தொடர்கதையாய் தொடர்ந்திடும்
வாழ்வினில் விடுகதையாய்
இந்த (இந்திய) பயணம்
சில மாறா நினைவலைகளோடு
உலா வருதே...!
உற்று நோக்கி நலம்பல விசாரித்து
விருந்தோம்பலுடன் உண்டுறங்கி
கருத்துக்களை பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
மறந்தும் இருக்கமுடியுமா?..
அருகில் இருக்கும்போது
சொல்லத் தோன்றாதது
தூரத்தில் தெரியும்
ஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்கூடிய உணர்வுகள்
பொங்கி பீறிடுகின்றன!
உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
இப்போது நீ அருகில் இருப்பது
மாயையைத்தான் என்றாலும்
மனம் அதை விரும்புதே!
விடை சொல்லத் தெரியாத
கேள்விகள் ஆயிரம் உண்டு
விடைகள் மட்டும் காணாமல்
போய்விட்டது..!
தேடல்கள் தொடரட்டும்...!
,
முதல் தேடல் நான்...!!!
ReplyDeleteஅருமையான தேடல் கவிதை வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteவாங்க மனோ
ReplyDeleteதேடலை ஆரம்பிச்சி வச்சிட்டீங்களா.. :))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூடவே தொடரும். வாழ்த்துகள்!
ReplyDeleteஉன் அருகாமையை எண்ணியெண்ணி
ReplyDeleteஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
அழகு வரிகள்.
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
உன் அருகாமையை எண்ணியெண்ணி
ReplyDeleteஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
இப்போது நீ அருகில் இருப்பது
மாயையைத்தான் என்றாலும்
மனம் அதை விரும்புதே!//
வெளிநாட்டில் வாழும் நமக்கு, நினைவுகள்தான் நிம்மதி இல்லையா....!!!
//உற்று நோக்கி நலம்பல விசாரித்து
ReplyDeleteவிருந்தோம்பலுடன் உண்டுறங்கி
கருத்துக்களை பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
மறந்தும் இருக்கமுடியுமா?..
//
ஷேக் நெகிழ்ச்சியாக உள்ளது கவிதை வரிகள்.
இன்னும் கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும், தெரியாதா பாஸ் :-))
ReplyDeleteவாங்க சேட்டைக்காரன் @ சுவாரசியமாத்தான் இருக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ரத்னவேல் அய்யா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மனோ @ ஆமா அதான் கொஞ்சம் ஆறுதல். என்ன செய்ய!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தூரத்தில் தெரியும்
ReplyDeleteஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்கூடிய உணர்வுகள்
பொங்கி பீறிடுகின்றன!
அருமையான தேடல்..
பிரிவும் தேடுதலும் இருந்தால் தான் வாழக்கை சுவாரசியமாயிருக்கும்.ஆரம்ப முதல் இது தொடரும் தானே!
ReplyDeleteவாங்க ஸாதிகாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெய்லானி @ ஆமா.. அப்படித்தான் இருக்குது. சரியாகிடும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராஜேஸ்வரி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூடவே தொடரும்...
ReplyDeleteதொடரட்டும் தேடல்கள்.