. விரைவில் தொடருகிறேன்..

    ரொம்ப நன்றி...

    ReplyDelete
  35. வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப மகிழ்ச்சி..

    இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக விரிவாக எழுதுகிறேன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  36. வாங்க அப்துல் மாலிக் @ ரொம்ப மகிழ்ச்சி... உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியை எழுதுகிறேன்..

    எங்களுக்கு பெருநாளுக்கு 3 நாள் லீவு கிடைக்கும் அந்த சமயத்தில் போக முடிந்தது. எங்களுக்கும் நோன்பு கடைசி பத்தில் போக ஆசை..கபில் லீவு தரமாட்டான்.

    உங்கள் அனுபவத்தை குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..

    ReplyDelete
  37. வாங்க சைவகொத்துப்ப்ரோட்டா.. @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடருகிறேன்..

    ReplyDelete
  38. வாங்க ஸ்டீபன் @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    அடுத்த தடவை உம்ரா செல்லும்போது நாம் சந்திக்கலாம்..

    ReplyDelete
  39. உம்ரா செய்ய வாய்ப்பளித்த இறைவனுக்கு அனைத்து நன்றிகளும்...

    ReplyDelete
  40. அருமையான பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதுஙள், நான் இப்பெ தாயிஃப் லெ இருக்கின்ர மாதிரி இருக்கு

    ReplyDelete
  41. வாங்க அபுல்பசர் @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..

    விரைவில் அடுத்தபகுதியை எழுதுகிறேன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  42. நல்ல பகிர்வு!! நன்றி...

    ReplyDelete
  43. வாங்க சசி @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  44. வாங்க குலாம் @ ரொம்ப மகிழ்ச்சி.. சரியா சுட்டிக்காட்டியிருந்ததுக்கு நன்றி..

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  45. வாங்க அஜீம் பாஷா @ ரொம்ப மகிழ்ச்சி.. சரியாச் சொல்லிருக்கீங்க..

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  46. வாங்க ஜிஜி @ ரொம்ப மகிழ்ச்சி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  47. வாங்க சீமான்கனி @ ரொம்ப மகிழ்ச்சி.. இன்ஷா அல்லாஹ்.. அடுத்த முறை செல்லும்போது நாம் கண்டிப்பாக சந்திப்போம்..

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  48. வாங்க அக்பர் @ ரொம்ப மகிழ்ச்சி.. இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்..

    ReplyDelete
  49. வாங்க மரிக்கார் @ ரொம்ப மகிழ்ச்சி.. இன்ஷா அல்லாஹ், நிச்சயம் அடுத்த பகுதியை எழுதுகிறேன்..

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  50. வாங்க மேனகா @ ரொம்ப மகிழ்ச்சி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  51. உங்கள் உம்ரா பயணம் நல்லபடியாக அமைந்ததா ஸ்டார்ஜன். உம்ரா பயணத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நல்ல பாதையை அமைத்து தருவானாக.. ஆமீன்.

    நாங்களும் உங்களோடு பயணித்தது போல இருக்கு.. மேலும் தொடருங்கள்.. தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  52. லப்பைக், அல்லாஹீம்ம லப்பைக், லப்பைக் லாஷரீகலக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத்த லகவல்முல்க் லாஷரீகலக்

    ReplyDelete
  53. ரமலானின் கடைசியில் போவது தெரியும்; பெருநாளுக்குப் பிறகும் போவார்கள் என்பது புது செய்தி.

    ReplyDelete
  54. ஸ்டார்ஜன் உம்ரா பயணம் மகிழ்ச்சி.
    இந்த பயணம் நோன்பில் போய் இருக்கலாம்
    இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் அல்லாஹ்
    உங்களுக்கும், எங்களுக்கும் அந்த பாக்கியத்தை
    கொடுப்பானாக! துஆ செய்யவும்.
    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்
    பார்க்கிறேன்

    ReplyDelete
  55. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மின்மினி

    ReplyDelete
  56. வாங்க அப்துல்லா @ ரொம்ப மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  57. வாங்க ஹுஸைனம்மா @ நோன்பு கடைசியில்தான் போகணும்.. எங்களுக்கு லீவு கிடைக்காததால் பெருநாளுக்கு சென்றோம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  58. வாங்க ஆயிஷா @ மிக்க மகிழ்ச்சி..

    இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் எல்லோருக்கும் ஹஜ்/உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக.. ஆமீன்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  59. பெருநாளுக்கு பிறகு என்று நானும் இப்ப தான் கேள்வி படுகிறேன்.
    இங்கு கடைசி நோன்பு பத்தில் எங்க சொந்தஙக்ள் அங்கு நிறைய பேர் வந்தார்கள்,
    நானும் நாட்டம் வைத்துள்ளேன். ஏக வல்ல இறைவன் நிறைவேற்றனும்.

    ReplyDelete
  60. ஓ உங்கள் இடத்திலிருந்த் 12 மணி நேரம் தூரமா.

    ReplyDelete
  61. இஹறாம் என்பது தாங்கள் நினைத்து எழுதியிருப்பதல்ல; மாறாக குறித்த சில செயல்களிலிருந்து தவிர்ந்துகொள்ளல். உதாரணம்:தனது மனைவியைக்கூட இச்சையுடன் பார்ப்பதைக்கூட தவிர்த்தல். மேலும், இஹறாம் செய்தபின் தல்பியா கூற வேண்டும்; தாங்கள் எழுதியதுபோல் தக்பீர் அல்ல. தெளிவடைவீர்களென நம்புகிறேன்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்