கானல் நிலா..!
பனிவிழும் இரவுதனில்
நீயும் அருகினில் என்னவளும்
கையிலேந்தி உன்னை ரசிக்கும்போது
அவள் மெல்லமெல்ல நாணுகிறாள்.
உன்னழகை ரசிக்கவா..!
அவளழகை ரசிக்கவா..!
போராட்டத்தில் அவளை
ஜெயிக்க வைத்தது
அவள் தந்த முத்தமன்றோ..!
மெல்ல அவள் துள்ளிதுள்ளி
ஓடும் அழகை ரசிக்கவா..!
கொஞ்சி கொஞ்சி பேசும்
அவளின் காதல்மொழியை ரசிக்கவா..!
வா அருகினில் வாவென
அழைக்கும் அவள்
இமைகளை ரசிக்கவா..!
உன்னுடைய பிரகாசத்தை
மங்கவைக்கும் அவளின்
முகத்தை ரசிக்கவா..!
சலக்கு சலக்கென அவளின்
கொலுசின் சத்தம் கேட்டு
இலைகளின் உள்ளே தூங்கி
கொண்டிருக்கும் பனித்துளியும்
எட்டிப் பார்க்கின்றதே..!
உன்னையும் மறக்கமுடியாமல்
அவள் அழகினில்
என்னை மறந்து
கவிபாடுகின்றேன்..!
விடியலைத் தேடி
கரையும் ஒவ்வொரு
நிமிடமும் உன் அருகாமையை
தேடித் தேடி...!
மறக்கமுடியாத
தருணங்கள் அவை..!
,
அருமையாக உள்ளது...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
அருமை
ReplyDeleteகைகொடுங்கள் கவிஞர் ஷேக் அவர்களே...
ReplyDeleteரொம்ப ரசிச்சிருக்கீங்க.... இதுல இருந்து என்ன தெரியுது... விடுமுறை கிடைத்தாச்சுன்னு தெரியுது.
//சலக்கு சலக்கென அவளின்
ReplyDeleteகொலுசின் சத்தம் கேட்டு
இலைகளின் உள்ளே தூங்கி
கொண்டிருக்கும் பனித்துளியும்
எட்டிப் பார்க்கின்றதே..!
//
தேர்ந்தெடுத்து செதுக்கிய அழகிய வரிகள்.வாழ்த்துக்கள்.
ரசிச்சு எழுதியிருக்கீங்க :-))
ReplyDeleteஇரண்டு நிலவையும் சரிசமமா ரசிச்சிருக்கீங்க ஸ்டார்ஜன் !
ReplyDeleteவாங்க ம.தி.சுதா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க எல்கே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அருமை
ReplyDeleteகவிதை ரொம்ப அருமை ஸ்டார்ஜன்.
ReplyDelete//கையிலேந்தி உன்னை ரசிக்கும்போது
ReplyDeleteஅவள் மெல்லமெல்ல நாணுகிறாள்.
உன்னழகை ரசிக்கவா..!
அவளழகை ரசிக்கவா..!///
அடடா.. நிலவின் அழகும், பெண்ணின் அழகும்... ரசித்து படித்தேன்.. நன்றிங்க..!
அழகான கவிதை. ரொம்ப ரசித்து எழுதியிருக்கீங்க..:))
ReplyDeleteகவி மழை பொழியட்டும் ! கானல் நீர் ஓடட்டும் !
ReplyDeleteகண்டவர்கள் வாயில் விரல் வைக்க !
வரிகள் அனைத்தும் அருமை !
வாழ்த்துக்கள் !
//கொலுசின் சத்தம் கேட்டு
ReplyDeleteஇலைகளின் உள்ளே தூங்கி
கொண்டிருக்கும் பனித்துளியும்
எட்டிப் பார்க்கின்றதே..!//
ரசிச்சு எழுதியிருக்கீங்கண்ணா!!!
எனக்கு பிடிச்ச வரி அது... ரொம்ப ரசிச்சேன்
உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
ReplyDelete